சதுரங்க உலகம்-ஒரு ஸ்மைலி சிறுகதை =)

செஸ் காயின்கள் ரொம்ப அலுத்து போயிருந்தன.உலகம் முழுக்க கற்பனை வறட்சி கொண்ட ஜனங்கள் வெறும் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமே போர் நடத்திக்கொண்டிருந்தனர்.அபார்த்தீட் முடிந்து பல காலம் ஆகிவிட்டாலும் இது அரத பழசாக பட்டது செஸ் காயின்களுக்கு.

வேண்டுமென்றே மக்கள் மனதில் ஓய்ந்துவிட்ட பழைய குப்பைகளை போட்டு எரித்து அனல் மூட்டும் திட்டமாக பட்டது அவைகளுக்கு.
போதா குறைக்கு ரொம்பவே போர் அடித்தது.விஸ்வனாதன் ஆனந்தையும், மேக்னஸ் கார்ல்ஸனையுமே எத்தனை நாட்களுக்கு சும்மா தங்களை நகர்த்த வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது?

அதனால் அவை ப்ரேக் தி ரூல்ஸ் என்று முடிவெடுத்தென.தற்போதைய உலகின் மிக தீவிர பிரச்னை என்ன? ஜென்டர் இன்-ஈக்வுலாட்டி எனப்படும் பாலின சீரின்மை.உலகில் இன்றும்கூட பல பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவது, பிறந்ததும் அள்ளி குப்பையில் வீசப்படுவது, சிறுமிகள் சீரழிக்கப்படுவது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது, குடும்ப டார்ச்சர் போன்ற பல்வேறு பிரச்னைகளை கண்டு பொங்கி சீறி எழுந்தன செஸ் காயின்கள்.
இதற்கு ஏதாவது முடிவு கட்டியே ஆக வேண்டும் என சபதம் செய்து கொண்டன.என்ன செய்வது?
ஆங், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்.அதாங்க ராணி வெர்சஸ் ராஜா வெளியாடலாம் என்று முடிவெடுத்தன.

சா பூ த்ரி போட்டும், ஹேண்டு கிரிக்கெட் விளையாடியும் யார் ராணி பக்கம், யார் ராஜா பக்கம் என்று முடிவெடுத்துக்கொண்டன.
இயக்க மாஸ்டர்கள் இல்லாததால் தம் சிற்றறிவை கொண்டு விளையாட ஆரம்பித்தன.முதலில் சிப்பாய்கள் இருவர் மோதிக்கொண்டன.ஒரு சிப்பாய் வெட்ட ரத்த வெள்ளத்திலேயே இறந்தது எதிரணி சிப்பாய்.
மற்ற காயின்களுக்கு கலக்கம் ஏற்பட்டது.
ஒரு சிப்பாய் காயின் துணிந்து வாய் பேசியது.
“இரு! இரு! இரு!அதெப்படி? இவ்வளவு நாட்களாக தான் நம் மாஸ்டர்களின் என்டர்டெயின்மெண்டுக்காக ஒவ்வொரு கேமின் போதும் நாம் உயிர்த்தியாகம் செய்து, அடுத்த கேமில் மீண்டும் உயிர் பெற்று செத்து செத்து விளையாடினோம்.மறுபடியும் அதையே நாம் நமக்கு செய்தால் நம்மை விட முட்டாள்கள் யாருமில்லை என்றது ஒரு பகுத்தறிவு பகலவன்.
அதே! ஈ காயின் பறைஞ்சது ரைட்டாகும் என்றது ஒரு கும்தா மலையாள பெண் சிப்பாய்.

பிறகு சிப்பாய்கள் போர் நிறுத்தம் அறிவித்து, என்ன செய்யலாம் என்று வட்டமேஜை மாநாடு நடத்தின.அவைகளுக்கு இதிலும் மாற்று தேவை என்று பட்டது.
காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் ஒரு காபி  ஒவ்வொரு செஸ் காயினிடமும் வழங்கப்பட்டது.
கூடவே நியூட்ராலிட்டி பிட்வீன் இந்தியா அண்டு பாகிஸ்தான்-தி talks என்றொரு கையேடும் வழங்கப்பட்டது.

எல்லா காயின்களும் அகிம்சையே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தன.இவ்வளவு நாள் போரில் அடிபட்டு அடிபட்டு இறந்த “வெட்டுப்புலி” காயின்களுக்கு பேச்சுவார்த்தை என்பது ஜாலியாகவும் ரிலாக்ஸேஷனாகவும் இருந்தது.அதனால் போர் புரியாமல் பேச்சு போர் நடத்தலாம் என்று முடிவெடுத்துக்கொண்டன.

யாருக்கும் காயம் ஏற்பட போவதில்லை.எல்லாரும் நடுவில் வரும் மரணம் இல்லாமல் பெருமித பெரு வாழ்வு வாழலாம் என இன்பமாய் வழிமொழிந்தன.
இருப்பினும் ஒரு ஆர்வக்கோளாறு சிப்பாய்
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
என்று வள்ளுவரை துணைக்கிழுத்து வம்பிழுத்தது.அந்த காயின் பின் இருந்த யானை காயின் பெரும் பிளிறல் பிளிறி “என்னமா அங்க சத்தம்?” என்றது.
குட்டி சிப்பாய் காயின் நடுநடுங்கி “பேசிட்டு இருக்கேன் மாமா!” என்று பம்மியது.

