தேசிய நீதித்துறை நியமனக்குழு

பெரும் விவாதம் கிளப்பிக் கொண்டிருக்கும் விஷயம்.லலித் மோடி, வியாபம், நில மசோதா மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு இதுதான் கூடுதல் தலைவலி.அட்டார்ணியாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹாத்கி ஆக்ரோஷமாக வாதிட்டு வந்தாலும் இந்த வழக்கில் சில ஓட்டைகளும் சிக்கல்களும் நீடிக்கின்றன.
முதலில் இந்த வழக்கை பற்றிய சில அடிப்படை அம்சங்களை புரிந்துக்கொள்வோம்.

டைம்லைன்:

1.ஆகஸ்ட் 13,2014-லோக் சபாவில் இந்த NJAC மசோதா நிறைவேற்றப்பட்டது.

2.ஆகஸ்ட் 14,2014-மேற்சபையான ராஜ்யசபாவிலும்(மாநிலங்களவை) நிறைவேற்றப்பட்டது.

3.டிசம்பர் 2014-குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த தேசிய நீதித்துறை நியமனக்குழு மசோதா சட்டமாவதற்கு ஒப்புதல் அளித்தார்.

4.ஏப்ரல் 13,2015-சட்டம் அமலுக்கு வந்த தினம்.ஆனால் இதை நீதித்துறை ஏற்றுக்கொள்ளாமல் பெரும் பூகம்பம் இன்றைய தேதிகளில் கிளம்பியிருக்கிறது.

இந்த சட்ட பிரச்னையை புரிந்துகொள்வதற்கு முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்:

1.அரசியல் சாசன விதி 141:
உச்சநீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு சட்டத்தின் கோணம் அனைவரும் கீழ்படிந்து நடக்கவேண்டிய சட்டமே ஆகும்.

2.அரசியல் சாசன விதிகள் 124&217:
1993ல் இவை சம்பந்தமான விவாதத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசிக்காமல் எந்த வித நீதிபதி நியமனமும் நடைபெறாது என்று எடுத்துக்கொள்ளப்பட்ட கோணம்.அன்றிலிருந்து நீதிபதிகள் தேர்வுக்குழுவின்(collegium) தலைவராக CJI எனப்படும் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே விளங்கிவருகிறார்.

இந்த கோணம் நீடிக்கும்வரை NJAC சட்டம் செல்லுபடி ஆகாது என்று நீதித்துறையை சார்ந்த பலரும் வாதிட்டு வருகின்றனர்.
1.உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சம்மேளனமும்
2.பொதுநல வழக்குகள் மையமும் NJACக்கு எதிராக உள்ளனர்.வழக்கு முறையீடும் பதிந்துள்ளனர்.

நீதிபதிகள் தேர்வுக்குழு என்ன செய்தது?

1.ஒரு தலைமை நீதிபதி
2.நான்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உட்பட ஐந்து பேர்கொண்ட குழுவாக
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணிமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுத்து வந்தது.

அரசு முன்வைக்கும் NJAC (தேசிய நீதித்துறை நியமனக்குழு)வில் என்ன மாற்றங்கள்?

1.தலைமை நீதிபதி எப்பொழுதும்போல இருப்பார்
2.இரண்டு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள்
3.மத்திய சட்ட அமைச்சர்
4.இரு பிரபலங்கள்

இந்த 3,4 பாயிண்டில் இருப்பவர்கள்தான் பிரச்னைக்கு காரணமே.

நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான முடிவை எடுக்கும்பொழுது எந்த அம்சத்தை கவனிக்கும்?

இது அரசியல் சாசன திருத்தம் மூலம் கொண்டுவரப்படும் ஒரு சட்டம்.எனவே நீதிமன்றம் இது சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கு முன் இது அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு எதிராக இருக்கிறதா இல்லையா என்ற ரீதியில் அணுகும்.

