புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

நியாயமாக எனக்கு இந்த படத்தை விமர்சிக்கும் எண்ணமோ தகுதியோ இல்லை.ரசினாக மட்டும் என் மண்டையில் உரைத்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐபில் அரையிறுதி இன்று.இடையில் கொஞ்சம் கம்யூனிஸம் பழகலாம் என்று தெரிந்தே ஜனநாதன் படத்திற்கு காலையில் போனேன்.
போனால் மார்னிங் ஹவுஸ்புல். மேட்னி புக் செய்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
ரசிக வட்டாரங்களில் கம்யூனிஸம் என்ற டாபிக் மீண்டும் உருவெடுத்திருப்பதே இந்த படத்தின் வெற்றியாக நான் உணர்கிறேன்.
முதல் ஃபிரேமிலிருந்தே நமக்கு தெரியாத, தெரிந்தாலும் நாம் அதிகம் அலட்டி யோசிக்காத கோணம் கொண்ட விஷயங்கள், இந்தியாவை நேரடியாக பாதிக்கும் உலக குப்பை இறக்குமதி, சாராயம் தமிழ் சமூகத்தை எந்தளவுக்கு மனசாட்சியே இல்லாமல் சிதைத்திருக்கிறது(நகையாக சொல்லல்), மரண தண்டனை குறித்த விரிவான உரையாடல் எல்லாவற்றையும் நம்மை தூங்க வைக்காமல், முகம் சுளிக்க வைக்காமல், ப்ச் கொட்ட வைக்காமல் ஜனரஞ்சக முகங்களான ஆர்யா, விஜய் சேதுபதி மூலம் நம்முள் இந்த படம் நிகழ்த்துகிறது.
கார்த்திகாவை முதல் காட்சியில் FZ பைக்கை ஓட்டி வரும்போது பார்த்ததிலிருந்தே சொக்க ஆரம்பித்துவிட்டேன்.பெண்மைக்கான அத்தனை லட்சணங்களும் வைத்துக்கொண்டே, பெண்ணின் இலக்கணங்களை அசால்ட்டாக உடைத்து செல்கிறார்.
ஷ்யாம் ruthless, law abiding போலீஸ்காரர் வேடத்தில் துளிநகராமல் வாழ்ந்திருக்கிறார்.
பாடல்கள் ஒன்றுமே மனதில் நிற்காது, விஜய் சேதுபதியான அசத்தல் இன்ட்ரோ பகுதி தவிர.
நமக்கு ரொம்ப பரிச்சயமான செய்திகளான மரண தண்டனை, ஜனாதிபதி மனு போன்றவற்றை வாழும் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை டீடெய்ல்டாக -தூக்கு கயிறு செய்வதிலிருந்து, ஹேங்மேனுக்கும் பவித்திரமான மனசுண்டு என்பதை நெகிழ்வாக படம்பிடிப்பதிலிருந்து, உண்மையிலேயே சட்டம் யார் கையில், லட்சியம் எப்படி இருக்க வேண்டும், அடிப்படைவாதிகளின் எதார்த்த நிலை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதிலிருந்து பல பரிணாமங்களை சிம்பிளாய் தொட்டு நிற்கிறது படம்.
இன்றைய இளைஞர்கள் கம்யூனிஸத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று சொல்லும் காட்சி அருமை.
இடைவேளையின் போது ஏன் என்று கேட்காமல் கொள்ளையாய் காசு கொடுத்து பாப்கார்ன், கோக் வாங்கி சாப்பிடும் மனோபாவத்தை கூட சுய கேள்வி கேட்க வைக்கும்.ஒரு நிமிடமாவது மனசாட்சி நம்மை யோசிக்க சொல்கிறது.
பின் absolute communism is like absolute gold.புழக்கத்துக்கு ஆகாது என்பது போலவும் முன் வைக்கப்படுகிறது.
முற்றிலும் முதலாளித்துவம் depressionஇலும்(1920s), முற்றிலும் கம்யூனிஸம் disintegration(1980-1990s)இலும் முடிந்தது நம் அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்கள் உணர்த்துகின்றன.
நடுவில் படம்பார்த்த பின் முகநூலில் அராத்துவின் ஒரு அப்டேட் படிக்க நேர்ந்தது.
“மலை முழுங்கி கோடீஸ்வரன்களெல்லாம் அமைதியாய் இருக்க, மாசம் இப்பொழுதுதான் 20,000 சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் சில்லுவண்டுகள் எல்லாம் குற்ற உணர்வு கொண்டு இந்த படத்தின் வசனங்களுக்கு விசிலடித்து, கைதட்டி கண்ணீர் வடிக்கின்றனர்” என்று. நிஜம்தான்.ப்ராக்டிகலான பாயிண்ட் ஆப் வியூ.அதிகம் சம்பாதிப்பவர்கள் அந்த guilty conscienceஐ என்றோ இழந்துவிடுகிறார்கள்.கூடி நின்று கும்மி அடித்து ஒப்பாரி வைப்பதெல்லாம் பொடிப்பசங்க நாம்தான்.அந்த மனசாட்சியாவது இருக்கிறதே!
அதற்கு கீழ் ஒரு நண்பர் பதிந்திருந்த கமெண்ட் ரகளையானது
“ஜனநாதன் படம் பாத்துட்டு கம்யூனிஸத்துக்கு பொங்குற பயலுவலாம் நைட் சன்னி லியோன் படம் பாத்துட்டு ‘அது’க்கு பொங்கிடுவானுங்க.நீங்க இதுக்கு போய் ஃபீல் பண்ணிக்கிட்டு” என்று.
ஜோக்ஸ் அபார்ட், இது கிளாஸான ஒரு அட்டம்ப்ட்.நல்ல ஒரு உரையாடலை, திணிக்காமல் நமக்குள் சொல்லிச்செல்கிற படம்.ஸோ கண்டிப்பா டைம் கிடைச்சா புக் பண்ணிடுங்க.
சரி, ஏன் கார்த்திகா படம் முத்தாய்ப்பா போட்டிருக்கேனு பார்க்கறீங்களா?
அப்பவாச்சு என் ப்ளாக்கை உங்களை படிக்க வைக்கலாமேனு தான்.

image

பை த வே, பை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s