இணைசேரா கடிதம் இணைய யுகத்தில்..

என் பிரண்ட் ஏர் போர்ஸில் (indian air force)சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.அவளை இணையம் மூலமோ, தொலைபேசி மூலமோ எளிதில் அணுக முடியாது.கடிதம் என்றால் அன்பு பல பரிமாறலாம், அவளின் சங்கட நாணமின்றி.எழுத முற்படுமுன் எனக்கு தோன்றிய சந்தேகங்கள் ஒரு கற்பனை கடிதத்தின் மூலம் விரிந்தன.அவற்றின் சாரம் இங்கே.

royal-mail_1920471b

கட்செவி அஞ்சல் காலத்திலும்
நான் எழுதி தொலைத்துவிட்ட கடிதம் என்னை இன்னமும் பயமுறுத்துகிறது.
ஒரு சின்ன திகில் கதையைப் போல.
அது புனைவு சேர்க்கப்பட்டிருக்கலாம்.
திரிக்கப்பட்டிருக்கலாம்
திருடப்பட்டிருக்கலாம்.விலாசம் மாறி இருக்கலாம்.திறக்கப்பட்டிருக்கலாம்.கிழிக்கப்பட்டிருக்கலாம்.
எரிந்து போயிருக்கலாம்.
அது சாத்தான் கைகளுக்கும் சென்றிருக்கலாம்.
ஒரு தெய்வமே அதை முகர்ந்திருக்கலாம்.
அதில் சில வியர்வை துளிகள் பட்டிருக்கலாம்
ரத்தத்தின் கறையும் தோய்ந்திருக்கலாம்.
லிப்ஸ்டிக் பதிய பயன்பட்டிருக்கலாம்.
காம கழிவையும் துடைத்திருக்கலாம்.
முகம் மறைக்க உதவியிருக்கலாம்.
முகத்தில் அறையவும் முயற்சித்திருக்கலாம்.
குப்பை தொட்டிக்கும் வீசியிருக்கலாம்.
கடையின் எண்ணெய்
வடிந்திருக்கலாம்.
இல்லை குழந்தை மென்றும் துப்பியிருக்கலாம்.
விலாசம் சென்றடையாத கடிதங்கள் என்னை நிறையவே கலங்கடிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s