திருவண்ணாமலை கொட்டகை உணவகம்

திருவண்ணாமலையில் இருந்து செங்கம்,பெங்களுரு செல்லும் சாலையில் வயல்களுக்கிடையே  குளிர்ச்சியான நிலப் பிரதேசத்தில் சாலையின் வலதுப்பக்கத்தில் ஒரு கொட்டகை.அந்த கொட்டகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பல இருசக்கர வாகனங்கள்.ஆச்சர்யத்துடன் கீழே இறங்கி கொட்டகை நோக்கி நடந்து சென்று பார்த்தால் பல பார்சல்கள் முன்னே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நம் வரவை வாஞ்சையுடன் பார்க்கும் நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்,”தக்காளியா?எலுமிச்சையா?தயிரா?வெஜிடபிளா?” என்று வினவுகிறார்.ஒரு சாதத்தை நாம் செலக்ட் செய்து சொன்னால் நாம் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு  பார்சல் வருகிறது.பிரித்துப் பார்த்தால்  கமகமவென்று தக்காளி சாதம்.தொட்டுக் கொள்ள வடு மாங்காய் ஊறுகாய்.

“மோட்டலில் சாப்பிடுகிறீர்களே!விலை கொள்ளையாய் இருக்குமே?” என வினவுபவர்களிடம் ஒரு முன்விளக்கம்.எல்லா பார்சல்களின் விலையும 15 ருபாய்தான்.இதான் இதனுடைய சிறப்பம்சமே.புன்னகையுடன்,அன்பாக ஓனரே  பார்சல்,ஊறுகாய்,வடை பரிமாறுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.உள்ளே இலை வைத்து,வெளியே பேப்பர் கட்டி பார்சல் செய்கிறார்.இங்கு இவரே முதலாளி,சர்வர்,பார்சல்மேன் சகலமும்.இயற்கைச் சூழலில் அமைந்துள்ளதால் குளுகுளு என்றிருக்கிறது இந்த கொட்டகை உணவகம்.(இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதில்லை என்பது  சிறப்பம்சம்).சுவை அருமையாக உள்ளது. பெரும்பாலான மோட்டல்கள் போல பொடியை கலந்து தராமல்,முழு தக்காளி,காய்கறிகள் போன்றவற்றை அருகில் இருக்கும் இவரது கிச்சனிலேயே தயார் செய்து சாதமாக்கி,சுடச்சுட பார்சல் கட்டி,முடிந்தவரை பிரெஷாகவே பரிமாறுகிறார்.ஒரு மொறுமொறு  வடையின் விலை இங்கு 3 ரூபாய் மட்டுமே.சாப்பிட்டுவிட்டு குப்பைத் தொட்டியில் பொட்டலத்தை போட்டுவிட்டு,கை அலம்பி கல்லாவில் இவரிடம் காசு தரும்போது மனசு நிறைவடைகிறது.யார் என்றே தெரியாத இந்த மனிதர்,வியாபாரத்தை மட்டுமே மனதில் கொள்ளாமல்,வருகின்றவர்களுக்கு வசதி,நிம்மதியான மனநிலை,குறைந்த செலவில் வயிறார ருசியாக சாப்பிடலாம் என்ற திருப்தி அனைத்தையும் தந்துவிட்டு 5 ருபாய் சில்லறையை நீட்டி நம் முன் மறுபடியும் புன்னகைக்கிறார்.அந்த புன்னகையே நம்மை மீண்டும் வருக என்பதை நினைவூட்டினாலும்,அட 20 ருபாய் தான் கொடுத்தோம்.இதுலயே 5 ருபாய் மிச்சமா? என இரண்டாவது ரவுண்டு வயிற்றை நிரப்பிவிட்டு செல்பவர்களும் அதிகம். கொட்டகையை விட்டு வெளியே வந்து தெம்பாக வண்டி ஸ்டார்ட் செய்ய நியூட்ரலில் இருந்து எடுக்கும்பொழுதே மனம் அடுத்து எப்பொழுது வரலாம் என திட்டமிட தொடங்கி விடுகிறது.அதுதான் இந்த மனிதரின் மேஜிக்.ஒரு தண்ணீர் பாட்டிலுக்கும்,சிங்கள் டீக்குமே 20 ருபாய் மேல் வாங்கும் வசூல்ராஜா மொடேல்களுக்கு நடுவே இந்த வெள்ளந்தி மனிதருக்கு ஒரு ராயல் சல்யூட்.

கடைசிவரை முயன்றும் தன்னை பற்றிய பர்சனல் பேட்டியையோ,ஹோட்டலின் புகைப்படங்களையோ தர மறுத்துவிட்டார்.இதற்கு அடையாளம் எப்போயுமே இந்த கொட்டகை ஹோட்டல் இங்கே தான் இருக்கும்.யார் வந்தாலும் நல்ல சாப்பாடு கொடுப்பேன் என்றார்.அவரிடம் பேசியதில் தெலுங்கு வாடை வீசியது.”இப்போ கூட பார்சல் வேணுமா சொல்லுங்க!போட்டோ வேணாம் சாரு!” என்கிறார்.பசியோட வர்றவங்களுக்கு குறைந்த செலவுல சாப்பாடு.இதை  தவிர நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் இந்த பெயர் சொல்ல விரும்பாத கொட்டகைகாரர்.நீங்களும் வந்து பாருங்க….கொட்டகை உணவகத்திற்கு.சாப்பிட்டுவிட்டு போட்டோவையும் பெயரையும் கேளுங்கள்.அதெல்லாம் எதுக்கு சாரு!இன்னொரு பார்சல் வேணுமா? என்பார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s