இது தெரியலைனா நாம தமிழரா?

பாரதி லோகோ வச்சிக்கிட்டு,பாரதியின் சொல்படி நடந்துகிட்டு பாரதியின் வீச்சை சிறிதாவது உங்களுக்கு புகட்டவில்லை என்றால் அது ரொம்ப பெரிய தப்பு.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
இச்சகத்திலுல்லோரெல்லாம் எதிர்த்துநின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்தபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
பிச்சை வாங்கி தின்னும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
இச்சைகொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்டபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
நச்சைவாயிலே கொணந்து நண்பர் ஊட்டுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
பச்சையூனியைந்த வேர்படைகள் வந்தபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!
உச்சி மீதுவான் இடிந்து வீழ்கின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!

Advertisements

சேம் செக்ஸ் கல்யாணம்

image

உலகத்துல கிட்டத்திட்ட fbலயும், இன்ஸ்டாகிராம்லயும், ட்விட்டர்லயும் இன்னபிற எல்லா சோஷியல் நெட்வொர்க்ல இருக்கிற பாதி பேர் எல்லாருமே இன்னிக்கு அவங்க மூஞ்சி மேல வானவில் கலரை ஊத்தி தெளிச்சு எடிட் பண்ணி dp வச்சிருந்தாங்க.
என்ன ஆச்சு எல்லா பக்கிகளுக்கும்.கிறுக்கு பயபுள்ளைக ஹோலி கூட இப்ப இல்லையே? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதே? என்று குழம்பிக்கொண்டிருக்கையில்தான் அந்த நியூஸ்ஸை படித்தேன்.

அமெரிக்காவில் lgbt சமுதாயத்தினரின் பல வருட லீகல் போர் அவர்களுக்கு வெற்றியை தந்திருக்கிறது.உலகின் முன்மாதிரி குடியரசா சொல்லப்படுகிற அமெரிக்காவிலேயே இப்போதான் சேம் செக்ஸ் மேரேஜை சட்டபூர்வமா அங்கீகரிச்சிருக்காங்களா? அப்டினு ஒரு புறம் ஷாக்கிங்காவும் நம்ம நாட்ல இதுலான் சாத்தியமானு யோசிச்சப்ப இது ஒரு மிகப்பெரிய மைல்கல்னு கான்ட்ராஸ்டிங்கா ரெண்டு பாயிண்ட் ஆஃப் வியூ கிடைச்சது.

மை கருத்து about ஓரின சேர்க்கை திருமணங்கள்:

ஒரு ஆணியும் இல்லைங்க.ஏன்னா அந்த உணர்வுகள் கொண்ட மனிதர்களோட மனநிலை என்னன்னு நான் உணர்ந்ததில்லை.ஆரம்ப காலத்துல சேம் செக்ஸ் மேரேஜ், ஹோமோ செக்ஷூவல்ஸ், லெஸ்போஸ் இவங்க மேல எனக்கு பயம் இருந்துச்சு.ஏன்னா அவங்க மேல எனக்கு சுத்தமா புரிதல் இல்லாததுனால.

அப்புறம் என் cousin ,கரண் ஜோஹர் பத்தி சொன்ன விஷயங்களை என்னால ஆரம்பத்துல ஜீரணிக்கவே முடியல. அதுவும் ஒருவிதமான இயல்பு மனித உணர்ச்சிதானு ஒரு புரிதலே இல்லை.இது நம் இந்திய கட்டமைப்பில் வளரும் எல்லா பிள்ளைகளுக்கும் உள்ள ஒரு நேச்சுரலான குழப்பம்.ஏன்னா unorthodoxஆ இருக்கிற எந்த ஒரு பிராக்டிகல் விஷயத்தையும் ஏத்துக்கிறதை விடுங்க-காதுல வாங்குறதுக்கே கூச்சப்படுற போலி சமூகம்தான் நாம்.
இதை நான் பப்ளிக்கா ஒரு மேடைல சொன்னாலே எனக்கு காறித்துப்பும் செருப்படியும் விழும்.
நான் சொல்றது ஒண்ணும் இல்லீங்க.நீங்க lgbt மக்களை ஆதரிச்சா உங்களையும் lgbtனு சொல்லிடுவாங்கன்னே இங்க ஒரு கூத்து இருக்கு.
நாம அவங்களை போல இல்லை.யோக்கியம்தான்.
நம்ம டார்கெட் எல்லாம் opposite sex.யோக்கியம்தான்(!).
நாம நேச்சுரல் பீப்பிள்.யோக்கியம்தான்.
இது எல்லாமே நம்மளோட தனிமனித, சுதந்திர சாய்ஸ்.we choose our sexuality.but who are we to determine others’?

அது அவங்க உடல்.அவங்க உணர்வு.அவங்க இச்சை.அவங்க காதல்.அவங்க காமம்.அவங்க திருப்தி.we have got nothing to with it.அதற்கான உரிமையும் நமக்கில்ல.

யோசிச்சு பாருங்க-ஒரு காலத்துல இடது கை பழக்கம் உள்ளவங்க எல்லாம் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள்னு ஒரு பிம்பம் இருந்துச்சு.இன்னிக்கு அறிவியல் அவங்கதான் புத்திசாலிகள்னு சொல்லுது.

அவர்களை ஆதரிக்கலைனாலும் பங்கம் இல்லை.நாம அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கனும்.அவங்க உணர்ச்சிகளை புரிஞ்சிகிட்டாலே போதும்.சகிப்பு தன்மை கொண்ட மனிதர்களா மாறிடுவோம்.

