திருவண்ணாமலை கொட்டகை உணவகம்

திருவண்ணாமலையில் இருந்து செங்கம்,பெங்களுரு செல்லும் சாலையில் வயல்களுக்கிடையே  குளிர்ச்சியான நிலப் பிரதேசத்தில் சாலையின் வலதுப்பக்கத்தில் ஒரு கொட்டகை.அந்த கொட்டகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பல இருசக்கர வாகனங்கள்.ஆச்சர்யத்துடன் கீழே இறங்கி கொட்டகை நோக்கி நடந்து சென்று பார்த்தால் பல பார்சல்கள் முன்னே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நம் வரவை வாஞ்சையுடன் பார்க்கும் நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்,”தக்காளியா?எலுமிச்சையா?தயிரா?வெஜிடபிளா?” என்று வினவுகிறார்.ஒரு சாதத்தை நாம் செலக்ட் செய்து சொன்னால் நாம் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு  பார்சல் வருகிறது.பிரித்துப் பார்த்தால்  கமகமவென்று தக்காளி சாதம்.தொட்டுக் கொள்ள வடு மாங்காய் ஊறுகாய்.

“மோட்டலில் சாப்பிடுகிறீர்களே!விலை கொள்ளையாய் இருக்குமே?” என வினவுபவர்களிடம் ஒரு முன்விளக்கம்.எல்லா பார்சல்களின் விலையும 15 ருபாய்தான்.இதான் இதனுடைய சிறப்பம்சமே.புன்னகையுடன்,அன்பாக ஓனரே  பார்சல்,ஊறுகாய்,வடை பரிமாறுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.உள்ளே இலை வைத்து,வெளியே பேப்பர் கட்டி பார்சல் செய்கிறார்.இங்கு இவரே முதலாளி,சர்வர்,பார்சல்மேன் சகலமும்.இயற்கைச் சூழலில் அமைந்துள்ளதால் குளுகுளு என்றிருக்கிறது இந்த கொட்டகை உணவகம்.(இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதில்லை என்பது  சிறப்பம்சம்).சுவை அருமையாக உள்ளது. பெரும்பாலான மோட்டல்கள் போல பொடியை கலந்து தராமல்,முழு தக்காளி,காய்கறிகள் போன்றவற்றை அருகில் இருக்கும் இவரது கிச்சனிலேயே தயார் செய்து சாதமாக்கி,சுடச்சுட பார்சல் கட்டி,முடிந்தவரை பிரெஷாகவே பரிமாறுகிறார்.ஒரு மொறுமொறு  வடையின் விலை இங்கு 3 ரூபாய் மட்டுமே.சாப்பிட்டுவிட்டு குப்பைத் தொட்டியில் பொட்டலத்தை போட்டுவிட்டு,கை அலம்பி கல்லாவில் இவரிடம் காசு தரும்போது மனசு நிறைவடைகிறது.யார் என்றே தெரியாத இந்த மனிதர்,வியாபாரத்தை மட்டுமே மனதில் கொள்ளாமல்,வருகின்றவர்களுக்கு வசதி,நிம்மதியான மனநிலை,குறைந்த செலவில் வயிறார ருசியாக சாப்பிடலாம் என்ற திருப்தி அனைத்தையும் தந்துவிட்டு 5 ருபாய் சில்லறையை நீட்டி நம் முன் மறுபடியும் புன்னகைக்கிறார்.அந்த புன்னகையே நம்மை மீண்டும் வருக என்பதை நினைவூட்டினாலும்,அட 20 ருபாய் தான் கொடுத்தோம்.இதுலயே 5 ருபாய் மிச்சமா? என இரண்டாவது ரவுண்டு வயிற்றை நிரப்பிவிட்டு செல்பவர்களும் அதிகம். கொட்டகையை விட்டு வெளியே வந்து தெம்பாக வண்டி ஸ்டார்ட் செய்ய நியூட்ரலில் இருந்து எடுக்கும்பொழுதே மனம் அடுத்து எப்பொழுது வரலாம் என திட்டமிட தொடங்கி விடுகிறது.அதுதான் இந்த மனிதரின் மேஜிக்.ஒரு தண்ணீர் பாட்டிலுக்கும்,சிங்கள் டீக்குமே 20 ருபாய் மேல் வாங்கும் வசூல்ராஜா மொடேல்களுக்கு நடுவே இந்த வெள்ளந்தி மனிதருக்கு ஒரு ராயல் சல்யூட்.

கடைசிவரை முயன்றும் தன்னை பற்றிய பர்சனல் பேட்டியையோ,ஹோட்டலின் புகைப்படங்களையோ தர மறுத்துவிட்டார்.இதற்கு அடையாளம் எப்போயுமே இந்த கொட்டகை ஹோட்டல் இங்கே தான் இருக்கும்.யார் வந்தாலும் நல்ல சாப்பாடு கொடுப்பேன் என்றார்.அவரிடம் பேசியதில் தெலுங்கு வாடை வீசியது.”இப்போ கூட பார்சல் வேணுமா சொல்லுங்க!போட்டோ வேணாம் சாரு!” என்கிறார்.பசியோட வர்றவங்களுக்கு குறைந்த செலவுல சாப்பாடு.இதை  தவிர நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் இந்த பெயர் சொல்ல விரும்பாத கொட்டகைகாரர்.நீங்களும் வந்து பாருங்க….கொட்டகை உணவகத்திற்கு.சாப்பிட்டுவிட்டு போட்டோவையும் பெயரையும் கேளுங்கள்.அதெல்லாம் எதுக்கு சாரு!இன்னொரு பார்சல் வேணுமா? என்பார்.

Advertisements

காமன்வெல்த் பயிற்சி பட்டறை-வேலூர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்துள்ள கழனிபாக்கத்தில் உள்ள அனுவ்ரத் வித்யாலயா பள்ளியில் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் இளைஞர் நல மேம்பாட்டுப் பிரிவின் விளையாட்டு மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின்(CYSDP) ஒரு நாள் பயிற்சி பட்டறை வகுப்புகள் நடத்தப்பட்டது.இது இந்திய அளவில் முதல் முறை ஆகும்.மிகவும் பெருமைக்குரிய இந்த நிகழ்வினை நடத்தியவர் அடாஷியஸ் ட்ரீம்ஸ்-Audacious Dreams நிறுவனத்தின் இயக்குனரும்,காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் இளைஞர் மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஆசிய-பசிபிக் பிராந்திய செயலாளர்-தூதுவருமான திரு.தினேஷ் கஜேந்திரன்.

அவர் பேசியவை பின்வருமாறு.

“இந்த பயிற்சி பட்டறையின் முன்னோடி செயல்திட்டமானது கானா,கென்யா,ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் முன்னோட்டம் விடப்பட்டது.பின் உலக விளையாட்டு மற்றும் அமைதி நாளான ஏப்ரல் 7ம் தேதி 2015 அன்று இங்கிலாந்திலுள்ள காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் செயலர் அலுவலகத்தில் இராணி எலிசபெத் அவர்களால் அறிமுகபடுத்தபட்டது.”

நோக்கம்:

“இந்த நிகழ்வின் போது “Youth Advocacy Kit” என்ற 60 பக்க புத்தகம் பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட தமிழகத்தின் கல்வியியலாளர்கள் சுமார் 30 பேருக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.இதில் விளையாட்டை ஒரு தளமாக கொண்டு எப்படி ஊரக வளர்ச்சியையும்,சமுதாய முன்னேற்றத்தையும் மக்களிடையே நிகழ்த்த முடியும் என்ற சமூக-அரசியல் கோட்பாடுகளும்,முக்கிய உலக கொள்கைகளும் செயல்விளக்கமாக கற்றுதரப்பட்டுள்ளன.

இதன் பாடத்திட்டமானது காமன்வெல்த்தின் அத்தனை நாட்டு விளையாட்டு துறை அமைச்சர்களாலும் ஒப்புகொள்ளப்பட்ட,தீவிர செய்முறை ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற திட்டமாகும்.ஆப்பிரிக்க,வளரும் இந்திய துணைக்கண்ட,ஆசிய-பசிபிக் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கு விளையாட்டை எப்படி தங்கள் வாழ்வாதாரமாக்கி,சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தோடு இணைக்க முடியும் என்று கற்றுக் கொடுக்கிறோம்” என்றார்.

யூத் காமன்வெல்த்:

“மேலும் மாணவர்களின் வாழ்வியல் மேம்படவும்,பதின்பருவத்தில் திசை மாறாமல் பக்குவப்பட்டு வெற்றிக்காக உழைக்கவும்,வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான “யூத் காமன்வெல்த் திட்டம்” கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உலகளாவிய திட்டங்களை தமிழக அளவில் எங்கள் குழு சிறப்பாக நிகழ்த்தி வருகிறோம்.

