திருவள்ளுவர் பல்கலைகழக கணினி மயமாக்கப்பட்ட தேர்வுமுறை:

வேலூர்  மாவட்டம்  சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான  திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள 110க்கும் மேற்பட்ட கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தலைமையகம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஒரு பெரும் தேக்கநிலை நீடித்து வந்தது.நான்கரை லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படாமல்  நிலுவையில் இருந்தன.திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு நிர்வாகம் சீரின்மை என்று தினசரிகள் எழுதி வந்தன.தினமும் 5000 மாணவர்கள் குறைதீர்வு கேட்டு படியேறி வந்தனர்.இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று நிலைமை என்ன?

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,சேர்க்காடு,வேலூர்  மாவட்டம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,சேர்க்காடு,வேலூர் மாவட்டம்

நிலுவையில் இருந்த மதிபெண் சான்றிதழ்கள் எல்லாமே வழங்கப்பட்டுவிட்டன.இந்த முறை செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதியே ஆரம்பிக்கப்பட்டு சீராக .முடிந்துவிட்டன.ஜூன் முதல் வாரம் ரிசல்ட் என்று அறிவித்தாயிற்று.எல்லா தினசரி ஊடகங்களும் இந்த தேர்வுமுறையை முன்மாதிரி  என்று பாராட்டின.தமிழகத்திலேயே முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட பல்கலைக்கழக தேர்வுமுறையை உடைய அந்தஸ்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எட்டியிருக்கிறது.

நடைமுறையில் இதை சாத்தியமாக்கி காட்டியவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்வுகள் கட்டுபாட்டாளராக (Controller of Examinations-COE) பொறுப்பேற்ற திரு.அசோகன்.புதிய தலைமுறை  அவரை நேரில் சந்தித்தபோது பேசியவை இதோ.

திரு.அசோகன்,COE

திரு.அசோகன்,COE

******************

“இரு ஆண்டுகளுக்கு முன்பு  நான் பொறுப்பேற்ற போது,8 லட்சம் பேர் தேர்வு எழுதும் இந்த பல்கலை தேர்வுமுறையில் ஏகப்பட்ட ஏற்றதாழ்வுகள் இருந்தன.வெறும் 10 பேர் கொண்ட பணியாளர் குழு இவ்வளவு பெரிய தேர்வுகளை நடத்தி வந்தனர்.உண்மையில் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர்.அது மட்டுமின்றி தேர்வுமுறையின் அத்தனை நிலைகளிலும் மனித பிழைகள்(Manual Errors) அதிகமாக இருந்தன.மாணவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர்.ஏற்கனவே  இருக்கும் பிரச்னைகளில் தேர்வுகளை குறித்த நேரத்தில் நடத்த முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

முகப்பு நுழைவாயில்

முகப்பு நுழைவாயில்

அப்பொழுது தூக்கமில்லாமல் நான் தவித்த பல இரவுகளில் இந்த தேர்வுமுறையை முற்றிலுமாக தானியங்கி(Automate) செய்தால் என்ன? என்று தோன்றியது.அதன் தொடர்ச்சியாக

1.தேர்வுக்காக மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளும் தளம்(portal)

2.இன்டர்னல் மதிப்பெண்கள் பதிவேற்றும் முறை

3.செய்முறை(Practicals) தேர்வு மதிபெண் இணைப்பு

4.தேர்வு கட்டணம் செலுத்தும் முறை(DD  எடுக்க முடியாது) ஆன்லைன் மட்டுமே செல்லுபடி ஆகும்

5.ஒவ்வொரு ரிஜஸ்தர் எண்ணுக்கு நிகராக ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பிரத்யேக பார்கோட்-ஸ்கேன் செய்தால் போதும்.மாணவர்கள் தங்களை பற்றிய எந்த விவரத்தையும் தேர்வின் போது எழுத தேவையில்லை.வெறும் பதில்கள் எழுதினால் போதும்!

பார்கோட்

பார்கோட்

6.எத்தனை மாணவர்கள் தேர்வுக்காக பதிவு செய்துள்ளார்கள்,அதில் எவ்வளவு பேர் தேர்வு அறையினுள் நுழைந்து தேர்வு எழுதியிருக்கிறார்கள்? என்பதனை ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு கடவுச்சொல் கொடுத்து,தேர்வு  முடிந்த 10 நிமிடங்களுக்குள் சேகரிக்கும் database

இன்டர்னல் மதிப்பெண்கள் பதிவேற்றும் முறை

இன்டர்னல் மதிப்பெண்கள் பதிவேற்றும் முறை

7.மாணவனின் இறுதி மதிப்பெண்(Final Score) ஒவ்வொரு பாடத்திற்கும் OMR பாக்ஸ் மூலம் உறுதி செய்துகொள்ளும் முறை

8.உடனடியாக ரிசல்ட்

9.ஆப்ஷனல் பாடங்கள் (Elective courses) ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை

என்று  A-Z முற்றிலுமாக கணினி மயமாக்கிவிட்டோம்.இதற்காக ஒரு தனிக்குழுவே இயங்கி வருகிறது

இப்பொழுது எல்லாம் சீராக நடந்து முடிகிறது.மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.ஒவ்வொரு மாணவனுக்கும் இந்த தேர்வுமுறையினால் ஆகும் செலவு 20 ரூபாய் மட்டுமே. இது தமிழகத்திலேயே மிகக்குறைந்த சராசரி செலவு ஆகும்.” என்று விரிவாக விளக்கினார்.

மேலும் கிழிக்க முடியாத(untearable) பேப்பரில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கபட்டு வருகின்றன.கூடிய விரைவில் பேப்பர் பயன்பாட்டை முற்றிலும்  குறைக்க,ஒட்டுமொத்த மதிப்பெண் சான்றிதழ்(Consolidated Marksheetஐ) A4 அளவில், கொண்டுவர ஹைதராபாத்,பெங்களுருவில் உள்ள நிறுவனங்களோடு  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த டிசைன் இந்த வருட இறுதிக்குள் கொண்டுவரப்படும்.இது மட்டுமின்றி மாணவர்களின் குறைகளை உடனுக்குடன் அறிய Online Exam Grievance Redressal Mechanism கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஈ-மெயில் சொடுக்கினால் போதும்.பல்கலைக்கழக படியேற தேவையில்லை.தேர்வுமுறை பற்றிய மாணவர்களின் பிரச்னைகள்,சந்தேகங்கள் உடனடியாக தீர்க்கப்படும். சபாஷ் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.மற்ற  கல்வி நிறுவங்களும் இந்த முறைக்கு மாறலாமே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s