சுஜாதா ரங்கராஜனும் டிராபிக் இராமசாமியும்

சுஜாதா ரங்கராஜன் என்ற எழுத்தாளனின் ஆளுமைக்கு அவர் புத்தகங்கள் மட்டும் முகவரி அல்ல. அவர் வசனங்களும் தான். ஒரு முழு கதையை ஒற்றை வரியில் ஆடியன்ஸூக்கு சொல்ல கூடியவர்.
எ.கா இந்தியன், (முழுமைக்கும்) முதல்வன் படம்

இந்தியன் தாத்தா : வெளிநாட்ல லஞ்சம் இல்லையா?அங்க எப்படி எல்லாரும் நல்லாருக்காங்க?

நிழல்கள் ரவி :அங்கலான் இல்லை னு நினைக்கிறேன்!

இந்தியன் தாத்தா முகத்தில் பளார் பளார் என்று அறைந்துவிட்டு சொல்வார்.

“அங்கெல்லாம் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறுறதுக்கு தான் லஞ்சம். நம்ம நாட்டுல தான் கடமையை செய்யறதுக்கே லஞ்சம்”

‪#‎முதல்வன்‬

CM : எதிர்கட்சிக்கிட்ட எவ்ளோ வாங்குன??
புகழ் : நீங்க எதிர்க்கட்சியா இருந்தா எவ்ளோ கொடுத்திருப்பீங்க?

‪#‎சுஜாதா_ரங்கராஜன்‬ ‪#‎எபிக்‬

இது மூன்று வருடங்களுக்கு முன் எதேச்சையாக நான் எடுத்த புகைப்படம்.அப்பொழுதும் போக்குவரத்தை சீர்செய்து கொண்டுதான் இருந்தார்.இடம் சென்னை உயர்நீதிமன்றம் எதிரில்.அவரிடம் பேசலாம், புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஈர்க்குச்சி நாமம், காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, துறுதுறு நடை, கையில் சில கோப்புகள் வேறு.மதியான நேர அக்கினி நட்சத்திர வெயில் வேறு.இந்த வேகாத வெயிலிலும் அவர் “ராஜாஜி தனக்கு சொன்ன கடமையை” நிறைவேற்றிக்கொண்டிருந்தார். கொள்கையில் விடாப்படி என்பது அவரிடம் நடைமுறையிலேயே காணப்பட்டது. சிறிது அங்கேயே நின்றிருந்தேன்.எனக்கோ வியர்த்து கொட்டியது.நான் செல்ல வேண்டிய பேருந்தும் வந்துவிட்டது.அடுத்த பேருந்தில் சென்றிருக்கலாம்தான்.ஆனால் வெப்பம் தாங்காமல் ஏறினேன்.ஜன்னல் வழியே மறுபடி எட்டிப் பார்த்தேன்.ஆள் நகரவே இல்லை. அங்கேயே தான் நின்று ஒரு கோப்பில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

‪#‎டிராபிக்இராமசாமி‬

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s