அடுத்தகட்டமாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த காமன்வெல்த் தேசங்களுக்கு செல்ல இருக்கிறோம்.பயிற்சிகளும்,விளையாட்டின் சக்தியும்-அது குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வது எங்கள் குறிக்கோள் ஆகும்.மாணவர்களுக்கு உலகளவில் செயல்பட பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம்.இதன் மூலம் மாணவர்கள் தங்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக திடபடுத்திக் கொள்ளவும் ஆக்கபூர்வமான சாதனைகள் பல படிக்கவும் பட்டை தீட்டப்படுகிறார்கள்.விருப்பமுள்ள மாணவ-மாணவியர்கள் தங்களையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்” என்று முடித்தார்.

இந்த பயிற்சி பட்டறையினை அனுவ்ரத் வித்யாலயா பள்ளியின் நிறுவனரான திரு.மிட்டாலால் ஜெயின் அவர்களும்,பள்ளியின் முதல்வர் திரு.மேக்சிமஸ் எச்.ரோஸ் அவர்களும் முன்னின்று நடத்தினர்.மிகவும் பயனுள்ளதாக இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறை அமைந்தது.

இந்த அமைப்பு குறித்தும் யூத் காமன்வெல்த் குறித்தும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க

திரு.தினேஷ் கஜேந்திரன்- +91 9841525707

images2 images 1

அலுவலக ரகசியங்கள்(காப்பு) சட்டம்,1923

சில மாதங்கள் முன்பு மத்திய அரசு நிலைகளில் ஒரு சூறாவளி வீசியது.எந்த டிவி சேனலை மாற்றினாலும் பெட்ரோலிய துறை(MoPG) அமைச்சகத்தின் ஆவணங்களை தனியாருக்கு தாரை வார்த்த கார்ப்பரேட் உளவாளிகளின் கைது பற்றியே கர்ச்சித்தன இந்திய ஊடகங்கள். பெரும் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கும் இந்த விவகாரம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பது மக்களுக்கு மேம்போக்காக புரிந்தாலும் அவர்கள் மனதில் சில சந்தேகங்களும் எழுகின்றன.

இதற்கு நல்ல உதாரணம் அலுவலக ரகசியங்கள்(காப்பு) சட்டம்,1923. ஆங்கில காலனி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த பழைய சட்டத்தில் உள்ள ஓட்டைகள் (loopholes) வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் இந்த சட்டத்தின் குறைகளை(major flaws)  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTIA) மூலம் யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்திகொள்ளகூடும் என்ற உண்மை தான்.

இதுதான் விஷயம் என்று தெள்ளதெளிவாக புரிகின்றது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பகுதி 8(2) [section 8(2)] என்ன சொல்கிறதென்றால் “தகவல் அறியும் மனுதாரர்களின் நன்மையானது தகவல் கொடுக்கும் மனுதாரர்களின் இழப்புகளை காட்டினும் அதிகமாக இருந்தால் அந்த தகவலை வெளியிட்டு கொள்ளலாம்”.இது மிகவும் ஆபத்தான மற்றும் பொதுப்படையான (too sweeping a generalized clause)  ஒரு சொல்லாடலாக கருதப்படுகிறது.

இதில் என்ன தவறு என்று நீங்கள் கருதலாம்.விஷயத்தின் வீரியத்தன்மையை நீங்கள் எப்போது உணர்வீர்கள் என்றால் RTIயின் மூலம் அனைத்து முக்கிய அரசாங்க அலுவல் ரகசிய கோப்புகளையும், சட்டம் நன்கு தெரிந்தவர்களால் எடுத்து விட முடியும். இந்த அளவிற்கு சட்டம் பயின்றவர்களை சட்ட ஆலோசகர்களாக கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மட்டுமே நியமித்துக் கொள்வர்.அந்த அளவு வசதியிலா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.இது சட்டத்தின் மூலம் நிகழ்த்தப்படும் ஒரு வித ஓரவஞ்சனை ஆகும்.(lack of level playing field). அங்கு ஆரோக்கியம் இல்லாத போட்டியே நிகழும்.

சரி.இதற்கு தீர்வு? அருமையான இரு தீர்வுகள் இருக்கின்றன.

1.இரண்டாவது நிர்வாக சீரமைப்பு குழு(Second Administrative Reforms Commission—SARC) 2006ல் ஒரு ஆலோசனை வழங்கியது.அதில் அலுவலக ரகசிய சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தும் கொண்டு வந்து அதில் உள்ள சில அத்தியாவசிய (critical) கோப்புகளையும் தகவல்களையும் RTIயின் நீதிக்கு புறத்தே கொண்டு செல்வது.

2.அரசாங்கமே சில அடிப்படை தகவல்களை அனைத்து கம்பெனிகளுக்கும் ஒரு பொது தளத்தில் கொடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளின் சதி முயற்சி தோற்கடிக்கப் பட்டுவிடும்.

மீடியா கேட்கும் பல முக்கியமான மக்கள் சார்ந்த கேள்விகளுக்கெல்லாம் “இது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்ததால் வெளியிட முடியாது” என்ற ஒற்றை சொற்றொடரை வைத்து கபடி ஆடுகிற அரசு,இவ்வளவு முக்கிய கோப்புகளை விட்டதும் அல்லாமல் அல்லப் பழையதான ஒரு ரகசிய காப்பு சட்டத்தையும் வைத்திருக்கிறது.

இது குறித்த விவாதத்திற்கே இப்பொழுதுதான் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. http://www.business-standard.com/article/economy-policy/govt-proposes-massive-dilution-of-whistleblower-law-115051100940_1.html

விண்டேஜ் கார்களை ரசிக்கலாம்.விண்டேஜ் சட்டங்களை எப்படி ரசிப்பது?

rti-india-development-factors-and-the-loopholes-in-it-5-638

தமிழக மக்களின் மனசாட்சி-புதிய தலைமுறை சர்வேக்கள் மூலமான பிரதிபலிப்புகளின் சிறிய தொகுப்பு

1.எதிர்கட்சிகள் சட்டமன்றத்திலிருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்வது

அ.ஊடக விளம்பரத்திற்காக—19/54. =35%

ஆ.அவர்களுக்கு வேறு வழியில்லை—13/54  =24.07%

இ.ஆளும் கட்சியின் ஆணவத்தினால்—22/54  =40.74%

walkout

2.வன்முறை மூலம் கருத்து சுதந்திரத்தை அடக்க முயல்வதின் நோக்கம்

அ.அச்சத்தை ஏற்படுத்துவது—33/50=66%

ஆ.விளம்பரம் தேடிக் கொள்வது—12/50=24%

இ.கருத்தில்லை—5/50=10%

Use of Violence as a tool to curb the freedom of expression-survey

3.வெளியான ரயில்வே பட்ஜெட்டில் 

இனிமேல் 120 நாட்கள முன் ரயிலில் பயணச்சீட்டுக்களை முன் பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு 

அ. வரவேற்கத்தக்கது–22/50 =44%

ஆ பயனில்லை—22/50 =44%

(கடைசி நேரத்தில் பயணங்கள் முடிவு செய்பவர்களுக்கு பயணச் சீட்டு கிடைக்காது.)

இ. கருத்தில்லை—6 =12%

railwayBudget Survey

4.ஹிந்தி சர்வே–5 கேள்விகள்

hindi1

் hindi2 hindi3 hindi4 hindi5

5.உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிகள் மந்தமாக இருக்கிறதா?

1.ஆம்—33/42=78.57%

2.இல்லை–4/52=9.52%

3.கருத்து இல்லை—5/52=11.91%

government office-survey result

கசடற கற்று வெற்றிப்படியேறு-2 events

தேர்வுக்கு முன்

*******

31.01.2015.திருவண்ணாமலை அதிர்ந்தது. புதிய தலைமுறை குழுமத்தின் வெற்றிபடிகள் 2014-2015 நிகழ்ச்சி SKP பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள பெருவாரியான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் வருகை என எண்ணிக்கை 5000த்தை தொட்டது.அரங்கம் நிரம்பி வழிந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடி,குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே துவங்கியது.வரவேற்புரை யாற்றிய  புதிய தலைமுறையின் மண்டல மேலாளர் திரு.அய்யாதுரை அவர்கள் மாவட்டத்தின் மோசமான கல்வி நிலையை மாணவர்கள் முயன்று மாற்றி திருவண்ணாமலையை மாநிலத்தின் சிறந்த இடத்தில வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கரகோஷங்கள் பறந்தன. முன்னுரையை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர்கள் திரு.ஜிகே ஞானமூர்த்தியும்,செந்தில்குமாரும் மாணவர்கள் நவீன தொலைதொடர்பு சாதனங்களிலேயே மூழ்கி நேரத்தை வீணடிக்கின்றனர்.அதை தவிர்த்தாலே பெருவாரியான மதிப்பெண்களை குவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

