கலைஞரும் கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும்

கையில் தமிழ் கீபேட் இருப்பதை தவிர தலைவர் கலைஞரை வாழ்த்துகின்ற ஒரு capacityயும் எனக்கு கிடையாது.
கொஞ்சம் நாள்(3 மாதம் முன்) முன்னர் அவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது.
அதில் அவர் எழுதிய அணில் குஞ்சு என்ற ஒரு சிறுகதையை படித்து படித்து கண்ணீர் வடித்தேன்.

anna centenary

நான் செத்தாலும் அடுத்த ஜென்மத்திலும் அந்த கதை ஞாபகம் இருக்கும்.சகிப்புத்தன்மையை அதைவிட சரியாக யாரும் சொல்லிவிட முடியாது.
இந்த கலைஞரை திட்டுவது என்பது பலருக்கு ஒரு ஃபேஷன். அது பல காரணங்களுக்காக இருக்கலாம். பாவம் அவரை திட்டாமல் இங்கு அரசியலோ சமூக விவாதமோ நடவாது.

ஆனால் தமிழக வரலாற்றில் ஒரு அசைக்கமுடியாத பெயர் மு.கருணாநிதி.

kotturpuram

கலைஞர் ஐயா மேல நிறைய பேருக்கு அரசியல் வேறுபாடு இருக்கும்.
ஆனா அவர் செய்த மறுக்க முடியாத சாதனைகளில் ஒன்று இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்.
அதன் அத்தனை தளங்களிலும் ஏறி இறங்கி மெய் மறந்திருக்கிறேன்.

featured image
ஒரு நாள் முழுக்க கல்லூரியை பங்க் செய்துவிட்டு நூலகத்திலேயே இருந்தேன்.
அவ்வளவு பிடித்துவிட்டது.அங்கு இல்லாத நூல்களே இல்லை. இருக்கைகள் மெது மெதுகடல்கள். கையில் இறையன்பு சாரின் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு சோபா கடலில் மூழ்கிவிட்டேன்.

Grandest library on earth

Grandest library on earth


400க்கும் கூடுதலான பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை முக்கால்வாசி சரசரவென வாசித்து முடித்துவிட்டேன்.அதிநவீன கணினிகள் அங்கங்கே ஸ்டாண்ட் பொறுத்தி நிற்கவைக்கபட்டிருந்தன.

Architecture

Architecture


அந்த வுடன் ப்ளோரிங், ஏஸ்தெடிக் லைட்டிங், சென்டரலைஸ்டு ஏசியின் மென் குளிர் அப்பப்பா..அது ஒரு அலாதியான நிலைக்கு வாசிப்பவரை இட்டுச் செல்லும்.
பார்க்கிங் வசதி, 24X7 கண்காணிப்பு கேமராக்கள்,
போட்டிதேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு தனி செக்ஷன்..பிரம்மாண்டத்தின், பிரமாதத்தின் அடையாளம்அது.அந்த நூலகம் அழியகூடாது.

Aesthetics

Aesthetics

Mini conference hall

Mini conference hall

Racks

Racks


ஒருமுறை அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று வாருங்கள்.அமெரிக்கனெல்லாம் தமிழனின் கனவுகள் முன் துச்சம்.
வாசிப்பவர்களின் சொர்க்கம் அது.
அநத சொர்க்கத்தை வாழவிடுங்கள்.

இன்றைய நிலை

இன்றைய நிலை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s