இன்ஸ்டா தேவதைகள்-2.பூனம் பாண்டே

image

கடந்த வருட பிறந்தநாள்

மன்னிக்கவும்: இங்கு நீங்கள் நினைப்பது போல ஒரு ‘வழக்கமான’ பூனம் பாண்டே புகைப்படம் கூட இடம்பெறாது.இது அவரின் குழந்தைத்தனமான புகைப்படங்களுக்கான ஸ்பேஸ் மட்டும்.பாரதி உருவம் லோகோவாக வைத்துக்கொண்டு புதுமைப்பெண்களை கேவலமாக சித்தரித்து, அவர்களை விமர்சிக்கும் இடம் இதுவல்ல.இது வெறும் அன்ன பட்சி போன்ற நல் அழகியலின் ஆராதனை.
இவர் பெரிய நடிகை இல்லை.ஆனால் வைரல் பிரபலம்.ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்கள்.காரணம் இவரின் அதிரடி நடவடிக்கைகள்.

image

நெர்ட் லுக்

இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஆராய்ந்து நான் இங்கே கொடுத்துள்ள புகைப்படங்களில் மட்டும்தான் அவர் துணி உடுத்தியுள்ளார்.மற்ற எல்லாமே நியூட் அல்லது செமி நியூட் அல்லது பிகினி.அதை தவறு/சரி என்று ஜட்ஜ் செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை.
ஏனெனில் சமூகத்தின் மனநிலையை தான் அவர் பிரதிபலிக்கிறார்.இந்தியா போன்ற “காய்ந்து போன” ஹிப்போகிரிட்டிக்கல் சமூகத்தில் இவரை ஆண்கள் ரசிக்கின்றனர்.அதே சமயம் ரசித்துவிட்டு முக்காடு போட்டுக்கொண்டு அவரது கேரக்டரை கேவலமாக assassinate செய்கின்றனர்.
அதானாலோ என்னவோ பூனம் புனிதம் பற்றியெல்லாம் கவலைப்படுதில்லை.இந்த கன்சர்வேட்டிவ் இந்தியன் சொசைட்டி என்று அழைக்கப்படும் ஆண்கள் எல்லோரும் நேரில் பெண்களை கேரக்டர் வைத்து விமர்சிப்பவர்களாகவும், மறைமுகத்தில் அவர்களை ரசிப்பவர்களுமான இரட்டை முகமூடி அணிபவர்கள்.இதனால் இந்த யோக்கியர்கள் பூனம் பாண்டேவை ஒரு slut என்று சொல்வதோ/கடவுள் என வர்ணிப்பதோ அபத்தமானது.

image

நிழல்கள்

இந்தியா உலக கோப்பையை ஜெயித்தால் முழு நிர்வாணமாக மீடியாக்களுக்கு போஸ் கொடுக்க ரெடி என்று சர்ச்சையை கிளப்பி 2011ல் லைம்லைட்டுக்கு வந்தவர் பூனம்.
அவர் புத்திசாலி.அதற்கு ஆசைப்பட்டு ஏமாந்தவர்களே முட்டாள்கள்.
சன்னி லியோனோ, பூனம் பாண்டேவோ இந்திய /உலக ஆண்களின் பிரதிபலிப்பே அவர்கள்.
அவர்களை குறை சொல்ல வேண்டுமானால் ஒரு யோக்கியன் கூட கிடைக்கமாட்டான்.அப்புறம் ஏன் இந்த டபுள் கேம்?
போங்கடா போய் புள்ளகுட்டிகள போய் படிக்க வைங்க டா.
இனி கேலரி மட்டுமே.

image

கார் செல்ஃபி

image

ஃபிரீ ஸ்டைல் ஹேர்

image

கூலர்ஸ் கெத்து

image

சில்க் போன்ற ஸ்டைல்

image

நாய்க்குட்டியுடன் விளையாட்டு

image

அழகு பதுமை

image

போன வருட பர்த் டே

பின்குறிப்பு: தன்னை பற்றிய மிக கேவலமான விமர்சனங்களையே தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ளார்.அந்த அளவுக்கு தில்லுக்காரி.
தயவு செய்து இவர் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு கீழே இருக்கும் உலக ஆண்களின் கமெண்டுகளை படித்து விடாதீர்கள்.எழுத்தில் கொண்டுவர முடியாத அளவிற்கு அசிங்கமாக இருக்கும்.அப்புறம் எப்படி இவர்கள் அவளை நல்லவளா கெட்டவளா என்று நிர்ணயிக்கலாம்?
ஓ! அப்ப நீ என்ன பெரிய நியாயவானா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.நான் அவ்வளவு நியாயவான் கிடையாதுதான்.ஆனால் அவ்வளவு கீழ்த்தரமானவனும் கிடையாது.அந்த புரிதல் என்னிடத்தில் எப்பொழுதும் இருந்திக்கிறது.இது நான் உங்களை நல்லவர்களாக மாறுங்கடா என்று போதிக்கும் இடம் கிடையாது.அப்படி யாரும் யாரையும் போதிக்கவும் முடியாது.
இன்னொரு ஜீவனை தேவையில்லாமல் அவர் உடுத்தும் உடை கொண்டும், அவர் உடல்கொண்டு மட்டும் மட்டப்படுத்தாதீர்கள் என்று மட்டும் நிச்சயமாக இங்கே என்னால் பதிவு செய்ய முடியும்.
நன்றி. வாழ்க பாரதம்.வளர்க மனிதம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s