தல ஃபீவர்

image

வாட் எ க்யூட் கப்பிள்

நீங்க இளைய தளபதி விஜய் ரசிகரா இருந்தா இந்த போஸ்ட்டை பொறுத்துக்குங்க.ஏன்னா முழுக்க முழுக்க நான் பாடப்போறது தலப்புராணம்.ஏன்னா தலயின் கோடிக்கணக்கான வெறி ரசிகர்களுள் அடியேனும் உண்டு.
ஒவ்வொரு ரசிகர் மன்ற ஷோவுக்கும் திருவண்ணாமலை தியேட்டர்களில் என்னை நீங்க சாதாரண பாத்துட்டு விசிலடிச்சு கூப்பிடலாம்.
அதனால தளபதியை எனக்கு பிடிக்காதுனு சொல்ல முடியாது.அவரோட டேன்ஸ், கியூட் மேனரிஸம்ஸை குஷி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர, பிரியமானவளே, காதலுக்கு மரியாதை,ஃபிரெண்ட்ஸ், துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, மின்சாரக்கண்ணா, போக்கிரி,தமிழன், புதிய கீதை(சிதம்பரம் லேனா தியேட்டர்) துப்பாக்கி, ஜில்லா, கத்தி போன்ற படங்களில் ரசிச்சு ரசிச்சு பார்த்திருக்கிறேன்.ஏன் அவரோட புலி படத்துக்காக வெயிட் பண்ணினு இருக்கிற பல தமிழர்களில் நானும் உண்டு.

image

கியூட் இளைய தளபதி

விஷயம் என்னன்னா விஜய்ய பிடிக்கும்.தல மேல ஒரு வெறி.அது ஏன்னு என்னால கரீக்டா சொல்ல மிடில.பட் என்னவோ காந்தம் இருக்கு பா அவருகிட்ட.
அதுவும் அமர்க்களம் வாசு கேரக்டரை பாத்துட்டு அன்னிக்கு அசந்தவன் தான்.அந்த தாடி, செயின், விநோத வெறி, மனதில் சமூகத்தின் மேல் இனம்புரியாத வெறுப்பு எல்லாம் ரொம்பவே ஈர்த்தது.அந்த வாசு செயின் வாங்க சொல்லி அடம்புடிச்சு எங்கம்மாகிட்ட நிறைய மொத்து வாங்கி இருக்கேன்.
அப்புறம் முகவரி, பூவெல்லாம் உன் வாசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
புகழ் தியேட்டரில நானும் எங்கம்மாவும் சிட்டிஸன் படம் பார்த்து அசந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.14 வருஷத்துக்கு முன்னாடி.இப்ப அந்த தியேட்டரையே இழுத்து மூடிட்டாங்க.ஆனாலும் தல மேல இருக்கிற கிரேஸ் அதிகமாச்சே தவிர குறையல.

image

பக்கா கிளாஸிக் லுக்

அப்புறம் தீனா.திணக்கு திணக்கு திண தீனா.என்னா ஸ்டைல்? என்னா மாஸ்.இன்று வரை அந்த லுக் க்ளாஸ்.பட பாடல்கள் மனப்பாடம்.
ரெட் பாக்கல.பட் கெட்டப் உசுரு.மொட்டைய தடவிகிட்டே அதுனு சொல்ற ஸ்டைல பாத்து படத்துக்கு கூட்டிட்டு போகச்சொல்லி கதறி இருக்கேன்.தியேட்டர்ல பார்க்கமுடியலயேங்கிற காரணத்துக்காக இன்னைக்கு தேதி வரையில அதை நான் பார்க்கலை.
வாலி.சிம்ப்ளி அமேஸிங் மூவி.ஆசை-பிரகாஷ்ராஜோட வில்லத்தனத்தையும் மீறி ஈர்த்த ஈர்ப்பு, காதல் கோட்டை பார்க்காமலே என்னையும் அஜித்தை காதல் செய்ய வைத்தது.
காதல் மன்னனில் வரும் உனை பார்த்த பின்பு நான் பாடல் தல வெறியர்களின் தேசிய கீதம்.