அரசு எந்த காரணத்தை முன்வைத்து இந்த மசோதாவை கொண்டுவந்தது?

முந்தைய நீதிபதிகள் நியமனக்குழுவில்(collegium)நிர்வாக தெளிவின்மை(lack of administrative transparency)இருந்ததாக கூறித்தான் அரசு இந்த சட்ட மசோதாவை கையிலெடுத்தது.

நீதித்துறை இதை எவ்வாறு பார்க்கிறது?

பெரும்பாலான நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.ஏனெனில் இது நீதித்துறை சுதந்திரத்தின் குரல்வளையை அரசு நெறிக்கும் தந்திரம் என அவர்கள் கருதுகிறார்கள்.
பிரபல நீதி புள்ளிகளான ஃபாலி நாரிமன் மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோர் இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர்.

நீதித்துறையின் வாதம்:

தற்பொழுதுள்ள NJAC சட்டத்தின் படி குழுவின் இரு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு நீதிபதி வேட்பாளரின் மனுவை நிராகரித்தால் அது நிராகரிக்கப்பட்ட விண்ணப்பமாக கருதப்படும்(வீட்டோ செய்யப்பட்டதாக).
பிரச்னை என்னவெனில் இந்த குழுவில் வெறும் நீதித்துறையை சார்ந்த தலைமை நீதிபதி, இரு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் மற்றும் சட்டத்துறைக்கு முற்றிலும சம்பந்தமில்லாத இரு பிரபலங்கள் உள்ளனர்.எனவே தங்கள் அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு சாதகமாக நீதிபதி பணி நியமன முடிவுகளை மாற்றி மாற்றி பிறப்பித்துக்கொள்ள முடியும்.மற்றவர்கள் கேள்வி கேட்க முடியாது.இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

அரசு தரப்பு வாதம்:

1993ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட கோணம்(interpretation)தவிர வேறெங்குமே தலைமை நீதிபதிக்கு நீதிமன்ற நியமனங்களில் அதிகாரம் இல்லையென அரசு தரப்பில் வாதிடுகிறார்கள்.இந்த வழக்கிற்கு முன்பு அரசும் குடியரசுத் தலைவரும் தான் இந்த நியமனங்களை செய்து வந்தனர் என்று தொடர்ந்து குறிப்பிடடு வருகிறது ரோஹாத்கி தலைமையிலான அரசு தரப்பு வக்கீல் குழு.

நடுநிலையாளர்களின் மற்றும் சட்ட வல்லுநர்களின் கருத்து:

1.நீதிமன்றமும் நீதித்துறையின் அரசின் தற்போதைய சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
2.அதே சமயம் அதை வலுவாக எதிர்க்கவும் முடியாது.ஏனெனில் 1993 தீர்ப்பு தவிர்த்து அவர்களுக்கு சாதகமான வேறு வலுவான சட்ட காரணிகள் ஏதுவாக அமையப் பெறாதது.
3.ஆனால் NJAC சட்டம் 2014ல் மேற்கூறிய மாற்றங்களை அரசு செய்தாலொழிய அரசுக்கும் நீதித்துறைக்கும் எதிரான இந்த முட்டல் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும்.அது இந்த தேச நலனுக்கு உகந்ததல்ல.

