EECP technology-அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை

இதயம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் தனக்கு இருப்பதாக தெரிந்தால் வாழ்வில் பல மனிதர்கள் நொறுங்கி போவார்கள்.வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி துயரம் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.இதய வலி ஒரு புறம் என்றால்,அந்த குறையை நீக்கும் அறுவை சிகிச்சையின் மீதான பயம் இன்னொரு புறம் அவர்களை வாட்டும்.இதற்கெல்லாம் மாற்றே இல்லையா? என்று பலரும் யோசித்திருக்க மாற்று உண்டு என்று பதிலளிதிருக்கிறது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை.அதுவும்,முற்றிலும் இலவசமாக.இந்த அரிய தகவலை கேள்விபட்டதும் புதிய தலைமுறை அடுக்கம்பாறை விரைந்து அங்குள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.சபாபதியை நேரில் அணுகியது. அவருடன் நடைபெற்ற வெகு சுவாரஸ்யமான,உயிர்களை வலியின்றி காக்ககூடிய உரையாடல் இதோ.

டாக்டர்.சபாபதி,இதய அறுவை சிகிச்சை நிபுணர்

டாக்டர்.சபாபதி,இதய அறுவை சிகிச்சை நிபுணர்

*************

புதிய தலைமுறை:”EECP என்றால் என்ன? இதை பற்றி விளக்குங்கள்?”

டாக்டர்.சபாபதி:”சுருங்க புரியும்படி சொல்வதென்றால் முதலில் Angina பற்றி நீங்கள் எளிமையாக அறிய வேண்டும்.ஊருக்கே படியளந்தாலும் செல்வம் உள்ளவரை மட்டுமே ஒருவன் வள்ளல்.இது நம் இதயத்திற்கும் பொருந்தும்.உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் வழங்குகிறது.ஆனால் சில காரணங்களினால் இதயத்திற்கே செல்லும் ரத்தம் நின்றுவிட்டால்?அதுதான் Angina. இது நாள் வரையில் இவ்வாறு இதயத்திற்கு ஏற்படும் இந்த நோயை களைய அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வந்தது.அறுவை சிகிச்சை மூலமே இதனை தீர்த்துவிடலாம்.

புதிய தலைமுறை: “பின் இந்த EECP சிகிச்சை முறை யாருக்கு பொருந்தும்?”

டாக்டர்.சபாபதி: மூன்று விதமான மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை ஒத்துவராது.

1.உடலளவில் தகுதி இல்லாதவர்கள்-அறுவை சிகிச்சையை தாங்குவதற்கு குறைந்தபட்ச உடல் வலுவாவது தேவைப்படுகிறது.இது இல்லாவிடில் ஆஞ்சியோ பலனளிக்காது.

2.மனதளவில் தயாராகதவர்கள்-(LACK OF WILLINGNESS TO UNDERGO INVASIVE SURGERY) இவர்கள் ஊடுருவும் சிகிச்சையை விரும்ப மாட்டார்கள்.

3.RHF-(Refractory Heart Failure) நோயாளிகள்.அதாவது அறுவை சிகிச்சை மனதளவிலும்,உடலளவிலும் துணிந்து அறுவை சிகிச்சை செய்தும் அந்த சிகிச்சை பலன் தாராது  தோல்வியில் முடிந்தவர்கள்.அவர்களுக்கு மீண்டும் வலி பிறக்கும்.

EECP என்பது இத்தகையவர்களுக்கான மிகச்சிறந்த மாற்று.ஊடுருவல் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை.

EECP Explanation Chart

EECP Explanation Chart

புதிய தலைமுறை:”EECP எவ்வாறு இயங்குகிறது?”

டாக்டர்.சபாபதி:” நீங்கள் ஒரேயொரு கோட்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.அது இதுதான் Compressive Periphery to Expansive Heart. அதாவது வெளிப்புற ரத்த நாளங்களான கை,கால்களிலுள்ள ரத்தத்தை பம்ப் செய்து இதயம் விரிவடைந்திருக்கும் நேரத்தில் அதன் உள்செலுத்துகிறோம்.இதற்கு ஒருவரின் ECG யினை எடுத்து இந்த EECP கருவியினுள் புகட்டி விட்டால்,அது ஒரு உள்ளீடாக(input) செயல்படும்.அதனை கம்பேர் செய்து,நோயாளியின் இதய செயல்பாட்டிற்கு தகுந்தவாறு,தேவையான அதிர்வலைகளை(Counter pulsations) துல்லியமாக,வெளியிலிருந்தே(external) நம்மால் செலுத்த இயல்கிறது.இதனால் அவரது ரத்த ஓட்டம் சீரடைந்து இருதய செயல்பாடும் மேம்படுகின்றது.

Compressive Periphery to Expansive Heart கோட்பாடு

Compressive Periphery to Expansive Heart கோட்பாடு

புதிய தலைமுறை:” இந்த முறைக்கு மயக்க மருந்து தேவையா?எத்தனை நாட்கள் இந்த சிகிச்சை நீடிக்கும்?”

டாக்டர்.சபாபதி: “மயக்க மருந்து தேவையில்லை.தினமும் ஒரு மணி நேரம்,35 நாட்கள் செய்ய வேண்டும்.”

புதிய தலைமுறை: “35 நாட்கள்  என்ற கால வரையறை எதனால் ஏற்பட்டது?அதன் பின்பு?”

டாக்டர்.சபாபதி: “35 நாட்கள் என்பது மருத்துவ ஆராய்ச்சிகளின் படி நிரூபிக்கப்பட்ட சீர்மிகு இதய செயல்பாட்டினை EECP மூலம் கொண்டு வருவதற்கான கால வரையறை.

புதிய தலைமுறை:”இந்த திட்டத்திற்கான செலவினங்கள் என்ன?இதனை பயனாளிகள் எவ்வாறு பெறலாம்?”

டாக்டர்.சபாபதி: “ஒரு கருவியின் விலை 80 லட்சம் ருபாய் ஆகும்.தற்பொழுது ஒரு நாளைக்கு 10 இருதய நோயாளிகள் பயன்படுத்துகின்றனர்.முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் அட்டைதாரர்களாக உள்ளவர்கள் இதில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.வெளியில் ஒரு கோர்சுக்கே ஆயிரக்கணக்கில் செலவாகும்.”

EECP Important Parameters display mechanism

EECP Important Parameters display mechanism

புதிய தலைமுறை:” இந்த சிகிச்சையின் பலன்கள் எவ்வாறு உள்ளன?யார் யாருக்கு இது செய்யக்கூடாது?”

டாக்டர்.சபாபதி:” மூச்சுத்திணறல்(shortness of breath) மிக அதிமாக உள்ளவர்களுக்கு இந்த முறை சரிப்படாது.ஆனால் இது அரிதான வகையினர் தான்.கால்களில்  புண்ணோ உடைவோ சிகிச்சை எடுக்கும்பொழுது ஏற்பட்டிருக்கக் கூடாது.

இந்த சிகிச்சையின் வெற்றி விகிதம் மிக அதிகம்.வலி குறைந்து நல்ல மாற்றங்கள் தென்படுகின்றன.அறுவை சிகிச்சையில்லாத இந்த EECP முறை இருதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்வேன்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s