ஹலேலூயா

இதை நான் யூரேகா வாகத்தான் பிரயோகிக்கிறேன்.எந்த மத நோக்கமும் கற்பிக்க வேண்டாம்.நான் மதம் மாறாத ‘பச்சை’ ஹிந்துதான்.எனக்கு அவசியமோ, தேடலோ ஏற்படவில்லை மதம் மாற.காஞ்சி சங்கராச்சாரியாரை பார்க்க வேண்டும்.அவரோடு பேச வேண்டும் என ரொம்ப நாள் ஆசை.

Maha Periyavar- மஹா பெரியவர்,காஞ்சி

Maha Periyavar- மஹா பெரியவர்,காஞ்சி

கூடவே கோவா தேவாலயங்களுக்கும் சென்றவன் தான் நான்.ஆன்மிகத்திற்காக அல்ல.அதன் போர்ச்சுகீசிய அழகியலுக்காக.போம் ஜீஸஸ் தேவாலயம் எதிரில் சிலுவை வாங்கி அணிந்து கொண்டேன்.நான் கிறித்துவனா??

Bom Jesus church,Goa

Bom Jesus church,Goa

இல்லவே இல்லை.சேகு வேராவை விடவும் வசீகர முற்போக்கு சிந்தனையாளர் இயேசு என்பதால்.சாய் பாபாவை நேசிக்கிறேன் நான்.கவி கபீரையும் கூட.மதங்களை தாண்டாமலேயே மனித மனங்களை இணைத்தவர்கள் இவர்கள்.அஜ்மர் தர்காவிற்கு சென்று ஒரு தடவையேனும் தொழுதுவிட துடிக்கிறேன்.

Ajmer

Ajmer,Rajasthan

அமிர்தசரஸ் பொற்கோவிலின் பிரம்மாண்டத்தில் என்னை தொலைத்திட விரும்புகிறேன்.

golden-temple-amritsar-hd-images-photos-wallpapers-005

Amritsar Golden Temple,Punjab

சிறிது நேரத்திற்காவது.எனில் நான் என் அடையாளத்தை வெறுப்பவனல்லன்.பிறர் அடையாளங்களை மதிப்பவன்.என் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் போது என் குரு தட்சிணாமூர்த்தியின் மந்திரத்தை சொல்ல தவறுவதில்லை.தினமும் ஹயக்ரீவ, சரஸ்வதி ஸ்தோத்திரத்தை சொல்லி சொல்லி என் ஜீன்களிலேயே அவை பதிந்துவிட்ட பிறவியே இவண்.குளித்து முடித்த கையோடு பதினாறு முறை சனி பகவான் ஸ்தோத்திரமும் உண்டு.இவை அத்தனையும் இருந்தும் போதாது.மனிதரை மனிதராக மதிக்க பழகியிருக்க வேண்டும்.மூன்று வேளை சூரியனை அண்ணாந்து பார்த்து ஜெய்ஸ்ரீராம் என சொல்கிறேன்.கனவிலும் இன்னொரு உயிருக்கு துரோகம் இழைக்க கூடாது என்று வாழ்பவனே பயனுள்ள வாழ்வு பெற்றவனாவான்.

இந்தியாவில் எல்லா மதங்களையும் அரவணைத்து ஆராதானை செய்து வாழும் அதே பாக்கியம் பெற்ற நான்தான் சில வருத்தத்திற்குரிய பிரச்னைகளையும் காண நேர்கின்றது.இது இந்தியனாக வாழ்வதற்கு இந்தியர்கள் அனைவருமே கொடுத்தாக வேண்டிய விலை.அந்த விலை பிறர் உயிராக இல்லாமல் அன்பாக இருக்கட்டும் என்பதே நான் இங்கு பதிய விழைவதெல்லாம்.வாழ்க பாரதம்.வளர்க மனிதம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s