அதிசய ஆச்சர்ய மனிதர்கள்

1.திருக்கோவிலூர்(விழுப்புரம் மாவட்டம்)

நெஞ்சு வலியிலும் மக்கள் உயிரை காப்பாற்றி மரணித்த மனித நேயமிக்க டிரைவர்:

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரத்திற்கு வழக்கமாக செல்வதுபோல் தனியார் பேருந்து கிளம்பியது.இதை ஓட்டிச்சென்ற டிரைவர் ஏழுமலை சுமார் 45 வயதுக்காரர். திருவெண்ணைநல்லூர் பேருந்து நிறுத்தத்தை அடையும் பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட வலியில் துடிதுடித்திருக்கிறார்.இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரினை காக்க முற்பட்ட அவர், பிரேக் அடித்து அங்குள்ள சுவர் ஒன்றின் மீது லேசாக மோதி பேருந்தை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் மேல் மூர்ச்சையானார்.அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்ற மக்களிடம் அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.தான் இறக்கும் தருவாயிலும் தன்னை நம்பி ஏறிய பயணிகளின் உயிரை தன்னுயிரினும் மேலாக நினைத்து காத்த அந்த டிரைவரின் மறைவால் அங்குள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பின்குறிப்பு:இந்த தகவலை அந்த வழியாக பிற பேருந்துகளில் பயணித்து திருவண்ணாமலை வந்த பயணிகள் தெரிவித்தனர்.புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை

2.திருவண்ணாமலை மயான கொள்ளை திருவிழா..

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி(புதன்கிழமை) மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.இது வடமாவட்டங்களில் மட்டுமே நடக்கும் விசித்திரமான விழாவாகும்.
இதில் மக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சுடுகாட்டிற்கு செல்வர்.அங்கு முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று வழிபட்டு நவதானியங்களை சூறையாடுவர்.இது ஒவ்வொரு வருடம் மாசி மாத அமாவாசையின் போதும் நடைபெறுகின்றது.
இதனை முன்னோர்களுக்கு செய்யும் ஒரு பணிவிடையாக மக்கள் கருதுகின்றனர்.

3.தர்மபுரி–குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்திய மக்கள்

தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் கிராமம் மலைப்பாங்கான பகுதி.இங்கு குரங்குகள் எண்ணிக்கை அதிகம்.மக்களும் குரங்குகளும் ஒன்றுகூடி வாழ்ந்து வரும் அளவிற்கு சகஜமாகிவிட்ட பகுதி.கடந்த 2 மாதம் முன்பு இரு குரங்குகள் மின்சார கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தன.அதில் மின்சாரம் தாக்கி ஆண் குரங்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.இதனை கண்ட நெருப்பூர் பொதுமக்கள் கடும் துன்பம் அடைந்தனர்.இயற்கையுடன் இணைந்து வாழும் இவர்கள், அந்த குரங்கிற்கு மனிதர்களுக்கு செய்வது போலவே சடங்குகள் செய்து பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.அஙகு அந்த நாள் முழுவதும் துக்கம் அனுசரிக்க பட்டது.

4.திருவண்ணாமலையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பொழுது ஓரிடத்தில் மேளச்சத்தமும் மக்கள் கூட்டமும் குவிந்திருந்தது.என்னவென்று கவனித்த பொழுது ஒரு வெளிநாட்டு பயணியும் அவரை சுற்றி நான்கு பேரும் ஆடிக்கொண்டிருந்தனர்.மேளதாளத்திற்கேற்ப அவரும் ஆட அது ஒரு இறுதி ஊர்வலம் என்று புரிந்தது.அவரை ஓரம்கட்டி எதற்காக இந்த இறுதி ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது தன் பெயர் டாம்.வெலிங்டனில் இருந்து வந்திருப்பதாகவும், உலகின் பல பகுதிகளுக்கு சென்றிருந்தாலும் இந்தியா தன்னை வெகுவாக கவர்ந்து விட்டது என கூறினார்.இறப்பை கூட மனதார ஏற்று திருவிழா போல கொண்டாடும் மனநிலை இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது என்று ஆச்சரியப்பட்டார்.அதே சமயம் இந்தியா மேலும் தூய்மை பெற வேண்டும் என விரும்பவதாக கூறினார்.தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி இவர் கேள்விப்பட்டிருக்கிறாரா?விடை பெற்றோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s