புராதானம் பாரம்பரியம் எல்லாம் இன்று உதவா கதைகளாகும் நிலை.

உலகம் முழுக்க இந்திய ஐம்பொன் சிலைகள் கள்ளச் சந்தையில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.லட்சங்களுக்கும் கோடிகளுக்கும்  ஏலத்தில் விலை போகின்றன.கோஹினூர் போன்ற விலைமதிக்க முடியாத பல வைரங்கள் கை மாறி சென்ற கதைகள் அனைவரும் அறிந்ததே.மாமல்லை,தஞ்சையின் கட்டிட கலைகளின் நுண் அழகை வியக்காத மேலை கலாரசிகர்களே கிடையாது.கரிகாலன் அன்று நிர்மாணித்த கல்லணை போல் இன்று கூட கட்ட இயலவில்லை.வீரநாராயணபுர ஏரி அன்று கடல்போல் காட்சியளித்ததாக  கல்கி தன் புதினத்தில் விவரித்திருக்கிறார்.அதுவே இன்று சென்னைக்கு மட்டும் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியாக,பெயர் அளவில் மட்டுமல்லாமல் நீர் அளவிலும் சுருங்கிப் போயிற்று.இது போல பலபல சான்றுகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருவண்ணாமலை வெறும் தமிழர்களுக்கான அடையாள ஸ்தலமல்ல.மேற்கத்தியர்களும் தங்கள் ஆன்மிக கலாச்சார தேடல்களுக்கான அடையாளமாக கருதி நம் பழக்க வழக்கங்களை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தியத்தின் மேல்,இந்த மதிப்பீடுகளின் மேல் காதல் தற்போதய பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வெகு குறைவுதான்.காரணம் தாழ்வு மனப்பான்மையா இல்லை மிதமிஞ்சிய அலட்சியமா தெரியாது.அதற்கு நல்ல உதாரணம் இங்கு பராமரிக்கப் படாமல் இருக்கும் அன்றைய பாரம்பரிய சின்னங்களையும் நீர்நிலைகளையுமே சொல்லலாம்.

சென்னையின் அடையாறு,கூவம்,வேலூரின் பாலாறு என பல நதிகளின் சோகக் கதைகள் நமக்கு தெரிந்தவையே.அட நதிகளை விடுங்கள் ஒரு குளம் குட்டையைக் கூட பராமரிக்க தெரியாத நிலையில் தான் இன்றைய மனிதர்கள் இருக்கின்றார்கள்.320 தீர்த்தங்கள் அக்காலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தன.அவற்றை சுற்றி விருட்சங்கள்(மரங்கள்) நடப்பட்டு,மழைநீரை சேகரிக்கும் வடிகாலாகவும்,பசுமையும் குளிர்ச்சியும் தூய்மையும் மக்களுக்கு வழங்கி வந்தன.இன்றைய அவசர மனிதர்க்கு ஆன்மிகத்திற்கு அவசியமும் நேரமும் குறைந்து விட்டது.பெரும்பாலனவர்க்கு வேண்டுதலுக்கு மட்டும் கோவில் குளம் வழிபாடு தளங்கள் தேவை.பராமரிக்க அல்ல.கடவுளை மறந்துவிடுங்கள்.மக்களை மட்டும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.அக்னி ஸ்தலத்தின் பிரதான நீர் சேகரிப்பு தீர்த்தமாக அன்று ஆன்மிகத்தின் பெயரில் அக்னி தீர்த்தம் ஏற்பட்டது.அருணை மலையின்  மேல் உள்ள மழைநீர்,பாண்டித் தீர்த்தத்தின் நீரோடு சேர்ந்து வெள்ளமாக உருவெடுத்து வீடுகளைத் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு மெய்ஞான விஞ்ஞானம் அது.

இங்குள்ள சாக்கடைகளின் சேர்ப்பிடமாகவும்(அது கூட சரியாக சேரவில்லை.அடைத்து கிடக்கின்றது),இன்றைய பொது கழிப்பிடமாகவும் மாறிவிட்டது.படித்துறைகள் உடைந்து கிடக்கின்றன. மலையின் பிரதிபலிப்பு தெரிய வேண்டிய சுத்த நீரில் பாசிப்படலம் பின்னிப்பிணைந்திருக்கின்றன.குளத்தின் மண்டபத்தின் அடியே மனித எச்சங்கள் துர்நாற்றம் தருகின்றது.அதற்கு நடுவே ஒரு ஊதுபத்தி ஏற்றப்பட்டு நறுமணம் தர முயன்று கொண்டிருந்தது.இதுதான் நம் இன்றைய ஆன்மிகம்.பொய்ம்மையும் சுயநலமும் மிகுந்திட்ட ஆன்மிகம்.இந்த நீர்நிலையில் கூட ஒரு தகவலறியா மாடு நீர் அருந்திக் கொண்டிருந்தது ஒரு பரிதாபமான முரண்.

எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்றறிய அந்த இடத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு சென்று பார்க்கையில் குமட்டல் ஏற்பட்டது.கிலோ கிலோவாக குப்பைகள் சாக்கடையில் அடைபட்டு அவையும் தேங்கி தேங்கிச் சென்று,செல்லும் வழிகளிலெல்லாம் கொசுக்களின் சரணாலயமாகவும்,நோய்களின் காமதேனுவாகவும் மக்களை அர்ச்சித்துவிட்டு அக்னி தீர்த்தத்தில் இந்த சாக்கடைகள் மோட்சம் பெறுகின்றன.அந்த கால்வாய்களை ஒட்டி ஏழு அடிக்கு உயரத்திற்கு ஒரு சுவர் வைத்து,நகராட்சி பாதாள சாக்கடையோடு இணைக்காமல் மனசாட்சியே இல்லாமல் ஒரு நீர்நிலையோடு இணைத்து விளையாடி இருக்கிறார்கள்.

நகராட்சிக்கும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல கடிதங்கள் பறந்துவிட்டன.அவை பெரும்பாலும் குப்பைத் தொட்டி நோக்கி காற்றில் விடப்பட்டவையே.பதில் இல்லை இன்றுவரை.அங்கு குப்பை மனுக்கள் சேர சேர இங்கு குப்பை மலை போல் சேர்ந்துவிட்டது.இங்குள்ள மக்களை நோயிலிருந்து காப்பாற்ற வருங்காலத்தில் இந்த தீர்த்தத்தையே மண்போட்டு நிரப்பி மூடும் நிலை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.ஜலத்திற்கே சமாதி அமைத்த பெருமை நமக்கு தேவையா?

தீர்வு:

  • இங்குள்ள ஒட்டுமொத்த கழிவுநீரும் பாதாள சாக்கடைக்கு திருப்பி விடப்பட வேண்டும்.
  • டன் டன்னாக குவிந்துள்ள குப்பைக் குவியல்களை முழுவதும் அகற்ற வேண்டும்.
  • ஏழு அடி உயரமுள்ள சுவர்கள் மலையிலிருந்து வரும் நீருக்கும் சாக்கடைகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.எவ்விடத்திலும் மழைநீரோடு இந்நீர் கலக்க விடக்கூடாது.
  • படிந்திருக்கும் பாசிப் படலத்தை அகற்றி,கரைகளிலும் கோவில் மண்டபத்திலும் சிறுநீர்,மலம் கழிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • மக்களிடத்தில் தூய்மையான நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் உணர்த்த வேண்டும்.

நமக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷங்களை மதிக்க தெரியாவிட்டாலும் அவமரியாதை செய்யாதிருக்க அறிவுறுத்தல் இன்றியமையாதது.இந்தியத்தை காதலிக்கா விட்டாலும் இந்தியர்களுக்காவது அக்னி தீர்த்தம் அழிவிலிருந்து பிறத்தல் அவசியம் ஆகிறது.

காட்சிகள் அடுத்த

பின்னிபிணைந்திருக்கும் பாசிப்  படலம்

பின்னிபிணைந்திருக்கும் பாசிப் படலம்

அவலட்சணமாக காட்சி அளிக்கும் மண்டப கரை

அவலட்சணமாக காட்சி அளிக்கும் மண்டப கரை

தண்ணீரையே விழுங்கிய பாசி

தண்ணீரையே விழுங்கிய பாசி

தண்ணீரை நம்பிக் குடிக்கும் அப்பாவி மாடு

தண்ணீரை நம்பிக் குடிக்கும் அப்பாவி மாடு

மலையிலிருந்து நீர் வரும் பாதையின் இன்றைய நிலை

மலையிலிருந்து நீர் வரும் பாதையின் இன்றைய நிலை

வீடுகளிலிருந்து  கலக்கப்படும் கழிவுநீர்

வீடுகளிலிருந்து கலக்கப்படும் கழிவுநீர்

இடிந்து கிடக்கும் படித்துறை

இடிந்து கிடக்கும் படித்துறை

நீரூற்று சிவன் சிலை வைக்க திட்டமிடப்பட்டிருக்கும் இடம்

நீரூற்று சிவன் சிலை வைக்க திட்டமிடப்பட்டிருக்கும் இடம்

simmam1

சிம்மத் தீர்த்தத்தில் சிம்மம் மட்டும் வாயை பிளந்து கொண்டிருக்கிறது.தீர்த்தத்தை காணோம்.இடம்:கிரிவல பாதை

சிம்மத் தீர்த்தத்தில் சிம்மம் மட்டும் வாயை பிளந்து கொண்டிருக்கிறது.தீர்த்தத்தை காணோம்.இடம்:கிரிவல பாதை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s