மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்தினை கேட்டபொழுது அவர்கள் சொன்ன பதில்கள்

மாவட்டம்: திருவண்ணாமலை
பெயர் : குமார்
தொழில்: விவசாயி
சங்கம் : திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு

புதிய தலைமுறை:விவசாயிகளை பொறுத்தவரை சமீபத்திய அரசின் இந்த மின் கட்டண உயர்வானது எப்படி பார்க்கப்படுகிறது?

குமார்: “சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த மின் கட்டண உயர்வு குறித்து பெரிதாக கவலை இல்லை.ஏனென்றால் அவர்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் மின் மோட்டர்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.இந்த நிலை தொடரும் வரை பெரிதாக ஒரு பாதிப்பும் இருக்க போவதில்லை.இந்த பெரு விவசாயிகளில் சிலர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அவர்கள் மோட்டாரின் குதிரைத்திறன் கு ஏற்ப குறிப்பிட்ட தொகை செலுத்தி வருகின்றனர்.இவர்களை தவிர மற்ற பெரும்பாலான விவசாயிகள் மின் கட்டண உயர்விலிருந்து பாதுகாக்கப்பட்டே இருக்கிறார்கள். ”

மாவட்டம்:திருவண்ணாமலை
பெயர்: ராஜன்
தொழில் வகை: சிறுதொழில் முனைவோர்–தையல் தொழிலாளி
சங்கம்:திருவண்ணாமலை தையல் தொழிலாளர் கூட்டமைப்பு

புதிய தலைமுறை: சமீபத்திய மின் கட்டண உயர்வை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ராஜன்: “கடந்த பல ஆண்டுகளாக இந்த தொழில் செஞ்சிகிட்டு வர்றேன்.ஆரம்பத்துல இருந்து மின் தையல் எந்திரம் வச்சி தான் தச்சிகிட்டு இருந்தேன்.வேலையும் நேர்த்தியா, விரைவா சுலபமா இருந்துச்சு.இப்போ இந்த மின் கட்டண உயர்வால மேனுவல் எந்திரத்துக்கு மாறவேண்டிய நிலைமை.அரசாங்கம் மின் கட்டணத்த அப்பப்போ உயர்த்திதான் ஆகனும் கிற விவரம் புரிஞ்சாலும் ஒரேயடியாக பதினைந்து சதவிகிதம் உயர்ந்துள்ளது. படிபடியா உயர்த்தி இருந்தா பரவாயில்லைனு தோணுது.இதனால என்னை போன்ற தையல் தொழிலாளிங்களோட வாழ்வாதாரமும், வருமானமும் கடுமையா பாதிக்கப்படும்.தயவு செஞ்சு அரசு படிப்படியாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்னு கேட்டுகிர்றேன்”

ராஜன்-தையல் தொழிலாளி

ராஜன்-தையல் தொழிலாளி

மாவட்டம்:திருவண்ணாமலை
பெயர் : கண்ணன்
தொழில்: ரைஸ் மில் முதலாளி
சங்கம் : திருவண்ணாமலை நகர் அரவை ஆலைகள் கூட்டமைப்பு

புதிய தலைமுறை: எந்த அளவுக்கு சமீபத்திய மின் கட்டண உயர்வு உங்களைப் போல தொழில் செய்பவர்களை பாதித்து இருக்கு??

கண்ணன்: “மிகப்பெரிய பாதிப்பு தான் ஏற்பட்டிருக்குனு

கண்ணன்-ரைஸ் மில் முதலாளி

கண்ணன்-ரைஸ் மில் முதலாளி

சொல்லனும்.அரசை பொறுத்த வரை மின் தயாரிப்பு, பகிர்வு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முழுக்க முழுக்க மின்சாரத்தையே நம்பி தொழில் செய்யறவங்க வயித்துல இது ஒரு மிகப் பெரிய இடியாதான் விழுந்திருக்குனு சொல்லனும்.ஒவ்வொரு யூனிட்டுக்கும் நாங்க கட்டற கூடுதல் தொகை எங்க வருமானத்துல விழப்போற அடி தான்.தொழிலாளர்கள் சம்பளத்திலயும் கை வைக்க முடியாது.என்ன செய்யறதுனு தெரியாம திண்டாடிட்டு இருக்கோம்.எங்களுக்கு ஒரு வழி ஏற்படுத்துங்க”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s