மீள்வாசிப்பு- What Young India Wants

image

சேத்தன் பகத்தின் எல்லா நாவல்களையும் வாசித்து இருக்கிறேன்.
Half Girlfriend தவிர.
மிக எளிமையான எழுத்தாளர்.எழுத்தை எப்படி மிக எளிதாக மற்றவர்களை ஈர்க்கும்படியாக அணுகுவது? என்பதனை நான் சேத்தனிடம் பயின்றிருக்கிறேன்.
அவரிடம் என்ன ஸ்பெஷாலிட்டி என்றால் ஒரு துளி கூட இன்ட்ரெஸ்ட் இல்லாமல் உட்கார்ந்தாலும் தீ பற்றுவது போல கயிற்றால் கட்டி கதைக்குள் இட்டுச்சென்றுவிடுவார்.
5 point someone ரொம்ப சிலாகித்துப் படித்தது.3 mistakes of life ஏதோ உருவம் போல ஞாபகத்தில் இருக்கிறது.One night at the call centreம் அதே கேட்டகரி.2 statesம் Revolution 2020ம் ஒரிரு நாளிலேயே படித்து முடித்த நினைவு.
அவரின் புத்தகங்கள் தெரு பிளாட்பார கடைகளிலும் கிடைக்கும், மால்களிலும் ஹிக்கின்பாத்தம்ஸ் போன்ற பிரத்யேக கடைகளிலும் கிடைக்கும்.
சாமானியனையும் ஹைகிளாஸ் இந்தியனையும் சம அளவில் தொட்டுவிட்ட சாதனை எழுத்தாளர்.
தமிழில் சாரு தன் ப்ளாக்கில் அடிக்கடி பிரதிகளின் எண்ணிக்கை பற்றியும் வாசிப்பு பழக்கம் மக்களிடையேயும் இளம் தலைமுறை இடையேயும் குறைந்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிடுவார்.
இப்படிப்பட் செல்ஃபி புள்ள ட்விட்டர் இன்ஸ்டா இந்திய யூத் தலைமுறையை முழுவதும் கட்டிப்போட்டு வைத்து “நான் சேத்தன் பகத் நாவல் வாசிக்கிறேன்/வாசிக்கப்போகிறேன்/வாசித்துக்கொண்டிருக்கிறேன்/வைத்திருக்கிறேன்/வாங்கிவிட்டேன்/ஆர்டர் செய்துள்ளேன்” என்பதனை ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதும் அளவு அவர்களை ஏதோ ஒரு வகையில் வசீகரித்திருப்பதே பெரும் சாதனை தான்.
எல்லா அரசியல் கட்சியினருடனும் சுமூகமாய் நடந்து கொள்பவர்.முன்னாள் ஐஐடி, ஐஐஎம் மாணவர், லவ் மேரேஜ் ஜாலி பாய்,தற்போதைய மும்பைவாலா, தைனிக்கிலும் TOIயிலும் பல கொதிக்கும் columnகள் எழுதியவர், அதிகம் பிரதிகள் விற்கும் நம்பர் 1 எழுத்தாளர்,சோஷியல் மீடியா பதிவர், ஊக்கம் தூண்டும் பேச்சாளர் என்ற பன்முகங்கள்.

புனைவு முகம் மட்டும் சோறு போடாது என்பதை உணர்ந்து முதல் நான்-ஃபிகஷன் படைப்பான What Young India Wantsம் ரிலீஸ் செய்தார்.
அவர் ராசி அப்படி.இந்திய எழுத்துலகின் ராக்ஸ்டார் அல்லவா?
3 இடியட்ஸ் போலவும்,2 ஸ்டேட்ஸ் போலவும் இதுவும் பிளாக்பஸ்டர் தான்.
இது வெளி வந்த காலம் UPA ஆட்சியில் இருந்தது.இந்தியர்கள் காங்கிரஸ் மீதும் பொதுவாக அதன் ஊழல்கள் மீதும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த தருணம்.

இந்த புத்தகத்தை தன் சுருக்க இன்ட்ரோ,சமூகம், அரசியல், யங்ஸ்டர்ஸ்,இரு குறுங்கதைகள் என்று கொண்டு பிரித்து, சாட்டையடி கொடுத்து நறுக்கென மண்டையில் ஏறும்படி படைத்திருக்கிறார்.
அவர் சொல்லும் எல்லாமே நடைமுறை வாழ்வில் சாத்தியம் என்பதுதான் ஹைலைட்.

டெல்லியில் பிறந்து வளர்ந்து, தானே எதிர்பாராமல் ஐஐடி டெல்லியினுள் நுழைந்து, பின் ஐஐஎம் அகமதாபாத்திலும் நுழைந்து, பின் அங்கு தன் மனைவி அஞ்சலிக்கு நூல் விட்டு, ரூட் பிடித்து, மனதில் இடம்பெற்று, மேட்டரும் முடித்து, இருவரும் பட்டம் பெற்று, கல்யாணமும் செய்து, ரிச் லேவிஷான ஹாங்காங்கில் பணக்கார வாழ்க்கை வாழ்ந்து சலித்தது, சலிக்காமல் இரு பிள்ளைகளை காதலின் சின்னங்களாய் பெற்றெடுத்தது, பின் பேங்க் வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்து எழுத்தாளரானது என்று பற்பல ஸ்வாரஸ்ய சம்பவங்களை இடையிடையே புகுத்தி சென்றிருப்பது அருமையான உத்தி.
ஏற்கனவே 2 வருடம் முன்பு சென்னை அமிஞ்சிக்கரை பிவிஆர் ஸ்கைவாக்கின் landmark புத்தக அரங்கில் வாங்கி வாசித்து முடித்திருந்தாலும் இதன் சுவையை மீண்டும் பருகிட சமீபத்தில் ஆசை முளைத்தது.
வாசிப்பே ஆனந்தம்.மீள்வாசிப்பு பேரானந்தம்.
நீங்கள் வாசிக்க போகிறீர்களா?
மீள்வாசிக்க போகிறீர்களா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s