யாரும் அவங்களை ஆதரிக்கறது மூலமா உங்களை கேவாகவோ லெஸ்பியனாகவோ மாற சொல்லலை.கரண் ஜோஹர் என்ன கொலை குத்தமா பண்ணிட்டார்? அவர் உயிராக அன்பு பாராட்டும் ஜீவன் அதே பாலினத்தை சேர்ந்தவர்.அவ்வளவுதான்.இந்த புரிதலை எனக்களித்த என் சகோதரி(கசின்) சகிப்புத்தன்மைக்கான என் சிறு ஆசான்.அவளுக்கு நன்றி.

குவாண்டிகோ-காட்சிப்பேழை

image

நாயகி

PC ஆன் ABC.
இந்தியாவில் சமீப காலங்களில் அதிகம் முணுமுணுக்கப்பட்ட ஹாட் நியூஸ்.இப்பொழுதும் சூடாறவில்லை.
அமெரிக்க ஒலிபரப்பு கார்ப்பரேஷனின் quantico தொடரில் நம் பிரியங்கா சோப்ரா தான் நாயகி.இதுதான் முதல் சீஸன்.அந்த டிரெயிலர் மிரட்டல்.
சில பிக்ஸ் இங்கே கேலரியாக.
ஹீரோவை பிளேனில் பார்ப்பதாகட்டும், காரிலேயே செக்ஸ் வைத்துக்கொள்வதாகட்டும், அதை தில்லாக colleagues முன்பே சொல்லி ஹீரோவின் சமாளிப்பை அசிங்கப்படுத்துவதாகட்டும், ஆக்ஷன் அவதாராகட்டும், அப்பாவி பெண் லுக்ஸ் ஆகட்டும்.பிரியங்கா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு உடையும் கச்சிதம்.ஏனென்றால் பிரியங்கா கச்சிதம்.
இறுதியில் பிரியங்காவையே வலையில் சிக்க வைத்து விடுகிறார்கள் போல.அந்த வலையை எப்படியும் அம்மணி பிய்த்து கொண்டு வந்துவிடுவார்.அது எப்படி என்பதுதான் திரைக்கதை.

image

பிளைட் சந்திப்பு

image

காரில் ஒன் டே ஸ்டாண்ட்

image

போஸ்ட் செக்ஸ் talk

image

ஜாலி கிஸ்ஸிங்

image

மெக்ஸிகன் லுக்

image

குவாண்டிகோ அகாதெமி

image

ஆரம்பம் முதலே ஷாக்

image

ஹீரோவை பப்ளிக்காக தில்லாக கலாய்த்தல்

image

டிரெயிணிங்

image

அடுத்த அறையில் காதலன்.ஏக்க பார்வை.

image

என்னா பொண்ணு டா?

image

கச்சித காஸ்ட்யூம்

image

FBI குழுவில்

image

வலையில் விழுதல்

image

பிரியாங்கவே தூண்டில் மீன்!

image

காணத்தவறாதீர்கள் ஏபிசியில்!

சதுரங்க உலகம்-ஒரு ஸ்மைலி சிறுகதை =)

செஸ் காயின்கள் ரொம்ப அலுத்து போயிருந்தன.உலகம் முழுக்க கற்பனை வறட்சி கொண்ட ஜனங்கள் வெறும் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமே போர் நடத்திக்கொண்டிருந்தனர்.அபார்த்தீட் முடிந்து பல காலம் ஆகிவிட்டாலும் இது அரத பழசாக பட்டது செஸ் காயின்களுக்கு.

வேண்டுமென்றே மக்கள் மனதில் ஓய்ந்துவிட்ட பழைய குப்பைகளை போட்டு எரித்து அனல் மூட்டும் திட்டமாக பட்டது அவைகளுக்கு.
போதா குறைக்கு ரொம்பவே போர் அடித்தது.விஸ்வனாதன் ஆனந்தையும், மேக்னஸ் கார்ல்ஸனையுமே எத்தனை நாட்களுக்கு சும்மா தங்களை நகர்த்த வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது?

அதனால் அவை ப்ரேக் தி ரூல்ஸ் என்று முடிவெடுத்தென.தற்போதைய உலகின் மிக தீவிர பிரச்னை என்ன? ஜென்டர் இன்-ஈக்வுலாட்டி எனப்படும் பாலின சீரின்மை.உலகில் இன்றும்கூட பல பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவது, பிறந்ததும் அள்ளி குப்பையில் வீசப்படுவது, சிறுமிகள் சீரழிக்கப்படுவது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது, குடும்ப டார்ச்சர் போன்ற பல்வேறு பிரச்னைகளை கண்டு பொங்கி சீறி எழுந்தன செஸ் காயின்கள்.
இதற்கு ஏதாவது முடிவு கட்டியே ஆக வேண்டும் என சபதம் செய்து கொண்டன.என்ன செய்வது?
ஆங், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்.அதாங்க ராணி வெர்சஸ் ராஜா வெளியாடலாம் என்று முடிவெடுத்தன.