image

அமராவதி எங்கள் தலயின் முதல் தமிழ் சினிமா பிரவேசம்–பிரேம புஸ்தகம் என்ற தெலுகு படப்பிடிப்பிற்கு பிறகு.
நானே ஒத்துக்கிறேன்–ஜி, ஜனா, ஆஞ்சநேயா,ஆழ்வார் எவ்வளவு பெரிய தல ரசிகனையும் கடுப்பேத்தும்.
வரலாறு எங்க தலயால கமல் அளவு நடிக்க முடியும், ஒரு பரதநாட்டிய கலைஞர் அளவு டான்ஸ் ஆட முடியும், ஒரு கல்லூரி மாணவன் அளவு மிடில்ஏஜ்ல கூட உடம்பை குறைக்க முடியும், கேரக்டருக்காகவும் பேரு வாங்கி வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ முடியும்னு நிரூபிச்ச கே.எஸ்.ரவிக்குமார் படம்.
வில்லன் டபுள் ரோல் அந்த சேஞ்ச் ஓவர்கள் க்ளாஸிக்.

image

பக்கா மாஸ்

அட்டகாசம் தல போல வருமா?
தல தீபாவளி கொண்ட தெக்குச்சீமை தூளு கிளப்பிய தூத்துக்குடி ஆளு அவன்.
கிரீடம்–மக்களை சரியாக சென்றடையாத ஒரு அற்புதமான படம்.அந்த படத்தில் நடித்ததற்காகவே தலயை நேசிக்கிறேன்.
ஏகன் சக்தி தியேட்டரில் நண்பர்களுடன் ரவுசாக பார்த்த படம்.
பில்லா தலயின் ரேஞ்சையே மாற்றிய படம்.நான் சொல்லி தெரிய தேவையில்லை.அப்பார்ட் ஃபிரம் தல கொழுக் மொழுக் நயன்தாரா டார்லிங் வரும் ஒவ்வொரு சீனும் தெறி.அந்த பில்லா டாட்டூ ஹைலைட்.அய்யோ அந்த டாட்டூ இடத்துல நான் இருக்கக்கூடாதானு தமிழக பசங்களை ஏங்க வச்ச இடம்.ச்சீ படம்.
மங்காத்தா–அவுட் அண்டு அவுட்டு தல ராஜ்ஜியம்.அதப்பத்தியும் நான் சொல்லவேண்டியதில்லை.
ஆரம்பம் மீண்டும் விஷ்ணு.எங்கள் கல்லூரியிலேயே வந்து ஷூட்டிங் செய்தார்கள்.தல மட்டும் வரவில்லை. 😦
இளைய தளபதி எங்கள் கல்லூரியில் ஜில்லா படப்படிப்பின் போது அவரது ஷோல்டரையே டச் செய்து பார்த்திருக்கிறேன்.ஆனால் தல முகத்தை கூட இதுவரை நேர்ல பார்க்க முடியல.
வீரம் ரொம்ப சிம்பிளான ஆனால் தல ரசிகர்களை நோக்கி சரியாக ஏவப்பட்ட படம்.
ஆனால் ரொம்ப மனசுக்கு நெருக்கமாகிவிட்ட சமீப தல சித்திரம் என்னை அறிந்தால் தான்.கவுதம் ஹாரிஸ் திரிஷா காம்போ வேற.அதாரு பண்ணிட்டார் விக்டர் அருண் விஜயோட சேர்ந்து எங்க சத்யதேவ் ஐபிஎஸ்.
நாலே ரிங்டோன்தான் பல வருஷமா என் மொபைல அலங்கரிச்சிகிட்டு வருதுங்க.
1.தல போல வருமா(பழைய டோன்)-அட்டகாசம்
2.பில்லா தீம்
3.மங்காத்தா தீம்
4.என்னை அறிந்தால் டைட்டில் சாங்.
எப்போ தல56 அனிருத் பாட்டு வருமோனு இருக்கு.அப்போதான் புது மாஸ் ரிங்டோன் வரும்.அதுவரை எப்பயும் போல “என்னை அறிந்தால்” கடிகாரம் பார்த்தல் தவறு-நொடிமுள்ளாய் மட்டும் நகருதான்.
தல நாங்க காத்துட்டு இருக்கோம்.வாங்க! லவ் யூ 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s