ராணிபேட்டை SIPCOT விபத்து-Report

வேலூர் மாவட்டம் ராணிபேட்டை SIPCOTயிலுள்ள SIDCO விற்கு சொந்தமான பொது பதனிவழிவு கையாளும் நிலையத்தில்(Common Effluent Treatment Plant) கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் வழிவு சேகரிப்பு தொட்டி உடைந்து, உருண்டு அருகில் உள்ள காம்பவுண்டு சுவற்றின் மீது விழுந்ததில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 9 ஊழியர்கள், வேலூர் மேல்வல்லத்தை சேர்ந்த ஒரு காவலாளி உட்பட 10 பேர் அந்த வேதி வழிவுகளில்(Chemical sludge) மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த 9 பேரும் வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டம்,லட்சுமிபுரம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நிகழ்வு:

கிட்டத்தட்ட 80 தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் வழிவு நீர் இந்த நிலையத்திலேயே சுத்திகரிக்கப்படுகிறது. இதன் அருகிலேயே RK லெதர்ஸ் என்னும் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலையின் காம்பவுண்டு சுவற்றின் அருகே உள்ள கார் ஷெட்டில் படுத்து முள்ளிக் சகோதரர்கள்,ஹபீப் கான் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட 9 வங்காளிகளும்,ஒரு தமிழக காவலாளியும் உறங்கி கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் வழிவு நீர் தொட்டி உடைந்து இந்த கம்பவுண்டு சுவற்றின் மீது விழுந்து வழிவு இவர்களை உயிரோடு மூழ்கடித்திருக்கிறது.இதில் துயரம் என்னவென்றால் இவர்கள் விழித்து  இருந்திருந்தால் இந்த வழிவின் பிடியிலிருந்து ஓடி தப்பித்து இருப்பர்.பழனி என்ற ஊழியர் ஓடியும்,சூப்பர்வைசர் ரவி முதல் மாடிக்கு ஏறியும் உயிர் தப்பினர்.

கிட்டத்தட்ட 5 மீட்டர்  உயரத்திற்கு வழிவு உயர்ந்து இவர்களை பிணங்களாக்கி இருக்கிறது. போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தகவலறிந்து இரு நிமிடங்களிலேயே இடத்தை அடைந்தும் வழிவின் வழுக்கும் தன்மையினாலும்,அடர்த்தியினாலும் அதன் பிடியில் பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு மீட்க இயலவில்லை.அவர்களின் பிரேதங்களே போலீசாருக்கு அகப்பட்டுள்ளன என்று தீயணைப்பு நிலையத்தின் ஸ்டேஷன் அலுவலரான திரு.தாண்டவன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சியூட்டும் காரணங்கள்:

இங்கு இரு சேகரிப்பு தொட்டிகள் அமைந்துள்ளது அம்பலமாகி உள்ளது.இதில் அனுமதி வழங்கப்பட்ட முதல் சுத்திகரிப்பு தொட்டி அதன் முழு கொள்ளளவான ஒன்றரை லட்சம் கன அடியினை அடைந்துவிட்டதால் மீதமுள்ள வழிவினை சேகரிக்க அரசின் அனுமதி இன்றி 75,000 கன அடி கொள்ளளவு கொண்ட இரண்டாம் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் முதற்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.இந்த அனுமதியற்ற இரண்டாம் தொட்டியிலும் கூட அதன் கொள்ளளவையை மீறி வழிவை சேகரித்துள்ளனர்.இதன் காரணமாகவே இந்த பரிதாப விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னொரு தரப்பு இந்த தொட்டி இரண்டரை லட்சம் கொள்ளளவு கொண்டது.ஆனால் சரிவர பராமரிக்க படாததால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கூறினர்.

விசாரணை:

வேலூர் ஆட்சியர் நந்தகோபால்,பள்ளிகல்வி துறை அமைச்சர் வெங்கடாசலம்,ஊரக தொழிற்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பி மோகன் ஆகியோர் விபத்து நடந்த பகுதியினை பார்வையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.இந்த நிலையத்தின் முதலீட்டாளர்கலான CETPக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழகம் சார்பில் 7 லட்சமும் மேற்கு வங்க மாநில அரசு சார்பில் இரு லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மேற்குவங்கத்திற்கு எடுத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யபட்டிருகின்றன.இரு மாநில காவல்துறையினரும் இதில் ஈடுபட்டுள்ளார்கள்.CETPயின் இந்த மெத்தன போக்கால் ராணிபேட்டை மக்கள்,தொழிலாளர் நல வாரியங்கள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.

201501312118469075_On-behalf-of-the-families-of-those-who-died-in-the-crash-of_SECVPF Fire-and-rescue-service tan_2296290f

நினைக்கவே குரூரமான முறையில் நடந்துள்ள இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே மெட்ரோ ரயில் க்ரேன் விழுந்து பீகாரை சேர்ந்த அப்பாவி தொழிலாளிகள் பலியான சம்பவச் சுவடுகளே நினைவிருக்கும் நிலையில் இப்படிபட்ட விபத்து நிகழ்ந்துள்ளது அதிகாரிகளின் அலட்சிய போக்கையே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s