சா பூ த்ரி போட்டும், ஹேண்டு கிரிக்கெட் விளையாடியும் யார் ராணி பக்கம், யார் ராஜா பக்கம் என்று முடிவெடுத்துக்கொண்டன.
இயக்க மாஸ்டர்கள் இல்லாததால் தம் சிற்றறிவை கொண்டு விளையாட ஆரம்பித்தன.முதலில் சிப்பாய்கள் இருவர் மோதிக்கொண்டன.ஒரு சிப்பாய் வெட்ட ரத்த வெள்ளத்திலேயே இறந்தது எதிரணி சிப்பாய்.
மற்ற காயின்களுக்கு கலக்கம் ஏற்பட்டது.
ஒரு சிப்பாய் காயின் துணிந்து வாய் பேசியது.
“இரு! இரு! இரு!அதெப்படி? இவ்வளவு நாட்களாக தான் நம் மாஸ்டர்களின் என்டர்டெயின்மெண்டுக்காக ஒவ்வொரு கேமின் போதும் நாம் உயிர்த்தியாகம் செய்து, அடுத்த கேமில் மீண்டும் உயிர் பெற்று செத்து செத்து விளையாடினோம்.மறுபடியும் அதையே நாம் நமக்கு செய்தால் நம்மை விட முட்டாள்கள் யாருமில்லை என்றது ஒரு பகுத்தறிவு பகலவன்.
அதே! ஈ காயின் பறைஞ்சது ரைட்டாகும் என்றது ஒரு கும்தா மலையாள பெண் சிப்பாய்.

பிறகு சிப்பாய்கள் போர் நிறுத்தம் அறிவித்து, என்ன செய்யலாம் என்று வட்டமேஜை மாநாடு நடத்தின.அவைகளுக்கு இதிலும் மாற்று தேவை என்று பட்டது.
காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் ஒரு காபி  ஒவ்வொரு செஸ் காயினிடமும் வழங்கப்பட்டது.
கூடவே நியூட்ராலிட்டி பிட்வீன் இந்தியா அண்டு பாகிஸ்தான்-தி talks என்றொரு கையேடும் வழங்கப்பட்டது.

எல்லா காயின்களும் அகிம்சையே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தன.இவ்வளவு நாள் போரில் அடிபட்டு அடிபட்டு இறந்த “வெட்டுப்புலி” காயின்களுக்கு பேச்சுவார்த்தை என்பது ஜாலியாகவும் ரிலாக்ஸேஷனாகவும் இருந்தது.அதனால் போர் புரியாமல் பேச்சு போர் நடத்தலாம் என்று முடிவெடுத்துக்கொண்டன.

யாருக்கும் காயம் ஏற்பட போவதில்லை.எல்லாரும் நடுவில் வரும் மரணம் இல்லாமல் பெருமித பெரு வாழ்வு வாழலாம் என இன்பமாய் வழிமொழிந்தன.
இருப்பினும் ஒரு ஆர்வக்கோளாறு சிப்பாய்
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
என்று வள்ளுவரை துணைக்கிழுத்து வம்பிழுத்தது.அந்த காயின் பின் இருந்த யானை காயின் பெரும் பிளிறல் பிளிறி “என்னமா அங்க சத்தம்?” என்றது.
குட்டி சிப்பாய் காயின் நடுநடுங்கி “பேசிட்டு இருக்கேன் மாமா!” என்று பம்மியது.

சரி ஆரம்பம் பூகம்பம் என்று காயின்கள் ராஜா பக்கமும் ராணி பக்கமும் பிரிந்து வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தன.அதை நீயா நானா கோபிநாத்தே பெருமைப்படும் அளவிற்கு ஒரு காயின் கோட்டு போட்டு கொண்டு பக்காவாக நடத்தியது.இடையில் பூச்சி மசாலா வழங்கும் என்று அது ஏதோ பெரிய லிஸ்டை மனதில் வைத்து சொல்லத்தொடங்க, முட்டையையும் தக்காளியையும் தயாராக வைத்திருந்த இதர காயின்கள் சீறி பாய்ந்து அடித்து சின்னாபின்னமாக்கின.கோட்டை பொன்வண்டு சோப் போட்டு துவைத்து, ட்ரைவாஷ் செய்து வந்து மீண்டும் நிகழ்ச்சியை துவக்கியது அந்த காயின்.இந்த தடவை பிராண்டு பெயரை சொல்ல யோசித்தது.கற்களை எடுக்கும் சத்தம் கேட்டதால் “மந்திரிநாத் வழங்கும்
ராஜா வா ராணியா? தொடர்கிறது” என்றது.
விவாதம் கிழி கிழி கிழி என்று கிழிந்தது.காயின்கள் தத்தம் தரப்பிற்காக அடுத்தவர் தரப்பின் கொள்ளு தாத்தா காயின், கொள்ளு பாட்டி காயின் வரை தாக்கி பேசின.
சில காயின்களுக்கு காதில் ரத்தம் வந்தது.வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிங் இன் தி ரயின் பாடிக்கொண்டே மோதிக்கொண்டன.
கொஞ்சம் நேரம் போனவுடன் தான் எல்லாரும் கவனிக்க ஆரம்பித்தனர்.ராஜாவையும் ராணியையும் காணவில்லை.அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
ராஜா காயின்தான் ராணியை கடத்தியிருக்க வேண்டும் என்று எல்லாரும் சந்தேக பட ஆரம்பித்தன.
“அவசரப்பட்டுட்டியே தல!” என்று தங்கள் ராஜாவை கரித்துக்கட்டி கொண்டே ராஜா தரப்பு காயின்கள் கேட் நோக்கி செல்ல ஆரம்பித்தன.எல்லா காயின்களும் கவலையுடன் அவற்றை பின் தொடர்ந்தன.இந்த நிலை தொடர்ந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை உணர்ந்த புத்திசாலி மந்திரி காயின் ஒன்று குறுக்குவெட்டாக பாய்ந்து கேட் முன் நின்று யானைகளை பார்த்து “கேட்டை மூட்றா! த்தா கேட்டை மூட்றா” என்றது.யானைகளும் பிளிறிக்கொண்டே கேட்டை மூடின.

