சேம் செக்ஸ் கல்யாணம்

image

உலகத்துல கிட்டத்திட்ட fbலயும், இன்ஸ்டாகிராம்லயும், ட்விட்டர்லயும் இன்னபிற எல்லா சோஷியல் நெட்வொர்க்ல இருக்கிற பாதி பேர் எல்லாருமே இன்னிக்கு அவங்க மூஞ்சி மேல வானவில் கலரை ஊத்தி தெளிச்சு எடிட் பண்ணி dp வச்சிருந்தாங்க.
என்ன ஆச்சு எல்லா பக்கிகளுக்கும்.கிறுக்கு பயபுள்ளைக ஹோலி கூட இப்ப இல்லையே? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதே? என்று குழம்பிக்கொண்டிருக்கையில்தான் அந்த நியூஸ்ஸை படித்தேன்.

அமெரிக்காவில் lgbt சமுதாயத்தினரின் பல வருட லீகல் போர் அவர்களுக்கு வெற்றியை தந்திருக்கிறது.உலகின் முன்மாதிரி குடியரசா சொல்லப்படுகிற அமெரிக்காவிலேயே இப்போதான் சேம் செக்ஸ் மேரேஜை சட்டபூர்வமா அங்கீகரிச்சிருக்காங்களா? அப்டினு ஒரு புறம் ஷாக்கிங்காவும் நம்ம நாட்ல இதுலான் சாத்தியமானு யோசிச்சப்ப இது ஒரு மிகப்பெரிய மைல்கல்னு கான்ட்ராஸ்டிங்கா ரெண்டு பாயிண்ட் ஆஃப் வியூ கிடைச்சது.

மை கருத்து about ஓரின சேர்க்கை திருமணங்கள்:

ஒரு ஆணியும் இல்லைங்க.ஏன்னா அந்த உணர்வுகள் கொண்ட மனிதர்களோட மனநிலை என்னன்னு நான் உணர்ந்ததில்லை.ஆரம்ப காலத்துல சேம் செக்ஸ் மேரேஜ், ஹோமோ செக்ஷூவல்ஸ், லெஸ்போஸ் இவங்க மேல எனக்கு பயம் இருந்துச்சு.ஏன்னா அவங்க மேல எனக்கு சுத்தமா புரிதல் இல்லாததுனால.

அப்புறம் என் cousin ,கரண் ஜோஹர் பத்தி சொன்ன விஷயங்களை என்னால ஆரம்பத்துல ஜீரணிக்கவே முடியல. அதுவும் ஒருவிதமான இயல்பு மனித உணர்ச்சிதானு ஒரு புரிதலே இல்லை.இது நம் இந்திய கட்டமைப்பில் வளரும் எல்லா பிள்ளைகளுக்கும் உள்ள ஒரு நேச்சுரலான குழப்பம்.ஏன்னா unorthodoxஆ இருக்கிற எந்த ஒரு பிராக்டிகல் விஷயத்தையும் ஏத்துக்கிறதை விடுங்க-காதுல வாங்குறதுக்கே கூச்சப்படுற போலி சமூகம்தான் நாம்.
இதை நான் பப்ளிக்கா ஒரு மேடைல சொன்னாலே எனக்கு காறித்துப்பும் செருப்படியும் விழும்.
நான் சொல்றது ஒண்ணும் இல்லீங்க.நீங்க lgbt மக்களை ஆதரிச்சா உங்களையும் lgbtனு சொல்லிடுவாங்கன்னே இங்க ஒரு கூத்து இருக்கு.
நாம அவங்களை போல இல்லை.யோக்கியம்தான்.
நம்ம டார்கெட் எல்லாம் opposite sex.யோக்கியம்தான்(!).
நாம நேச்சுரல் பீப்பிள்.யோக்கியம்தான்.
இது எல்லாமே நம்மளோட தனிமனித, சுதந்திர சாய்ஸ்.we choose our sexuality.but who are we to determine others’?

அது அவங்க உடல்.அவங்க உணர்வு.அவங்க இச்சை.அவங்க காதல்.அவங்க காமம்.அவங்க திருப்தி.we have got nothing to with it.அதற்கான உரிமையும் நமக்கில்ல.

யோசிச்சு பாருங்க-ஒரு காலத்துல இடது கை பழக்கம் உள்ளவங்க எல்லாம் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள்னு ஒரு பிம்பம் இருந்துச்சு.இன்னிக்கு அறிவியல் அவங்கதான் புத்திசாலிகள்னு சொல்லுது.

அவர்களை ஆதரிக்கலைனாலும் பங்கம் இல்லை.நாம அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கனும்.அவங்க உணர்ச்சிகளை புரிஞ்சிகிட்டாலே போதும்.சகிப்பு தன்மை கொண்ட மனிதர்களா மாறிடுவோம்.

யாரும் அவங்களை ஆதரிக்கறது மூலமா உங்களை கேவாகவோ லெஸ்பியனாகவோ மாற சொல்லலை.கரண் ஜோஹர் என்ன கொலை குத்தமா பண்ணிட்டார்? அவர் உயிராக அன்பு பாராட்டும் ஜீவன் அதே பாலினத்தை சேர்ந்தவர்.அவ்வளவுதான்.இந்த புரிதலை எனக்களித்த என் சகோதரி(கசின்) சகிப்புத்தன்மைக்கான என் சிறு ஆசான்.அவளுக்கு நன்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s