SKP கல்வி குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவரான திரு.SKP கருணா அவர்களின் உரை ‘நச்’ என்று இருந்தது. எந்த ஊரிலும் மாணவிகள் சிறப்பாக படித்து விடுவார்கள்.95 சதவிகிதமாவது எட்டிவிடுவார்கள் தேர்ச்சி விகிதத்தில்.அதனால் நம் மாணவிகள் பற்றி எனக்கு பெருமிதம் அதிகம்.கவலைகள் குறைவு.ஆனால் எம் மாணவர்கள் நீங்களோ சினிமா,காதல்,தவறான பழக்கங்கள் இவற்றில் விழாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே வாழ்வில் உயர முடியும் என்பதை பதிகிறேன் என்றார்.இவரது பேச்சிற்கு கிடைத்த கைதட்டல்கள் அடங்க 2 நிமிடங்கள் பிடித்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி.ப்ரீத்தி ஸ்ரீநிவாசன் கலந்துகொண்டார்.இவரது வீல்சேர் மேடையில் ஏறியபோது அரங்கம் இரண்டாக பிளக்கும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். “நான் இந்திய மகளிர் கிரிக்கெட் அண்டர்-19 அணியில் காப்டனாக இருந்தேன்.அப்போது எனக்கு வயது 18.ஒரு விபத்து நேர்ந்தது.கழுத்து எலும்பு முறிந்து முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது.இன்று வரை கழுத்திற்கு கீழ் எந்த ஒரு அசைவும் கிடையாது.ஆனால் நான் சோர்ந்து படுக்கையில் விழவில்லை.மாறாக உத்வேக பேச்சாளராக மாறிவிட்டேன்.நான் moviebuff.com என்ற இணையத்தளத்தில் விமர்சகராக இயங்குகிறேன்.ஒரு மென்பொருள் வைத்துள்ளேன்.அது என் குரலை எழுத்துக்களாக மாற்றி விடுகின்றது.கைகள் இல்லாமலே எழுதுகின்றேன்.என்னால் இவ்வளவு முடியும் என்றால் மாணவர்களாகிய உங்களால் என்ன முடியாது? ” என்றார். அரங்கமே இந்த கேள்வியை கேட்டு உருகியது.மெய் சிலிர்த்தது. விசில்கள் முதல்முறையாக பறந்தன.மாணவர்களிடம் மைக் வழங்கப்பட்டது.ஐ ஏ எஸ்,ராணுவம்,அரசியல் போன்ற மாணவர்களின் இலட்சியங்கள் வெளிப்பட்டன.”நான் நிச்சயம் சாதிப்பேன் மேடம்” என்று ஒரு மாணவன் சூளுரைத்தான்.

புதிய தலைமுறையின் சார்பாக இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய நிகழ்ச்சி மேலாளர் திரு.சூர்யா தங்கராஜ் அவர்கள் மாணவ கண்மணிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும்.அதில் கிடைத்த உற்சாகத்தை கொண்டு அயராது படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு பாடத்திற்கும் அதில் விற்பன்னரான ஆசிரியர்கள் கொண்டு டிப்ஸ் வழங்கப்பட்டது.அதை எழுதும் பேடில் மாணவர்கள் சீரியஸ் ஆக குறித்துக் கொண்டனர்.

கணித ஆசிரியர் திரு.R. சம்பத் அவர்கள் “கணிதத்தை கடப்பது வெகு சுலபம்.தேற்றங்கள்,பார்முலாக்கள் இவற்றை விரல் நுனியில் மாணவர்கள் வைத்திருக்க வேண்டும்.200 மதிப்பெண்கள் பெறுவது ஒரு மதிப்பெண் வினாக்களின் தன்மையை பொறுத்தே அமையும்” என்றார்.

இயற்பியல் ஆசிரியரான 13 வருட அனுபவம் கொண்ட திரு.சுந்தரம் அவர்கள் “இயற்பியலின் சாரமே அலகுகள்(SI Units) தான் என்றார்.கட்டாய கேள்விக்கு அலகுகளின் தன்மையை உணர்ந்து பதிலளித்தால் 200க்கு 200  மதிப்பெண்கள் என்பது மாணவர்களுக்கு துச்சமே”என்றார்.

வேதியயிலில் சீனியர் ஆசிரியையான திருமதி.ஜமுனா அவர்கள் “வேதியியல் இல்லாத இடமே இல்லை.ஆனால் வேதியியல் கற்பதை வேப்பஞ்சாரை குடிப்பது போல மாணவர்கள் உணர்கிறார்கள்.இதில் முக்கிய வில்லனே ஆர்கேனிக் கெமிஸ்டரி தான்.இதிலுள்ள சூட்சுமங்கள் என்னவென்றால் இதற்கென்று தனியாக ஒரு நோட்டில் அத்துணை வேதி விளைவுகளையும்(REACTIONS) எழுதி வைத்து படித்தால் எளிதாக வெற்றியை உரிதாக்கலாம்” என்றார்.

தாவர புலியான(!) திரு.மு.பிரசன்னா “ஒரு செம்பருத்தி பூ உங்கள் கண்ணை பறிக்கும் போது கூட அதன் அறிவியல் பெயரான hibiscus rosasinensis என்பது உங்களுக்கு தெரியும் வகையில் ப்ரிபேர் செய்தால் உங்களை அடிச்சுக்க தமிழகத்தில் யாரும் உண்டோ?” என வினவினார்.

கல்விசோலை இணையதளத்தை நடத்தி வரும் திரு.தேவதாஸ் அவர்கள் விலங்கியல் டிப்ஸ் அளித்தார்.”விலங்கியலின் அழகே அதன் வரைபடங்கள் தான்.அவற்றில் உள்ள பகுதிகளை மார்க் செய்து விவரித்தாலே விலங்கியல் வசப்படும்” என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்தார்.

பொருளாதாரம் தொடர்பாக மினி ஆடிடோரியத்தில் திரு.கோவிந்தராஜன் அவர்கள் “பொருளாதாரம் என்னும் சுவையை ருசிக்க ஆரம்பித்தால் உங்களால் நிறுத்த முடியாது.மிகவும் நல்ல ஸ்கோப் உள்ள துறை இது” என்றார்.

வணிகம் மற்றும் கணக்கு வழக்கியல்(Commerce and Accountancy) துறை வல்லுனரான ஜி.பி.ராம் “பாடத்தில் உள்ள கணக்குகளை புரிந்து கொள்ள இப்பொழுதே ஆசிரியர் உதவியை நாடுங்கள்.” என்றார்.

வரலாறு முக்கியம் மந்திரியாரே என்பதர்கேற்ப வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சி.ஸ்ரீனிவாசனை பூக்களை மொய்த்த தேனீக்கள் போல மாணவர்கள் சூழ “வரலாற்றில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர்களின் வரலாறும்,உலக வரலாறும் மிக முக்கிய பகுதிகள்.இவற்றை ரசித்து படியுங்கள்” என்றார்.

********

தேர்வுக்கு பின்

மாணவர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர்களை அரவணைத்து வழிநடத்தி வருகின்றது புதிய தலைமுறை குழுமம்.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளில் சாதனை படைத்து சிறகடிக்க “வெற்றிப்படிகளை” உருவாக்கி நடத்தி வரும் குழுமம் தான்,அவர்கள் +2விற்கு பின்னும் குழம்பி விடாமல்,சரியான துறையை தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்திட “கற்க கசடற” நிகழ்ச்சியினை வருடாவருடம் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.இந்த வருடம் வேலூரில் கோலாகலமாக “கற்க கசடற” துவங்கியிருக்கிறது.புதிய தலைமுறை வழங்கும் இக் கருத்தரங்கினை எஸ்.ஆர்.எம் பல்கலையும்,சாஸ்தா கல்வி குழுமமும் ஏப்ரல் 18 அன்று வேலூர் எத்திராஜ் அம்மாள் திருமண மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

விழாவில் ஹைலைட்-பேச்சாளர்களே குறிப்பிட்டது போல் பெற்றோர்கள் துணையின்றி மாணவ-மாணவிகள்,குறிப்பாக மாணவர்களை விட அதிகமாக வருகை தந்த மாணவிகள் தான்.9.30 மணிக்கு ஆரம்பித்த விழாவிற்கு 8.45,9 மணி அளவிலேயே ஆர்வமுடன் அரங்கின் உள்நுழைந்தனர்.பெயர் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.பேச்சாளர்கள் கையால் ஒரு திடீர் பரிசை மாணவர்கள் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து,அவர்களை மேடைக்கு அழைத்து,கருத்தரங்கின் இடையிடையே வழங்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர் திருமதி.பர்வீன் சுல்தானா,டாக்டர் திரு.மாறன் மற்றும் டாக்டர் திரு.சாரோன் ஆகியோர் வருகை தந்து மாணவர்களை உத்வேகப்படுத்தி,உற்சாகத்தின் எல்லைகளுக்கு அழைத்து சென்றனர்.அந்த முத்தான மூவர் பேசியதன் சாரம் இதோ உங்கள் முன் ஒரு தொகுப்பாக.

