நோலன்

எனக்கு ஹாலிவுட்டில் தெரிந்த விஷயங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
டைட்டானிக், ஜூராஸிக் பார்க், எக்ஸார்சிஸ்ட்,ஜேம்ஸ்பாண்ட், ஜாஸ், கிரிஸ்டோபர் நோலன், ஸ்கார்லட் ஜொஹன்சன் :*  :*  மத்தபடி “என்னமா அங்க சத்தம்? பேசிகிட்டு இருந்தேன் மாமா!” டைப் தான் நான் ஹாலிவுட் பொறுத்தவரை. ஸ்டைலிஷான ஹீரோ, செக்ஸியான ஹீரோயின், வேகமான கார்கள், பல கெட்ட வார்த்தைகள் இது மட்டும் தான் ஹாலிவுட் என்று எனக்கொரு பிம்பம் இருந்தது. அதில் இருந்து மாறி இப்படி கூடயோசிப்பாரா என்று என்னை மிரள வைத்தது நோலனின் திரைப்படங்கள் மட்டும்தான்.
அதிலும் இன்செப்ஷன் எனக்கு புரிய 4 வருடங்கள் பிடித்தது.
பிரிஸ்டீஜ் (the prestige) பார்த்து வேறொரு கதாநாயகன் இருப்பதே எப்படி இவ்வளவு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் என்று பிரமித்தேன்.
இன்சோம்னியா பார்த்த இரவு நானும் தூங்கவில்லை.மெமண்டோ நம் கஜினியின் ஹாலிவுட் ஒரிஜினல்.ஆனால் அதை வேறு கலரில் எடுத்திருந்தார் முருகதாஸ்.
டூடுள் பக்(doodle bug) என்ற அவரது குறும்படம் காட்டு காட்டு என்று காட்டியது. இப்பொழுதும் அதை நீங்கள் யூ-ட்யூபில் காணலாம்.
பேட்மேன் சீரிஸ் அவரது வசூல் கருவூலங்கள்.சின்ன சின்ன விஷயங்களிலும கவனம் செலுத்தி லாஜிக் சேர்த்திருப்பார்.
அவர் திரைக்கதை எழுதி தயாரித்த மேன் ஆப் ஸ்டீல் பேட்மேன் அளவு இல்லையென்றாலும சூப்பர்மேனுக்கு இதற்கு மேல் லாஜிக் வைக்க முடியாது என்று உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது.
அவரது வரிசையில் நான் தவறவிட்ட சித்திரங்கள் இரண்டு
1.தி பாலோவிங்(அவரது முதல் படம்)
2.இன்டர்ஸ்டெல்லர்
கூடிய விரைவில் இவற்றையும் ரசித்திட காத்திருககிறேன்.
தெரிந்த சிலவற்றையாவது முழுவதும் தெளிந்திடல் வேண்டுமல்லவா? அதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s