HR இண்டர்வியூ!

ஹெச்.ஆர் மற்றும் டெக்னிக்கல் நேர்காணல்களில் எப்படிப்பட்ட மாணவர்கள் தேர்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்.
ரொம்ப சிம்பிள் லாஜிக். நான் இதுவரை பல ஹெச்.ஆர்களை சந்தித்து இருக்கிறேன்.ஏன் அந்த வேலைக்கு செல்லும் உத்தேசம் கூட இல்லாமல் நானும், என்னை தேர்ந்தெடுக்க சிறிதும் விரும்பாத ஹெச்.ஆர் களிடமும் தெரிந்தேயும் பல நேரம் பேசிகொண்டிருந்து வந்திருக்கிறேன்.
ஹெச்.ஆர் களிடம் பேசுவது ஒரு அலாதியான அனுபவம்.ஹெச்.ஆர் உங்களை நோட்டமிட்டு கணக்கிடுவது போலவே நீங்களும் ஹெச்.ஆரை ஈசியாக மதிப்பிடலாம்.
கல்லூரி காலங்களில் இது போன்ற பல உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும.நன்றாக பதிந்துவிட்ட உதாரணம் லேடன்ட் வ்யூவ் அனாலிடிக்ஸ்(latent view analytics) என்ற business analytics.
டெக்னிக்கல் சுற்றில் ஈசியான கேள்விகளை கேட்டதால் தடங்கலின்றி ஹெச்.ஆர் பகுதிக்குள் நுழைந்தேன்.
வந்திருந்த ஹெச்.ஆர்கள் பற்றி ஒரு யூகம் கொண்டேன். அது பலித்தது.
ஒரு கட்டத்தில் நான் சொன்ன பதில்கள் சரியானவையாகவே இருந்தாலும் அவர்கள் நோக்கம் என் பதில்களல்ல என் அப்ரோச் என அந்த உரையாடல் ஆரம்பத்திலேயே பொறி தட்டியது.எனக்கும் அந்தவேலையின் அம்சங்கள் குறித்து மனதில் ஒரு சித்திரம் விரிந்திருந்தது.அது அவ்வளவு ரசனையாக எனக்கு படவில்லை.
ரிலாக்ஸ் ஆனேன்.என் தொனிமாறியது.கொஞ்சம் தெனாவட்டாகவே பதில்சொல்ல ஆரம்பித்தேன்.
அவர்களும் என் மாறுதலை கவனிக்க தவறவில்லை.அரை மணி நேரமாக என் ரெஸ்யூமே வை கவனியாதவர்கள் அதை கையிலெடுத்தார்கள்.கவிதை எழுதுவது பற்றி அதில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
“Now tell me some of ur tamil poems, Mr.Sakthi” என்றார் ஒரு இளம் ஹெச்.ஆர்.
அந்த அறையை பற்றிய விவரத்தலில் ஆரம்பித்து , அரை மணி நேரத்திற்கு அவர்களை அனலிடிக்ஸை விட்டு வெளியில் அழைத்து வந்தேன்.
இறுதியில் ஸ்மைல் செய்து கொண்டே அந்த இளம் ஹெச்.ஆர் “You know what I am gonna say, right?” என்றார்.
“I knew it from ball one, sir” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
அவர்கள் இதற்கெல்லாம் அசருவார்களா? இல்லை அசந்தால்தான் காட்டிக்கொள்வார்களா?
கடைசியில் ஒரு ஜாலியான fake smile மற்றும் hand shake வேறு.நான் வெளியே வந்தேன்.அறையின் உள்சென்று ஒரு மணிநேரம் ஆகியிருக்கும்.
வெளியில் நண்பர்கள் எல்லாரும் “என்ன மச்சான்? புழுதி புளுத்திட்டியா? என்ன கன்பார்மா?”என்றார்கள்.
நான் பதில் சொல்லாமல் மெஸ் நோக்கி போய்விட்டேன்.சமோசா சாப்பிடுவதற்கு.
எனக்கு பிறகு சென்ற 20 ஹாஸ்டல் தடிப்பயல்களுக்கும் வேலை கிடைக்கவில்லை.
எங்கள் பேட்சில் இரு அழகிய பெண்களுக்கு வேலை கிடைத்தது. அவர்கள் இருவருக்குமே அழகை விட அறிவு அதிகம்.செம்ம டேலன்டட் ட்பெண்கள்.அதனால் சந்தோஷம்.
ஆனால் நம்ம பயபுள்ளைகளுக்கு இந்த விவரம் தெரியவில்லை. இன்னும் நாக்கின் நுனியில் ஆங்கிலம் போதாமல் ரெஸ்யூம் ஜெராக்ஸ் எடுத்து கம்பெனி படியேறி கொண்டிருக்கிறார்கள்.
கவலை வேண்டாம். அவர்கள் உண்மையிலேயே தேவைப்படும் ஏதோவொரு கம்பெனியில் அவர்களுக்கான நிரந்திர இடம் காத்துக்கொண்டே இருக்கிறது. வருடங்கள் சில பிடித்தாலும் கூட.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s