இருந்தாலும் ராஜாவும் ராணியும் என்ன ஆனார்கள்?என்ற ஆவல் ஏற்பட்டது காயின்களுக்கு. வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டன.
எனவே அனைவரின் பிரதிநிதியாக குதிரை காயின் ஓன்றை வெளியே அனுப்பி செய்தியோடு திரும்பி வரும்படி பணிக்கப்பட்டது.
குதிரை காயின் கேட்டை தாண்டி காரிடாரில் குதித்து ஓடியது.ஒரு அறையை அடைந்தது.அதன் வெளியே “do not disturb” என்று எழுதியிருந்தது.
உள்ளே ராணி காயினின் குரல் கேட்டது.
“ராஜா ஐ லவ் யூ! லவ் யூ! ஓ மை காட்.கிவ் மீ மோர்!” என்று திவ்யமாக முனகிக்கொண்டிருந்தது.
குதிரை உண்மையை உணர்ந்து வேகமாக திரும்பி வந்து தன்னை வழியனுப்பிய மந்திரி காயினிடம் விஷயத்தை கனைத்தது.
இரு மந்திரிகளும் “அட போங்கயா! இவங்களை நம்பி பெரும் முடிவுகளையெல்லாம் எடுத்து நாம களத்துல எல்லாம் இறங்குன இப்டி கவுத்துப்புட்டாய்ங்க!” என்று கூட்டத்தை சலிப்போடு கலைத்தது.

ராணியே ராஜாவைவிட ‘ஒரு’ விஷயத்தில் உயர்ந்தது என்பதை ஈகோ இல்லாமல் ஒப்புக்கொண்ட ராஜா ‘ராஜாவாகவும்’ இன்பமாகவே வாழ்ந்தது.ராணியும் ராஜா இன்றி தனக்கு இன்பமில்லை வாழ்வுமில்லை என்பதை உணர்ந்து ஒரே டீமில் மீண்டும் இணைந்தது.ஹனிமூனுக்கு
சென்றிருந்த எதிர் ஜோடி ராஜா ராணி இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்டதும் “நாங்க வரர்துக்குள்ள இவ்வளவு மாற்றங்கள் நடந்துச்சா?” என்று ஆச்சரியமாக கேட்டன.
இந்த உண்மையை முதலிலேயே உணர்ந்ததால்தான் முன்கூட்டியே ஜாலியாக ஹனிமூன் புக் செய்ய முடிந்தது என்று அந்த ராஜா ராணி காயின்கள் தெரிவித்தன.”சாரிங்க நாங்க கொஞ்சம் லேட் பிக்கப்” என்றன நம் ராஜா ராணி காயின்களை ஆசையாக தழுவிக்கொண்டே.

“அடி ஆத்தி! அப்போ நாங்க ரொம்ப லேட் பிக்கப்பு” என்று மற்ற காயின்கள் மீண்டும் கறுப்பு வெள்ளை சண்டையை ஆரம்பித்தன.
அவை முதலில் தூக்கி போட்டு மிதித்தது “தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும்” குறளை சொன்ன காயினைத்தான்.
🙂 😉

கமலின் சில நல்-இணைய முயற்சிகள்

image

தூங்காநகரம் பற்றிய அறிவிப்பு

கமல் ரசிகர்களுக்கு இணைய விருந்து.
முதலில் மைய்யம் வீடியோக்களே கமல் வெறியர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டது.பல நாள் இணைய தொடர்பு அற்றிருந்தது.
இளைய தலைமுறை நடிக நடிகைகள் முகநூல், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என்று தங்கள் ரசிகர்களை ஏங்க விடாமலேயே வைத்து வருகின்றனர்.கமல் எதையும் உலகத்தரத்தில் தானே செய்வார்?
யூ டியூப்பில் ஒரு தனி சேனலையே உருவாக்கி கான்ஸ்டன்டாக தன் நல்முயற்சிகளை இணையம் மூலம் ரசிகர்களை அடையச்செய்கிறார்.
யூ டியூப் சென்று ulaganayagan tube என்று டைப் செய்யுங்கள்.தலைவர் திரையில் மிளிர்வர்.அவரின் திரையுலக நண்பர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் இது வரை கேட்ட/கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.

தன்னை இவ்வாறு இணைய சமூகத்துக்கும் அப்டேட் செய்து மெருகேற்றி கொள்ளும் இன்னொரு நல்முயற்சி அற்றை திங்கள்.இது தனி வீடியோ ப்ளே லிஸ்ட்.
லேட்டஸ்டாக உத்தம வில்லனின் டிலீட்டட் சீன்கள் வரை, படங்களின் மேக்கிங் போன்ற பல சுவையான விடியோக்கள் பகிரப்பட்டிருக்கும்.
ஆர்.சி சக்தி இறப்பதற்கு முன்னரே நல்லவேளையாக இதில் பதிந்துவிட்டார் ஒரு கேள்வி மூலம்.

