அழகுராஜா சலூன்

சலூனில் நுழைந்தேன்.சவர வாடை அடித்தது.க்ரீமோ,லோஷனோ,இரண்டும் இல்லாத கலவையோ.என்னத்தையோ பூசி ஒருவருக்கு ஷேவ் செய்து கொண்டிருந்தார் சலூன்கடைகாரர்.மர பெஞ்ச் இருந்தது.வழக்கமாக அங்கு இருக்கும் தினகரன் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.வெளியில் இருக்கும் வேப்பமரம் குளுங்காற்று வீசி கோடையை சமாளித்தது.ரேடியோவில் “காதலின் தீபம் ஒன்று” இசைத்துக் கொண்டிருந்தது.எனக்கு முன் இருவர் காத்துகொண்டு இருந்தனர்.சிறுவன் முதலில் சென்றான்.அவனுக்கு சம்மர் கிராப் என்று மெஷின் வைத்து சதுரவெட்டையாக வெட்டி அனுப்பிவிட்டார்.அடுத்து வந்தவர் ஷேவ்.அதுவும் இனிதே முடிந்தது.என் முறை.அந்த ரோடேடிங் சேரில் குஷன் வைத்த அரியணை போல் ஏறி குஷாலாக அமர்ந்து கொண்டேன்.என் ஆஸ்தான ஸ்டைலிஸ்ட் ஆதலால் வழக்கம் போல  அரட்டையடித்து கொண்டே “வேலை” நடத்தினார்.

ஐபிஎல்,ஏரியாவில் சுற்றும் புது நபர்கள்,மூன்றாவது தெருவில் நடந்த திருட்டு,அரசியல்,பொருளாதாரம்,சிங்கப்பூர் வீசா என எல்லா ஏரியாவும் ரவுண்டடித்து ஷேவிங்கில் வந்து நின்றது.ரேசரை எடுத்தார்.ப்ளேடு கழற்றி தூர எறிந்தார்.பிரெஷ் ப்ளேடு எடுத்து பொருத்தி,டெட்டால் கலவையில் முக்கினார்.”அடேங்கப்பா!நம்ம அண்ணனுக்கு எவ்ளோ பாசம்?”
வச்சி சரக் சரக் என்று ஷேவினார்.வடநாட்டு உரித்தகோழி மூஞ்சி போல் ஆக்காமல் தமிழனாக கொஞ்சம் நஞ்சம் விட்டு வைத்து வெளியே அனுப்பினார்.இன்று கூட அண்ணனை பார்த்தேன்.டாஸ்மாக் வெளியே.வெண் தாடி ஷேவ் செய்யாமல் கிடந்தது.20140823_063209

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s