சமீப இலக்கிய பருகல்களின் அறிவிப்பு

1.தெஹெல்காவின் ஆசிரியரான தருண் தேஜ்பால் துணிந்து பல அரசியல் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி பல பேரின் பகையை சன்மானமாக பெற்றுக்கொண்டார். அவரின் புனைவு முகம் பலரால் அறியபடாதது.மூன்று புனைவுகளை தந்திருக்கிறார்.அதில் the alchemy of desire விமர்சகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்பட்டு கிட்டத்தட்ட 5 லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தது. பத்திரிகை வாழ்விற்கு சற்றும் சளைக்காத சாதனை இது.எழுத்தாளராக அவரை அறிமுகம் செய்துகொள்ளும் முயற்சியாகத்தான் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்.

the alchemy of desire

2.கமலின் 2009ம் ஆண்டு வரையிலான வாழ்வின் குறுக்குவெட்டு.சில நிகழ்வுகளின் கோர்வையாக அவரின் கலை பயணத்தை ஒற்றை புத்தகத்தில் அடக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர் தீனதயாளன்.கிழக்கு பதிப்பகம்.2009ம் ஆண்டு முதற் பதிப்பு.திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் தென்பட்டது. லபக்கி முடித்துவிட்டேன்.3 நாட்கள் சில நேரங்கள் ஒதுக்கி 328 பக்கங்கள். கட்டிலடங்கா தேடலை கரைபுரள காணலாம் அனுபவங்கள் முழுவதிலும்.
பி.கு தெய்வீகம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரபந்தங்களையும்,மந்திரங்களையும், வாழ்வில் நாம் சந்திக்கும் அத்தனை விஷயங்களின் வரலாறும் அரசியலும் விரல்நுனியில் இவர் சேகரித்துக்கொண்டே இருக்கும் முயற்சிதொடர்கிறது.எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக அமைவது போலவே சில கறுப்பு பக்கங்களும் இவருக்கும் உண்டு.
உங்களுக்கு தேவையானதை மட்டும் பகுத்தறிந்து கொள்ளுங்கள்.

1510387_1433060976997097_699430274804524867_n

3.நல்ல விஷயங்கள் பகிரப்பட வேண்டும்.வாசிப்பின் மீது காதல் உண்டாக சிறுகதைகள் மிக முக்கிய காரணம் எனக்கு.பத்திரிக்கைகளில் வெளியாகும் சிறுகதைகள் தவிர்த்து ஜெயகாந்தன் ஐயா தொகுப்பு, சுஜாதா ரங்கராஜன் அவர்களின் தொகுப்பு வாசித்திருக்கிறேன்.இப்பொழுது என் ஆசானின் சிறுகதை தொகுப்பு “மாலன் சிறுகதைகள் “ ஒன்று எங்கள் ஊர் மாவட்ட மைய நூலகத்தில் கண்டேன்.அந்த புத்தகத்தில் இருந்த புதுமைபித்தன் ஐயா பற்றிய
கற்பனை கதை ஒன்று மிக பிடித்தது. மேலும் நடுத்தர வர்க்கத்து பெண்ணொருத்தியின் கணவன் நைட் ட்யூட்டி பார்ப்பவன். அந்த கதையின் இறுதியில் அந்த பெண்ணின் வலி நமக்கும் வலிக்கும்.
இது போக அசோகமித்திரன் ஐயாவின் 1945ல் இப்படியெல்லாம் இருந்தது என்ற சிறுகதை தொகுப்பு புத்தகம் நான் நூலகம் செல்லும் போதெல்லாம் ஒரு ஒரு சிறுகதை வாசிக்கிறேன்.அதில் நிஜத்துக்கும் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு என்ற சிறுகதை கவனத்தில் நின்றுவிட்டது. சிறுகதைகள் ஒரு தனி உலகம்.

kangalukku appaal

Brief intro in facebook

“அ.முத்துலிங்கம் (கனடா)ரெ.கார்த்திகேசு (மலேசியா) நாகரத்தினம் கிருஷ்ணா (ஃபிரான்ஸ்)உமா வரதராஜன் (இலங்கை) இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (இங்கிலாந்து) பொ.கருணாகரமூர்த்தி (ஜெர்மனி)ஆ.சி. கந்தராஜா (ஆஸ்திரேலியா)டாக்டர்.சண்முக சிவா (மலேசியா) அ.யேசுராஜா(இலங்கை) கீதாபென்னட் (அமெரிக்கா) லதா (சிங்கப்பூர்) சந்திரவதனா(ஜெர்மனி) ஆசீப் மீரான் (அமீரகம்) எம்.கெ. குமார் (சிங்கப்பூர்) எனப் பத்து அயல்நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (தேர்வும் தொகுப்பும் மாலன்) சாகித்ய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ளது.
பூமிப் பந்தெங்கும் தமிழ்ப் புனைவுலகம் கொடிவிட்டுப் படர்ந்திருப்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சாட்சி.தமிழ்ப் புனைகதைகள் அண்மைக்காலத்தில் கண்டுள்ள விரிவை மட்டுமல்ல, ஆழத்தையும் அறியத் தரும் தொகுப்பு. தாயகம் பெயர்ந்து போகிற வாழ்வின் பரிணாமங்கள் பலவும் இதில் இலக்கியமாகப் படர்ந்து நிற்கின்றன.இலக்கியம் என்பது வாழ்வின் சுவடுகள் என்பதை மீண்டுமொருமுறை மெய்ப்பிக்கும் தொகுப்பு

நூல் குணா பில்டிங்ஸ்,443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை சென்னையில் அமைந்துள்ள சாகித்ய அகாதெமி அலுவலகத்தில் “

4.ரொம்ப நாளா வைரமுத்து சாரோட கருவாச்சி காவியம் படிக்கனும்னு ஆசை.2011 ல பிடிஎப் ஃபைலா பிப்ரவரி மாதம் பதிவிறக்கம் பண்ணது.லேப்டாப்ல ஒரு மூளைல கண்ல தென்பட்டுட்டே இருந்துச்சு.ஆனா நேரம் காலம் அமையல. இப்போ நாலு வருசம் கலிச்சு, பல தடவை மென்பொருள் மாற்றி இருக்கிற நிலைல மூணு நாளைக்கு முன்னாடி படிக்க ஆரம்பிச்சேன்.அமைஞ்சுச்சு.இன்னிக்கு முடிச்சுட்டேன்.289 பக்கங்கள் கடந்து சல்லுனு போயிடுச்சு.நிறைய வட்டார வழக்கு புரியல. ஆனா அது மூலமா அவர் சொல்ல வந்த விஷயங்கள் வச்சு அனுமானிச்சுக்கிட்டேன்.மனித உணர்வுகள் எல்லாத்தையும் தேவாமிர்தம் மாதிரி கடைஞ்சு வச்சு மனசை கடத்துறார்.சில நேரங்களில என்னடா இது வாழ்கைனு தோணும்.முடிவுல இதுதானடா வாழ்க்கைனு சாமானிய கருவாச்சியை வச்சி காவியம் படிச்ச வித்தகரு நம்ம மனசுக்குள்ளே பட்சியை கண்ட மேனிக்கு பறக்க விடுறார்.இதுதான் இலக்கிய தரம்னா இதை அடைய என்ன மாதிரி ஆளுகளுக்கு பிரம்ம பிரயத்தனம் தேவைப்படுது..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s