Advertisements

இதுவும் நடக்கும்டா இந்தியாவை எதிர்த்தா

கிபி 2025

தேசத்துரோக உளவாளி என்னன்னவோ முயற்சித்து பார்த்தான்.
ஒரு ஆணியும் கழற்ற முடியவில்லை.
உளவுத்துறையினரின் கட்டுக்கோப்பு அவனை கிட்டத்தட்ட மூர்ச்சையாக்கியது.
சரி ரியாலிட்டியில் தான் இந்தியாவின் பாதுகாப்பு தூண்களை அசைக்க முடியவில்லை.ட்விட்டரிலாவது தனது ஆதங்கத்தை வெறுப்பாக வெளியிடலாம் என தன் தீவிரவாத ட்விட்டர் கணக்கிற்குள் நுழைந்தான்.
அவன் போட்ட ட்வீட்:
“இந்தியா பகுதி பகுதியாக பிரியும் நாளும் வரும்.அன்று இருக்கிறது எனக்கு கொண்டாட்டம்.”
Tweet sent.
அடுத்த நொடி அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அவன் வெறும் ஸ்லீப்பர் செல்தான்.அனானிமஸ் அழைப்புகளை புறந்தள்ளும் அளவிற்கு சீக்ரெட் துரோகி அல்ல.சாதாரண மனிதனாய் நடித்து, மக்களோடு மக்களாய் நடந்துக்கொண்டிருப்பவன்.

மறுக்காமல் போனை எடுத்து-காதில் வைத்து ஹலோ என்றான்.
எதிர்புறம் அசாத்திய நிசப்தம்.
மறுபடியும் ஹலோ ஹலோ என்றான்.
இம்முறை வாய் குளறியது அவனுக்கு.கைபேசி கைதவறியது.மயங்கி மூர்ச்சையானான்.

கட்.டிஆர்டிஓ கிளை செயலகம்.விஞ்ஞானிகள் “மிஷன் சக்ஸஸ்.தேசத்துரோகி மூளையில் 0.0056 நேனோ துகள் சங்கூது லேசர் செலுத்தப்பட்டது என்று ரிப்போர்ட் எழுதி அவன் ஃபைலை க்ளோஸ் செய்தனர்.

அலைப்பேசியின் அலைவரிசையிலேயே லேசரை அனுப்பி எதிரிகளை பஸ்பமாக்கும் முதல் முயற்சி வெற்றி.
டிஆர்டிஓவுக்கு அப்ளை செய்து வீடியோ கான்பிரன்ஸிங் நேர்காணல் முதல் ரவுண்டு முடிந்து இரண்டாம் கட்ட நேரடி நேர்காணலுக்காக அந்த செயலகத்தின் ரிசப்ஷன் அறையின் இருக்கையில் அமர்ந்து தனது மைக்ரோமேக்ஸில் படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனின் திரையில் மிளிர்ந்த அந்த காட்சியின் வசனம்.
“இந்தியனை அடிக்றது ஒரு வெள்ளைக்கார பொம்மையா இருந்தாலும் அதை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்கமுடியாது”.
டெடிகேட்டட் டூ அப்துல் கலாம் ஐயா.

டாக்டர்.அப்துல் கலாம் பற்றிய உணர்வுகள் பகிர்வு

குழந்தையாக நான் அவரை டிவியில் பார்க்கையில் முதலில் கவர்ந்தது அவரது ஹேர்ஸ்டைல்.உலகத்துக்கு சாண்டா கிளாஸ் என்றால் அப்போதைய குழந்தைகளுக்கு எங்கள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
பல நாட்கள் மனதில் ஆழமாய் அவர் மட்டும் தான் குடியரசு தலைவர் என்று முற்றிலும் பதிந்த ஒன்று.
சோவியத்தையும் அமெரிக்காவையும் அஞ்சி நடுங்கி கொண்டிருந்த தொடைநடுங்கி தேசத்தை ஏவுகணை ஆராய்ச்சி மூலம் வீறுகொண்டு நடக்க வைத்தார்.
விஞ்ஞானி, ஜனாதிபதி தாண்டி அவரது முகம் ஆசிரியர்.

ராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை உழைப்பு உழைப்பு-அயராத உழைப்பு.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகட்டும் சென்னை எம்ஐடி ஆகட்டும் இஸ்ரோவாகட்டும் டிஆர்டிஓ ஆகட்டும் தில்லி ஆகட்டும் அவர் புன்னகை மாறா பேச்சுடன் இந்தியாவுக்காக உழைத்தார்.இந்தியாவை மட்டுமே நினைத்தார்.
அதன் வருங்கால தூண்களான இளைஞர்களையும் குழந்தைகளையும் தீராது நேசித்து வாழ்ந்தார் .
பாருங்கள் இளைஞர்களிடையே தான் அவர் தன் இறுதி மூச்சை விட்டுள்ளார்.
ஆம் ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையே இறுதிவரை உரையாற்றியிருக்கிறார்.

ஜனாதிபதி பதவிகாலம் முடிந்ததும் மீண்டும் அந்த பதவியில் அவரையே பரிந்துரைக்க காங்கிரஸ் அரசு ரெடியாக இருந்தபோதிலும் அதை விரும்பாமல் மாணவர்களிடையே தன் நேரத்தை முழுமையாக செலவழிக்க எண்ணினார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் வந்து பாடம் சொல்லி கொடுத்தார்.தன் அல்மா மேடரான எம்ஐடியையும் காதலித்தார்.
சுஜாதா ரங்கராஜனும் ஏபிஜேவும் இப்பொழுது விண்வெளி தாண்டிய ஒரு உலகில் இன்னும் கல்லூரி தோழர்களாய் கனவு கண்டுக்கொண்டிருப்பார்கள்.
அந்த குழந்தை சிரிப்பு எம்எஸ்வி இசையை ரசித்துக்கொண்டிருக்கும்.

மூன்றாவது தமிழக ஜனாதிபதி.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணிக்கம்.
இந்த மண்ணிலே முளைத்த ஏவுகணை மூளை.
சகாப்தம் படைக்க இறைவன் விதைத்திட்ட வித்து.

தேசத்தின் பாதுகாப்பினை உறுதி செய்த சிவரூபம்.
சர்வதேச அளவில் நாம் மார்தட்டி கொள்ளும் பாரத ரத்னா, வீர் சவார்க்கர், பத்ம பூஷன்.
40 டாக்டர் பட்டங்கள்.விருதுகளுக்காக அவர் பிறந்தாரா இல்லை அவருக்காக விருதுகள் பிறந்தனவா? யார் அறிவார்.

ஆனால் அவரின் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற கனவு நனவாகுமா? நாம்தான் அதை நிறைவேற்ற வேண்டும் தோழர்களே! அதுதான் அவருக்கு நாம் செய்யும் உறுதியான மரியாதை.
கண்கள் குளமாகின்றன.யாருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காத முகம், நினைவு தப்பாத குரல்.
மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர்.அக்னி சிறகுகளை நமக்கு பொறுத்தியவர்.
வானளாவ சிந்தித்தவர், தலைமுறைகளுக்காக வழிசெய்தவர்.அவர் வழியில் நாம் நடப்போம்.
இன்று ஒருநாளோ, இந்த ஒருவாரமோ துக்கம் அனுசரித்துவிட்டு அவர் கனவை மறந்துவிட போகிறோம்.அது தவறு.அவர் கனவுகள் உண்மையில் நம்மை தூங்கவிடக்கூடாது.
ராமேஸ்வர மைந்தன் எல்லைகள் தாண்டி நேசிக்கப்படுகிறார்.ஜாதி மதங்களை கடந்து போற்றப்படுகிறார்.அதுவே இந்திய இறையாண்மையாய் அவர் தன் சீரான வாழ்வை வாழ்ந்து காட்டிய வரலாறு.

மண்ணில்லா விவசாயம் குறித்து ஐந்து வருடம் முன்பே கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சென்று கண்டு வந்து நம் மக்களிடம் அது பற்றி உரையாற்றினார்.
விவசாயம் இந்தியாவில் அழியாது என்று தீர்க்கமாக பறைசாற்றினார்.
நம்பினார்.அவர் நம்பிக்கையை பொய்க்க விடலாகாது.
கட்டை பிரம்மச்சாரி.வாஜ்பாயி போல.துணை தேடி வினை தேடாமல் தனியாக நின்று விண்ணை தேடியிருக்கிறார்.
அந்த உயர்ந்த லட்சியத்தில் ஒரு பங்கு உழைப்பையாவது நாம் முதலீடாக்கி இந்த தேசத்தை செழுமமையாக்குவோம்-நம் வியர்வை கொண்டு.

