சான் ஆன்ட்ரியாஸ்

image

இந்த படம் பார்க்க போன கதையை சொல்ல 36 வயதினிலே படத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
வீட்டில் 36 வயதினிலே படம் பார்க்க கூப்பிட்டார்கள்.நான் சோம்பேறிதனத்தால் பிகு பண்ணிக்கொண்டு வரமாட்டேன் என்றேன்.நல்ல கதை என்று தெரியும்.இருந்தாலும் இன்று பார்க்க கடுப்ஸாக இருந்தது.
ஆட்டோவில் ஏறி சென்றது குடும்பம்.
அடுத்து கொஞ்சம் நேரத்தில் ஃபோனில் அழைத்து “36 வயதினிலே ஈவ்னிங் மற்றும் நைட் ஷோ தான் போடுகிறார்களாம் டா.நாங்க காக்காமுட்டை படம் பார்க்க போறோம்” என்றார்கள்.
சரி ஓகே.
அடுத்து நண்பர்கள் கால் செய்து,”வாடா மச்சான்.காக்கா முட்டை படம் பார்க்கலாம்”என்றார்கள்.
சரி, என்ன ஊரே காக்கா முட்டை பார்க்கிறது, நிறைய அவார்டு வேற வாங்கியிருக்குனு “ஓகே குளிச்டு சாப்டு வரேன் மச்சி” என்றேன்.
போய் நின்றால் கூட்டம் பிரிக்குது.அதிகம் பெண்கள் தான்.குடும்பம் குடும்பமாக.
டீனேஜ் ரவுடி பசங்கள் எல்லாம் குடும்பத்தலைவிகளிடம் “யக்கா யக்கா! காக்கா முட்டை ஒரே டிக்கெட் வாங்கி குடுக்கா!” என்று கெஞ்சி கொண்டிருந்தனர்.
சரி ரைட்டு இது வேலைக்காகாது என்று புரிந்தது.
இருந்தாலும் தியேட்டருக்கு வந்துச்சு.வெயில் கடுப்பு வேற.
ஏதாவது படம் பார்த்தே ஆகனும்.
நான் மாஸ் போலாம் என்றவுடன் “நாங்க பாத்துட்டோம்” என்று கோரஸாக சொல்லுது பக்கிங்க.
என்ன செய்வது?
“பக்கத்தில் அருணாச்சலா சினிமாஸில் ஹாலிவுட் சான் ஆன்ட்ரியாஸ் படம் ஓடினு இருக்கு.போலாமா டா” என்றான் ஒருவன்.
ஆன்ட்ரியா பேரை கேட்டவுடன் வெயிலுக்கு கெறக்கமா இருந்துச்சு.
ஏசி,3டி கண்ணாடிலான் வேற.
ஜாலி என்று அங்கு போனால் அது நம்ம wwe தல ராக் ட்வேன் ஜான்ஸன் படம்.
அடி தூள், ஏக்ஷனுக்கு பஞ்சமே லேது! என்று உள்ளே டிக்கட் எடுத்து பார்க்க ஆரம்பித்தோம்.
தியேட்டர் டுபாக்கூர் மண்டையன் கொஞ்சம் நேரம் ஏசி போட்டு அணைத்துவிட்டு பேனை உட்டு உட்டாலக்கடி பண்ணான்.
சரி தட்டி கேக்க போனால் கொலை கேஸ் ஆயிடுமேங்கற தொலைநோக்கு பார்வையில் மூடிக்கொண்டு படம் பார்த்தோம்.

