ஹை ஆன் caffeine

சென்னையில் 4 வருடம் இருந்தபடியால் கையேந்தி பவனிலிருந்து ஓரளவுக்கு எல்லா ரெஸ்டாரண்டுகளுக்கும் பயபுள்ளைக ஒரு தடவையாச்சு சென்றிருப்போம்.அதில் அடையாரில் rain forest,animal kingdom போன்ற இடங்கள் எல்லா கல்லூரி மாணவர்களின் ட்ரீட்டுகளுக்கும் பொதுவான இடமாக இருந்து வந்தது.சுத்த சைவமாக என்னை நானே வற்புறுத்தி வளர்ந்த காரணத்தால் KFC,தலைப்பாகட்டி போன்ற இடங்களுக்கு சென்றதில்லை.சென்றாலும் வீட்டில் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.”உனக்கு பிடிச்சுதுனா சாப்பிடுக்கோ!” என்பது அவர்கள் எண்ணம்.எனக்கு என்னவோ தெரியல..நான் வெஜ்ஜில் அவ்வளவு இன்ட்ரஸ்ட் வரல.ஆம்லேட்,,முட்டை தோசை போன்ற வகையறாக்கள் மட்டும் சுடசுட உள்ளே தள்ளிடுவேன்.ஒரு நாள் நண்பனிடம் பெட்டு கட்டி KFCயில் சிக்கன் சாப்பிட சென்றேன்.ரவூண்டு பாப் கார்ன் சிக்கனை அள்ளி வாயில் போடுவதற்குள் ரெண்டு ஸ்ட்ராபெர்ரி கிரஷர் காலி செய்துவிட்டேன்.அன்று நான் சாப்பிட்டது பாப் கார்ன் சிக்கன் இல்லை.ஸ்ட்ராபெர்ரி சிக்கன்.அதனால் தான் பெட்டில் ஜெயித்தேன்.

சரி high on caffeine விஷயத்திற்கு வருவோம்.அடையாரிலேயே சீப்பான, அதே சமயம் ரகளையான buffet உணவகம்.ஒரு பக்கத்தில் பில்லியர்ட்ஸ் டேபிள்கள் இருக்கும்.பில்லியர்ட்ஸ் தெரிந்ததுபோல போஸ் கொடுத்து dp எடுத்து கொள்ளலாம்.இன்னொரு பக்கம் buffet ரவுண்ட் கட்டி அடிக்கலாம்.இன்னும் நடந்து உள்ளே சென்றால் டிவி,சோபா.அமர்ந்து ரிலாக்ஸ் செய்யலாம்.ஐபிஎல்,இங்கிலாந்து கால்பந்து பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கும்போது projector வைத்து போட்டிகளை ஸ்க்ரீன் செய்வார்கள்.ஜூஸ்,ஐஸ்க்ரீம்,பாப்கார்ன் போன்றவை ஆடியன்ஸ் ஆர்டர் செய்தால் கொண்டுவருவார்கள்.நடுவில் டான்ஸ் ப்ளோர்.டீஜே என்ற பெயரில் ஒருவர் நடித்து கொண்டிருப்பார்.என்ன? தட்ட திருப்பித்திருப்பி சுழட்டனும் அதானே!ஆடி களிக்கலாம்.கொஞ்ச நாள் செம்ம ஹிட் அடித்தது.தரமான சேவை.அதற்கேற்ப கல்லா நிறைய வசூல்.இது இல்லாமல் பேருக்கு ஏத்த மாதிரி ஒரு காப்பி ஷாப்பும் இருக்கிறது.

Cheap and best Buffet

Cheap and best Buffet

இது எல்லாமே இப்போ past tense.கடந்த காலம்.நடுவில் இந்த ரெஸ்டாரண்டை க்ளோஸ் செய்துட்டாங்க.என்ன காரணம்னு தெரியல.கூகிள் மேப்பிலேயே permanently closed என்று வருகிறது.கடைசியாக கல்லூரி நண்பர்களுடன் ஒரு நாள் அங்கு buffet சென்றிருந்தேன்.ஒரு வருடம் முந்தி.கல்லூரி மாணவர்களின் சார்பாக அது போன்ற சீப்பான சாப்பிடும் இடங்கள் நெறைய இருந்தாலும்,அந்த high on caffeine ஒரு நோஸ்டால்ஜியாவாக நின்றுவிட்டது.

பின்குறிப்பு:அந்த ரெஸ்டாரன்ட் உண்மைலேயே closedதானா?இல்ல சமூக விரோதிகள் அப்டி கெளப்பி விட்டுட்டாங்களா? தெரிஞ்சா சொல்லுங்க சென்னை வாழ் மக்களே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s