ராணி ருத்ரம்மா தேவி

image

ராணிக்கான அத்தனை பொருத்தமும் உண்டு

அனுஷ்காவுக்கும் வரலாற்று, திகில், பிரம்மாண்ட மசாலா திரைப்பட கதைகளுக்கும் பயங்கர கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜூவாலஜி எல்லாம்.
அருந்ததி பொம்மாயியாக ஆந்திராவையும் டப்பிங்கில் தமிழ்நாட்டையும் அலறடித்து ட்ரெண்ட் கிரியேட் செய்தார்.
ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெட் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் ஆக்ஸன் கியூன் விஜயஷாந்தி தான்.அதனால் பல ஹீரோயின்கள் தங்களை மையமாக வைத்து படமெடுக்கும்போது விஜயஷாந்தியை மட்டுமே ஞாபகம் வைத்து இயக்குநர்களை பயமுறுத்தி டார்ச்சர் செய்துவந்தனர்.

அதன் விளைவாக தியேட்டரிலும் ஆடியன்ஸ் டென்ஷனடைந்து மண்டையை பிய்த்து கொண்டனர்.
இதிலிருந்து விலகி-ஹீரோயினுக்கான ஸ்பேஸையும் முழுமையாக கதாநாயகியாக ஆக்கிரமித்து அதே சமயம் இயக்குநர், ரசிகர் மனங்களிலும் இடம் பிடித்து புது ரூட்டை ஆரம்பித்து வைத்த பயனீர் தென்னிந்தியாவிலேயே முதலில் செய்தது அனுஷ்கா மட்டும் தான்.

அதன் பிறகுதான் இன்றைய ராஜாத்திகள் வரை லீடிங் லேடீஸாக வாழ்ந்துவருகின்றனர்.
ரஜினியோடு லிங்கா ஹிட்டடிக்காவிட்டாலும் அனுஷ்கா செம்ம சார்மிங்.அனுஷ்காவால் தான் கிளைமேக்ஸில் பலூன் வெடித்தது.அந்த அளவுக்கு ‘வெயிட்டாக’ இருந்தார் என்று கலாய்ப்பவர்களும் உண்டு.
ஆனால் அனுஷ்கானா ஹைலைட்டே கொழுக் மொழுக்னஸ் கொண்ட அரபி குதிரைத்தனம்தானே?தெலுகு பில்லாவில் ஐஸ்க்ரீம் அனுஷ்காவை டூபீஸில் ரசிக்காதவர்களே கிடையாது.மொபைலா மொபைலா! மாதவனுடனான அந்த பாடலை மறக்க முடியுமா?
அதைபோய் குறையாக சொல்கிறார்கள் மொன்னை வாயன்கள்.
சரி அதை விடுங்க.விஜய்யுடன் “என் உச்சி மண்டைல சுர்ருங்குது” ஒரு பாடல்லேயே குட்டி குட்டி உடைகளோடு தமிழகத்தையே கிறங்கடித்தவர்.சூர்யாவின் சிங்கமில் பக்கா கமர்ஷியல் ஹீராயின்.

காதல் வந்தாலே, என் இதயம் பாடல்களின் மூலமே கிளாமர் என்றாலே அது அனுஷ்கா என்ற நிலை உருவாகி விட்டது.
அடுத்த பிராஜக்டுகள் இந்தியாவையே அசரடிக்கப்போகின்றன.
அருந்ததி 2 கூட லைனில் உண்டு.
பிரபாஸோடு பாகுபலி, சிங்கிள் பெண் சிங்கமாக ராணி ருத்ரம்மா தேவி என்று மிஸ்டிக்கல் வரலாற்று வித்தைகள்.
தனியளாகவே குதிரை ஏற்றம், நாட்டியம், வாள் வீச்சு என நம் பாரம்பரிய கலைகளை கற்று, அதை தன் கலையினால் அழகாக பிரதிபலித்து ஆவணப்படுத்தும் அற்புத கலைஞர் அனுஷ்கா ஷெட்டி.அவரை ஊக்கப்படுத்துவோம் என்றும்.
வாழ்க வளமுடன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s