ரோமியோ ஜூலியட்

image

கமான் கமான் யே ஜல்சா

ஜூலியட் கண்ணுக்கு ரோமியோ பணக்காரனாக தெரிகிறான்.
பென்ஸ் கார்,5 நட்சத்திர குடியிருப்பு, அதீத ஷாப்பிங் என்று ஜூலியட் ரோமியோவை பார்க்கும் இடங்களிலெல்லாம் பகட்டாக தெரிகிறான்.அனாதையான
ஜூலியட்டுக்கு பகட்டான வாழ்க்கையின் மீது அளவுக்கதிகமான ஈர்ப்பு.அதனாலேயே ரோமியோ மீது காதலில் விழுகிறாள்.ரோமியோ ஜூலியட்டை நிஜமாகவே நேசிக்கிறான்.அவளிடம் சந்தர்ப்பவசத்தால் பணக்காரனாக தெரிகிறான்(!)
ஒருநாள் ஜூலியட்டுக்கு ரோமியோ பணக்காரன் அல்ல.சாதாரண ஜிம் பயிற்சியாளர் என்று தெரிய வருகிறது.
இதனால் அவனை தவறாக புரிந்துகொண்ட ஜூலியட் அவனை கடுமையாக செலவழிக்க வைத்து அவமானப்படுத்தி அவனை விட்டு பிரிகிறாள்.
இன்னொரு பணக்கார மாப்பிள்ளையை பார்த்து நிச்சயதார்த்தத்தையும் முடித்துக்கொள்கிறாள்.
ரோமியோ முதலில் கெஞ்சி பார்க்கிறான்.கதறி பார்க்கிறான்.
வேலைக்கு ஆகாது என்றவுடன் அதிரடி ரூட்டை எடுக்கிறான்.

ஜூலியட் தன்னைவிட்டு பிரிந்ததால் அவளைப்போலவே வொர்த்தான ஃபிகரை தனக்கு கரெக்ட் செய்து தரும்படி அவளையே மிரட்டி பணிக்கிறான்.
பல தேடல்களுக்கு பிறகு ஏஞ்சல் மாதிரி ஒரு ஃபிகர் சிக்குகிறாள்.
இனி இவர்கள் வாழ்வில் நடக்கும் ஸ்வாரஸ்யமான விவகாரமான விஷயங்கள் தான் ரொமெடியாக கலந்து பரிமாறி இருக்கிறார் இயக்குநர்.
ரோமியோவாக ஜிம்கட்டு திம்சுபாய் ஜெயம் ரவி.ஜூலியட்டாக குல்ஃபி ஐஸ்கிரீம் ஹன்சிகா.
ஏஞ்சலாக பூனம் பாஜ்வா.

சிம்பிள் கதை, இமானின் போதுமானதான இசை என கதை நகர்ந்து ஒரு தடவை பார்க்கக்கூடிய ஒரு ராம்-காமை நமக்கு அளித்திருக்கிறார்கள்.
ஹன்சிகா பப்ளி மாஸாக பார்த்து பழகிய நமக்கு அவரது புது ஸ்ட்ரக்சர் அசரடிக்கிறது.ஜிம்மிலேயே தவம் கிடந்திருப்பார் போல.
வழக்கம்போலவும் வழக்கத்தை விடவும் முறுக்கேறிய உடலுடனும் நக்கலுடனும் சுற்றி சுழல்கிறார் ரவி.
நடுவில் பூனம் பாஜ்வா சீன் ஐசிங் ஆன் தி கேக்.அதுவும் ஸ்ட்ராபெர்ரி சாக்லேட் ஐசிங்.
என்ன?அவர் உருக மாட்டார்.ஆண்கள் நாம்தான் உருகி தள்ளுவோம்.
அந்த செக்ஸி வெள்ளை ஷர்ட் ஒன்லி காஸ்ட்யூமில்(உள்ளே ஒரு மைக்ரோ ஷார்ட் உண்டு.அது எங்கே கண்ணுக்கு காட்டினார்கள்.பாட்டம்லெஸ் போலத்தான் இருக்கின்றது)
ப்பா..!! கும்தா..அதுவும் இதே காஸ்ட்யூமில் பேக் போஸில் நடக்க விட்டு கேமரா மூலம் பின்தொடர்ந்திருக்கிறார்கள். ❤

அந்த ஒரு சீனினாலேயே படத்தை என்னால் குறை சொல்ல முடியவில்லை.ஆனால் பைசா வசூல் என்றும் சொல்லமுடியாது.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
ஜாலியாக பார்க்க ஒரு நல்ல என்டர்டெயிணர்.
குடும்பத்துடன் சென்றால் முழுதாக உங்கள் எமோஷன்களை கத்தி எக்ஸ்பிரஸ் செய்வதற்கு நிச்சயம் சங்கட படுவீர்கள்.அதுவே ஃபிரெண்ட்ஸோடு பார்த்தால் கத்தி கும்மாளமடித்து ஜல்சா பண்ணும் நிறைய சீன்கள் இதில் உண்டு.
Choose wisely.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s