ஏர்டெல் விங்க் மியூசிக்-ஒரு ஸ்மைலி செயலி

image

அமெரிக்க ஐரோப்பியாவை அலங்கரிக்கும் இந்திய தமிழ் சகாஸ்க்கு சாரி.ரொம்ப அவுட் டேட்டட் நியூஸ்லான் சொல்றேனு எடுத்துகாதீங்க.
இங்க இதுதான் பிராப்ளமே.நீங்க அவுட்டேட்டட்னு நினைக்கிற பல விஷயங்களுக்கு நம்ம ஆளுங்க இன்னும் அப்டேட்டே ஆகிருக்க மாட்டாங்க.
எப்படி எதிர்த்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சினு மூணாவது தெரு மாமா கிட்ட மொக்கை வாங்கி தெரிஞ்சிக்கிறோமோ அப்டிதான் டெக்னாலஜி அப்டேட்ஸ் பொறுத்தவரை நம்ம கய்ஸ்.
ஏன் இவ்ளோ பீலா உட்ற எனக்கே இன்னும் முழுசா பல விஷயங்கள் தெரியாது.
அதுக்காக! அதுக்காக நம்ம ஆளுங்கள உங்ககிட்ட மொக்கை வாங்க விட்ருவேனா? சான்ஸே இல்லை.
ஏர்டெல் காரன் பல விஷயத்துல ஒண்ணாம் நம்பர் ஃபிராடு.அதுக்கு நல்ல உதாரணம் சமீபத்திய நெட் நியூட்ராலிட்டி பூதாகார விவகாரம்.இது மட்டுமில்லாம பெர்சனலா எனக்கு எல்லா டெலிகாம் கம்பெனி மேலயும் செம்ம காண்டு உண்டு.
பிஸனஸ்னா லாபம் இருக்கனும்.தப்பில்ல ஆனா ஒவ்வொரு கஸ்டமரிடமும் ஒரு மாச டேரிஃபை எல்லா டெலிகாம் கம்பெனிகளும் ஒரு கவனிக்கப்படாத உத்தியை பயன்படுத்தி கூச்சமே இல்லாம சம்பாதிக்கிறார்கள்.
நல்லா யோசிங்க 365 நாட்களில் 13 தடவை 28 நாட்களுக்கான பேக்கை புதிதாக போடுகிறோம் நம் இந்திய நொன்னைவாயன்கள்(நான் உட்பட).
கேட்க நாதியில்லை.வாயையும் சூவையும் பொத்திக்கொண்டுதான் பல விஷயங்களை இவ்வாறு பொறுத்துக்கொண்டும் கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றோம்.
இந்த கண்றாவிகள் எல்லாவற்றையும் கடந்து என்னை கவர்ந்துவிட்ட ஒரு சமீபத்திய அம்சம் ஏர்டெல் விங்க் இசை செயலி.
பதிவிறக்கம் கூகிள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஏப்ஸ்டோரிலும், ப்ளாக்பெர்ரி போன்ற இன்னபிற ஸ்டோர்களிலும் தத்தம் மாடலுக்கேற்ப இலவசமாக சுலபமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
ஒரு மாத காலத்திற்கு சந்தா(சப்ஸ்கிரிப்ஷன்) இலவசம்.
ஜிமெயில் மூலமும் உள்புகலாம்.
தேவையான வெஸ்டர்ன் முதல் பாரம்பரிய, பாலி கோலி மாலிவுட்கள் வரை சகல இசைகளையும் நொடிப்பொழுதில் உங்கள் விரல்நுனியிலும் அதன்மூலம் காதுகளுக்கும் இதயத்திற்கும் கடத்தலாம்.

http://play.google.com/wynk

http://get.wynk.in

உலகின் லேட்டஸ்ட் அதிரடி ஹிட்கள் எல்லாம் கேட்டு உதார் விடலாம்.
இப்பொழுது என் ஃபேவரைட் பாடல் 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் பாடகி எல்லீ கோல்டிங் பாடிய love me like you do.

உள்ளூர் தபலா கலைஞர்கள் முதல் இளையராஜா, எஸ்பிபி வரை எல்லாருக்குமான ஸ்பெஷல் ப்ளே லிஸ்டுகளும் உண்டு.
ஜமாய்க்கலாம்.ஜமாய்க்காதவர்கள் உடனே ஜமாயுங்கள். 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s