நானோ ஷீல்டிங்–அன்கட் வெர்ஷன்

தமிழகத்தின் மருத்துவ தலைநகரம் என்று வேலூரை அழைக்கலாம்.அந்த அளவிற்கு சிறந்த மருத்துவமனைகளும்,கல்லூரிகளும் நிரம்பிய ஊர்.மேல்விஷாரத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனை,ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,ஐடா  ஸ்கட்டர் சாலையிலுள்ள உலக பிரசித்தி பெற்ற கிறித்துவ மருத்துவ கல்லூரி(CMC) போன்ற பல உதாரணங்களை சொல்லலாம்.

இந்த மருத்துவமனைகள் அனைத்திலுமே உலகிலேயே முன்னணி நிறுவனங்களின் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ சேவைகள்,அதற்கான உபகரணங்கள்,கைதேர்ந்த மருத்துவர்கள் என ஒரு மருத்துவ சுற்றுலா மையாக(Medical Health Tourism Hub) உருவெடுத்துள்ளது.அந்த வகையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும்(GVMCH) இந்த துறையில் கொண்டுவரப்படும் முன்னேறிய தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் முன்னோடியாக திகழ்கிறது.தமிழ்நாடு டாக்டர் MGR பல்கலைக்கழகத்தின் affiliation கொண்ட இந்த GVMCHல் ஆப்தல்மாலஜி,ENT,பாதாலாஜி,பிசியாலஜி,எலும்புமுறிவு பிரிவு,அறுவை சிகிச்சை,விபத்து பிரிவு,குழந்தைகள் பெண்கள் நல மருத்துவம்,நுண்ணுயிரியல்,தொராகிக் மருத்துவம் என பல்வேறு துறைகள் உள்ளன.

அனைத்து துறைகளிலும் இருப்பதிலேயே சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்ப மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அவற்றில் மகப்பேறிற்கு செமோங்க்(CEMONC-Comprehensive Emergency Maternal and Obstetrics& Neonatal Care) மற்றும் மனநலத்திற்கான ICTC(Integrated Counselling Testing Centre) போன்ற பல புதுமைகள் பிரதானமானவை. அவற்றையெல்லாம் வெல்லும் விதமாக தற்பொழுது அதன் ENT துறையின் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்களில் தமிழகத்தில் முதல் முறையாக நானோ ஷீல்டிங்(NANO SHIELDING) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது அறுவை சிகிச்சையின்போது நோய் தொற்று ஏற்படமால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் முறைகளில் மிகப் புதுமையானது.இந்த நானோ ஷீல்டிங்கை பற்றி கேள்விப்பட்ட உடன் நமக்குள் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது.விரிவாக தெரிந்துகொள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைந்தோம்.நானோ ஷீல்டிங் என்ற பெயரை உச்சரிதவுடன் அனைவரும் அந்த கல்லூரியின் முன்னாள் டீன்,தற்போதைய ENT துறையின் தலைவர் திரு.சிவகுமார் அவர்களின் அறைக்கு வழியை சுட்டினர்.

பெயருக்குப் பின்னால் ரயில் போல மருத்துவ டிகிரிக்களை சுமந்திருக்கும் அவர் நம்மை எந்த சலனமும் இல்லாமல் புன்னகையோடு வரவேற்று கேள்விகளை எதிர்கொண்டார்.முதலில் வழக்கமான பத்திரிக்கை சந்திப்பைப் போல தியரட்டிகலாக சென்றுக் கொண்டிருந்த இந்த நேர்காணலில் டாக்டர் ஒரு அதிரடி முடிச்சு வைத்தார்.

ஆபேரஷன் தியேட்டரில் நானோ ஷீல்டிங் எப்படி இயங்குகிறது என்பதை செயல்பூர்வமாகவே உணர விழைந்தோம்.கல்லூரியின் தற்போதய டீன் திருமதி.துளசி ராம் அவர்களிடம் புதிய தலைமுறை பிரத்யேக அனுமதி பெற்று தியேட்டர் உள்ளே சென்று ஒரு லைவ் சர்ஜரியில் நோயாளிகளையும் டாக்டர்களையும்,நர்ஸ்களையும்,சுத்தம் செய்யும் தொழிலாளர்களையும்,மருத்துவ உபகரணங்களையும் எப்படி நானோ ஷீல்ட் காக்கிறது என்பதை காணும் வாய்ப்புப் பெற்றது.மருத்துவர்களின் நுண்மையையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக கண்டபோது பிரமிப்பு தட்டியது.