முக்கால்வாசி நாட்கள் சரிவர உணவில்லாத ஆரம்பநாட்களிலும் சரி, இந்தியாவின் முதல் குடிமகனாக, முப்படைகளின் ஒரே தலைமை இயக்கியாக முன்னேறியிருந்த நேரத்திலும் சரி அவர் இம்மியளவிலும் தன் செயல்பாட்டிலிருந்து விலகாதிருந்தார்.லட்சியமே கண்ணாயிருந்து காரியத்தை செய்து முடித்தார்.
பாடபுத்தகத்தில் அவரின் வாழ்வு குறித்த உரைநடை பாடம் என்னை ஆங்கில கட்டுரைகள் அனைத்திலும் அவர் குறித்தே சிந்தித்து எழுதவைத்தது.

என் வகுப்பு தோழி மாஷா நசீம் ஓர் இளம் விஞ்ஞானி.அவள் பல படைப்புகளை கண்டுபிடித்திருக்கிறாள்.அதன் காரணமாக ஏபிஜேவை நேரில் சந்தித்து விருதுகளை பெறும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறாள்.
அவள் செய்த flameless sealmaker(நெருப்பில்லா அரக்கு எந்திரம்) ஜனாதிபதி பரிசை பெற்று அவரின் கவனத்துக்கு சென்றது.
இதனால் அதிகம் அவர் பூரித்தவாறே மாஷாவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் நான் என் வகுப்பு தோழர் தோழியருடன் சேர்ந்து பார்த்து வியந்திருக்கிறேன்.
ஆர்வம் தீராத குழந்தை நாம் அறியாத வேறோரு கிரகத்தையோ உலகத்தையோ ஆராய சென்றிருக்கிறது.அப்படித்தான் அணையாத இந்த அக்னி சிறகின் பறவையின் பிரிவை நான் உணர்கிறேன்.
உங்கள் ஒளி எங்கள் உள்ளங்களில் வாழும்.ஜெய் அப்துல்கலாம்.ஜெய் ஹிந்த்.

வெறும் கணக்கு

இரு வாரங்களுக்கு முன்பு தமன்னா அட்டைப்படமிட்ட ஒரு விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் “வெறும் கணக்கு” என்ற சிறுகதையை படிக்க நேர்ந்தது.
தாமோதரன் என்ற கேரக்டரை கொண்டு,போன ஜெனரேஷன் மனிதர்களிடம் இன்றைய என்னைப்போன்ற அரைவேக்காட்டு துள்ளிகுதிக்கும் இளைஞர்கள் என்ன கற்க வேண்டும்? என்பதை அந்த கேரக்டரை ஓவராக புனிதப்படுத்தாமல் படு துல்லியமாக நிறுவி, அந்த கதையை நகர்த்தியிருப்பார் எஸ்ரா.

நாம் taken for grantedஆக நினைத்துக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் இயல்பில் ஒவ்வொரு மணித்துளியாக,ஒவ்வொரு பைசாவுக்கான மரியாதையாக நிஜ உலகில் எவ்வாறு பரிணமிக்கிறது என்பதை ஒரு நுண்ணிய பார்வையில் நமக்கு காட்டியிருப்பார்.
அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் ஏதோ பெரிசு கூறும் அட்வைஸ் அல்ல.மனசாட்சிக்கு இலக்கியம் அவ்வப்போது வழங்கும் சவுக்கடி.

