ஸ்ரீரங்கம்,திருவானைக்காவல்,தஞ்சை-ஒரு பயண கட்டுரை

பயணக்கட்டுரை-ஸ்ரீரங்கம்,திருவானைக்காவல்,தஞ்சை-ராஜராஜன் பெரிய கோவில்,அருங்காட்சியகம்,சரபோஜே மன்னர் அரண்மனை நான் பல மனிதர்களிடம்,குறிப்பாக நண்பர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறேன்,”உங்களுக்கு எங்கு பயணம் போக ஆசை?” பெரும்பாலனவர்களின் பதில் “உலகம் முழுக்க சுற்ற ஆசை.ஏழு அதிசயங்களையும்,அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் கண்டுகளிக்க வேண்டும்,ஆப்ரிக்காவின் பாலைவனங்களிலும்,தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடர்களையும்,அமேசான் காடுகளையும்,சுவிஸ் ஆல்ப்ஸ் பனிச்சிகரங்களையும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பர்ரியர் ரீப் அருகே கடலில் மிதப்பதும் என் கனவு” என்பது போல பல வகையான சுவையான பதில்கள் கிடைக்கும்.இன்னும் சிலர் மான்செஸ்டரின் ஓல்ட் டிராபர்ட்கு சென்று தங்களின் ஆதர்ச கால்பந்து அணியினை ஆதரிப்பது என்ற கனவு இருப்பதை தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் அத்தனைப் பேரின் கனவுகளும் பலிக்க வாழ்த்துக்கள்.ஆனால் இவர்கள் அனைவரிடமும் நான் வேண்டுமென்றே கேட்க தவறிய மற்றுமொரு கேள்வி,”இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை இடங்களுக்கு பயணம் சென்றிருக்கிறீர்கள்?”என்பது.

ஏன் கேட்கவில்லை என்றால் பல தடவை முன்னமே பெற்ற பதில்களில் இதுவும் ஒன்று “தமிழ்நாட்ல என்ன டா பெருசா சுத்திப் பார்க்கப் போறே?மெட்ராஸ்ல மெரினா பீச்,மிஞ்சி மிஞ்சி போனா கன்னியாகுமரில திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் மண்டபம்.இது தான?சுத்த போர் டா!” இப்படிப்பட்ட நண்பர்களிடம் சென்று ஸ்ரீரங்கம்,தஞ்சை,திருவனைக்காவல் செல்ல அழைத்தபோது “என்னடா உனக்கு பக்தி அதிகம் ஆயிடுச்சா?எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது!என்னைப் போய் கோவில்கள் சுத்தி பார்க்க கூப்பிடுறியே?” என்று ஜகா வாங்கினர் பலர்.”உங்களுக்கு கடவுள் நம்பிக்கையே வேண்டாம்.என்கூட வந்து அங்குள்ள சிற்ப,ஓவிய,கட்டிட கலைகளை ரசிக்கர்துல ஆர்வம் இருக்றவங்க மட்டும் வாங்க” என்று சொன்னவுடன் ஒரு நண்பர் குழு பயணத்திற்கு இசைந்தது.

பயணத்திற்கு முழுதும் தயாராகி விழுப்புரம் ஜங்க்ஷனை அடைந்தோம்.ஏனெனில் திருவண்ணமலையிலிருந்து தென்னகத்திற்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் இல்லை.இரவு 9.30 போல கொல்கத்தா-திருச்சி செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸில் அரட்டை நிரம்ப ஏறிக்கொண்டோம்.திருச்சி ஜங்க்ஷனை அடைவதுதான் திட்டமாக இருந்தது.இரவு 12.45 கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருநிமிடம் நின்ற வண்டியிலிருந்து இறங்கி,ராஜகோபுரத்தின் வளாகத்திலேயே இருந்த ஒரு விடுதியில் அறைகள் எடுத்து   IMG_20141028_122157965 IMG_20141028_122120695  IMG_20141028_122026472 20141029_155018 20141029_154729 20141029_154602 20141029_154525 20141029_154202 20141029_154157 20141029_154000 20141029_122117 20141029_122008 20141029_121954 20141029_113359 20141029_112844 20141029_112834 20141029_112010 20141029_111954 20141029_111946 20141029_111903 20141029_110901 20141028_182006 20141028_181945 20141028_181903 20141028_165039 20141028_161805 20141028_083227

தங்கினோம்.