டாக்டர்.பர்வீன் சுல்தானா:

மகாகவி பாரதியின் வார்த்தைகளான

“கற்பவனாக இரு அல்லது கற்றதை கற்பிப்பவனாக இரு அல்லது கற்பவருக்கு உதவி புரிபவனாக இரு”வுடன் ஆரம்பித்த பர்வீன் “வேலூர் என்றவுடன் நினைவுக்கு வருவது-இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சுதந்திர போராட்டதிற்கான விதைகளை சிப்பாய் கழகம் மூலம் முதன்முதலில் விதைத்த இடம்.இது ஒரு பிரம்மாண்டமான அரங்கம்.நான் அரங்கத்தின் அளவை சொல்லவில்லை.இங்கு வந்திருக்கும் பிள்ளைகளின் மனத்திண்மையைத் தான் சொல்கிறேன்.பெற்றோர்கள் துணையின்றி இங்கு வந்திருக்கிறீர்கள்.முதலில் அதற்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் இடது,வலது பக்க எதிரிகளை மறந்துவிட்டு(ஆம்,இந்த நேரத்தில் உங்கள் நண்பர்கள் கூட எதிரிகள் தாம்) உங்களை கவனியுங்கள்.நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை முதலில் தெளியுங்கள். போராட்டத்தில் இருந்து நமது வாழ்க்கையை பிரிக்க முடியாது.ஒவ்வொரு சவாலிலும் உங்களுக்கு உள்ள வாய்ப்பை மட்டும் பாருங்கள்.மாவீரன் நெப்போலியன் வார்த்தைகள் என்னவென்றால் ”நீச்சல் தெரியாத நான் சுறாக்கள் நிறைந்த ஆழ்கடலிலேயே நீச்சல் பழக விரும்புவேன்”. உங்கள் படிப்பை நீங்கள் முடிவு செய்யுங்கள்.உங்கள் நண்பர்கள் தேர்ந்தெடுக்கும் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.

இன்றுகூட ஆஸ்திரேலியாவில் 6,50,000 ரூபாய் மாத சம்பளத்தில்,சமையற்கலை படித்த இந்திய செப்களுக்கு வேலை உண்டு.ஆனால் அவை நம் கண்களில் தெரிவதே இல்லை.இன்றைய இளைஞர்களின் பெரிய பலவீனம்- உங்களுடைய நேரத்தையும்,சிந்தனையையும்,கனவுகளையும் பிறர் களவாடுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். தடுத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.எந்த வேலையையும் சோர்வுறாத தீவிரத்தன்மையுடன் செய்பவர்கள் எல்லா துறைகளிலும் விற்பன்னர்களாவர்.நீங்கள் புத்தகங்கள் வாசிக்காவிடிலும் பத்திரிக்கைகளாவது உங்கள் கைகளில் இருக்கவேண்டும்.

ஒரு ஓவியர் மரம் வானத்தை தொடுவதுபோல வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து தான் முட்டாளாக்கப் பட்டதாக நினைத்துகொண்ட ரசிகன் ஒருவன் அவரிடத்தில் “இது பொய் இல்லையா?” என்றான்.அவர் அமைதியாக,”இது பொய் ஆகாது.நான் ஒவ்வொரு மரத்தின் கனவினை வரைந்திருக்கிறேன்” என்றார்.பதில்களல்ல வாழ்க்கை.நிறைவுறாத கேள்விகளின் தேடல்களே வாழ்க்கை.தடாகத்தில் ஒரு மீனும் பறவையும் மோதிக்கொண்டிருப்பது போன்றது உங்கள் மனம்.அதில் ஒன்று உங்கள் இலக்கு.இன்னொன்று இச்சை.இலக்கு ஜெயிக்க இச்சையை தவிருங்கள்.வாழ்வு உங்கள் வசப்படும்.” என்று சரங்கள் பல வெடித்தார்.

டாக்டர்.மாறன்:

“கல்வி இல்லையேல் செல்வமில்லை.கல்வி இல்லையேல் இன்றைய வாழ்வில்லை.இந்தியாவின் மதிப்பு உலகரங்கில் நம் கல்வியை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.வேலை செய்பவர்களாகவே காலத்தை தள்ளி விடாதீர்கள்.குறைந்தபட்சம் 5 வருடங்களாவது ஒரு துறையில் வேலை புரியுங்கள்.பிறகு சுயதொழில் ஆரம்பித்து பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக வாழுங்கள்.பொறியியல் இன்னும் 20 வருடத்திற்கு இந்தியாவில் கோலோச்சும்.நம் அரசின் திட்டங்கள் உற்பத்தி துறையை நோக்கியே அமைந்துள்ளது.அதற்கேற்ப உங்கள் துறையை திட்டமிடுங்கள்.

பி.ஏ வரலாறு படித்தாலும் வேலை உண்டு.சி.ஏ படித்தாலும் வேலை கிடைக்காது.வேலை என்பது படிப்பை பொறுத்ததல்ல.அதை படிக்கும் தனிநபரை பொறுத்தது. ஆட்டு மந்தையைப்போல முடிவெடுக்காமல் நின்று யோசியுங்கள்.சூரியனுக்கு கீழ் ஏகப்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன.குறுகலான கண்ணோட்டத்துடன் நோக்கினால் அவை தென்படாது.தேடலின் மூலமே தென்படும்.(எ.டு) மெக்கட்ரானிக்ஸ்,ரோபாடிக்ஸ்,மெடலர்ஜி,ஆட்டோமொபைல்,பயோ-தொழில்நுட்பம்,நானோ-பொறியியல்,பெட்ரோ கெமிகல்,கன்ஸ்ட்ரக்ஷன்,ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்,இன்டீரியர் டிசைனிங்,குவாலிடி சர்வேயிங்.

சுயநலமாக துறையை தேர்ந்தெடுக்காதீர்கள்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை மூலம் நம் நாட்டிற்கு நலம் பயக்க வேண்டும்.இந்தியாவிலேயே போராடுங்கள்.தோற்றாலும் போராடுங்கள்.வெற்றி ஒருநாள் நிச்சயம்.அன்று வரும் வெற்றி உங்களை விட்டு அகலவே அகலாது.எழுச்சி முக்கியம்.சுயதொழில் முனைவோர்கள் நம் கண்முன்னே வெற்றி பெறுகிறார்கள்.அந்த ஆரோக்கியமான முன்மாதிரியை முழுமனதுடன் பின்பற்றுங்கள்.ஊரக மாணவர்கள் திணறும் ஒரே விஷயம் ஆங்கிலம்.ஒரு ஆறு மாதம் லிமிட் வைத்துக்கொள்ளுங்கள்.தரமான ஆங்கில நாளிதழை வரிவிடாமல்,வெறித்தனமாக வாசித்து வாருங்கள்.எந்த ஆங்கில கோர்ஸும் உங்களுக்கு தேவைப்படாது.உங்கள் வாழ்க்கை நீங்கள் நிர்ணயிப்பதுதான்.”

டாக்டர்.சாரோன்:

“இயலாமையை வெற்றியாக்குவதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே.இதே வேலூரில் படித்த உங்கள் மூத்த சகோதரன் நான்.இன்றைய மாணவர்கள் தெளிவானவர்கள்.அவர்களை குழப்புவது பெற்றோர்கள் தான்.முதலில் அவர்கள் தங்கள் அதீத பாதுகாப்புணர்ச்சியில் மாணவனின் திறனையும் விருப்பத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு பிடிக்காத துறையை அவர்கள் சார்பில் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.இது தவறு.அவர்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் வழங்க வேண்டும்.அது சுதந்திரம் அல்ல.அவர்களின் உரிமை.முகநூல்,ட்விட்டர்,வாட்சப்ப் நீங்கள் ஜெயித்த பின்பும் இருக்கும்.அதை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி உங்கள் நேரத்தை வீணடித்து வாழ்விழந்துபோனால் அதைவிட துயரில்லை.

நாம் கற்கப் போகும் துறையை மேலோட்டமாக பார்த்து பணம் சம்பாதிப்பதில் மட்டும் நம் சிந்தையை சிதற விடுகிறோம்.மாறாக அதில் முழு சிந்தையை செலுத்தி நிபுணத்துவம் பெற்றால் வெற்றி பெற இயலும்.வேலூரில் டாக்டர் இல்லாமல் ஒரு கர்ப்பிணி பெண் இறந்ததை பார்த்து கதிகலங்கிய ஒரு அமெரிக்க பெண்ணின் முயற்சி தான் இன்று உலக புகழ் அடைந்திருக்கிற சிஎம்சி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை.அந்த பெண்மணி ஐடா ஸ்கட்டர்.ஒரு சிறு பொறியே பெரும் காட்டுத்தீயினை உண்டாக்கும்.இதற்கு பாரதியின் “அக்கினி குஞ்சொன்று கண்டேன்”பாடலே சாட்சி. கல்வியை கண்ணாக நினையுங்கள்.கைவிடப்பட மாட்டீர்கள்.அது உங்களுக்கு வாழ்வளிக்கும்.தவறு செய்யாமல் கற்றுகொள்வது கடினம்.அந்த தவறை திரும்ப செய்யாதிருப்பதே வெற்றி.நம் படிப்பினை.”

Dr.Parveen Sultana 1

வருகிறது 5ஜி தொழில்நுட்பம்

முகநூலில் ஒரு நிலைத்தகவல் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளிக் கொண்டிருந்தது.