ஒரு ஆர்த்தோ அறுவை சிகிச்சை முடிந்து இன்னொரு நோயாளிக்கு நாசியின் ஊடே Cerebro Spinal Fluid கசிந்து கொண்டிருப்பதை நிறுத்தும் தர்மப்போரில் ஒரு மருத்துவக்குழு தீவிரமாக ஈடுபட்டது.அதிர்ச்சியில் உறைந்துபோன நம்மை,இதுபோல ஆயிரம் சர்ஜரிகளை வெற்றிகரமாக செய்துமுடித்த டாக்டர் சிவகுமாரும் அவரது மற்றொரு டீமும் ஆசுவாசப்படுத்தி,இன்னொரு தியேட்டருக்கு கூட்டிசென்றனர். அங்கு அறை கதவு மூடப்பட்டு,பல நீலநிற ஒளிக்கற்றைகளை உமிழும் விளக்குகள் செயலூட்டபட்டன. டாக்டர் விவரிக்கத் தொடங்கினார்.

நானோ ஷீல்டிங் என்றால் என்ன?

காலம் காலமாக நமது மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நடக்கும் தியேட்டர்கள் FORMALIN என்றொரு வேதிப்பொருள் கொண்டே தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.ஆனால் இது மனிதர்களுக்கு எரிச்சலூடக் கூடிய Fumigative வகை திரவம்.இவ்வளவு நாட்களும் இதற்கு வேறு மாற்று இல்லாததால் இதனைக் கொண்டே sterilization எனப்படும் நோய்தடுப்பு முறை செய்துவந்தனர்.

இதனால் மனிதர்களுக்கு எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் மட்டுமல்லாமல் இதற்கென தொடர்ச்சியான செலவும்(Recurring Expenses) நீடித்து வந்தது.இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பிறந்த உபயம்தான் நானோ ஷீல்டிங் முறை.10-9 (அதாவது ஒன்றில் நூறுகோடியில் ஒரு பங்கு) அளவிலான நானோ பார்டிகிள்கள் உமிழும் நீலஒளி விளக்குகள் கொண்டு அங்குள்ள உபகரணங்கள் மட்டுமல்லாமல் குளிர்சாதனப் பெட்டியில்(AC) இருந்து வரும் காற்றைக்கூட சுதிகரிக்கின்றார்கள். இதில் முக்கியமான விடயம் அறுவை சிகிச்சையின் போது இந்த நானோ ஷீல்ட் அணைக்கபட்டே இருக்கும்.அறுவை சிகிச்சைக்கு பின்(POST OPERATIVE PHASE) இந்த விளக்குகள் ஆன் செய்யப்படுகின்றன.

இந்த முறைக்கு ஆரம்பச் செலவு(Initial Investment) தற்போதைய முறைகளை காட்டிலும் அதிகம்.ஆனால் பராமரிப்பு செலவு(Maintainence Cost) மிகமிக குறைவு.எனவே ஒரு தடவை பொருத்திவிட்டால் பல ஆண்டுகளுக்கு சிறந்த சுகாதார நிலையை உரிதாக்கும் வல்லமை கொண்டது இத்தொழில்நுட்பம்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கிட்னி(Renal) மற்றும் இருதய(Cardiac) அறுவை சிகிச்சைகளின் ஆபரேஷன் தியேட்டர்களில் இந்த முறை பின்பற்றப்பட்டாலும் தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே முதன்முறையாக ENT துறையில் இந்த தொழில்நுட்பம் வேலூர் GVMCHலியே (Government Vellore Medical College Hospital) அமல்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர்.சிவகுமார் இதுகுறித்து நம்முடன் பேசுகையில்:

“இருதய,கிட்னி அறுவை சிகிச்சைகளைப் போலவே ENT அறுவை சிகிச்சைகளும் நுட்பமானவை.மிகவும் சிக்கலானவை.நோய் தொற்று எளிதில் சாத்தியம்.இதை தடுக்கவே அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று மருத்துவமனைகளுக்கென்று வழங்கப்பட்ட உபகரண மற்றும் தொழில்நுட்ப காப்பீட்டு தொகையின் மூலம் இவ்வசதி வேலூர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.விரைவில் இது அனைத்துத் துறைகளுக்கும் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.

ஹிப்போக்ராடிஸ் உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் நம் தமிழக மருத்துவர்கள்,எப்படி ஒரு உயிரை காப்பாற்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கையாள்கிறார்கள் என்று புதிய தலைமுறை நேரடியாக,அனுபவப்பூர்வமாக பார்த்து வியக்கின்றது.அதுவும் ஏழைகள் நம்பியிருக்கும் வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை(GVMCH) இதனை முன்னோடியாக நின்று செயல்படுத்தியிருப்பது மற்ற எல்லா அரசு மருத்துவமனைகளையும் செய்யத் தூண்டும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றே சொல்லலாம்.

இம்மருத்துவர்களுக்கும்,மருத்துவ பணியாளர்களுக்கும்,நிர்வாகத்திற்கும் புதிய தலைமுறையின் பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்..!

20150107_133040 20150107_131200 20150107_131018 20150107_130933 20150106_143440

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s