image

இதான் மேட்டர்–உலகமே அழிகிறது.எல்லாரயும் லாம் காப்பாத்த முடியாது.முடிஞ்சா நம்ம குடும்பத்தை சுயநலமா காப்பாத்திக்கலாம்.ஒன் லைன் இதுவே.
ஹெலிகாப்டர் மூலம் மக்களை காப்பாற்றும் தீயணைப்பு வீரனாக ராக்.
ஆள் திம்சு கட்டை அசத்தலாக இருக்கிறார்.மண்டையில் கூட மசிள்ஸ் ஏத்தி நரம்பு புடைக்க இருக்கிறார்.
ஆனால் கல்லுக்குள் ஈரம்.வெள்ளந்தி மனசுக்காரர்.
பொண்டாட்டி இன்னொருத்தனை கல்யாணம் செய்து கொண்டால் நாமெல்லாம் தேவ்டியா என்று திட்டி வயிறெரிவோம்.அவரோ கூலாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் நிஜ நேசத்தையும் காட்டுகிறார்.
அந்த மனைவியின் கேரக்டர் பெயர் எம்மா.மகள் சூஸன்.
இருவரும் அம்மாவுடைய புதிய பாய்ஃபிரண்டுடன் வாழ்கிறார்கள்.
சூஸனுடயை இன்ட்ரோ தன் அப்பா ராக்குடன் போனில் பேசுவது மாதிரி.டீனேஜ் டார்லிங்.
கட்னா இந்த மாதிரி கட்டைய கட்டணும் என்று கன்னி பையன்கள் கதறும் கர்வி பேப்.
ஆரம்ப சீனிலேயே ரிலாக்ஸ்டாக டூ பீஸில் ஸ்விம்மிங் பூல் சேரில் படுத்து கொண்டே அப்பாவுடன் போனில் பேசுகிறாள்.
தன் அம்மா அனுப்பிய டைவர்ஸ் பேப்பரை தன் அப்பா பார்த்து விட்டதை போனிலேயே உணர்கிறாள்.
அப்பாவை விட்டுகொடுக்க தயாராகாத பாசக்கார செல்லக்குட்டி.இந்த தம்பதி டைவர்ஸூக்கு ஒரு சென்டிமன்டல் ப்ளேஷ்பேக் உண்டு.அதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்க.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண சான் ஆன்ட்ரியாஸ் பூமிதட்டு நெவாடா மாகாணம் வரை பிளந்து மனிதன் காணாத ஆக பெரிய பூகம்பத்தையும் அதை தொடர்ந்து ராட்சஸ சுனாமியையும் உருவாக்கும் என்பதை மீடியா வெப்ஸைட்டுகளை ஹேக் செய்து உரக்க சொல்கிறது சின்சியரான ஆராய்ச்சி குழு.
அதில் ஒரு விஞ்ஞானி உலகின் மிகப்பெரிய ஹூவர் டேமில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும்போது பூகம்பம் வந்து, ஒரு பெண் குழந்தையை காப்பாற்றி விட்டு, பல மக்களோடு மக்களாக செத்துபோகிறார்.
தலைமை விஞ்ஞானி மயிரிழையில் தப்பத்து கடைசி வரை சாகாமல், நம்மை பீதியேத்தி சாகடித்து, இந்த பிராஸஸில் தன்னை இன்டர்வியூ செய்ய வரும் ஒரு அழகான ஜர்னலிஸ்ட் பொண்ணையும்(நமக்கு ஆன்ட்டி) உஷார் செய்து விடுகிறார்.
தன் சித்தப்பனுடன்(!) பூகம்பத்தின் எபி சென்டரான சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் மாட்டிக்கொள்ளும் நம் செல்ல தேவதையை(அதாங்க ஹீரோயினி-ராக் மகள்) சித்தப்பன் காப்பாற்றாமல் கைவிட்டுவிட்டு ஓடி எங்கோ செத்து விடுகிறேன்.
அவள் பூகம்பத்திற்கு சற்று முன்பு சந்தித்த ஒரு அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து காப்பாற்றி அந்த போக்கில் அவளை கிஸ்ஸடித்து லவ் பிரபோஸ் பண்ணி ,எப்டியோ பிரளயத்தில் சர்வைவ் ஆகி ராக்குக்கு தகவல் அளித்துவிடுகிறார்கள்.
முடிந்தவரை சூஸனின் அழகிய கொங்கைகளை குலுங்க வைத்திருக்கிறார்கள்.ஒரே சீனில் மேல் சட்டையை கழட்டி, பாய் ஃபிரண்டின் ரத்தத்தை காப்பாற்றுகிறாள்.அப்பொழுது ஜஸ்ட் ஒரு ஸ்லீவ்லெஸ் இன்னர்.
முளை, க்ளீவேஜ் எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார்கள்.அது அத்தனையும் மீறி என் கண்களுக்கு ரொம்ப செக்ஸியாக தெரிந்தது அவளின் நீல நிற கண்கள் மட்டுமே.வைரம் போல ஜொலிக்கிறாள்.
இப்படி மாட்டிக்கொண்ட மூவரையும் பொண்டாட்டியுடன் மீண்டும் சமரசமாகி இணைந்த (அட மானங்கெட்டவய்களா என்று நம் ஜனங்கள் கமெண்ட் பறக்கிறது!) ராக் ஜான்ஸன் எப்படி சுனாமி, பூகம்பம் எல்லாம் தாண்டி அசத்தலாக மீட்கிறார் என்பதே த்ரில் ஆக்ஷன் கிராஃபிக் திருவிழா திரைக்கதை.
இதைவிட கிராஃபிக்ஸ் இனி எப்படி செய்வார்கள் என்பதை அவர்களே முறியடித்தால் தான் உண்டு.
எட்ஜ் ஆப் தி ஸீட் த்ரில்லர்.பைசா வசூல்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s