தீப்தி வொர்ட்பிரெஸ்ஸிலும் வந்துவிட்டாள்

image

ரசிகர்களின் ஏக ஆதரவினால் நான் பிளாக்கரிலும் முகநூலிலும் எழுதிய என் செல்ல தீப்தி இங்கே வொர்ட்பிரெஸ்ஸிலும் நுழைந்து உங்களை வசியம் செய்ய வந்திருக்கிறாள்.

விக்னேஷ்க்கு விரல் நடுங்கியது.உடலே விரல் போலத்தான் இருக்கும்.ஆனால் பைத்தியம்.தீப்தி பைத்தியம்.
ஒரு சேஸிங் நாய் போல.அவளை பின்தொடர வேண்டும்.அவள் அழகை ரசிக்க வேண்டும்.ஆனால் அவளை எதிர்கொண்டால் என்ன செய்வது என்று ஒரு விவரமும் தெரியாது.விரல் சூப்பி அசடு வழிவதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் பின்தொடர்வதற்கு ஏற்ற பாவனைகளை கற்று வைத்திருந்தான்.மெரூன் சல்வார் காமீஸில் அட்டகாசமாக இருந்தாள்.அவள் ஸ்டோர்ஸூக்கு சென்று ஜூஸ் ஆர்டர் செய்தாள்.கொஞ்சம் நேரம் கழித்து இவனும் அதே ஜூஸ் ஆர்டர் செய்தான்.
அவனை விட தீப்தி ஒரு வயது மூத்தவள் என்ற விஷயம் அவனுக்கு மேலும் கிக் ஏற்றியது.அவள் கொஞ்சிய நாய்க்கு பிஸ்கட் போட்டான்.அவள் பிஸ்கட் கொடுத்த நாய்குட்டிக்கு முத்தம் கொடுத்தான்.
தீப்தியை இவன் ஃபாலோ செய்வது எப்படி இவ்வளவு நாட்களாக அவளுக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டான்.அதே சமயம் தெரிந்தும் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாளா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
ஏதோ ஒன்று மாட்டினால் நுங்குதான்.அவள் அப்பன் பெரிய இடத்து ஆள்.ஆனாலும் அடி வாங்கியாவது ஃபாலோ செய்வதற்கு வொர்த் அவள்.
ஏரியா பசங்கள் எல்லாம் இவனை ஓட்ட ஆரம்பித்தனர்.
“பார்றா தீப்தியோட ஹச்சு டாக் போறான்!” என்று.
அதையே நேஷனல் அவார்டு ரேஞ்சுக்கு ஸ்லாகித்து பெருமையாக எடுத்துக்கொண்டான்.
ஒரே ஒருநாள் தீப்தி வீட்டு தெருக்கே சென்று வாசலிற்கு எதிரில் உள்ள புளியமரத்தை சொரிந்து கொண்டிருந்தான்.காக்கா இவன் லீவிஸ் சட்டை மீது கக்கூஸ் போனது.அதை பற்றியெல்லாம் என்ன கவலை?

திடீரென்று அந்த nightmare உண்மையானது.தீப்தி இவனை கவனித்துவிட்டாள்.மிக விரைவாக இவனை நோக்கி நடந்து வந்தாள்.நாயாக இருந்தாலாவது தெறிக்க ஓடலாம்.பாவம் மனுஷன்.
“ஏய்! நீ ஏன் என்னை டெய்லி ஃபாலோ பண்றே?”
எட்டாவது அதிசயமாக தில்லு வந்து விக்னேஷ் வாய் திறந்தான்.
“நீ ரொம்ப அழகா இருக்கே!”
“சோ?” என்றாள்.
“உன்னை ஃபாலோ பண்றது எனக்கு பிடிச்சிருக்கு!”
“என்ன லவ்வா?”என்றாள்.
“லவ்லான் இல்லை.வந்தா உடனே சொல்றேன்.இப்போதைக்கு உன்னை ஃபாலோ பண்ணனும் அவ்ளோதான்.ஜஸ்ட் ஒரு க்ரேஸ்”
இந்த பதிலை எதிர்பாராத தீப்தி,”ஹவ் டேர் யூ? ஐ வில் கால் தி பொலீஸ்!” என்றாள்.
“பண்ணிக்கோ.அழகான பெண்ணை பின்தொடர்ந்த அழகான இளம் வாலிபன் கைதுனு நியூஸ்ல போடச்சொல்லு” என்றான்.
“என்னதான்டா உன் பிரச்னை? ஏன் என்னை இப்டி டிஸ்டர்ப் பண்ற?” இது தீப்தி.
“என்னது டிஸ்டர்ப்பா? இப்போ நீ என்னை வந்து பாக்கற வர்றைக்கும் உனக்கு -நான் உன்னை ஃபாலோ பண்ற விதத்துல ஏதாச்சு தொந்தரவு கொடுத்திருக்கேனா?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. 
யுர் பிஹேவியர் ஜஸ்ட் ஃப்ரீக்ஸ் மீ அவுட்” என்றாள்.
“சரிம்மா! இனிமே உன்னை நான் ஃபாலோ பண்ணல.நீயும் உன் பேஸ்புக் பிரொஃபைல பப்ளிக்ல இருந்து ப்ரைவேட்டுக்கு மாத்து.உன் போட்டோவை கண்ட கம்னாட்டிங்களாம் செல்லுல வச்சி தடவி பாத்துட்டு இருக்கிறத என்னால சகிக்க முடில.என்னை விட அங்கதான் உன்னை நிறைய பேர் ஃபாலோ பண்றாங்க!” என்றான்.
“ஏய் ஸ்டுபிட் அது ட்விட்டர் டா!” என்று தலையில் அடித்துக்கொண்டே சொன்னாள்.
அவன் அந்த இடத்தைவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.ஒரு ஃபேக் ஐடி உருவாக்கி அவளை ஃபாலோ செய்ய ஆரம்பித்தான்.
மாலை தன் ட்விட்டர் கணக்கை பார்த்த தீப்தி “ஐ ஒரு ஃபாலோவர் அதிகமாகி இருக்கான்! ” என்று சிரித்துக்கொண்டாள்.
நல்ல செல்ஃபியாக எடுத்த dp போட வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.
அவள் அன்று நைட் போட்ட செல்ஃபிக்கு முதல் ஆளாக ஃபேவரைட் செய்தது விக்னேஷ் தான்.தன் ஃபேக் ஐடியிலிருந்து ஸ்மைலி செய்தான்.பதிலுக்கு தீப்தியும் ஸ்மைலி அனுப்பினாள்.
“அட கருமமே! இதுக்காடா இவ்வளவு பாடுப்பட்டோம்!” என்று வாய் பிளந்தான்.

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s