பொழுது விடிந்த புலம்பல்ஸ்

1.மக்கள் கருத்தே மகேசன் கருத்து.

இந்த வார மக்கள் கருத்தில் வன்முறை மூலம் கருத்து சுதந்திரத்தை அடக்க முயல்வதன் நோக்கம் அ)அச்சுறுத்த ஆ)விளம்பரம் தேடிக்கொள்ள இ)கருத்தில்லை என்ற ஆப்ஷன்கள் முன்வைக்கப்பட்டன.

நேரடி,வாட்ஸ் அப்,முகநூல் போன்ற சிலபல தளங்கள் மூலம் ஒரு 50 பேரிடம் சாம்பிள்கள் வாங்குவோம் வாராவாரம்.டீக்கடையில் துவங்கி கலிபோர்னியா வரை கலந்து கட்டிய ஆடியன்ஸிடம் நம் வார சர்வேயின் கேள்விகள் பறந்திடும்.அதில் பலர் ஒபாமவுடனும் ரோனல்டோவுடனும் பேசிக்கொண்டிருக்கும் பிசியில் பதிலளிக்க மறுத்துவிடுவார்கள்.இன்னும் சிலர் இதெல்லாம் ஒரு கேள்வியா? என் அறிவுக்கு நிகரான கேள்விகளை கேளும் என்பது போல பதிலளிப்பார்கள்.இது கூட பரவாயில்லை.இன்னும் ஒரு வகையினர் உண்டு.நீயே எதாச்சு செலக்ட் பண்ணிக்கோ என்பார்கள்.

எப்படியோ பதில்களை வடிகட்டி ஒரு 50 பேரை தேற்றினால் அந்த வார ரிசல்ட் கிடைத்து விடும்.சாதாரண நாட்களில் தும்மியதற்கெல்லாம் முகநூல்,ட்விட்டர் களில் கருத்து முன்வைப்பவர்கள் ஏனோ நாம் கேள்வி கேட்டால் பதில் தராமல் பிஸி ஆகி விடுகிறார்கள்.

2.மச்சி ஐபிஎல் னாலே சூதாட்டம் டா…முட்டா பசங்க கிரிக்கெட் லாம் ஒரு விளையாட்டுனு டிவி முன்னாடியே தவம் கிடக்குறானுங்க.. இந்தியா மேட்ச்லான் சச்சின் விளையாடுன வர்றிக்கும் தான் நான் பாத்தேன்..மச்சி என்ன இருந்தாலும் இந்த டீமை உருவாக்குனது கங்குலி தான்டா,தோனி இல்ல..யுவராஜையே தூக்கிட்டாங்க,அப்புறம் என்ன வேடிக்கை? ஜாகீர்கான் இல்லாம நம்ம பவுலிங் வீக்கா இருக்குல்ல? மச்சி இந்த விராட் கோஹ்லி கிட்ட அப்டி என்னதான்டா இருக்கு?அவனலாம் கேப்டனா போட்றாங்க..ரோஹித் ஷர்மாகிட்ட குடுத்திருக்கலாம் ல?

#‪#‎என்மனசு!கருமம்டா மேட்ச் பாக்க விடுங்கடா.. ‪#‎பொலம்பர்தாஇருந்தா தனியா போய் பொலம்ப வேண்டியதுதானே.

3.அரசு யார், கழுகார் யார், ஆண்டியார் யார், சிறு வயதிலிருந்தே இந்த கேள்விகள் உண்டு.

இவர்கள் ஒருவரா, பலரா? எந்தெந்த காலகட்டங்கள் வரை எழுதினார்கள்?
பேட் மேன் யார் என்பதைவிடவும் என்னை வசீகரிக்கும் கேள்விகள்.
அப்பொழுதெல்லாம் கூகுள் இல்லை.இவர்களே மக்களின் கேள்விகளுக்கு வடிகால்.
இன்றும் அந்த கலாச்சாரம் தொடர்கிறது.
நானும் கழுகாரிடம் பல கேள்விகள் கேட்டு இருக்கிறேன். இதுவரையில் அவர் என்னைகண்டுகொள்ளவில்லை. டன்கணக்கில் மெயில் வந்தால் அவர் என்ன செய்ய?

4.மற்ற இலவசங்களை அறவே தவிர்த்துவிட்டு தரமான கல்வி, முறையான மருத்துவம்,தொழிலாளர் நலன் இந்த மூன்று துறைகளிலும் அரசு தன் பங்கை வலுப்படுத்தும் நேரம் நாம் வரம் செய்தவர்கள் ஆவோம்.அதுவரை நமக்கு விடிவில்லை.இந்த மத்திய அரசு மாநில அரசை கைக்காட்டும் போக்கும் அதன் உல்டாவும் பொதுமக்கள் அடிப்படை அரசியலமைப்புச் சட்டத்தை கற்று வைத்துக் கொண்டால் தீர்ந்தது.

5.நீங்கள் கல்லெறிந்தாலே அதை வைத்து வீடு கட்டுபவர்கள் நாங்கள்.டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசுகிறீர்களா?? இதில் பெருமிதம் கொள்வதற்கு உங்களிடம் ஒன்றுமே இல்லை.கருத்தை கருத்தால் வெல்லத் தெரியாமல் கோழைத்தனங்களை கையிலெடுத்திருக்கிறீர்கள். ஐஎஸ், தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் உங்களுக்கும் ஆயுதங்கள் குறைபாடுதான் வித்தியாசம்.அதுவும் கிடைத்துவிட்டால் கனகச்சிதமாக பொருந்தி விடுவீர்கள்.எம் பத்திரிக்கை தோழர்கள் மரணத்தை பேனா என்ற மாமருந்தினை கொண்டு வென்றவர்கள்.அவர்கள் இதைக் கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை.அதற்காக அவர்களும் மனிதர்கள்.வலி, குடும்பம் என்பது அவர்களுக்கும் உண்டு என்பதை மறந்த மனிதாபிமானமற்ற செயல் இது.

6.இன்னிக்கு எகின் பாலா ஜி unknown நம்பரில் அழைத்து ஹலோ பிரதர் உங்க ஆர்டிகல் நல்லா இருந்துச்சி என்று முரட்டு குரலில் பேசினார்.

நான்:ரொம்ப நன்றி ஜி…எந்த ஊரு நீங்க?
எகின்: மதுரை(நானும் மதுரைக்காரன் தான் டா டோனில்..)
நான்: ஜி..உங்க பேரு?
எகின்: இரு நொடி மௌனம் களைந்து,” எகின் பாலா”
நான்:ஜி ஏன் ஜி இப்டி போன் பண்ணி கலாய்க்குறீங்க? (மைண்ட் வாய்ஸ்:ஏன் யா இப்டி பீதிய கெளப்புற??கூப்டர்தா இருந்தா என்கிட்ட இருக்கிற நம்பர்ல கூப்ட வேண்டியதுதானே?)
அந்த பக்கம் அதிர .சிரிக்கிறார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s