அந்த தாமோதரன் என்ற கறுப்பான, குட்டையான அந்தகாலத்து முதியவரின் மனநிலையின் குணாம்சத்தோடு என் ஒரு வருட டைரியில் கணக்கு வழக்கு எழுதும் பழக்கம் ஒன்றிப்போகிறது என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு ஒருவித லஜ்ஜையும் இல்லை.
நான் பழமையின் தீவிர காதலன்.எனக்கு என் அம்மா, சித்திகளை விட தாத்தா பாட்டிகளை தான் அதிகம் பிடிக்கும்.மொத்தத்தில் ஹைலேண்டர் சட்டை அணிந்த பழைய பஞ்சாங்கம்.
என் தாத்தாவிடம்தான் நான் கணக்கு எழுதும் பழக்கத்தை சிறுவயதில் கவனித்திருக்கிறேன்.7 வயதில் தாத்தா படித்து முடித்த தமிழ் பத்திரிக்கைகளை வாசிப்பதுதான் என் முதல் இலக்கிய அனுபவமாக இருந்தது.
வேப்பங்குச்சியில் பல் தேய்ப்பார்.ராணுவத்தில் வேலை செய்தும் மது அருந்துவதை தவிர்த்தார்.மிலிட்டரி கேண்டீனில் வெறும் சோப்பு, இன்னபிற மளிகைகளை மட்டும் மலிவான விலையில் அவர் வாங்கி வந்ததை இன்றும் ஊரில் கதையாய் பேசுவர்.அவரிடம் நான் கற்காதது நேரம் தவறாமை.அந்த டாபிக்கை விடுங்கள்.

எப்படி நாம் ரூல்ஸ் ராமானுஜங்களாக முகம் சுளித்து புறக்கணிக்கும் ஒரு ஜனத்தொகையில் கற்றுக்கொள்ள-அள்ள குறையாத அறம் இருக்கிறது என்பதை எஸ்ராவின் சிறுகதை எனக்கு ஆச்சரியங்களாய் பரிசளித்தது.
இதுநாள் வரை அவரின் நான்- ஃபிக்ஷனான கோடுகள் இல்லாத வரைபடம் மட்டும்தான் வாசிக்க எனக்கு கிடைத்திருக்கிறது.இன்னும் எஸ்ரா என்ற பிரபஞ்சத்தில் நான் உள்நுழையவில்லை.
இந்த கதையை படித்து பிறகு நான் எஸ்ரா சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தால் இன்றைய என் முகத்தை இழந்துவிடுவேனோ என்ற ஐயம் ஒருபுறமும் அதை தாண்டி உண்மைகளை பரிசீலித்து பயணிக்கும் மனத்திண்மையை பெற்ற வேறொருவனாய் பரிணமித்தால் தவறுதான் என்ன? என்று மறுபுறமும் இரு மன ராட்சஷன்கள் என்னை கேள்விகளால் சிதறடிக்கின்றனர்.
அமேஸான் திறந்தே கிடக்கிறது.திநகர் தெருமுனை புத்தக கடையிலும் எஸ்ரா பெயர் தெரிகிறது.பயணிக்கும் மனம் எடுக்கும் முடிவே துணை.

பாகுபலி DOLBY ATMOS

image

பாகுபலியும் பல்வாளத்தேவாவும்

உலகமே பாகுபலிக்கு ரிவ்யூ எழுதிவிட்டது.முதல் நாளே 60 கோடி, மூன்று நாட்களில் 150 கோடி, எல்லா இந்திய பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் முறியடித்த 250 கோடி பிரம்மாண்டம், ப்ளா ப்ளா உங்களுக்கு தெரிந்ததுதானே? இதில் புதிதாய் நான் சொல்ல என்ன இருக்கிறது? என் அனுபவம், நான் ரசித்தது மட்டும்தான் சொல்ல முடியும்.அதை ஜாலியாக சொல்கிறேன்.கேளுங்கள்.

டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும், சி.ஜியும் படத்தை ஹாலிவுட் என்ன? அதையும் மீறின ஒரு இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டன.

