வானாட்டோ கொடும்புயல்-நம் படிப்பினை?

இயற்கையை எப்பொழுதெல்லாம் அறிவியல் கொண்டு தான் வென்றுவிட்டதாக எண்ணி மனிதன் திமிறுகிறானோ,அப்பொழுதெல்லாம் இயற்கை தன் கட்டுக்கடங்கா ஆக்ரோஷத்தை மனிதனிடமும் அவன் வாழ்வியலிடமும்  காட்டிவிட்டு சென்றுவிடுகின்றது.நல்ல உதாரணங்கள்: இந்திய பெருங்கடல் சுனாமி,ஜப்பான் நிலநடுக்கம்,ஹைத்தி புயல் போன்றவை.அந்த துயர வரிசையில் மற்றுமொரு நிகழ்வு வானாட்டோ கொடும்புயல்.PAM(பேம்) என்ற பெயர்கொண்ட அசுரன் கடந்த சில மாதங்கள் முன்,ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறான்.

2,70,000 மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்ட(Archipelago) தேசம்தான் இந்த வானாட்டோ.ஓஷனியா(Oceania) கண்டத்தில் ஓர் அங்கம்.ஆம்,பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்ட தேசங்கள் ஓஷனியா என்ற பெயர் பெற்றுள்ளன.ஹைத்தி நாட்டு புயலிலாவது சில பகுதிகள் மிஞ்சின.இந்த பேம் புயலானது வானாட்டோ தேசத்தை நிர்மூலமாக்கியிருக்கிறது.ஒட்டுமொத்த தேசமே வீடிழந்த பெரும் துயரும் உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை.

இத்தனைக்கும் வானாட்டோ ஒன்றும் வளர்ந்த தேசமல்ல.ஏழை நாடு.அருகிலிருக்கும் ஆஸ்திரேலியாவை குடிநீருக்காகவும்,ஏற்றுமதி வர்த்தக ரீதியாகவும் நம்பியிருக்கிறது.பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருப்பவர்கள்.இதன் தலைநகரமான போர்ட் வில்லா ஒரு சிறிய துறைமுக சுற்றுலா நகரம்.உலக வங்கியின் கணக்குப்படி அதி ஏழை நாடுகளில் வானாட்டோவும் ஒன்று.இந்த நாட்டின் சராசரி உள்நாட்டு உற்பத்தி அளவானது,வெறும் 828 மில்லியன் டாலர் சொச்சம் அளவே ஆகும்.அருகிலுள்ள ஆஸ்திரேலியாவோ 1.56 ட்ரில்லியன் டாலர் அளவு உற்பத்தி செய்கின்றது.இந்த ஏழை நாட்டுக்கா இந்த கதி என்று உலகமே சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறது.

ஆனால் இயற்கைக்கு ஏழை,பணக்காரன் என்ற பேதமெல்லாம் கிடையாது.மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு போயிருக்கிறது.பாலங்கள்,மின்சார இணைப்புகள்,வீடுகள்,சுற்றுலா தளங்கள்,பச்சை புல்வெளிகள்,படகுகள்,கால்நடை தொழுவங்கள் எல்லாம் அடியோடு பெயர்க்கப்பட்டு இன்று அடையாளம் தெரியாமல் சின்னாபின்னமாகியுள்ளன.போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தடங்கல் அடியோடு அழிக்கப்பட்டு விட்டன.மோசோ(Moso Island) என்ற தீவிலுள்ள மக்கள் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கடல்தண்ணீரை குடித்து,உயிரை பணயம் வைத்து பிழைத்து வருகின்றனர்.

மக்கள் உயிரோடு இருக்கின்றார்கள்.ஆனால் நடைபிணமாய் வாழ்கின்றார்கள்.அவர்களின் அத்தனை வாழ்க்கை ஆதாரங்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டாயிற்று.இந்த பேரழிவை முழுவதும் ஈடுகட்ட 4 ஆண்டுகளாவது பிடிக்கும் என்று கணித்திருக்கின்றார்கள்.உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,ஐ.நா நிதியம்,அருகிலிருக்கும் நண்பன் ஆஸ்திரேலியாவில் இருந்து உணவு,மருந்து,குடிநீர் பொட்டலங்கள் விமானங்கள் மூலம் டன் டன்னாக வானாட்டோ தலைநகரம் போர்ட்  சென்று அடைந்துகொண்டிருக்கின்றன.அகில உலக நாடுகளும் நிதிகள் அனுப்பிகொண்டிருக்கின்றன.

மறுபடி இப்படியொரு துயரம் நடக்காது என கூற முடியாது.ஏனெனில் கடல் பூகம்பங்களும்,சூறாவளிகளும்,எரிமலைகளும் நிறைந்த பசிபிக் நெருப்பு வளையம்(Pacific Ring of Fire) என்னும் பகுதியில் வானாட்டோ,பிஜி,சாலமன் தீவுகள் போன்ற தேசங்கள் அமைந்துள்ளன.சரி பேம் சூறாவளி இது மட்டுமா செய்தது?நியூசிலாந்து நாட்டின் மீது அண்டார்டிகாவின் பனிக்காற்றினை முழுக்க திசைதிருப்பி 10 டிகிரி செல்ஷியஸ் அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையை குறைத்துள்ளது.அது மட்டுமல்லாமல் அமெரிக்காவை நோக்கி எல் நினோ(El-Nino) வெப்ப அலைகளை வழக்கத்தை விட சீக்கிரமாக கிளப்பி விட்டிருக்கின்றது.

வானாட்டோ மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.அதே நேரத்தில் பல்வேறு வகையில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் இந்திய துணைக்கண்ட இயற்கை நிலைக்கு நன்றி சொல்லி,அதன் அருமையை உணர்வோம்.அலட்சிய படுத்தமாட்டோம் என்ற உறுதி மனதில்

அடித்து நொறுக்கப்பட்ட படகுகள் அடிமட்டமான கூரைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து செல்லும் குடிநீர் புட்டிகள் சிதிலங்கள் இடையே நடக்கும் சிறுவன் சிதைந்த வீடுகள் சின்னாபின்னமான பாலம் பசிபிக் நெருப்பு வளையம் வானாட்டோ புயல் வேக விவரங்கள் விமானத்தில் செல்லும் உணவு மற்றும் மருந்து பொட்டலங்கள் வீதிகளில் மக்கள் வேரோடு அறுக்கப்பட்ட மரங்கள்

தெளிவுற கொள்வோம். அதுவே எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை வானாட்டோ போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.விரைவில் நேபாள நிலநடுக்கம் குறித்த  முழு தகவல் கிட்டியவுடன் அந்த பதிவு இங்கு இடம்பெறும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s