அது

“2ஜி யோ ஆமை வேகம்.3ஜி யோ விலைவாசி நமக்கு கட்டுப்படாது.2.5ஜி என்று ஏதாவது இன்டர்நெட் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்பதே.நம் அனைவரின் மனசாட்சியை பிரதிபலிக்கும் கருத்தே இது.

மோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவராக தோன்றுகிறார்.ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதியறிக்கையை அக்கு வேறு,ஆணி வேறாக அலசினால் செல்போன்,இன்டர்நெட் சேவை கட்டணங்கள் பன்மடங்கு உயரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பார்செலோனா வில் நடந்த மொபைல் உலக காங்கிரஸில் நிறைய புதுமைகள் காணப்பட்டன.சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் வகையறா அலைபேசிகள் சக்கைப்போடு போட்டன.இவற்றையெல்லாம் அள்ளி சாபிட்டது ஒரு விஷயம்.அதுதான் 5ஜி தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம்.

“முதலில் 4ஜி எப்போப்பா வரும்?” என்று கேட்பவர்களுக்கு கூடிய விரைவில் என்பதே பதில்.சென்னை,பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டும் இச்சேவை ஏர்டெல் போன்ற நிறுவனங்களினால் கொண்டுவரப்பட்டுள்ளன.இவற்றின் கட்டணம் ட்ராயின்(TRAI) எதிர்கால முடிவுகளை பொறுத்தே அமையும்.

“நல்லதே நினை.நல்லதே நடக்கும்” என்ற ஆக்கபூர்வமான சொற்றொடரை உள்வாங்கி மனதில் நிறுத்திக்கொண்டு 5ஜி விஷயத்திற்கு வருவோம்.

இந்த 5ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் எரிக்சன் சர்வதேச நிறுவனம் ஈடுபட்டுள்ளது.2020க்குள் முடித்து நடைமுறைக்கு 5ஜி யை கொண்டு வர திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

அதற்கு முன்பே 5ஜி யை அதிரடியாக களமிறக்க ஏகப்பட்ட போட்டி தொழில்நுட்ப உலகில் நிலவுகிறது  தனிக்கதை.ஆனால் சாத்தியமான இலக்கு 2020 என்பதே ஆகும்.

இந்த 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் ஒரு வினாடிக்கு 5.1 ஜிபி டேட்டா பாக்கெட்டுகள் ஆகும்.அதாவது ஒரு  முழுநீள அல்ட்ரா ஹை-டெபனிஷன் (UHD) திரைப்படத்தைக் கூட 6 வினாடிகளுக்குள் தாமதமே(no buffering)  இல்லாமல் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வளவு சக்தியுள்ள 5ஜி இந்தியாவிற்கு பயன் தருமா? என்பதே நம் முன் உள்ள கேள்வி.இப்பொழுதே அதற்கான சாளரங்கள் திறக்கப்பட ஆரம்பித்துவிட்டன.உதாரணம் டில்லி.கெஜ்ரிவால் டில்லியின் மார்க்கெட் போன்ற பொது இடங்கள் மட்டுமல்லாமல் என்.சி.ஆர் எனப்படும் தேசிய தலைநகர பகுதி முழுவதுக்கும் இணையத்தை மக்களுடைமை ஆக்க உள்ளார்.இதற்காக சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.இந்த திட்டத்திற்கான கட்டமைப்பு வசதிகள் செய்ய குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கரை ஆண்டுகள் தேவை.டெல்லியில் இது சக்சஸானால்,அடுத்து டயர் 1 மாநகரங்களான மும்பை,கொல்கத்தா,அஹமதாபாத்,பெங்களூரு,சென்னை,ஹைதராபாத்,கொச்சி,புனே உள்ளிட்ட இடங்களில் இலவச இணையம் அமல்படுத்தப்படும்.

அப்பொழுது 5ஜி உங்கள் இல்லத்தையும் இணைக்கும்.நிஜமாகவே.

5g device

5g device

5g 5g-100058428-large-600x220 development from now to 5g

Ericsson's Chief Executive Hans Vestberg speaks during a presentation event at the Mobile World Congress in Barcelona March 2, 2015. Ninety thousand executives, marketers and reporters gather in Barcelona this week for the telecom operators Mobile World Congress, the largest annual trade show for the global wireless industry.   REUTERS/Gustau Nacarino (SPAIN - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY BUSINESS TELECOMS)

Ericsson’s Chief Executive Hans Vestberg speaks during a presentation event at the Mobile World Congress in Barcelona March 2, 2015. Ninety thousand executives, marketers and reporters gather in Barcelona this week for the telecom operators Mobile World Congress, the largest annual trade show for the global wireless industry. 

The Mobile World Congress that happened this year in Barca,Spain

The Mobile World Congress that happened this year in Barca,Spain

விருதுகளின் விளைநிலம்–சென்சார் இல்லா வெர்ஷன்

தமிழ்நாட்டின் ஆரவாரமில்லாத மாநகர்களில் ஒன்று வேலூர்.இக் கோட்டை மாநகரின் புறநகர் பகுதி சத்துவாச்சாரி.சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்தியாவின் எல்லா புறநகர் பகுதிகளைப் போலவே காட்சியளித்தாலும் இது சாதாரண ஊர் அல்ல.இந்தியாவில்,ஏன் உலகிலேயே இது போன்ற பகுதி இல்லை.நம் தேசத்தின் முக்கிய விளையாட்டு கிரிக்கெட்.ஆனால் இங்கு கிரிக்கெட்டின் சுவடே இல்லை.ஏனென்றால் இந்தியாவின் பளு தூக்கும் தலைநகரம் இது.ஊர் முழுக்க அவ்வளவு க்ரேஸ்  அதற்கு.இந்தியாவின் விளையாட்டு ஐகான்  சச்சின் டெண்டுல்கராக இருக்கலாம்.ஆனால் இங்கு  பார்க்கிலும் ஒரே ஒரு ஆதர்ச நாயகனின் முகம் தான் பொறிக்கபட்டிருக்கிறது.ஏனென்றால் இது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமகன் சதிஷ்குமார் சிவலிங்கத்தின் சொந்த ஊர்.அவரின் பேட்டை என்று கூட சொல்லலாம்.

நான்கே தெருக்கள் கொண்ட எளிமையான சத்துவாச்சாரி முழுக்க முழுக்க ஜிம்கள்.ஒரு தெருவிற்கு குறைந்தபட்சம் ஒரு உடற்பயிற்சி கூடமாவது அமைக்கபட்டிருக்கின்றது.எங்கு பார்த்தாலும் திம்சு கட்டையாக இளைஞர்களும் நடுத்தர முன்னாள் சாம்பியன்களும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.நாம் போர் அடித்தால் டிவி பார்ப்போம்.இவர்கள் போர் அடித்தால் கூட தண்டால் எடுக்கிறார்கள்.அனைவரும் விளையாட்டு கோட்டாவில் தான் கல்லூரி படிக்கிறார்கள்.விளையாட்டில் சாதித்து தான்  வேலைகளான ரயில்வே,பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்(BSF ),ராணுவம்,CISF,IAF, கப்பற்படை என வேலைக்கு சேர்கிறார்கள்.இது காலம் காலமாக இங்கு ஒரு  பாரம்பரியமாக தொடர்ந்து வந்துள்ளது.இந்திய பளுதூக்குதலின் முக்கால் வாசி சாம்பியன்களும் ,இந்திய பாதுகாப்பின் அணைத்து துறைகளுக்கு ஆட்களும் இங்கிருந்துதான் இளம் வயதிலிருந்தே வைரம் போல பட்டை தீட்டப்பட்டு நாட்டுக்காக அர்பணிக்கப்படுகிறார்கள்.பளுதூக்குதலில் ஒரு வீட்டில் ஒருவராவது இங்கிருந்து செல்லாவிட்டால் அது குடும்ப கவுரவத்திற்கு ஒரு அவமானமாகவே பார்க்கப்படுகின்றது. இங்கிருக்கும் எல்லா ஜிம் களுக்கும் துவக்கப் புள்ளி அட்லஸ் உடற்பயிற்சி கூடம்.இங்கிருந்து 7 சர்வதேச சாம்பியன்களும் எண்ணற்ற தேசிய சாம்பியன்களும் இந்தியாவிற்காக பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

சத்துவாச்சாரியின் வரலாறு

50 வருடங்களுக்கு முன்(1964) இங்கு ஜிம்களே இல்லை.சிலம்பக் கலை(கோலாட்டம்)தான் இருந்தது.பின் உடற்பயிற்சிகூடமாகவும் பளு தூக்கும் மையமாகவும் மாறியது.1964ல் வேலூர் சிஎம்சி  சவுத்தையாவும், விஐடி வேந்தர் விஸ்வநாதனும் அன்றைய வட ஆற்காடில் பளு தூக்கும்  சங்கம் நிறுவினர்.சதீஷின் தந்தை திரு.சிவலிங்கம் அவர்களின் குரு மாஸ்டர் சிவாவும் பஞ்சாட்சரம் என்பவரும் சத்துவாச்சாரியில் அட்லஸ் ஜிம்மை ஒரு மன்றமாக ஆரம்பித்தனர்.அன்றைய நிலையில் பளு தூக்கும் செட்டே கிடையாது.வசதி இல்லாததால் க்ரோ-பாரில் சிமெண்ட்டிலேயே 5கி,10கி,20கி என்று  ஓட்டைப்போட்டு அதை வைத்து பயிற்சி செய்தனர்.மாவட்ட மாநில போட்டிகளில் வென்றனர்.1970களில் அவர்களின் சிஷ்யபிள்ளைகளான அட்லசின் எம்.வேலு மற்றும் தமிழ்ச்செல்வன் (முதல் அரசு உத்தியோகம் சத்துவாச்சாரியில் பெற்றவர்-ஐசிஎப் )தேசிய அளவில் சாதனை படைத்தனர்.

