விறு விறு உலகக்கோப்பை துவக்கம்.நாமென்ன கற்கலாம்?

இந்த நாள்(பிப்ரவரி 14ல்) புதிய டில்லி முதல்வர் பதவியேற்றுள்ளார்.காதலர்கள் ஒரு தினம் மட்டும் போதும் என்று உலகம் முழுக்க காதலை கொண்டாடுகிறார்கள்.எந்த நாளும் போல எனக்கு தெரியாத பல நிகழ்வுகள் உலகின் பல மூலைகளிலும் இந்தியாவிவும் தமிழகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன்.கூடவே ஒரு வைபவமும் துவங்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கண்டத்தில்.இது இந்திய அணிக்கு மிகவும் சவாலான முறை.கோப்பை தப்பினால் உலக அதிசயம்தான்.ஆனால் கிரிக்கெட்டோ, சாக்கரோ உலக கோப்பை என்று வந்துவிட்டால் ரகளைகளுக்கு பஞ்சமில்லை.தேச பக்தி, விளையாட்டு காதல், ஆரோக்கியமான போட்டி, வர்ணனையாளர் களின் சொல்லாடல்களை ரசிப்பது என்று குதூகலம் தான் இந்த மாதத்திற்கு.பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தர்ம இளைஞர்கள் மட்டும் கிரிக்கெட் பிரம்மச்சரியம் பூண்டு தேர்வு தவம் இருப்பர்.மற்ற இளைஞர்கள் ரிமோட்டும் cricinfo சகிதம், குறைந்தபட்சம் ஸ்கோர்களையாவது கவனித்து கொண்டிருப்பர்.என்ன நடந்தாலும் நம் நாடு நல்ல திறமையை உலக அரங்கில் காட்ட வேண்டும் என்பதே நம் விருப்பங்களாக அமையட்டும். தோற்றால் அவர்கள் வீட்டை இடிக்காதீர்கள்.அவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான்.ஆனால் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஆடுதிறன் இருந்தாலும் இறுதியில் அவர்களும் மனிதர்களே.பொறுமையாக போட்டிகளை ரசியுங்கள் என வேண்டுகிறேன். இந்தியா!! இந்தியா!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s