மாரி-THE THARA LOCAL ALBUM

image

கொலவெறி தொடங்கி, விஐபி மரண மாஸ்க்கு பிறகு மாரி என தர லோக்கலாக இறங்கி அடித்திருக்கின்றனர் poetu தனுஷ்-அனிருத் காம்போ.

I.தி மாரி ஸ்வாக்-the maari swag

டீசரில் நீங்கள் காணும் தனுஷ் ஸ்டைலாக தம்மடித்துக்கொண்டு வரும்போது ஏற்படும் bgm தான்.பக்கா மாஸாக இருக்கிறது.வெறும் முப்பதே செகண்ட்தான்.விஐபி,மாரி இந்த இரண்டு படத்திலேயே ரஜினி, அஜித்துக்கு பிறகு தம்மடித்தால் மிக ஸ்டைலிஷாக இருக்கும் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார் தனுஷ்.

II.பகுலு உடையும் டகுலு மாரி

முதலில் மிஷ்கின் பட pathos வயலின் உணர்வை சில்லிட வைத்து பின் ஒரு நிமிடத்திற்கு எறங்கி கெறங்கி குத்த வைக்கும்.மாரியின் முழு கெத்தை சொல்லும் சிறுபாடல்.படத்தில் இந்த மியூசிக் வரும் இடங்களெல்லாம் தெறிக்கும்.

III.டானு டானு டானு(மாரி ரொமான்ஸ்)

மிக வித்தியாசமான அனிருத் பாடல்-1.
மாரியின் காதலை செம்மையாக சொல்கிறது.
“ரோஜாப்பூ தேகத்தால்
ராஜா நான் சாஞ்சிட்டேன்!
உன் முன்னே என்
கெத்து நிக்காதடீ!”

என்னா லிரிக்ஸ் யா!-1.

நடு நடுவே காதலன் படத்தில் வரும் “காதலிக்கும் பெண்ணின்” பாடலின் ஸ்டைல் தெரிகிறது.ஆனால் நன்றாக இருக்கிறது.அதானே வேணும்?
அலிஷா தாமஸ் செம்ம செக்ஸி வாய்ஸ்.நேராக பார்த்தால் அந்த வாய்ஸுக்காகவே முத்தமிட தோன்றுகிறது.
நடுநடுவில் western rap ஸ்டைலும் லைட்டாக மிக்ஸ் ஆகிறது.

IV.மாரி தர லோக்கல்(மாரி கெத்து)

அடுத்த 6 மாதத்திற்காவது இதான் தமிழக இளைஞர்களின் மாஸ் ரிங்டோன்.

ந்த்தா ஏ ந்த்தா ஏ ந்த்தா ஏ ந்த்தா ஏ…..

திணக்குதகிட திணக்குதகிட திணக்குதகிட திணக்குதகிட…..

என beats புரட்டி எடுக்கிறது.
இறங்கி குத்தி எடுக்கலாம்.
வேற லெவல் எனர்ஜி.

“ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது
பாதை மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது!”

என்னா லிரிக்ஸ்யா!-2

V.ஒரு வித ஆசை(மாரி ஆசை)

எந்த மாதிரியும் இல்லாத அனிருத் பாடல்-2.ரெட்ரோ ஸ்டைல்.

“ஒரு வித ஆசை வருகிறதா?
புது வித போதை தருகிறதா?
கனவிலே டூயட் வருகிறதா?
டூயட்டில் foreign வருகிறதா?
இதுவரை குத்துப்பாட்டுக்கு குத்துற உனக்கு மெலடி பிடிக்கிறதா?”

என்னா லிரிக்ஸ்யா!-3

“ஏ சைஸா பார்ப்பதும்
நைஸா இடிப்பதும்
ஜிவ்வுனு இருக்கிறதா?
ஸ்லைட்டா முறைப்பதும்
ப்ரைட்டா சிரிப்பதும்
லைட்டா இனிக்கிறதா?
மட்டன் வெட்டுவியே!
உனக்கிப்ப மல்லிகை ருசிக்கிறதா?
மீசை முறுக்குவியே!
கூந்தல் வாசம் மணக்கிறதா?
புடிக்காம நடிக்காதே!
நடிச்சாலும் நடக்காதே!
இது உன்னை சேஸ் பண்ணி
அடிக்காம முடிக்காதே!”

என்னா லிரிக்ஸ்யா!-4

image

மொட்டைமாடி லிரிக்கல் டிஸ்கஷன்

VI.தப்பா தான் தெரியும்(மாரி கருத்து)

தனுஷூம் மதுரை சின்னபொண்ணும் சேர்ந்தால் கலக்கல்ஸூக்கு பஞ்சமா என்ன?
எல்லா கல்ச்சுரல்ஸையும் கலக்க போகிறது இந்த பாடல்.

“தப்பாதான் தெரியும்
நம்ம ரூட்டு.
சரியான பயல்லான்
கெட் அவுட்டு.
கொஞ்சம் ராங்காத்தான் இருக்கும்.
ஆனா ரைட்டு.
புரியாத வரைக்கும் அப்பீட்டு!”

என்னா லிரிக்ஸ் யா! – 5

படம் முழுக்க ஆடிவிட்டு சந்தோஷமாக வெளியே drain ஆகித்தான் வருவோம்.

“குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
நிமிந்தேதான் நடக்கணும் வழியே இல்லை!
துணை தேடி வினைதேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும் தப்பே இல்லை!”

என்னா லிரிக்ஸ் யா! – 6.

படத்தில் இந்த எல்லா ஆடியோ பீட்ஸையும் கேட்பதற்கு இப்பவே ஆவல் தாங்கலை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s