ஜெயராம், ரமேஷ் அர்விந்த், நாசர், ஷ்ருதி ஹாசன், லிங்குசாமி, ஆர்.சி சக்தி, ரோஹிணி போன்ற கமலுக்கு நெருக்கமான பலரும் இதில் கேள்விகள் கேட்டு நம்மையும் தெளிவு படுத்தியுள்ளனர்.மேலும் பலரும் இந்நல்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.என் ஆசானும் கமலின் நண்பருமாகிய அய்யா திரு.மாலன் அவர்களும் இப்பகுதியில் விரைவில் நம் மனதில் விளைந்திருக்கும் ஒரு கேள்வியை கேட்பாராக! 🙂
மருதநாயகம் என்ன ஆச்சு? அதை எப்படி எடுக்க திட்டமிட்டிருக்கிறார்? என்பதையும் ஒரு விடியோவில் பதிந்திருக்கிறார்.

தன் வருங்கால ஆசைகளாக கமலுக்கு வாம மார்கம்(leftist/agori extreme path) என்ற பிராஜக்ட் உள்ளதை இங்குதான் நான் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு ஹை டெஃபனிஷன் கேமரா கமல் அறையினுள் ரோல் ஆகும்.கமல் கூலாக சோஃபாவில் கைகட்டிக் கொண்டு அமர்ந்திருப்பார்.அங்கிருக்கும் லைட்டிங் மற்றும் ambience அலாதியானது.
இரு கேமராக்கள்- ஒன்று முகத்திற்கு நேராக, மற்றொன்று நம் வலதுபக்கத்திலிருந்து கமலை படம்பிடித்துக்கொண்டிருக்கும்.ஒரு கலர், ஒரு பிளாக் அண்ட் வயிட் ஷேட் எல்லா நினைவுகளையும் ஒன்றாக கிளறுவதற்கு ஒரு அழகிய டெக்னிக் போல!
அவர் அமர்ந்திருக்கும் சோஃபா பின்னே-அது புத்தகமா இல்லை உலக சினிமா ப்ளூ ரேக்களின் தொகுப்பா என்று தெரியாது.ஆனால் ஒரு லைப்ரரி போல அழகாக அடுக்கப்பட்டு கண் கவரும்.
இந்த சூப்பர் சூழலில் அமர்ந்துதான் தன் அடுத்த பிராஜக்ட் பற்றி உலகுக்கு அறிவித்தார் கமல்.
தூங்காவனம்.மதுரை தூங்காநகரம் தெரியும்.ஒரு வனமே தூங்காமல் இருந்தால் எவ்வளவு த்ரில்லிங்கோ அத்தகைய கிளாஸ் த்ரில்லராக அமையும் என்று சூடமடித்து சொல்லலாம்.
இந்த தொகுப்புகளை கே வாய்மொழி(K Vaaimozhi) என்று கூகுளில் டைப்படித்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இது கமல் ரசிகர்கள் சொர்க்கம்.
நீங்களும் போய் ரசியுங்கள்.நம் அனைவருக்குமான உலகநாயகனை!

தாமரையும் கவுதமும்-ஒரு அழகிய தோழமை

image

லிரிக்கல் டிஸ்கஷன்

ஏர் ரஹ்மான், கவுதம் வாசுதேவ் மேனன், தாமரை இந்த காம்போ ஞாபகம் இருக்கா?
விண்ணைத்தாண்டி வருவாயா மியூசிக்கல் மூலம் நம்மை உருக வைத்தவர்கள்.அவர்கள் மீண்டும் இணைந்து தீயாய் வேலை செய்து விட்டார்கள்.
எல்லா கவுதம் படங்களிலும் தாமரையின் அட்டகாசமான லிரிக்கல் டச் உண்டு.
“துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே?”

இந்த வாரணம் ஆயிர அழகுதான் தாமரை.வைரமுத்துவுக்கு சற்றும் சளைக்காத பெண் கவிஞர்.
என்னை அறிந்தால் படத்தில் மாஸ் லிரிக்ஸ்.இந்த சாம்பிள்களை பாருங்கள்.

“கடிகாரம் பார்த்தல் தவறு-நொடிமுள்ளாய் மட்டும் நகரு”

“உனக்கென்ன வேணும் சொல்லு!
உலகத்தை காட்டச் சொல்லு!
பிடித்ததை வாங்கச் சொல்லு!
வெறுப்பதை நீங்கச் சொல்லு!
புது இடம் புது வானம் தேடி பார்ப்போமே!”

“உலகெனும் பரமபதம்
விடிந்ததும் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது
பார்க்க போறோமே!”

“பருவங்கள் ஓடிவிட
உருவங்கள் மாறிவிட
இழந்த என் இனிமைகளை
உன்னில் கண்டேனே!”

இது லேட்டஸ்ட் மட்டுமே.நடுவில் தன் கணவருடனான பாசப்போராட்டத்தில் சற்றே களைத்திருந்த தாமரை மறுபடியும் பேக் டூ முழு ஃபார்ம் என்று எதிர்ப்பார்க்கலாம்.

விடிவியில் திருக்குறளையே அழகாக மன்னிப்பாயா வரிகளில் சேர்த்திருப்பார்.தமிழை இப்படித்தான் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க முடியும்.நாம் முணுமுணுக்கும் பாடல்களின் ஊடாக.

அஞ்சலை, மஞ்சள் வெயில் மறையுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, கண்ணுக்குள் கண்ணை, ஓமணப்பெண்ணே, ஏத்தி ஏத்தி, நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே, பார்த்த முதல் நாளே, கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே, உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா, உன் சிரிப்பினில், கற்க கற்க கள்ளம் கற்க எவ்வளவு ஹிட்ஸ்.எவ்வளவு உள்ளம் கவரல்கள்?