இவர்களை முன்மாதிரியாக கொண்டு மற்ற ஜிம்கள் உருவாக ஆரம்பித்தன.ஸ்டார்,காந்தி,ப்ளூஸ்டார் போன்ற அனைத்து ஜிம்களும் முதலில் சிலம்புக் கலையை கற்பித்தவையே .நூற்றுக்கனக்கானோர் அரசாங்க வேலை சத்துவாச்சாரியில் பளு தூக்குதல் மூலம் பெற்றுள்ளனர்.அதில் 56 நபர்கள் அட்லஸ் ஜிம்மை சார்ந்தவர்கள்.3 அர்ஜுனா விருதுகள்,4 ஒலிம்பியன்கள் இங்கு செதுக்கப்பட்டவர்கள். சதீஷ் 6வது சர்வதேச சாம்பியன்.ஏற்கனவே வேலு,தமிழ்ச்செல்வன்,மகேந்திரன்,சம்பத்,பிரபு,வினோத்,இளம்பருதி,முது போன்ற ஜாம்பவான்களும் இதே சத்துவாச்சாரியில் இருந்து சென்றவர்கள் தான். வீரர்கள் சொந்த முயற்சி மூலமாக மட்டுமே ஜிம்மை காப்பற்றி வந்துள்ளனர்.

சதீஷ் என்னும் அசுர உழைப்பாளி:

இதே அட்லஸ் ஜிம் மின் தெருவில் தான் சாம்பியன் சதீஷ் குமாரின் எளிமையான வீடும் அமைந்திருக்கின்றது.6ம் வகுப்பு படிக்கும் பொழுதே பளுதூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். சென்றாலும் அதில் முதலிடம்,தங்கபதக்கம் என்று பள்ளி நாட்களிலேயே அசர வைத்து மாவட்ட,மாநில,தேசிய,தற்பொழுது சர்வதேச சாம்பியன் ஆகவும் சொந்த முயற்சியினாலேயே முன்னேறியவர்.18 வயதிலேயே கிழக்கு,தெற்கு ரயில்வேகளில் பணி செய்ய வாய்ப்பு பெற்று,தற்பொழுது தென்னக ரயில்வேயின் காட்பாடி டிவிஷனில் பணியாற்றுகிறார்.

இவரின் தந்தை திரு.சிவலிங்கம் முன்னாள் பளுதூக்கும் அத்லெட்,ராணுவ வீரர்.20 ஆண்டுகள் ராணுவத்தில் தேசத்திற்காக பணி புரிந்திருக்கிறார்.தற்பொழுதும் விஐடி பல்கலையின் பாதுகாப்பு பிரிவில் தலைவராக பணி செய்து வருகிறார்.இவரே சதீஷின் ஆர்வத்திற்கு ஊக்கமளித்து உறுதுணையாய்,அவரின் ஆரம்பகால கோச்சாகவும் இருந்து அவரை சாம்பியன் ஆக உருவாக்கி இருக்கிறார்.உடற்பயிற்சி,உணவுமுறை,பழக்க வழக்கங்கள் என்று மகனின் உடல்,பொருள்,ஆன்மா அனைத்தையும் முறுக்கேற்றிய தந்தை என்னும் குரு.சதீஷின் தம்பி பிரதீப்பும் அண்ணனை போலவே பளுதூக்கும் வீரராக பயிற்சி பெற்று வருகிறார்.தற்பொழுது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிக்காக அண்ணா பல்கலை சார்பாக பஞ்சாப் சென்றுள்ளார்.இவர் ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹகீம் பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கனிக்கல் பயில்கிறார்.

பேட்டி:சிவலிங்கம்,சதீஷின் தந்தை,ஆரம்பகால பயிற்சியாளர் (தற்போதைய பயிற்சியாளர் திரு நாகராஜன் அவர்கள் டீமுடன் போட்டிக்காக ஜலந்தர் சென்றுள்ளார்):

“சிறு வயதிலிருந்தே இரவுப்பகல் பாராம உழைப்பார் சதீஷ்.போட்டிகளில் ஜெயித்த பணம்,வேலையில் கிடைக்கும் சம்பளம் இவற்றை மூலதனமாக வைத்துதான் தன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த உத்வேகத்துடன் உழைத்துத்தான் தேசிய பதக்கங்களை வென்றார்.ஆனால் இது மட்டும் போதாது.ஒரு மாத காலம் லண்டனில் சிறப்பு பயிற்சி,உணவுமுறை பின்பற்றி 18 கிலோ அதிகமாக பளு அதிகமாக தூக்கும் திறனை வளர்த்தார்.இவருடைய இதே மனநிலையில் தொடர்ந்தால் இந்தியாவிற்கு 2016 ரியோ டி ஜெனிரோ(பிரேசில் நாட்டில்) ஒலிம்பிகில் பளு தூக்கும் போட்டியில் நிச்சயம் ஒரு தங்கம் காத்திருக்கின்றது.

இன்று வரை 71 நாடுகள் கலந்துகொண்ட காமன்வெல்த் போட்டியில் இவர் செய்த உலக சாதனை தொடர்கிறது(77.6 கி).ஆனால் அணைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இன்னும் 10 கிலோ அதிகமாக பளு தூக்க வேண்டும்.அதற்கு ஒரு வருட அதிநவீன பயிற்சி அவசியம்.அது வெளிநாடுகளில் எல்லா தட்பவெப்ப நிலையையும் தாங்கக் கூடிய சிறப்பு பயிற்சியாகும்.இதற்கு ஒரு நாளைய செலவு 20,000-30,000 இந்திய ரூபாய்கள் ஆகும்.ஆனால் சத்தியம் செய்துகூட சொல்லலாம் அந்த தங்க பதக்கம் நமதாகும் என்று.இதனை சதீஷ் குமாரின் வருமானம் மட்டும் கொண்டு செய்ய இயலாது.

சீனா போன்ற அரசுகள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் தகுதியுடைய வீரர்களை தத்தெடுத்து கொள்ளும்.அவர்களக்கு உயரிய பயிற்சிகளை பல்வேறு நாடுகளில் வழங்கும்.இயல்பிலேயே போராட்ட வீரரான சதீஷை இந்திய அரசின் விளையாட்டு துறை தத்தெடுத்து கொண்டால் அவரால் உசேன் போல்ட் ஓட்டப் பந்தயத்தில் அசைக்க முடியாத வீரராக தொடர்வதைப் போல பளுதூக்குதலில் இந்தியாவை மாற்ற முடியாத சக்தியாக உருவாக்க முடியும்.

பயிற்சியாளர் சத்துவாச்சாரி ரவி:

                  முன்னாள் தேசிய சாம்பியன்.இந்நாள் பளுதூக்குதல்,வலுதூக்குதல்,உடல் கட்டமைப்பு கோச்.”நான் எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்தே ஜிம்மை நேசிப்பவன்.உடற்பயிற்சி மேல் உள்ள காதலே தற்போது 54 வயதாகும் என்னை உத்வேகபடுத்தி இன்றளவும் செயல்பட வைக்கின்றது.என் பீனிக்ஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏராளம்.நான் 1988,1989,1990 களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய அளவில் ஓவரால் சாம்பியன் பட்டம் பெற்றேன்.அதுபோலவே என் மக்களும்,மாணாக்கரும் பெற அவர்களை உருவாக்கி வருகின்றேன்.இங்கு வரும் மாணவர்கள் ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்தி போட்டிகளில் தங்கள் முழுத்திறனை வெளிக்கொணர செய்வதே இன்றுவரை “சத்துவாச்சாரி ரவி” என்ற பெயரை தேசிய அளவில் தொடர்ந்து ஒலிக்க செய்கின்றது.இன்னும் பல சாம்பியன்களை உருவாக்குவதே சத்துவாச்சாரிக்கு நாங்கள் செய்யும் பெருமை.எனக்கு கலெக்டரேட்டில் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது போலவே எல்லா இளைஞர்களுக்கும் வேலை கிடைக்க பயிற்சி கொடுக்கின்றேன்.”
பிரதீப்,தேசிய வீரர்