1.சீரமைக்கப்பட்டு கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்து கோபுரங்கள்

2.திருவானைக்காவல் வேலைப்பாடுகள்

3.இரவில் நிலவொளியில் வெளிப்பிரகாரம்

4.தஞ்சையின் வியக்கும் பிரம்மாண்டம்

5.ராஜராஜனின் ப்ளூ பிரிண்ட்

6.தஞ்சை கோவில் கட்டிய விதம்

7.சோழர் கால அரிய ஓவியம்

8.அன்றைய இன்றைய தஞ்சை

9.நடராஜரின் 108 நடன கரணங்கள்

10.தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நந்திசிலை

11.தஞ்சை தலையாட்டி பொம்மை

12.சரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்

13.அரண்மனை சுரங்கப் பாதை

14.மண்டபத்தின் மேற்கூரை

15.அரண்மனை வெளிப்புறம் செல்லும் பாதைகள்

16.மிரட்டும் சிற்பங்கள் போன்ற புகைப்படங்களை உங்கள் ரசனைக்காக இணைத்துள்ளேன்.

சரி.ஏன் முதலில் ஸ்ரீரங்கம்?சிறுவயதிலிருந்தே வாலி,சுஜாதா ரங்கராஜனின் மேல் கொண்ட காதலினாலும்,ஸ்ரீரங்கத்து தேவதைகள் நடந்தேறிய இடங்கள் பற்றிய கனவும் ஸ்ரீரங்கம் வர காரணமாகின.அதிகாலையில் எழுந்து,குளித்து பில்ட்டர் காபி அருந்த சுறுசுறுப்பு பற்றிக்கொண்டது.21 கோபுரங்களிலும் சீரமைப்பு பணிகள் நடந்துக்கொண்டிருந்தன.உலகின் மிக பிரம்மாண்டமான வழிபாட்டு தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று.கழுத்தை முறிக்கும் உயரத்துடன் கம்பீரமாக நின்ற பல கோபுரங்களை கடந்து ரங்கநாதரின் அனந்த சயனத்தை ரசிக்க கடவுள் நம்பிக்கை அறவே தேவை இல்லை.கலை ரசனை  மட்டும் போதும்.உள்ளே செல்ல செல்ல,கோவிலின் நிர்மானமும்,நிர்வாகமும் பிரமிக்க வைக்கின்றன.கோவிலை முழுவதும் சுற்றி முடிப்பதற்குள் முழுதாக 4 மணி நேரம் எடுத்துக்கொண்டோம்.

உணவருந்திவிட்டு பின் திருச்சி புறநகர் பேருந்தை பிடித்து திருவானைக்காவல் அடைந்தோம்.கொள்ளிடத்தை கடந்து திருச்சி உள்ளே செல்லாமல் புறநகரிலேயே சுற்றி பார்த்துக்கொண்டிருந்தோம்.தண்ணீர் ஸ்தலமான திருவானைக்காவலின் குளத்தில் தண்ணீரே சரிவர  இல்லாதது முரணாக பட்டது.ஆனைக்காவலின் பெயரிலுள்ள ஆனையைக் காணோம்.புத்துணர்வு முகாமிற்காக முதுமலை சென்றுள்ளது.கலையை ரசித்துவிட்டு வெளியே வரும்பொழுது மேற்கு வங்கத்தை சார்ந்த கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் தரிசனம் செய்ய அரக்கபரக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இரவு விடுதியிலேயே ஓய்வெடுத்துவிட்டு அதிகாலை தஞ்சை புறப்பட்டோம்.பொன்னியின் செல்வனை சமீபத்தில் தான் வாசித்திருந்ததால் ராஜராஜனின் அதிசய பொக்கிஷத்தினை அணு அணுவாக ரசிக்கும் ஆர்வத்தில் கோட்டை வாயிலை அடைந்தோம்.அகழியில் முழுவதும் பச்சை செடிகள் படர்ந்திருந்தன. எந்த கோணத்தில் பார்த்தாலும் திகட்டாத பிரமிப்பாய் இருந்தது கோவில்.தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நந்திசிலையை கடந்து கர்ப்ப கிரகத்தின் மேல் கட்டப்பட்டுள்ள உலகின் 8வது பேரதிசயத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.சிற்பங்கள் ஒவ்வொன்றையும் கடந்து,அருங்காட்சியகத்தை அடைந்தோம்.