கவுதம் என்றாலே பாடல்தான்.அந்த பாடல் என்றாலே அவரது முதுகெலும்பு தோழியான தாமரைதான்.
கூடவே அவ்வப்போது இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ் என்று இசையமைப்பாளர்கள் மாறினாலும், பாடக பாடகிகள் மாறினாலும் கவுதமின் இசை டீமில் மாறாத ஓர் கான்ஸ்டன்ட் அங்கம் தாமரை.ஒரு அற்புதமான மனுஷி.பிரில்லியண்ட் ஹிட் ஃபேக்டர்.

ராணி ருத்ரம்மா தேவி

image

ராணிக்கான அத்தனை பொருத்தமும் உண்டு

அனுஷ்காவுக்கும் வரலாற்று, திகில், பிரம்மாண்ட மசாலா திரைப்பட கதைகளுக்கும் பயங்கர கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜூவாலஜி எல்லாம்.
அருந்ததி பொம்மாயியாக ஆந்திராவையும் டப்பிங்கில் தமிழ்நாட்டையும் அலறடித்து ட்ரெண்ட் கிரியேட் செய்தார்.
ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெட் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் ஆக்ஸன் கியூன் விஜயஷாந்தி தான்.அதனால் பல ஹீரோயின்கள் தங்களை மையமாக வைத்து படமெடுக்கும்போது விஜயஷாந்தியை மட்டுமே ஞாபகம் வைத்து இயக்குநர்களை பயமுறுத்தி டார்ச்சர் செய்துவந்தனர்.

அதன் விளைவாக தியேட்டரிலும் ஆடியன்ஸ் டென்ஷனடைந்து மண்டையை பிய்த்து கொண்டனர்.
இதிலிருந்து விலகி-ஹீரோயினுக்கான ஸ்பேஸையும் முழுமையாக கதாநாயகியாக ஆக்கிரமித்து அதே சமயம் இயக்குநர், ரசிகர் மனங்களிலும் இடம் பிடித்து புது ரூட்டை ஆரம்பித்து வைத்த பயனீர் தென்னிந்தியாவிலேயே முதலில் செய்தது அனுஷ்கா மட்டும் தான்.

அதன் பிறகுதான் இன்றைய ராஜாத்திகள் வரை லீடிங் லேடீஸாக வாழ்ந்துவருகின்றனர்.
ரஜினியோடு லிங்கா ஹிட்டடிக்காவிட்டாலும் அனுஷ்கா செம்ம சார்மிங்.அனுஷ்காவால் தான் கிளைமேக்ஸில் பலூன் வெடித்தது.அந்த அளவுக்கு ‘வெயிட்டாக’ இருந்தார் என்று கலாய்ப்பவர்களும் உண்டு.
ஆனால் அனுஷ்கானா ஹைலைட்டே கொழுக் மொழுக்னஸ் கொண்ட அரபி குதிரைத்தனம்தானே?தெலுகு பில்லாவில் ஐஸ்க்ரீம் அனுஷ்காவை டூபீஸில் ரசிக்காதவர்களே கிடையாது.மொபைலா மொபைலா! மாதவனுடனான அந்த பாடலை மறக்க முடியுமா?
அதைபோய் குறையாக சொல்கிறார்கள் மொன்னை வாயன்கள்.
சரி அதை விடுங்க.விஜய்யுடன் “என் உச்சி மண்டைல சுர்ருங்குது” ஒரு பாடல்லேயே குட்டி குட்டி உடைகளோடு தமிழகத்தையே கிறங்கடித்தவர்.சூர்யாவின் சிங்கமில் பக்கா கமர்ஷியல் ஹீராயின்.

காதல் வந்தாலே, என் இதயம் பாடல்களின் மூலமே கிளாமர் என்றாலே அது அனுஷ்கா என்ற நிலை உருவாகி விட்டது.
அடுத்த பிராஜக்டுகள் இந்தியாவையே அசரடிக்கப்போகின்றன.
அருந்ததி 2 கூட லைனில் உண்டு.
பிரபாஸோடு பாகுபலி, சிங்கிள் பெண் சிங்கமாக ராணி ருத்ரம்மா தேவி என்று மிஸ்டிக்கல் வரலாற்று வித்தைகள்.
தனியளாகவே குதிரை ஏற்றம், நாட்டியம், வாள் வீச்சு என நம் பாரம்பரிய கலைகளை கற்று, அதை தன் கலையினால் அழகாக பிரதிபலித்து ஆவணப்படுத்தும் அற்புத கலைஞர் அனுஷ்கா ஷெட்டி.அவரை ஊக்கப்படுத்துவோம் என்றும்.
வாழ்க வளமுடன்.