எனக்கு எப்படி ஒரு ராஜாவின் கதையை சொன்னால் புல்லரிக்குமோ? அப்படி சொல்லியிருக்கிறார் டைரக்டர், தமிழில் மதன் கார்க்கி வசனத்தின் உதவியோடு, சாபு சிரில் கலை இயக்கம் கொண்டு.
பிரபாஸ்-தேஜஸ்.சிவ லிங்கத்தை ஒற்றை ஆளாய் தூக்கி அருவியில் நிரந்தர அபிஷேகம் ஏற்படுத்தும் காட்சி,அப்பேர்ப்பட்ட உயரம் கொண்ட அருவியை 100 தடவை மலையேறி கடக்கமுடியாமல் இருந்தநிலையில் தமன்னா என்ற தேவதையால் இன்ஸ்பையர் ஆகி அதை சாதிக்கிறார்.

அவந்திகா தமன்னா.அவ்வளவு செக்ஸி.ரோஸ் இதழ்கள்.பளிங்கு உடல்.பெர்முடா முக்கோண நேவல், ட்ரேட்மார்க் இடையை வேறு ஆட்டுகிறார்.அவ்வளவு அழகு.தேவசேனை அனுஷ்கா, ராஜமாதா ரம்யா கிருஷ்ணன், அடிமை கட்டப்பாவாக சத்யராஜ், வழக்கமான ராஜதந்திரி வில்லனாக நாசர்-என எல்லோரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.(ஆமாம்.பார்ட் 2 இருக்குது இல்ல?)மகிழ்மதி காலக்கட்டத்திற்கு நம்மை இட்டுச்சென்றிருக்கிறார்கள்.

ஆனால் பைசா வசூல் என்று சொல்ல முக்கிய காரணம் மகன் சிவாவைவிட அப்பா பாகுபலி மற்றும் பல்வாளத்தேவா ராணா டக்குப்பாட்டி.காட்டெருமையையே அடக்கும் ராஜகாளை.

இடையில் தோன்றும் ஒரே ஒரு காட்சியிலும் ஃபைட், செண்டிமெண்ட் என்று ஸ்கோப் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி-கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பாவுக்கு.

பின்னணி இசை யாரப்பா? சும்மா பகுலு உடையும் டகுலு தெறி மாஸ் இசை.95 ரூவா டிக்கட்.பாலா பேரடைஸில் 100 ரூவா ஒற்றைத்தாளை கொடுத்தேன்.சில்லறையாக 5 ரூவா மஞ்ச் சாக்லேட் கொடுத்தேன்.50 பைசா சாக்லேட்லாம் போயி 5 ரூவா சில்லறைக்கும் இப்படி மஞ்ச்,5 ஸ்டார்னு குடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க பக்கிங்க.
பின் ஸீட்டாய் கேட்டேன்.அப்போதான் ஜாலியாக கத்திக்கொண்டே இருக்கலாம்.அதிக டிஸ்டர்பன்ஸ் கொடுக்காமல்.10 ரூவா பார்க்கிங் சார்ஜ் வழக்கம்போல.கபோதி வெயிலிலேயே வண்டியை நிறுத்தவிட்டுவிட்டான்.

எல்லா ஏரியாவிலும் புகுந்து-ஆக்ஷன், ரொமான்ஸ், ஹீரோயிஸம், செண்டிமெண்ட், வில்லத்தனம், ஆடியோ-விஷூவல் என மகிழ்மதி ராஜ்ஜியத்தில் 2.30 மணி நேரம் நாமும் குடிமக்களாய் இருக்கிறோம்.முன் ஸீட்டை உதைக்கப் பார்க்கிறோம்.கத்த தோன்றுகிறது. ஓவர் சிலிர்ப்பு ஏற்படுகின்றது.ஹார்மோன்கள் ஊற்றெடுக்கின்றது.தாய்ப்பாசம் அனுஷ்கா மீதே நமக்கு கிட்டத்தட்ட வர்ற லெவல் கிட்ட(!)கூட்டிட்டு போயிட்டார் ராஜமௌலி.
இந்திய படைப்பின் உச்சம்-பாகுபலி 1ன் கிளைமேக்ஸ் போர் காட்சி.பார்ட் 2க்காக இப்பவே தேவுடு காத்துஃபையிங்.

