மக்களே நாம் ஸ்மார்ட் இந்தியர்களா?

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குறை சொல்வதென்பது தவிர்க்க முடியாத வசீகரமாகி விட்ட காலகட்டத்தில் மக்களாகிய நாம் ஸ்மார்ட்டா என்று சோதித்து கொள்ள வெகு எளிதான சில செயல்கள்.
மகாத்மா போலவோ, வஉசி போலவோ தியாகம் செய்யச்சொல்லி யாரும் நம்மை வற்புறுத்தவில்லை. இருப்பினும் சில நாகரீக வழக்கங்கள் நம் நாட்டிற்கு அவசியம்.
அவை இதோ:

1.நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் உங்கள்  வரி பிரிவுக்கு ( tax slab)
எந்த அளவு வருமான வரி செலுத்த வேண்டுமோ அதே அளவு நிறைவா செலுத்திடுங்க.நாம கட்டற வரி நமக்கா செலவாகிறது? என்கிற அறிவுஜீவி கேள்விகள் வேண்டாம்.வருமான வரி பைசா பாக்கி இல்லாம கட்டுறதுல மனநிறைவு மட்டும் இல்லைங்க எவருக்கும் அஞ்சி நடக்க வேண்டியதில்லை.அதன் பெருமிதமே தனி.இது நிலைத்த வருமானம் வருடாவருடம் பெறும் அனைவருக்கும் பொருந்தும்.

2.தேர்தல்னு வந்துட்டா NOTAவோ கோட்டாவோ முதல் ஆளாக போட்டி போட்டுக்கொண்டு உங்க வாக்கினை உபயோகப்படுத்துங்க.இல்லைனா உங்க பேர்ல ஒரு கள்ள ஓட்டு பதிவாகிற வாய்ப்பு அதிகம்.உங்க உரிமையை ஒரு முட்டாள்தனமான சோம்பேறித்தனத்துக்காக இழக்க விரும்பாதீங்க.கோவிச்சுகாதீங்க-இது ஓட்டு போடாதவங்களுக்கு மட்டும் சொல்றது.

3.முடிஞ்ச வரை சிக்னல் போட்டாச்சுனா உங்க வண்டியை நிறுத்திடுங்க.நீங்க ஆபிஸ்க்கு போகிற வழியில பத்து சிக்னல் இருந்துச்சுனா கூட 10 நிமிடம் தான் அதிகபட்சமாக நீங்க காத்திருக்க வேண்டிய நேரம்.அந்த பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னாடியே கிளம்பிடலாம்.அது ஒரு பெரிய சாகசமே அல்ல.

4.நகரத்துல இருக்கிறவர்கள் 3 கார்கள் வேண்டுமானாலும் பிரயோக படுத்திக்கோங்க.அவற்றை முழுவதும் உபயோகப்படுத்திட்டா எந்த தவறும் இல்லை. ஆனால் உங்ககிட்ட ஒரே ஒரு கார்தான் இருந்து அதையும் உபயோகப்படுத்தலைனா அது உங்களுக்கும் இந்த நாட்டுக்கும்   fuel economy, சுற்றுப்புறச்சூழல், இட வீணடித்தல் தான்.

5.முடிந்த வரை தண்ணீரை அளவா யூஸ் பண்ணுங்க. கார் கழுவுவதற்கும், பைக் கழுவுவதற்கும் தோட்டத்து செடிகளுக்கு மறுசுழற்சி செய்து யூஸ் பண்ணுங்க. பக்கெட்டில் பிடித்து வைப்பது நலம்.ஹோஸ் பைப் தவிர்ப்பது தண்ணீருக்கு சேமிப்பு.

6.புதிதாக வீடு கட்டும் போதே நல்ல வெளிச்சத்தோடயும், மரம் செடிகளை தோட்டத்தில் நட்டும் வீடு கட்டுங்க.முடிந்தவரை EB bill குறையும்.ஏற்கனவே கட்டின வீட்டில் இருக்கிறவர்கள் எவ்வளவு யூனிட் மின்சாரம் சேமிக்கறீங்களோ அதே அளவு லாபம், அந்த அளவு நீங்கள் மின்சாரம் தயாரித்ததாக கணக்கு.

7.  உங்கள் ஊர்ல இருக்கிற பிரச்சினைகளை சொல்ல நல்ல வடிகால் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடக்கும் monday petition. இதன்மூலம் நிர்வாகத்தின் கவனத்தில் வராத பல பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு தெரிய வரும்.

8.இது மது அருந்துபவர்களுக்கு மட்டும்: டாஸ்மாக் கடைகள் மிகுந்தவிட்ட இந்த தமிழகத்தில் குடிப்பதா வேண்டாமா என்ற பிரசங்கத்தை நான் நடத்த விரும்பவில்லை.ஆனால் குடித்துவிட்டு போதையில் வாகனங்கள் ஓட்டாதீங்க.அது மற்ற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.

9.புத்தக,செய்தித்தாள் வாசிப்பை தீவிரப்படுத்துங்கள்.சமூகம் உங்கள் ஜன்னல்.அதை மூடி வைக்க வேண்டாம்.

10.திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள்.அது கேளிக்கை மட்டுமல்ல.பல குடும்பங்களை காப்பாற்றும் தொழில்.சமூகத்தின் ஒருவித பிரதிபலிப்பு.அந்த பிரதிபலிப்பு சரியா என்று தீர்மானிக்க வேண்டிய நீதிபதிகள் நீங்கள்தான்.பைரட்டட் சிடிக்களை விட திரையரங்கு அனுபவம் பிரமாதமானது.கலைக்கும் கலைஞர்களுக்கும் அது மட்டுமே வாழ்வு.

11.RTI தகவலறியும் உரிமை சட்டம் பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இன்றைய இந்தியாவின் இன்றியமையாத இங்கிதம் அது.

12.சமூக வலைத்தளங்கள் அதி அவசியமானவை.அதீத நேர செலவழிப்பு, வீண் அரட்டைகள் ஒரு புறம் இருந்தாலும் அவற்றை அளவாக வைத்து கொள்வது ஒரு கொடுப்பினை என்றே சொல்லலாம்.

இன்னும் சொல்லலாம் ஆயிரம்.இதை மட்டும் செய்தால்கூட மன நிம்மதி நிச்சயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s