கமலின் சில நல்-இணைய முயற்சிகள்

image

தூங்காநகரம் பற்றிய அறிவிப்பு

கமல் ரசிகர்களுக்கு இணைய விருந்து.
முதலில் மைய்யம் வீடியோக்களே கமல் வெறியர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டது.பல நாள் இணைய தொடர்பு அற்றிருந்தது.
இளைய தலைமுறை நடிக நடிகைகள் முகநூல், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என்று தங்கள் ரசிகர்களை ஏங்க விடாமலேயே வைத்து வருகின்றனர்.கமல் எதையும் உலகத்தரத்தில் தானே செய்வார்?
யூ டியூப்பில் ஒரு தனி சேனலையே உருவாக்கி கான்ஸ்டன்டாக தன் நல்முயற்சிகளை இணையம் மூலம் ரசிகர்களை அடையச்செய்கிறார்.
யூ டியூப் சென்று ulaganayagan tube என்று டைப் செய்யுங்கள்.தலைவர் திரையில் மிளிர்வர்.அவரின் திரையுலக நண்பர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் இது வரை கேட்ட/கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.

தன்னை இவ்வாறு இணைய சமூகத்துக்கும் அப்டேட் செய்து மெருகேற்றி கொள்ளும் இன்னொரு நல்முயற்சி அற்றை திங்கள்.இது தனி வீடியோ ப்ளே லிஸ்ட்.
லேட்டஸ்டாக உத்தம வில்லனின் டிலீட்டட் சீன்கள் வரை, படங்களின் மேக்கிங் போன்ற பல சுவையான விடியோக்கள் பகிரப்பட்டிருக்கும்.
ஆர்.சி சக்தி இறப்பதற்கு முன்னரே நல்லவேளையாக இதில் பதிந்துவிட்டார் ஒரு கேள்வி மூலம்.

ஜெயராம், ரமேஷ் அர்விந்த், நாசர், ஷ்ருதி ஹாசன், லிங்குசாமி, ஆர்.சி சக்தி, ரோஹிணி போன்ற கமலுக்கு நெருக்கமான பலரும் இதில் கேள்விகள் கேட்டு நம்மையும் தெளிவு படுத்தியுள்ளனர்.மேலும் பலரும் இந்நல்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.என் ஆசானும் கமலின் நண்பருமாகிய அய்யா திரு.மாலன் அவர்களும் இப்பகுதியில் விரைவில் நம் மனதில் விளைந்திருக்கும் ஒரு கேள்வியை கேட்பாராக! 🙂
மருதநாயகம் என்ன ஆச்சு? அதை எப்படி எடுக்க திட்டமிட்டிருக்கிறார்? என்பதையும் ஒரு விடியோவில் பதிந்திருக்கிறார்.

தன் வருங்கால ஆசைகளாக கமலுக்கு வாம மார்கம்(leftist/agori extreme path) என்ற பிராஜக்ட் உள்ளதை இங்குதான் நான் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு ஹை டெஃபனிஷன் கேமரா கமல் அறையினுள் ரோல் ஆகும்.கமல் கூலாக சோஃபாவில் கைகட்டிக் கொண்டு அமர்ந்திருப்பார்.அங்கிருக்கும் லைட்டிங் மற்றும் ambience அலாதியானது.
இரு கேமராக்கள்- ஒன்று முகத்திற்கு நேராக, மற்றொன்று நம் வலதுபக்கத்திலிருந்து கமலை படம்பிடித்துக்கொண்டிருக்கும்.ஒரு கலர், ஒரு பிளாக் அண்ட் வயிட் ஷேட் எல்லா நினைவுகளையும் ஒன்றாக கிளறுவதற்கு ஒரு அழகிய டெக்னிக் போல!
அவர் அமர்ந்திருக்கும் சோஃபா பின்னே-அது புத்தகமா இல்லை உலக சினிமா ப்ளூ ரேக்களின் தொகுப்பா என்று தெரியாது.ஆனால் ஒரு லைப்ரரி போல அழகாக அடுக்கப்பட்டு கண் கவரும்.
இந்த சூப்பர் சூழலில் அமர்ந்துதான் தன் அடுத்த பிராஜக்ட் பற்றி உலகுக்கு அறிவித்தார் கமல்.
தூங்காவனம்.மதுரை தூங்காநகரம் தெரியும்.ஒரு வனமே தூங்காமல் இருந்தால் எவ்வளவு த்ரில்லிங்கோ அத்தகைய கிளாஸ் த்ரில்லராக அமையும் என்று சூடமடித்து சொல்லலாம்.
இந்த தொகுப்புகளை கே வாய்மொழி(K Vaaimozhi) என்று கூகுளில் டைப்படித்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இது கமல் ரசிகர்கள் சொர்க்கம்.
நீங்களும் போய் ரசியுங்கள்.நம் அனைவருக்குமான உலகநாயகனை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s