அலுவலக ரகசியங்கள்(காப்பு) சட்டம்,1923

சில மாதங்கள் முன்பு மத்திய அரசு நிலைகளில் ஒரு சூறாவளி வீசியது.எந்த டிவி சேனலை மாற்றினாலும் பெட்ரோலிய துறை(MoPG) அமைச்சகத்தின் ஆவணங்களை தனியாருக்கு தாரை வார்த்த கார்ப்பரேட் உளவாளிகளின் கைது பற்றியே கர்ச்சித்தன இந்திய ஊடகங்கள். பெரும் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கும் இந்த விவகாரம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பது மக்களுக்கு மேம்போக்காக புரிந்தாலும் அவர்கள் மனதில் சில சந்தேகங்களும் எழுகின்றன.

இதற்கு நல்ல உதாரணம் அலுவலக ரகசியங்கள்(காப்பு) சட்டம்,1923. ஆங்கில காலனி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த பழைய சட்டத்தில் உள்ள ஓட்டைகள் (loopholes) வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் இந்த சட்டத்தின் குறைகளை(major flaws)  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTIA) மூலம் யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்திகொள்ளகூடும் என்ற உண்மை தான்.

இதுதான் விஷயம் என்று தெள்ளதெளிவாக புரிகின்றது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பகுதி 8(2) [section 8(2)] என்ன சொல்கிறதென்றால் “தகவல் அறியும் மனுதாரர்களின் நன்மையானது தகவல் கொடுக்கும் மனுதாரர்களின் இழப்புகளை காட்டினும் அதிகமாக இருந்தால் அந்த தகவலை வெளியிட்டு கொள்ளலாம்”.இது மிகவும் ஆபத்தான மற்றும் பொதுப்படையான (too sweeping a generalized clause)  ஒரு சொல்லாடலாக கருதப்படுகிறது.

இதில் என்ன தவறு என்று நீங்கள் கருதலாம்.விஷயத்தின் வீரியத்தன்மையை நீங்கள் எப்போது உணர்வீர்கள் என்றால் RTIயின் மூலம் அனைத்து முக்கிய அரசாங்க அலுவல் ரகசிய கோப்புகளையும், சட்டம் நன்கு தெரிந்தவர்களால் எடுத்து விட முடியும். இந்த அளவிற்கு சட்டம் பயின்றவர்களை சட்ட ஆலோசகர்களாக கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மட்டுமே நியமித்துக் கொள்வர்.அந்த அளவு வசதியிலா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.இது சட்டத்தின் மூலம் நிகழ்த்தப்படும் ஒரு வித ஓரவஞ்சனை ஆகும்.(lack of level playing field). அங்கு ஆரோக்கியம் இல்லாத போட்டியே நிகழும்.

சரி.இதற்கு தீர்வு? அருமையான இரு தீர்வுகள் இருக்கின்றன.

1.இரண்டாவது நிர்வாக சீரமைப்பு குழு(Second Administrative Reforms Commission—SARC) 2006ல் ஒரு ஆலோசனை வழங்கியது.அதில் அலுவலக ரகசிய சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தும் கொண்டு வந்து அதில் உள்ள சில அத்தியாவசிய (critical) கோப்புகளையும் தகவல்களையும் RTIயின் நீதிக்கு புறத்தே கொண்டு செல்வது.

2.அரசாங்கமே சில அடிப்படை தகவல்களை அனைத்து கம்பெனிகளுக்கும் ஒரு பொது தளத்தில் கொடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளின் சதி முயற்சி தோற்கடிக்கப் பட்டுவிடும்.

மீடியா கேட்கும் பல முக்கியமான மக்கள் சார்ந்த கேள்விகளுக்கெல்லாம் “இது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்ததால் வெளியிட முடியாது” என்ற ஒற்றை சொற்றொடரை வைத்து கபடி ஆடுகிற அரசு,இவ்வளவு முக்கிய கோப்புகளை விட்டதும் அல்லாமல் அல்லப் பழையதான ஒரு ரகசிய காப்பு சட்டத்தையும் வைத்திருக்கிறது.

இது குறித்த விவாதத்திற்கே இப்பொழுதுதான் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. http://www.business-standard.com/article/economy-policy/govt-proposes-massive-dilution-of-whistleblower-law-115051100940_1.html

விண்டேஜ் கார்களை ரசிக்கலாம்.விண்டேஜ் சட்டங்களை எப்படி ரசிப்பது?

rti-india-development-factors-and-the-loopholes-in-it-5-638

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s