இட்லி-ஒரு அமானுஷ்ய அனுபவம்

எனக்கு தெரிஞ்சு ஆம்பிளைகள் காஞ்சனா பேயை பாத்துக்கூட பயப்பட மாட்டாங்க.கட்டுக்குள்ள போய் எதையாச்சும் சமைக்கனும்னா செம்ம தில் வேணும்.எனக்கு இன்று அப்படி ஒரு சிச்சுவேஷன் அமைந்துவிட்டது.மூன்று நாட்களாக வீட்டில் அம்மா இல்லை.என் அக்காவை(பெரியம்மா மகள்) அமெரிக்காவுக்கு வழியனுப்ப சென்னை சென்றுவிட்டார்.
மூன்று நாட்களும் என் சோறு என் உரிமை.
முதல் நாள் ஹோட்டலில் போய் போய் சாப்பிட்டு தேற்றிக் கொண்டேன்.
இரண்டாம் நாள் நூடுல்ஸ், பிரெட் ஜாம், கார்ன் ப்ளேக்ஸ் என்று கஷ்ஷ்ட்டடப்பட்டு ஓட்டிவிட்டேன்.
மூன்றாம் நாள்-அதாவது இன்று.இதற்கு மேல் வழியில்லை.பிராப்பராக எதையாவது சமைத்தே ஆக வேண்டும்.நான் அம்மாவிடமிருந்து சமையல் குறிப்பு எடுத்துக்கொண்ட இரண்டே ரெசிப்பிகள்-1.சோறு 2.இட்லி
காலையில் இட்லிதானே தின்னாகவேண்டும்(ஏன் தோசை ஊத்தலாமே என்று கேட்காதீர்கள்.ஒருநாள் நான் தோசை செய்தேன்.அதை அடுத்த அமானுஷ்ய அனுபவங்களில் எழுதுகிறேன்)
கை நடுங்க அந்த டைரி குறிப்பை எடுத்தேன்.
“இட்லி குக்கர் திறந்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றவும்”.
ஊற்றினேன்.
“இட்லி மாவை தேவையான அளவிற்கு எடுத்து இட்லி தட்டுகளில் தாளிக்கும் எண்ணெயை ஒருசொட்டு ஊற்றி, பரப்பி, குழி சமமாகும் வரை மாவு ஊற்றவும்”
ஃபிரிட்ஜில் இட்லி மாவு இருந்தது.வெளியே எடுத்து டப்பர்வேரை ஓப்பன் செய்து சின்ன கரண்டி போட்டு கலக்கிவிட்டு, என் குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டேன்.மாவு ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு டிசைனில் படர்ந்தது.
குழி மாதிரி இருக்குற இட்லி தட்ல இத்தனை டிசைன் நமக்கு மட்டும் எப்படி வருது? என்று குழப்பமாக இருந்தது.சரி, இட்லி வெந்தா சரி ஆகிடும் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.
“தட்டுகளை குக்கரில் வைத்து மூடி,15 நிமிடம் அவிக்க விடவும்”
செய்தேன்.வலது பக்க ஸ்டவ்வில் ஏற்றினேன்.இடையில் சிம்மில் வைப்பதா ஃபுல்லில் வைப்பதா என்று டவுட் வந்தது.
கககபோ என்று முழு அனலை ஏற்றினேன்.
ஸ்டாப் வாட்ச் வைத்து சமைப்பதா இல்லை கவுண்ட் டவுன் டைமர் வைத்து சமைப்பதா என்று பெருங்குழப்பம். அம்மா இதில் சமர்த்து.மனக்கணக்கு மட்டுமே!
சரி கவுண்ட் டவுன் டைமர் வைத்து 15 நிமிடம் செட் செய்தேன்.
இடையில் குக்கரின் மேல்தட்டு சரியாக பொருந்தவில்லை போல.லைட்டா மேல கிளம்புச்சு.புகை விசில் வழியே வராமல், சைட் கேப் வழியெல்லாம் வந்து பீதியை கிளப்பியது.வியர்வை வழிய வழிய 15 நிமிடங்கள் முடிந்துவிட்டது.
டபக்கென்று gasஐ ஆஃப் செய்தேன்.பெருமூச்சு விட்டேன்.இதற்கு முன் என் பொறியியல் லேப்பில் எலக்ட்ரிகல் மோட்டார்களை இயக்கும் போதுதான் இந்த திகில் அனுபவம் கடைசியாக ஏற்பட்டது. விநோத சப்தங்களை எழுப்பி “நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி!” என்று நம்மை கதற வைக்கும்.
2 நிமிடம் கழித்து “கடவுளே! இவ்வளவு சிரமப்பட்டு என் திராணியை மீறி இந்த இட்லி பயபுள்ளைகளை அவிச்சிருக்கேன்.இதுங்க கல்லு மாதிரியும் இருக்கப்படாது, குழைஞ்சும் போயிருக்க கூடாது”.(பின்னே அதவேற தனியா இல்ல நான் திங்கனும்)
கேட்டுக்கொண்டே குக்கர் மூடியை திறந்து தூர வைத்தேன்.முகத்தில் சுடச்சுட ஆவி பறந்தது.
நான் வேண்டியது வீண்போகவில்லை.இட்லி பெர்ஃபெக்ட் பெர்ஃபார்மன்ஸ் காட்டியது.மகிழ்ச்சி.மகிழ்ச்சி.அப்படியொரு மகிழ்ச்சி.மிஷன் சக்ஸஸ்.சந்திராயன் ராக்கெட் விட்டவன்கூட இவ்ளோ சந்தோஷ பட்டிருக்கமாட்டான்யா!
பூப்போல இருந்துச்சி இட்லிங்க.அதுகல தட்ல வச்சி, ஒரு ஓரம் காரப்பொடியை தூவி, மணக்க மணக்க நல்லெண்ணெய் ஊத்தி வாய்ல வச்சப்ப அடைஞ்ச சந்தோஷம் இருக்கே! ஹப்பப்பா அதுலான் சொல்லி மாளாதுங்க!
ரியலி பெண்கள் ரொம்ப கிரேட்.இத்தனைக்கும் இதுவரை சமையற்கட்டு பக்கம் எட்டி பாத்ததுகூட இல்லை.அம்மா சமையலை வாசனை பிடிச்சு, சாப்பிட மட்டும்தான்.ஆனா அப்படிப்பட்ட மண்டு எனக்கே, அவங்க கொடுத்த ரெசிப்பி பெர்ஃபெக்டா கைவருதுனா இன்னும் நிறைய நிறைய ரெசிப்பி டைரில நோட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்.
அடுத்த வேளை சோறு வடிக்க வேண்டும்.அது தனியொரு அனுபவம்.காரக்குழம்பு, துவையல், சாதப்பொடி, சிப்ஸ் பாக்கெட் அம்மா ரெடி பண்ணி குடுத்துட்டு போயிருக்காங்க.இப்ப எத்தனை விசில் விடனும்னு கவுண்டிங் பண்ணி வடிக்க வேண்டியதுதான்.ஐ லவ் யூ அம்மா!
மதியான சாப்பாட்டுக்கு அப்றோம் மீட் பண்றேன்.
சிங்கமொன்று புறப்பட்டதே!!

சக்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s