ஜூராஸிக் வோர்ல்டு

image

ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றோம் முதல் நாள் மேட்னிக்கு.
வழக்கம்போல் தீம் மியூசிக் போட்டு பார்க்கை காட்டினார்கள்.
இன்ஸ்ப்யர்டு பை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்று வேறு போட்டு கடுப்பேற்றினார்கள்.கண்டிப்பாக முதல் மூன்று பாகங்களையும் சேர்த்து அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றே தோன்றியது.
வேண்டாவெறுப்பாக என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
தண்ணீரிலிரீக்கும் அந்த ராட்சஷ டைனோசரை காட்டிய நிமிடத்திலிருந்து தீ பற்றிக்கொண்டது திரைக்கதை.
நம் பாலிவுட் இர்ஃபான் கானுக்கு இதில் கூலான மற்றும் அதிமுக்கிய வேடம்.மனிதருக்கு ஸ்கோப் கொடுத்த வரையில் ஜாலியாக விளையாடியிருக்கிறார்.
ஹீரோயின் பார்க்க ஆயா போல இருக்கிறார்.அவளின் அக்காவே தேவலாம்.ஆனால் இந்த படத்தில் ஹீரோயினே தன் பேக்குத்தன மேனரிஸங்கள் மூலம் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் போலத்தான் வாழ்ந்திருக்கிறார்.

image

படத்தின் மனித ஹீரோ அசத்துகிறார். வெலாசி ராப்டர்களை செல்லமாக விலங்கு கறிகள் கொடுத்து பழக்குவதிலிருந்து, அவற்றிடமிருந்து நூலிழையில் தவறி விழுந்த பணியாளர் ஒருவரை காப்பாற்றுவதிலிருந்து இன்ட்ரோவே அசத்தலாகத்தான் இருக்கிறது.
படத்தின் மிருக நாயகன் ஹைப்ரீட் ரெக்ஸ் டைனோசர்.
இருக்கும் எல்லா கொடூர குணங்களும் ஒருங்கே டிஎன்ஏ மூலம் அமையப்பெற்ற, டி ரெக்ஸை விடவும் பெரிய ஜந்து.
அதி புத்திசாலித்தனமாக கூண்டிலிருந்து தப்பித்து ஆட்டம்காட்டி கண்ணில் பட்டதையெல்லாம் விளையாட்டாகவும் வெறித்தனமாகவும் கொன்றும் வேட்டையாடி தின்றும் வருகிறது.
மொத்த பார்க் டைனோசர்களையும் அடித்து துவம்சம் செய்து விடுகிறது.

image

போதாக்குறைக்கு பறக்கும் மாமிச உண்ணி டைனோசர்களின் பகுதி கூண்டுகளும் திறக்கப்பட்டு அவையும் பார்க்குக்கு வந்திருக்கும் மக்களை வேட்டையாடி உண்டு மகிழ்கின்றனர்.
இந்த ஹைப்ரீட் ரெக்ஸை வேட்டையாடி கொள்ள வெலாசி ராப்டர்களை பயன்படுத்த தீர்மானிக்கிறார்கள்.செம்ம அதிரடி சீன் இது.மனித ஹீரோ தன் வாகனத்தில் வெலாசி ராப்டர்களுடன் மிருக ஹீரோவான ஹைப்ரீட் ரெக்ஸை வேட்டையாட செல்லும் காட்சி கண்டிப்பாக உங்களை அசத்தும்.
அந்த சீனின் இறுதியில் யூகிக்கக்கூடிய,ஆனால் ஒரு அதிரடி ட்விஸ்ட் உள்ளது.அதை சொல்ல முடியாது.

ஆனாலும் எல்லாவற்றையும் மீறி மனித ஹீரோ, ஹீரோயின்,அவளின் அக்கா பசங்கள் இருவரையும் தின்ன துரத்துகிறது ஹைப்ரீட் ரெக்ஸ்.
அங்கதான் அல்டிமேட் என்ட்ரி எவர்.
நம்ம தலைவர் நேச்சுரல் டி ரெக்ஸ் கூண்டிலிருந்து விடுவிக்கப்படுகறார்.
என்ன கிளைமாக்ஸ் ட்விஸ்டை சொல்லிட்டீங்க.இதுக்கு அப்புறம் சுவாரஸ்யம் ஒண்ணுமே இல்லையே.
ஹைப்ரீட்டும் நேச்சுரல் டி ரெக்ஸூம் சண்டை போடும்! என்கிறீர்களா.
அங்கதான் அதுக்கும் மேல ஒரு எதிர்பாராத டைமிங் ட்விஸ்ட் சேர்த்திருக்கிறார்கள்.
அந்த விஷயத்தினால்தான் இந்த படம் பிளாக்பஸ்டர் அந்தஸ்தை பெற போகிறது.
அதை தியேட்டரில் கண்டு வாய் பிளந்து மகிழ்க.

//சக்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s