இன்ஸ்டா தேவதைகள்-3.ஷ்ரத்தா கபூர்

image

கிகிளிஷே கார் செல்ஃபி

தும் ஹி ஹோ பாடலை தெரியாதவர்கள் தான் இந்தியாவில் உண்டா? ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹைதர், ஏபிசிடி 2 என எகிறி அடிக்கும் கிராஃப்.
பொம்மை போன்ற பொண்ணு.அதிரடி ரியாக்ஷன்ஸ். எனக்கு தெரிந்து இதுதான் மிகப்பெரிய இன்ஸ்டா புகைப்பட கட்டுரையாக இருக்கும். ஏனென்றால் எல்லா புகைப்படங்களுமே க்யூட். அள்ள அள்ள திகட்டாத அமிர்தம் போல. எத்தனை எத்தனை விதமான ரியாக்ஷன்கள்? சான்ஸே இல்லை! இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஆராய்ந்ததில் இருந்து நானும் ஒரு ஷ்ரத்தா ரசிகன் ஆகிவிட்டேன். அந்த கியூட் dpக்களின் தொடர்ச்சி இதோ!

image

வருண் தவானுடன் ஃபிலிம்ஃபேர் இதழுக்காக

image

கன்னுகுட்டி என்று தாராளமாக கொஞ்சலாம்

image

தற்போதைய dp

image

ஏபிசிடி 2 பட வைரல் போஸ்டர்

image

நம்மள கரெக்ட் பண்றாங்களாமாம்!

image

என்னாமா ரியாக்ஷன் குடுக்குது பா இந்த பொண்ணு?

image

வழக்கம்போல ஒரு கேக் ஃபேஷியல்

image

அப்பாவுடன்

image

தன் தாத்தாவுடன்

image

பிங்க் கார்ஜியஸ்

image

டப்பூ ரத்னானி ஃபோட்டோ ஷூட்டிற்காக போஸ்

image

ரெமோ டீ சூஸா குழுவினருடன்

image

'ஷார்ட்' க்யூட்டி

image

காஷ்மீர ரோஜா

image

ஏய் ரவுடி பொண்ணு

image

பைக் ரைடிங்

image

கராத்தே ஜாக்கிரதை

image

லதா மங்கேஷ்கருடன்

image

வோக் இதழை அலங்கரிக்கும் ஷ்ரத்தா

image

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில்

image

குட்டி ஷ்ரத்தா

image

ஆழியிலே முக்குளிக்கும் அழகே

image

சிம்ப்ளி மேஜிக்கல்

image

இருமா ஒரு பொசிஷன்ல போய் நின்னுக்குறேன் 😉

image

க்ஷண நேர சிற்பம்

image

தென்கொரிய உணவுகளை ஒரு பிடி பிடிக்கையில்

image

ஏக் வில்லன் போஸ்

image

ஜிக்யூ இதழுக்காக அழகிய ஷ்ரத்தா

image

சிம்பிள் பியூட்டி

image

ரேம்ப்பில் பூனை நடை

image

அவார்டுடன் 🙂

இந்த மாபெரும் ஷ்ரத்தா இன்ஸ்டா கலெக்டிவ்வோடு டாடா டூ ஆல் தமிழாஸ் அண்டு தமிழச்சிஸ் வோர்ல்டு வைட்.
❤ 😉

RK நகர்

image

டிராஃபிக்கார் முழு யூனிஃபார்முடன்!

1.ஆர்கே நகரா?
2.ராதாகிருஷ்ணன் நகர்?
3.எங்கப்பா இருக்குது?
4.ஓ இப்போ சம்பந்தமே இல்லாம ஒரு அமைச்சர் ராஜினாமா பண்ணாரே!அதுவா?
5.நம்ம சிஎம் அங்கதான நிக்கறாங்க?
6.பாவம் யா இந்த டிராபிக் ராமசாமி! இந்த வயசுல யார் அவரை தேர்தல்லலாம் நின்னு கஷ்டப்பட சொன்னது?
7.எப்படியும் கம்யூனிஸ்ட்ங்க டெபாஸிட்டை எழக்க போறாங்க.எதுக்கு இந்த வெட்டி வீராப்பு?
8.அதிமுக காசே தராம ஜெயிக்க போகுது.ஜனங்க பாவம் இல்ல?
9.திமுக சரியான தொடைநடுங்கிக பா..அம்மாவை எதிர்த்து நிக்க திராணி இல்ல பாத்தீங்களா?
10.போங்க தம்பி! எப்டியும் அந்தம்மாவும் அமைச்சர்களும் ஒட்டுமொத்த ஆளுங்கட்சி பலத்தையும் திருவரங்கம் ஃபார்முலாவையும் யூஸ் பண்ணி ஜெயிக்க போறாங்க.இதுக்கு எதுக்கு நாங்க தேவையில்லாம எங்க கட்சிக்காரங்க டயத்தையும் பணத்தையும் விரயமாக்கிக்கிட்டு?
11.ஊழலுக்கு எதிரா என்னால கோஷம் எழுப்ப முடியும்.நேர்மையா போராட முடியும்.அந்தம்மையாரால முடியுமா?
12.ஊழல் மட்டும் நாட்ல பிரச்னை இல்லை.இந்த தொகுதியில எங்களுக்கு அலுவலகம் இல்ல, மக்களுக்கு தண்ணி பம்ப்ல சாக்கடை கலந்து வருது.இதையெல்லாம் சரிபண்ணாத இதெல்லாம் ஒரு அரசாங்கமா?
13.அதிமுக வா? அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுப்பா! எங்க ஓட்டு என்னிக்கும் இரட்டை இலைக்கு தான்.ஏண்டி! இரட்டை இலைனா அதிமுக வா?
14.நாங்க வாத்தியார் காலத்துல இருந்தே இலைக்கு தாம்ப்பா ஓட்டு.அவர் யாரு டிராபிக் இன்ஸ்பெக்டரா?
15.அந்தம்மாவுக்கு எங்க ஓட்டு.இவ்ளோ நாள் மாறாத எங்க பிரச்னை இப்ப மட்டுமா மாறப்போகுது.இருந்தாலும் அவங்க ஏதாவது செய்ய மாட்டாங்களா? பாப்போம்.