சரி ஆரம்பம் பூகம்பம் என்று காயின்கள் ராஜா பக்கமும் ராணி பக்கமும் பிரிந்து வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தன.அதை நீயா நானா கோபிநாத்தே பெருமைப்படும் அளவிற்கு ஒரு காயின் கோட்டு போட்டு கொண்டு பக்காவாக நடத்தியது.இடையில் பூச்சி மசாலா வழங்கும் என்று அது ஏதோ பெரிய லிஸ்டை மனதில் வைத்து சொல்லத்தொடங்க, முட்டையையும் தக்காளியையும் தயாராக வைத்திருந்த இதர காயின்கள் சீறி பாய்ந்து அடித்து சின்னாபின்னமாக்கின.கோட்டை பொன்வண்டு சோப் போட்டு துவைத்து, ட்ரைவாஷ் செய்து வந்து மீண்டும் நிகழ்ச்சியை துவக்கியது அந்த காயின்.இந்த தடவை பிராண்டு பெயரை சொல்ல யோசித்தது.கற்களை எடுக்கும் சத்தம் கேட்டதால் “மந்திரிநாத் வழங்கும்
ராஜா வா ராணியா? தொடர்கிறது” என்றது.
விவாதம் கிழி கிழி கிழி என்று கிழிந்தது.காயின்கள் தத்தம் தரப்பிற்காக அடுத்தவர் தரப்பின் கொள்ளு தாத்தா காயின், கொள்ளு பாட்டி காயின் வரை தாக்கி பேசின.
சில காயின்களுக்கு காதில் ரத்தம் வந்தது.வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிங் இன் தி ரயின் பாடிக்கொண்டே மோதிக்கொண்டன.
கொஞ்சம் நேரம் போனவுடன் தான் எல்லாரும் கவனிக்க ஆரம்பித்தனர்.ராஜாவையும் ராணியையும் காணவில்லை.அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
ராஜா காயின்தான் ராணியை கடத்தியிருக்க வேண்டும் என்று எல்லாரும் சந்தேக பட ஆரம்பித்தன.
“அவசரப்பட்டுட்டியே தல!” என்று தங்கள் ராஜாவை கரித்துக்கட்டி கொண்டே ராஜா தரப்பு காயின்கள் கேட் நோக்கி செல்ல ஆரம்பித்தன.எல்லா காயின்களும் கவலையுடன் அவற்றை பின் தொடர்ந்தன.இந்த நிலை தொடர்ந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை உணர்ந்த புத்திசாலி மந்திரி காயின் ஒன்று குறுக்குவெட்டாக பாய்ந்து கேட் முன் நின்று யானைகளை பார்த்து “கேட்டை மூட்றா! த்தா கேட்டை மூட்றா” என்றது.யானைகளும் பிளிறிக்கொண்டே கேட்டை மூடின.

இருந்தாலும் ராஜாவும் ராணியும் என்ன ஆனார்கள்?என்ற ஆவல் ஏற்பட்டது காயின்களுக்கு. வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டன.
எனவே அனைவரின் பிரதிநிதியாக குதிரை காயின் ஓன்றை வெளியே அனுப்பி செய்தியோடு திரும்பி வரும்படி பணிக்கப்பட்டது.
குதிரை காயின் கேட்டை தாண்டி காரிடாரில் குதித்து ஓடியது.ஒரு அறையை அடைந்தது.அதன் வெளியே “do not disturb” என்று எழுதியிருந்தது.
உள்ளே ராணி காயினின் குரல் கேட்டது.
“ராஜா ஐ லவ் யூ! லவ் யூ! ஓ மை காட்.கிவ் மீ மோர்!” என்று திவ்யமாக முனகிக்கொண்டிருந்தது.
குதிரை உண்மையை உணர்ந்து வேகமாக திரும்பி வந்து தன்னை வழியனுப்பிய மந்திரி காயினிடம் விஷயத்தை கனைத்தது.
இரு மந்திரிகளும் “அட போங்கயா! இவங்களை நம்பி பெரும் முடிவுகளையெல்லாம் எடுத்து நாம களத்துல எல்லாம் இறங்குன இப்டி கவுத்துப்புட்டாய்ங்க!” என்று கூட்டத்தை சலிப்போடு கலைத்தது.

ராணியே ராஜாவைவிட ‘ஒரு’ விஷயத்தில் உயர்ந்தது என்பதை ஈகோ இல்லாமல் ஒப்புக்கொண்ட ராஜா ‘ராஜாவாகவும்’ இன்பமாகவே வாழ்ந்தது.ராணியும் ராஜா இன்றி தனக்கு இன்பமில்லை வாழ்வுமில்லை என்பதை உணர்ந்து ஒரே டீமில் மீண்டும் இணைந்தது.ஹனிமூனுக்கு
சென்றிருந்த எதிர் ஜோடி ராஜா ராணி இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்டதும் “நாங்க வரர்துக்குள்ள இவ்வளவு மாற்றங்கள் நடந்துச்சா?” என்று ஆச்சரியமாக கேட்டன.
இந்த உண்மையை முதலிலேயே உணர்ந்ததால்தான் முன்கூட்டியே ஜாலியாக ஹனிமூன் புக் செய்ய முடிந்தது என்று அந்த ராஜா ராணி காயின்கள் தெரிவித்தன.”சாரிங்க நாங்க கொஞ்சம் லேட் பிக்கப்” என்றன நம் ராஜா ராணி காயின்களை ஆசையாக தழுவிக்கொண்டே.

“அடி ஆத்தி! அப்போ நாங்க ரொம்ப லேட் பிக்கப்பு” என்று மற்ற காயின்கள் மீண்டும் கறுப்பு வெள்ளை சண்டையை ஆரம்பித்தன.
அவை முதலில் தூக்கி போட்டு மிதித்தது “தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும்” குறளை சொன்ன காயினைத்தான்.
🙂 😉

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s