                 “முதலில் எனக்கு பளு தூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டதற்கு காலம் காலமாக நான் சத்துவாச்சாரி வீரர்களை பார்த்து வளர்ந்ததே காரணம்.முதலில் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு தன்னம்பிக்கை வளர்த்தேன்.பின் வட்ட,மாவட்ட அளவில் ஜொலிக்க ஆரம்பித்தேன்.கல்லூரி அளவிலான TIES போட்டிகளிலும் எளிதாக வெற்றிபெற முடிந்தது.தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறேன்.கூடிய விரைவில் சர்வதேச அளவில் களம் இறங்க என்னை தயார்படுத்தி வருகிறேன்.
                 போட்டிகள்,அதன் பயிற்சியினால் ஏற்படும் சோர்வுகளிலிருந்து உடலை வலுப்படுத்த சுழற்சி முறையில் வாரம் முழுவதும் மீன்,முட்டை,இறைச்சி,பால் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.இவற்றில் உள்ள புரத சத்துகள் மட்டும் இல்லாமல் supplementகளும் முக்கியம்.அப்பொழுதுதான் ஆற்றலை சீராக வைக்க முடியும்.”
நரேஷ் குமார்:

              2008,2009,2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் பல பட்டங்களை வாரி குவித்தவர்.தற்பொழுது போட்டிகளில் பங்கேற்கும் தன் சத்துவாச்சாரி தம்பிமார்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றார்.
உடலை ஒரு கோவில் போல பராமரித்து வரும் இவர் தற்பொழுது பாடி பில்டிங்,பளு தூக்குதல்,வலு தூக்குதல் போன்ற பல்வேறு துறைகளில் சத்துவாச்சாரியின் விசிடிங் கார்ட்.இந்த துறையில் பயிற்சி பெற விரும்புபவர்கள் அனைவருக்கும் இவர் ஒரு மைல்கல் நிபுணர்.
            “ஐ படத்தில் நாடு முழுக்க உள்ள சிறந்த பாடி பில்டர்களை தேர்ந்தெடுத்து போட்டிகளையும் பயிற்சியையும் காட்சி படுத்தினர்.ஜிம்மே கதி என்று சிறு வயதிலிருந்தே உடலை கட்டுகோப்பாக வைத்து வரும் வீரன் ஆதலால் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.தேசிய அளவில் நான் பெற்ற பதக்கங்கள்,கோப்பைகள்,சாம்பியன்ஷிப் போன்றே இதையும் என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருதுகிறேன்.”
பிரகாஷ்,இளம் வீரர்:

                “முந்தைய நாட்களில் பளுதூக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்.மார்புப் பகுதியில் ரத்தம் கட்டி விடும் என்று கூறி அச்சப்படுத்தினார்கள்.ஆனால் முறையான பயிற்சி மேற்கொண்டு சாம்பியன்ஷிப்களையும் ,அரசாங்க வேலைகளையும் சத்துவாச்சாரி இளைஞர்கள் பெற துவங்க ஆரம்பித்தவுடன் இந்த அச்சம் முற்றிலும் நீங்கி விட்டது.நானும் முறையான பயிற்சி பெற்று வருகிறேன்.உத்தியோகம் என் முதல் குறிக்கோள்.அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு முழுக்க போட்டிகளில் கவனம் செலுத்துவேன்.”
[பின்குறிப்பு: 1.இவர்கள் மட்டும் அல்லாது பிரபல கோச் திரு.நாகராஜன் அவர்கள் இல்லத்திற்கே சென்று பேட்டி எடுக்க முயன்றேன்.அவர்,தன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதால் ஊடகங்களுக்கு சிறிது காலம் பேட்டி தர அனுமதி இல்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
2.கோச் திரு.முத்து அவர்கள் செலெக்ஷன் காக கொல்கத்தா சென்றிருப்பதாக அவர்கள் இல்லம் அருகே தகவல் கூறினார்கள்.]
                     27793-004

சதீஷின் எளிமையான இல்லம்

சதீஷின் எளிமையான இல்லம்

பெற்றோர்

பெற்றோர்

சிறு வயதிலிருந்து பெற்ற கோப்பைகள்

சிறு வயதிலிருந்து பெற்ற கோப்பைகள்

அட்லஸ் ஜிம்

அட்லஸ் ஜிம்

20150102_161857

அரசு வேலை பெற்றவர்கள்

அரசு வேலை பெற்றவர்கள்

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

CS_Vishwanathan Sathish+Sivalingam+20th+Commonwealth+Games+0ybm3QMWVtql sathish-sivalingam-honoured-by-velamma-school-stills-6 sathish-sivalingam-honoured-by-velamma-school-stills-13 SATISH_SIVALINGAM__2028421f

இப்பொழுதே சத்துவாச்சாரியின் சின்னஞ்சிறிய வாண்டுகள் குச்சியில் டயர் சொருகி “சதீஷ் அண்ணன் போல வரணும்னு ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விட்டன.அது என்றும் தொடரணும்” என்ற ஏக்கப்  பெருமூச்சோடு முடித்தார் இந்த இலட்சிய தந்தை.

மத்திய மாநில அரசுகளே! தனியார் ஸ்பான்சர்களே! ஒரு ஒலிம்பிக் சாம்பியனை  உருவாக்கிய பெருமை நம் தமிழகத்திற்கு வேண்டாமா?லட்சங்கள் என்ன?கோடிகள் என்ன?இந்தியாவின் ஒலிம்பிக் தலையெழுத்தை மாற்றவல்ல இந்த தமிழக பிதாமகனை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் தேசிய விளையாட்டு வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளி அது.

களத்தில் இறங்குவோம்.தங்கத்தை அறுவடை செய்ய இன்று சதிஷ்குமார் என்ற தங்கமகனுக்கு,வீரிய விதைக்கு உரமளிப்போம்.

Workout

Workout

Pradeep

Pradeep

Prakash

Prakash

Young Ravi master

Young Ravi master

Sathuvachari,NH-Chennai route

Sathuvachari,NH-Chennai route

Sathuvachari Ravi

Sathuvachari Ravi

The street towards gyms

The street towards gyms

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

நியாயமாக எனக்கு இந்த படத்தை விமர்சிக்கும் எண்ணமோ தகுதியோ இல்லை.ரசினாக மட்டும் என் மண்டையில் உரைத்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐபில் அரையிறுதி இன்று.இடையில் கொஞ்சம் கம்யூனிஸம் பழகலாம் என்று தெரிந்தே ஜனநாதன் படத்திற்கு காலையில் போனேன்.
போனால் மார்னிங் ஹவுஸ்புல். மேட்னி புக் செய்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
ரசிக வட்டாரங்களில் கம்யூனிஸம் என்ற டாபிக் மீண்டும் உருவெடுத்திருப்பதே இந்த படத்தின் வெற்றியாக நான் உணர்கிறேன்.
முதல் ஃபிரேமிலிருந்தே நமக்கு தெரியாத, தெரிந்தாலும் நாம் அதிகம் அலட்டி யோசிக்காத கோணம் கொண்ட விஷயங்கள், இந்தியாவை நேரடியாக பாதிக்கும் உலக குப்பை இறக்குமதி, சாராயம் தமிழ் சமூகத்தை எந்தளவுக்கு மனசாட்சியே இல்லாமல் சிதைத்திருக்கிறது(நகையாக சொல்லல்), மரண தண்டனை குறித்த விரிவான உரையாடல் எல்லாவற்றையும் நம்மை தூங்க வைக்காமல், முகம் சுளிக்க வைக்காமல், ப்ச் கொட்ட வைக்காமல் ஜனரஞ்சக முகங்களான ஆர்யா, விஜய் சேதுபதி மூலம் நம்முள் இந்த படம் நிகழ்த்துகிறது.
கார்த்திகாவை முதல் காட்சியில் FZ பைக்கை ஓட்டி வரும்போது பார்த்ததிலிருந்தே சொக்க ஆரம்பித்துவிட்டேன்.பெண்மைக்கான அத்தனை லட்சணங்களும் வைத்துக்கொண்டே, பெண்ணின் இலக்கணங்களை அசால்ட்டாக உடைத்து செல்கிறார்.
ஷ்யாம் ruthless, law abiding போலீஸ்காரர் வேடத்தில் துளிநகராமல் வாழ்ந்திருக்கிறார்.
பாடல்கள் ஒன்றுமே மனதில் நிற்காது, விஜய் சேதுபதியான அசத்தல் இன்ட்ரோ பகுதி தவிர.
நமக்கு ரொம்ப பரிச்சயமான செய்திகளான மரண தண்டனை, ஜனாதிபதி மனு போன்றவற்றை வாழும் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை டீடெய்ல்டாக -தூக்கு கயிறு செய்வதிலிருந்து, ஹேங்மேனுக்கும் பவித்திரமான மனசுண்டு என்பதை நெகிழ்வாக படம்பிடிப்பதிலிருந்து, உண்மையிலேயே சட்டம் யார் கையில், லட்சியம் எப்படி இருக்க வேண்டும், அடிப்படைவாதிகளின் எதார்த்த நிலை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதிலிருந்து பல பரிணாமங்களை சிம்பிளாய் தொட்டு நிற்கிறது படம்.
இன்றைய இளைஞர்கள் கம்யூனிஸத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று சொல்லும் காட்சி அருமை.
இடைவேளையின் போது ஏன் என்று கேட்காமல் கொள்ளையாய் காசு கொடுத்து பாப்கார்ன், கோக் வாங்கி சாப்பிடும் மனோபாவத்தை கூட சுய கேள்வி கேட்க வைக்கும்.ஒரு நிமிடமாவது மனசாட்சி நம்மை யோசிக்க சொல்கிறது.
பின் absolute communism is like absolute gold.புழக்கத்துக்கு ஆகாது என்பது போலவும் முன் வைக்கப்படுகிறது.
முற்றிலும் முதலாளித்துவம் depressionஇலும்(1920s), முற்றிலும் கம்யூனிஸம் disintegration(1980-1990s)இலும் முடிந்தது நம் அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்கள் உணர்த்துகின்றன.
நடுவில் படம்பார்த்த பின் முகநூலில் அராத்துவின் ஒரு அப்டேட் படிக்க நேர்ந்தது.
“மலை முழுங்கி கோடீஸ்வரன்களெல்லாம் அமைதியாய் இருக்க, மாசம் இப்பொழுதுதான் 20,000 சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் சில்லுவண்டுகள் எல்லாம் குற்ற உணர்வு கொண்டு இந்த படத்தின் வசனங்களுக்கு விசிலடித்து, கைதட்டி கண்ணீர் வடிக்கின்றனர்” என்று. நிஜம்தான்.ப்ராக்டிகலான பாயிண்ட் ஆப் வியூ.அதிகம் சம்பாதிப்பவர்கள் அந்த guilty conscienceஐ என்றோ இழந்துவிடுகிறார்கள்.கூடி நின்று கும்மி அடித்து ஒப்பாரி வைப்பதெல்லாம் பொடிப்பசங்க நாம்தான்.அந்த மனசாட்சியாவது இருக்கிறதே!
அதற்கு கீழ் ஒரு நண்பர் பதிந்திருந்த கமெண்ட் ரகளையானது
“ஜனநாதன் படம் பாத்துட்டு கம்யூனிஸத்துக்கு பொங்குற பயலுவலாம் நைட் சன்னி லியோன் படம் பாத்துட்டு ‘அது’க்கு பொங்கிடுவானுங்க.நீங்க இதுக்கு போய் ஃபீல் பண்ணிக்கிட்டு” என்று.
ஜோக்ஸ் அபார்ட், இது கிளாஸான ஒரு அட்டம்ப்ட்.நல்ல ஒரு உரையாடலை, திணிக்காமல் நமக்குள் சொல்லிச்செல்கிற படம்.ஸோ கண்டிப்பா டைம் கிடைச்சா புக் பண்ணிடுங்க.
சரி, ஏன் கார்த்திகா படம் முத்தாய்ப்பா போட்டிருக்கேனு பார்க்கறீங்களா?
அப்பவாச்சு என் ப்ளாக்கை உங்களை படிக்க வைக்கலாமேனு தான்.