நடராஜரின் 108 நடன கரணங்கள் பற்றிய சிற்பங்கள்,சோழர் கால அரிய ஓவியங்கள்,அன்றைய இன்றைய தஞ்சையின் புகைப்படங்கள்,ராஜராஜனின் கோவில் ப்ளூ பிரிண்ட்(!),கோவில் கட்டிய விதம் பற்றிய விவரனைகள்,கங்கைகொண்ட சோழப்புரத்து  பெரிய கோபுரத்திற்கும் தஞ்சை கோபுரத்திற்கும் இடையே உள்ள கர்வேச்சர் வேறுபாடு போன்ற பல அரிய பொக்கிஷ தகவல்களை அறிந்துகொண்டோம். அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறி உணவருந்தினோம்.தஞ்சையின் உணவகங்கள் எல்லாவற்றிலும் ஒரு ட்ரேட்மார்க் அங்கு கிடைக்கும் வத்தக்குழம்பின் ருசி.உணவு  முடித்துவிட்டு தஞ்சை அரண்மனையை அடைந்தோம்.

சரஸ்வதி மஹால் நூலகத்தை பார்த்து அதிலுள்ள பண்டைய ஆவணங்களை கண்டு வாயடைத்து போனோம். ஆங்கிலத்தில் ‘S’ என்ற எழுத்திற்கு பதில் பல இடங்களில் ‘F’ பயன்படுத்த பட்டிருப்பதை அங்குள்ள MANUSCRIPTSல் கண்டோம். மேலும் பிராகிருத,வட்டெழுத்து தமிழை காண முடிந்தது.20 நூற்றாண்டுகளாக தமிழின் எழுத்து வடிவம் எப்படி உருமாறி வந்துள்ளது என்பது பற்றிய அட்டவணை நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

பின்னர் தஞ்சை தலையாட்டி பொம்மையை கடந்து மராத்திய ராஜா சரபோஜியின் அரசவைக்குள் நுழைந்த கணமே,அவரது தர்பார் மண்டபம் இன்றைய நிலையில் இருந்து மாறி அன்றைய காலத்து மன்னர் அரசவை நம் மனக்கண் முன்னே விரிந்து பரந்தது.”ராஜாதி ராஜ! என்ற கட்டியம் பாடுபவனின் காதை பிளக்கும் ஓசையும் கேட்டது.அரண்மனையின் மேற்கூரையின் வண்ண வேலைப்பாடுகள் தின்ன கருத்தளித்தன.யாளி என்ற mythological உயிரினத்தின் சிற்பம் மிரட்டியது. வீட்டிற்கு செல்லும் வழியில்,பேருந்தில்,நம் ஒட்டுமொத்த கலைப் பசிக்கும் கற்பனை தாகத்துக்கும் இந்திர அவையின் விருந்தளித்தது போன்ற பெருமையும்,நிறைவும் ஏற்பட்டது.சொல்லி மாளாத உணர்வு அது!நீங்களும் உணர்வீர்களாக…பயணமே மனிதத்தின் வளர்ச்சிக்கான ஆணிவேர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s