வீணாக சில வினாடிகள்..

நேரம் முக்கியம் தான்..நேரத்தை காட்டிலும் மனிதர்கள் முக்கியம்.மொக்கை போட்டு சாவடிக்கும் சில ஆட்கொல்லிகளை தவிர எல்லாருக்குமே என் வாழ்வில் நேரம் உண்டு.அந்த நொடியில் எனக்கு வேறு எதுவும் முக்கியமாக படாது.புத்தகம் படிக்கும்போது மட்டும் மெய் மறந்து விடுவேன்.குறிப்பாக பத்திரிகை என்றால் உயிர்.நடைக்கு அதுவே அஸ்திவாரம் அமைத்ததால் தவிர்க்க முடியாத ஒரு போதை வஸ்து ஆகிவிட்டது புத்தகம்.பிரித்து பார்த்தால் மணக்கும் அதன் வாசத்திற்கும் அந்த மைப்பதிந்த பக்கங்களுக்கும் முன்னால் வேறு எதுவும் புரிவதில்லை.காதலியின் கண் மை விரிக்கும் மோகத்தை ஒரு 50 சதவிகிதம் புத்தகத்தில் பெற்றுவிடலாம்.
சில நண்பர்கள் பேசவே மாட்டார்கள்.மலை சுற்றும் வழிக்கு கூடி சென்று பேச வரவழைத்தால் மொபைலில் கேம் விளையாடும் சிறுபிள்ளைதனமான நண்பர்களும் உண்டு.கொண்டே புடுவேன்.பேசு டா.உனக்கு தான் இந்த நேரம் என மிரட்டி புரிய வைப்பேன்.அதன்பின் ஏதாவது லொட லொடப்பார்கள்.மூச்சு மீண்டும் வரும்.மனிதர்களுக்கும் இடம் கொடுங்கள்.வேற ஆணிகள் அப்புறம் எடுக்கலாம்.

Advertisements

இசையாய் என்னை சிறைபிடித்த விடுதலை

திடீரென பிடித்து விட்ட கர்நாடக இசை பித்து முற்றி விடும் போல் இருக்கிறது.நேற்று ஒன்றரை ஜிபி காலி செய்தேன்…இன்று 7 ஜிபி ரீ சார்ஜ் செய்தேன் 3ஜி மோடத்திற்கு…என்ன நடக்குமோ..ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்,மஹதி,சுதா ரகுநாதன்,கே.காயத்ரி போன்றோரின் கச்சேரிகள் முழுவதும் லயித்து மூழ்கி போனேன்.அதுவும் ராகமெல்லாம் ஒரு எழவும் தெரியாது.அவர்களாக வாய் திறந்து ஏதாவது சொன்னால் தான் உண்டு.பாடுபவர்களின் பாவங்கள்,குரலின் இனிமை,பல்லவியின் மேல் அவர்களுக்குள்ள ஆளுமை,வயலின்,வீணை,கஞ்சிரா,கடம் இன்ன பிற இசைக்கலைஞர்களோடு அவர்களுக்குள்ள ஒற்றுமை,ஒருங்கிணைப்பு போன்றவை மட்டும் தற்போதய ரசனைப் பொருள்களாயின.ராகம்,தாளம்,உச்சஸ்தாயி,சரணம் போன்ற டெக்னிகல் விஷயங்கள் புரிபட பல காலம் பிடிக்கும் போல…இருந்தாலும் இந்த இசையை விட மனதில்லை..கானா ,சினிமா இசை,வெஸ்டெர்ன் போன்ற இசைகளை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்,புரிந்து கொள்ளலாம்.ஆனால் கர்நாடக சங்கீதத்தை புரிந்து கொள்ள என்னவோ தெரியவில்லை ஒரு ஆவல் உள்நுழைந்துவிட்டது.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் துணுக்குகளும்,பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் பாடல்களும் கேட்க வேண்டும்.இது எல்லைகள் இல்லாத கடலாதலால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்,எங்கு முடிக்க வேண்டும் என்றெல்லாம் ஐடியா இல்லை.என் மர மண்டைக்கு என்ன ஏறுகிறதோ அதை வைத்து என்னளவில் ரசிக்க விழைகிறேன்.

அழுத்தமான வார்த்தைகள்

ஏற்கனவே பிளாக்கரில்(Blogger) சொற் சிலம்பம்( http://jksakthi.blogspot.in ) beatthelogics ( http://sakthivigneshwar.blogspot.in ) என்ற தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பூக்களும்,அதிரடி ( http://sakthicanthink.blogspot.in ) என்ற தங்க்லீஷ் வலைப்பூவும் இருக்கின்றது.ட்விட்டர்,ஜிமெயில்,வாட்ஸ்அப்,முகநூல்,லிங்க்ட் இன் என இணைய உலகில் வாழ்ந்தும் போர் அடிக்காத சமாச்சாரங்களாக இவை தொடர்வதால் இன்னொரு நன் முயற்சியாக வோர்ட் பிரஸிலும் இயங்க எடுத்துள்ள துவக்கம் இது. இன்ஸ்டா கிராமத்திலும் இரு மாதங்களாய் குடியேறி விட்டாயிற்று.பிகாஸா,ட்ராப் பாக்ஸ்,கூகுள் டிரைவ் என சகலமும் இணைந்துகொள்ள,கூகிள் பிளஸ் வாழ்த்த,ஒர்குட்டிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு ப்ளிகர் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் விரசா இந்த வலைப்பூ பூத்துள்ளது.பெயர் சூடும் விழாவும் இனிதே நிறைவேற https://sakthivigneshwar.wordpress.com ல் உங்களை வலைவீசி வசியம் செய்ய பிரயத்தன பட்டுள்ளேன்.வாருங்கள் என்னோடு என்னால் வசியப்பட..

2913018697_ccbb33e993_b