நாளிதழ் வர்த்தகம்

image

மெட்ரோ எடிஷன் கூட ரூ.3 தான்!

திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகமெங்குமே தமிழ் தினசரிகளின் விலை ரூ.5.
சரி தமிழக தினசரிகள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன.அதிகம் நம் மாநிலத்திலும் பெங்களூருவிலும் புதுச்சேரியிலும்தானே கோலோச்ச முடியும்.
அதுவும் தினத்தந்தியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கோடி பிரதிகள் மேல் விற்கிறது.
இந்தியில் பல தினசரிகள் இந்த சாதனையை செய்கின்றன.உதாரணம் தைனிக் பாஸ்கர் எல்லாம் பல கோடி பிரதிகள் விற்கும்.அவர்கள் பற்றிய நிலவரம் வேறு.இந்தியாவின் பெரும்பான்மை மொழியோடு போட்டியிடும் அளவிற்கு தமிழுக்கு குறிப்பாக தினத்தந்திக்கு திராணி உள்ளது என்பது ரொம்ப சந்தோஷம்.
நியாயமான விலை பார்த்தால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தை சேர்ந்த ஆங்கில எக்ஸ்பிரஸ் ரூ.3க்கும் தமிழ் தினமணி ரூ.5க்கும் கிடைக்கின்றன.
தினமலர், தினகரன் போன்றவை அசராமல் ரூ.5 தான்.
இது தமிழின் நிலை.தமிழ் தி ஹிந்து வும் சரி அதே நிலை.அதே விலை தான்.
இவர்கள் எலீடிஸத்திற்காக இந்த விலை நிர்ணயமா? இல்லை ரீடர்ஷிப் மற்றும் சர்க்குலேஷன் ரேஞ்சிற்கு ஏற்றாற் போல விலை நிர்ணயிக்கிறார்களா? இது ஒரு கேள்வி.
இரண்டாவது தி ஹிந்து(ஆங்கிலம்) பாரம்பரியம் என்று வைத்துக்கொண்டாலும் திருவண்ணாமலைக்கு கிடைப்பது வேலூர் எடிஷன் வெறும் மிஞ்சி மிஞ்சி போனால் 16 பக்கங்கள் தான்.இதுவே வார இறுதிகளில் ரூ.6க்கு கூட சில எக்ஸ்ட்ரா பக்கங்களை இணைத்து விற்பார்கள்.
இந்த கேள்வியை பலரிடம் கேட்கும்போது அவர்கள் கூறிய பதில்கள்.
1.பேப்பர் தரம்
2.டிரெடிஷன் மற்றும் வாசகர் அளவு
3.எல்லா பக்கங்களிலும் வண்ணம்.
ஹிந்துவை காப்பதற்கும் எக்ஸ்பிரஸ்ஸை கவிழ்ப்பதற்கும் இந்த ஆர்க்யூமெண்ட் உதவலாம்.அதிலும் டிரெடிஷன் என்ற குறிப்பு நிற்காது.ஹிந்துவிற்கு நிகரான பாரம்பரியம் எக்ஸ்பிரஸ்ஸினுடையது.
இது மூன்றிலுமே ஹிந்துக்கு இணையான தரம் கொண்ட தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ வெறும் ரூ.3 க்கு விற்கிறது.
இத்தனைக்கும் ஆங்கில சர்க்காரால் ஆரம்பமான காலத்தில் இருந்து சர்க்குலேஷன் இருக்கிறது.
நினைத்திருந்தால் அதே எலைடிஸ்ட் மனப்பாங்கோடு இன்றைய நாளிதழ்களை தூக்கி போட்டு மிதித்து சாப்பிடும் வகையாக ரூ.6/ரூ.7 தினசரி விலையிட்டால் கூட வாசகர்கள் அஞ்சாமல் வாங்குவார்கள்.காரணம் மேற்கூறிய எந்த காரணங்களும் இங்கு டைம்ஸூக்கு அடிபடாது.ஆனால் அவர்கள் இன்னமும் ரூ.3க்குதான் சேல்ஸ் செய்கின்றனர்.
அவர்களின் நோக்கம் வியாபாரம் மட்டும் அல்ல.சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்து அவர்களிடத்தில் நம்பிக்கையை விதைத்து நிலையாகிடல்.
இந்த ஸ்ட்ரேட்டஜி தான் லாங் டெர்ம்.
16 பக்க திருவண்ணாமலை எடிஷனோ,62 பக்க மெட்ராஸ்/பெங்களூரு மெட்ரோ எடிஷனோ அதே ரூ.3 தான்.