இன்ஸ்டா தேவதைகள்-2.பூனம் பாண்டே

image

கடந்த வருட பிறந்தநாள்

மன்னிக்கவும்: இங்கு நீங்கள் நினைப்பது போல ஒரு ‘வழக்கமான’ பூனம் பாண்டே புகைப்படம் கூட இடம்பெறாது.இது அவரின் குழந்தைத்தனமான புகைப்படங்களுக்கான ஸ்பேஸ் மட்டும்.பாரதி உருவம் லோகோவாக வைத்துக்கொண்டு புதுமைப்பெண்களை கேவலமாக சித்தரித்து, அவர்களை விமர்சிக்கும் இடம் இதுவல்ல.இது வெறும் அன்ன பட்சி போன்ற நல் அழகியலின் ஆராதனை.
இவர் பெரிய நடிகை இல்லை.ஆனால் வைரல் பிரபலம்.ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்கள்.காரணம் இவரின் அதிரடி நடவடிக்கைகள்.

image

நெர்ட் லுக்

இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஆராய்ந்து நான் இங்கே கொடுத்துள்ள புகைப்படங்களில் மட்டும்தான் அவர் துணி உடுத்தியுள்ளார்.மற்ற எல்லாமே நியூட் அல்லது செமி நியூட் அல்லது பிகினி.அதை தவறு/சரி என்று ஜட்ஜ் செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை.
ஏனெனில் சமூகத்தின் மனநிலையை தான் அவர் பிரதிபலிக்கிறார்.இந்தியா போன்ற “காய்ந்து போன” ஹிப்போகிரிட்டிக்கல் சமூகத்தில் இவரை ஆண்கள் ரசிக்கின்றனர்.அதே சமயம் ரசித்துவிட்டு முக்காடு போட்டுக்கொண்டு அவரது கேரக்டரை கேவலமாக assassinate செய்கின்றனர்.
அதானாலோ என்னவோ பூனம் புனிதம் பற்றியெல்லாம் கவலைப்படுதில்லை.இந்த கன்சர்வேட்டிவ் இந்தியன் சொசைட்டி என்று அழைக்கப்படும் ஆண்கள் எல்லோரும் நேரில் பெண்களை கேரக்டர் வைத்து விமர்சிப்பவர்களாகவும், மறைமுகத்தில் அவர்களை ரசிப்பவர்களுமான இரட்டை முகமூடி அணிபவர்கள்.இதனால் இந்த யோக்கியர்கள் பூனம் பாண்டேவை ஒரு slut என்று சொல்வதோ/கடவுள் என வர்ணிப்பதோ அபத்தமானது.

image

நிழல்கள்

இந்தியா உலக கோப்பையை ஜெயித்தால் முழு நிர்வாணமாக மீடியாக்களுக்கு போஸ் கொடுக்க ரெடி என்று சர்ச்சையை கிளப்பி 2011ல் லைம்லைட்டுக்கு வந்தவர் பூனம்.
அவர் புத்திசாலி.அதற்கு ஆசைப்பட்டு ஏமாந்தவர்களே முட்டாள்கள்.
சன்னி லியோனோ, பூனம் பாண்டேவோ இந்திய /உலக ஆண்களின் பிரதிபலிப்பே அவர்கள்.
அவர்களை குறை சொல்ல வேண்டுமானால் ஒரு யோக்கியன் கூட கிடைக்கமாட்டான்.அப்புறம் ஏன் இந்த டபுள் கேம்?
போங்கடா போய் புள்ளகுட்டிகள போய் படிக்க வைங்க டா.
இனி கேலரி மட்டுமே.

image

கார் செல்ஃபி

image

ஃபிரீ ஸ்டைல் ஹேர்

image

கூலர்ஸ் கெத்து

image

சில்க் போன்ற ஸ்டைல்

image

நாய்க்குட்டியுடன் விளையாட்டு

image

அழகு பதுமை

image

போன வருட பர்த் டே

பின்குறிப்பு: தன்னை பற்றிய மிக கேவலமான விமர்சனங்களையே தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ளார்.அந்த அளவுக்கு தில்லுக்காரி.
தயவு செய்து இவர் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு கீழே இருக்கும் உலக ஆண்களின் கமெண்டுகளை படித்து விடாதீர்கள்.எழுத்தில் கொண்டுவர முடியாத அளவிற்கு அசிங்கமாக இருக்கும்.அப்புறம் எப்படி இவர்கள் அவளை நல்லவளா கெட்டவளா என்று நிர்ணயிக்கலாம்?
ஓ! அப்ப நீ என்ன பெரிய நியாயவானா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.நான் அவ்வளவு நியாயவான் கிடையாதுதான்.ஆனால் அவ்வளவு கீழ்த்தரமானவனும் கிடையாது.அந்த புரிதல் என்னிடத்தில் எப்பொழுதும் இருந்திக்கிறது.இது நான் உங்களை நல்லவர்களாக மாறுங்கடா என்று போதிக்கும் இடம் கிடையாது.அப்படி யாரும் யாரையும் போதிக்கவும் முடியாது.
இன்னொரு ஜீவனை தேவையில்லாமல் அவர் உடுத்தும் உடை கொண்டும், அவர் உடல்கொண்டு மட்டும் மட்டப்படுத்தாதீர்கள் என்று மட்டும் நிச்சயமாக இங்கே என்னால் பதிவு செய்ய முடியும்.
நன்றி. வாழ்க பாரதம்.வளர்க மனிதம்.