image

பை த வே, பை.

சைக்கிள் ரிவ்யூ

பெட்ரோல் குடிக்கும் பைக்குகளுக்கு ரிவ்யூ இருக்கிறது.பல லட்சம் செலவில் EMI மூலம் வாங்கும் கார்களுக்கு ரிவ்யூ இருக்கிறது.இறுதியில் மனிதர்களுக்கு தொப்பையும் தொந்தியுமே பரிசாக கிடைக்கிறது. ஆனால் ஆரோக்கியம் வளர்க்கும் சைக்கிளுக்கு எங்கும் ரிவ்யூ இல்லை.அது பள்ளிக் குழந்தைகள் சமாச்சாரம் என்று நினைக்கும் மனோபாவம் அதிகம்.பல்சர்,அபாச்சே,பேசர்,கரிஷ்மா,ஹன்க்,ராயல் என்பீல்டு,ஹார்லி போன்ற காளைகளை அடக்கிக் கொண்டிருக்கும் நவீன காளையர்களுக்கு சைக்கிள் ஒரு சாமானியப் பொருளாகத் தான் தெரியும்.

உண்மை வேறு.இன்றைய சைக்கிள்களில் உள்ள ரகங்கள்போல பைக்குகளில் கூட கிடைக்காது.அவையும் காலத்திற்கேற்ப மாறி வருகின்றன.கியர் உள்ளது,கியர் இல்லாதது,சஸ்பென்ஷன் உள்ளது,சஸ்பென்ஷன் இல்லாதது,சஸ்பென்ஷனிலும் சிங்கிள் சஸ்பென்ஷன்,டூயல் சஸ்பென்ஷன் என்று பல ரகம்,பல விதம்.

பைக்குகளை வசீகரப் பொருள்களாக நினைத்து நுகரும் இளைஞர்களைக் கூட பொறாமைப்பட வைக்கும் மாடல்களும் உள்ளன.இத்தகைய நவீன சைக்கிள்களின் ஆக்கபூர்வமான அம்சங்கள்.

 • பைக்குகளை விட நூறு மடங்கு விலை குறைவு
 • பராமரிப்பு செலவு இல்லை.சர்வீஸ் சென்டர் போக வேண்டாம்
 • வங்கிக் கடன் தேவையில்லை.EMI பற்றி யோசிக்கக் கூட வேண்டாம்
 • பெட்ரோல் அறவே வேண்டாம். விலை ஏறினால் என்ன?இறங்கினால் என்ன? ஹாயாக இருக்கலாம்
 • நீடித்த உழைப்பு.சைக்கிள் ரொம்ப வருடங்கள் பழுதில்லாமல் உழைக்கும்
 • அசத்தல் ஆரோக்கியம்
 • சுற்றுப்புற சீர்கேடு கிடையாது (Zero Vehicular Particulate/Pollutant Emission)

இந்த மாடர்ன் சைக்கிள்களில் கரைக்கும் கலோரிகள் மாரடைப்பை அறவே நீக்கும்.சுவாச திறனை (Breathing Stamina) நுரையீரல் கொள்திறன்(Lung Capacity) அதிகரிக்க செய்வதன் மூலம் உறுதிப்படுத்துகிறது.

அந்த வகையில் இந்த சைக்கிள்–ஹெர்குலஸ் டர்போட்ரைவ் டைனமைட் 26X (Hercules Turbodrive Dynamite 26X) பற்றி காண்போம்.

இந்த சைக்கிளின் வசதிகள் மற்றும் சிறப்புகள்:

 • டைனாமிக் ப்ரேகிங்-dynamic braking (முதுகு வலி இல்லை)
 • டூயல் சஸ்பென்ஷன்-dual suspension (அதிர்வு இல்லை)
 • 20 சதவிகிதம் அதிக வேகத்திறன் கொண்ட க்ரான்க் சையின் மெக்கானிசம்—crank-chain 20% faster mechanism (சோர்வு மற்றும் அயர்ச்சி குறைவு)
 • அதிக க்ரிப் கொண்ட TI டயர்கள் (விழுவதிலிருந்து அதிக பாதுகாப்பு)
 • ஷேக் இல்லாத சாடில்—shakeless comfortable saddle (வசதியான இருக்கை)
 • மட்கார்டு ரிப்ளக்டர்கள்—mudguard reflectors (இரவு சாலைகளில் அதிக பாதுகாப்பு)
 • ஏரோ டிசைன்—aero design (காற்றை சுலபமாக எதிர்கொள்ளும் வடிவமைப்பு)
 • இரு கலர் காம்பினேஷன்ளில் அட்டகாசமான பாடி கிராபிக்ஸ்—stunning body graphics (வயிட் அண்டு கிரீன்,ப்ளாக் அண்டு ஆரஞ்ச்)

விலை: பெல்,பூட்டு,பம்ப்,செய்கூலி உட்பட 5550

லட்சம் ரூபாய்கள் கொடுத்து வாங்கியே தீரவேண்டும் என்ற அவசியம் உள்ளவர்கள் பைக்குகளையும்,கார்களையும் தவிர்க்க முடியாது.ஆனால் அந்த அவசியம் இல்லாதவர்களும் ஏன் மோட்டார் வாகனங்களிலேயே சிக்கி உழல்கிறார்கள்? வாருங்கள்,FIT ஆவோம் நல்ல தரமான சைக்கிள்கள் வாங்கி.

ஏரோ டிசைன்

ஏரோ டிசைன்

டூயல் சஸ்பென்ஷன்

டூயல் சஸ்பென்ஷன்

மட்கார்டு ரிப்ளக்டர்கள்

மட்கார்டு ரிப்ளக்டர்கள்

ரேர் வியூ

ரேர் வியூ

ஷேக் இல்லாத சாடில்

ஷேக் இல்லாத சாடில்

அட்டகாசமான பாடி கிராபிக்ஸ்

அட்டகாசமான பாடி கிராபிக்ஸ்

வலுவான கட்டமைப்பு

வலுவான கட்டமைப்பு

அதிக க்ரிப் கொண்ட TI டயர்கள்

அதிக க்ரிப் கொண்ட TI டயர்கள்