இதன்மூலம் நிலையான வாசகர்களை அசராமல் பெற்று இந்தியாவிலேயே, ஏன்? உலகிலேயே அதிகம் விற்பனையாகும் நாளிதழ் நம் டைம்ஸ் தான்.
இன்று காலை ஒரு பங்க் கடையில் சென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கேட்டேன்.என்னிடம் சப்ஸ்கிரிப்ஷன் இல்லை.
3 ரூபாய் சில்லறையும் இல்லாத காரணத்தினால் 10 ரூபாய் ஒற்றை தாளை நீட்டினேன்.கடைக்காரருக்கு என்ன ஆத்திரமோ சில்லறை இல்லை என்றவுடன் வெறி வந்துவிட்டது.காலையில் சரியாக போனி ஆகவில்லை போல.
இறுதியில் வாக்குவாதம் அதிகமாகி “நான் என்ன சில்லறை வச்சிகிட்டா வஞ்சனம் பண்றேன்” என்று இருவரும் அடம்பிடிக்க உன் கடைமில பேப்பரே வேணாம் போயா என்று நான் வீராப்பாக வெளியேறி விட்டாலும் டைம்ஸ் வாங்கியே ஆகவேண்டும் என்றது மனது.
இதற்கு நடுவே வெளியே லைட்டாக ஐஸ் போல தூறிக்கொண்டிருந்தது.
அது போதாது ஒரு வயதான பிச்சைக்கார தாத்தா என்னிடம் வந்து சில்லறை கேட்டார்.”தாத்தா! என்கிட்டயும் சில்லறை இல்லை, அந்த கடைகாரனும் சில்லறை தர மாட்டறார்,உனக்கு இங்க சில்லறை கிடைக்காது, போங்க!” என்று கடைக்காரரையும் சேர்த்து அசிங்கபடுத்திவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து இங்கிருந்து மூன்றாவது ரோடு தள்ளியிருக்கும் பங்க் கடைக்கு விரைந்தேன்.
அங்கும் அவர் சில்லறை கேட்டார்.
சிரித்துக்கொண்டே “சில்லறை தான் சார் நவீன இந்தியாவுல பிராப்ளம்.கண்டக்டர் கிட்டயும் சில்லறை இல்லை.நியூஸ்பேப்பர் விக்கிற கடைக்காரர் கிட்டயும் சில்லறை இல்லனா பொதுமக்கள் எங்க சார் போவாங்க?” என்று நான் வெள்ளந்தியாக கேட்கவும் அவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.உடனே பேப்பரையும் சில்லறையையும் எடுத்து கொடுத்து “போங்க தம்பி!” என்றார்.
நனையாமல் இருப்பதற்காக பாக்ஸில் பேப்பரை வைத்து பூட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன்.மனதில் வாக்குவாத கடைக்காரர் டெக்னிக் லேசாக புரிந்தது.அவரிடம் ‘ரவுண்டாக’ வியாவாரம் பண்ண வேண்டும்.அதாவது ஹிந்து வாங்கினால் ரவுண்டாக 5 ரூபாய்.சில்லறை கொடுத்துவிடுவார்.அதேபோல வேறு எந்த பொருளுக்கும்.இதுவே ஒரு மூன்று நான்கு ரூபாய் வஸ்து என்றால் கூடவே ஒரு சாக்லேட்டையோ பூமரையோ வேண்டாவெறுப்பாக ‘இலவச’ இணைப்பாக வாங்கி மென்றாக வேண்டும்.இல்லையென்றால் ஒரு பர்பியாச்சு வாங்கி ‘காம்பன்ஸேட்’ செய்ய வேண்டும்.அப்படி செய்யலைனா அவருக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆகிடும்.அதான் அந்த எரிச்சல் எல்லாம் வர்ற கஸ்டமர்ஸ் நம் மீது காட்டுவார்.வியாவாரம் போனாலும் பரவாயில்லை என்று.
போங்கயா நீங்களும் உங்க கன்ஸ்யூம்ர் சென்ஸூம்.
3 ரூவாயோ 3 லட்சம் கோடி ரூவாயோ மனுஷனை மொதல்ல சம்பாதிச்சாதான்யா அப்புறம் நிலைக்க முடியும்.
இது கார்ப்பரேட்களுக்கும் தான்.
🙂 😉

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s