மணிவண்ணனும் கேபியும்

நம்ம நாட்டு அரசியலலாம் 20 வருஷத்துக்கு முன்னாடியே புட்டு புட்டு வச்ச படம் அமைதிப்படை.அதுல மணிவண்ணன் சத்யராஜ் காம்போ நக்கல் பண்ணிக்கிட்டே எதார்த்தத்தை ஸ்கிரீன்ல தெறிக்க விட்டுருப்பாங்க.
அந்த படத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சி நாகராஜ சோழன் வீட்டுக்கு புள்ள சத்யராஜ் வருவாப்ள.நிறைய வீர வசனம் பேசுவாப்ள. அப்போ அமாவாசை சத்தியராஜ் பேசுவார் பாருங்க வசனம்? இன்னைக்கு தேதி வர்றைக்கும் அதுல மாத்தம் இல்ல.” ஏண்டா மகனே! நீயும நம்ம கட்சில சேந்திட்டா நான் தலைவர். நீ பொது செயலாளர். ஜென்மத்துக்கும் வேற எவனுக்கும் பதவி கிடையாது.எவனாச்சு எதிர்த்தால் கட்டம்கட்டி கட்சியை விட்டு புஸ்ஸு…மன்னிப்பு கடிதம் வெளியிட்டா மறுபடியும் கட்சிக்குள்ள இஸ்ஸூ உஸ்ஸூ.இதுதான்டா எப்பயும் அரசியல்..அரசியல்.!! தீர்க்கதரிசி யா அமாவாசை கேரக்டர்..‪#‎மணிவண்ணன்_தி_மாஸ்

விண்டோஸை ஷட் டவுன் செய்ய எத்தனித்தேன்.அணைய மறுத்தது. One file yet to be closed . என்ன என்று பார்க்க இயக்குநர் கே.பி யின் புகைப்படம். அவர் மறைந்த செய்திகேட்ட நேரத்தில் பதிவிறக்கம் செய்த புகைப்படங்களில் ஒன்று பிகாஸாவில் திறந்து வைத்திருந்தேன். அது என்ன புகைப்படமாயிருந்தாலும், ஏன் அது என்ன ஃபைலாக இருந்தாலும் சிஸ்டம் என்னிடம் இதை கேட்டிருக்கும். ஆனால் இந்த ஒரு தருணம் நெகிழ்ச்சியாய் இருந்தது. க்ளோஸ் செய்யக்கூடிய ஃபைலா அவர்??

#KB

ADD-ON ADVICE

நெகடிவ் மீம்ஸ் கிரியேட் பண்ற மொக்க ஆளுங்க ஒரு கிரியேட்டரை நேருக்கு நேரா பார்த்து பேச திராணி இல்லாத தொடை நடுங்கிங்க….தன்னால கிரியேட் பண்ண முடியாததை பண்ற ஆர்ட்டிஸ்ட் களுக்கு மரியாதை கொடுக்க மனசு வராம அவங்க ஆளுமையை அற்ப விவரணைகள் மூலமா மட்டம் தட்ட துடிக்கும் விபரீத புத்தியை ஹ்யூமர் சென்ஸ் கிற பெயிண்ட் அடிச்சி விக்கறானுவ.. அத நானும் சில தடவ ஆமோதியோ ஆமோதிச்ச ஆளுனு நினைச்சா கேவலமா இருக்கு. இனிமேலாச்சு இன்னொருத்தன மட்டம் தட்டி வாழறத நிறுத்துங்க டா.

WRITTEN SEASON

இந்த மார்கழி டூ தை டிரான்சிஷன் அவ்வளவு எளிதாக நம்மை விட்டுவிடுவதில்லை.ஒரு காட்டு காட்டி விட்டுதான் போகிறது.உலர்ந்த திராட்சை போல் உதடுகள் நீரற்று பல நாள் தம்மடித்தவனின் பதத்தில் வைக்கிறது.போதா குறைக்கு தோல் உரிதல் வேறு.பனி ஊமை போல வேலை காட்டி வறட்டு இருமல் கொடுத்து படுத்திய சங்கடங்கள் போக இவற்றை கொளுத்த வேண்டும் என்பதற்காகவே போகி வரவேண்டும்.ஒரு எண்ணெய் குளியல் ஒரு மணி நேரம் போடவேண்டும்.வழிபிறக்கும் தையில் நம் அனைவருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s