2016-பாகுபலி தி கங்க்ளூஷன்.

பின்குறிப்பு : இடைவேளையின் போது பாப்கார்ன் கொறிக்கவில்லை.வீல் சிப்ஸ் தான் மொறுக்மொறுக்கென மொறுமொறுத்தேன்.இந்த அனுபவம் போல ஸ்லைட் சேஞ்ச்.

அரசியல் தாண்டிய ஆளுமை

image

ஆக்ஸ்போர்டில் தரூர் ஆற்றிய உரை

சசி தரூர் உலகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறார்.
இம்முறை சுனந்தா புஷ்கர் விவகாரத்துக்காக அல்ல.பிரிட்டிஷ் சர்க்காரையே தன் வாதத் திறமையால் அசத்தல் கைத்தட்டலடிக்கவைத்த சாதனைக்காக.

சசி தரூர் யார் என்று தெரியாதவர்களுக்காக ஒரு நறுக் அறிமுகம்.
முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர்.
இந்நாள் திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினர்.
அந்நாள் ஐ.நா பொருளாதார மற்றும் ஆசிய கொள்கை சிறப்பு நிபுணர்.

கேரளாவில் தரூர்,நமது இறையன்பு ஐஏஎஸ் தமிழ்நாட்டில் செய்துவருவது போல,குடிமைப்பணிகளுக்காக தங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக “மலையாள மனோரமா” பத்திரிக்கை குழுமத்துடன் கைகோர்த்து ரகசியமாக மாணவர்களை வழிநடத்தி உதவிக்கொண்டிருப்பவர்.
பூர்வீகம் கேரளாவாகினும் இவர் பேசும் ஆங்கில உச்சரிப்பில் இவரது சர்வதேச பட்டப்படிப்புகளின் வாசம் வீசும்.பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.அனைத்திலும் ஒரே கரு-இந்தியா, இந்தியா, இந்தியா.

ஆனால் எப்பொழுதும் வடநாட்டு ஊடகங்கள் இவரை வம்பிழுத்து சண்டைக்கோழியாக காட்சிப்படுத்துவதிலேயே அதிக ஆர்வம் காட்டும்.இருப்பினும் சமீபத்தில் சசி தரூரின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேச்சுக்காக எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு சசி தரூரை வீடியோ கான்பிரன்சிங்கில் அழைத்து ஷோவில் பேட்டி கண்டு வருகின்றன.கடந்த ஒரு வாரமாக இதே அலப்பறைதான்.
அப்படி என்னதான் பேசிவிட்டார் சசி தரூர்?

இதற்கு முன்பாகவே இந்த உரையை பிரிட்டன் சட்ட கவுன்சில் போன்ற இடங்களில் 9 மாதங்கள் முன்பாகவே பதிந்தார் சசி.அப்பொழுதெல்லாம் குவியாத கவனம், தற்பொழுது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அடித்த நெற்றியடி காரணமாக அவர் பக்கம் திரும்பியிருக்கிறது.இந்த உரைக்கு பிரதமர் மோடியே சசி தரூரை புகழோ புகழ் என்று கட்சி சார்பற்று புகழ்ந்து தள்ளிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.
அவர் பேசியதன் சாராம்ச குறிப்புகள் இதோ:

1.தற்பொழுது இந்த நிகழ்வின் பொழுது 8 பேச்சாளர்கள் பேசுகிறோம்.நான் 7வதாக பேசுகிறேன்.ஹென்றி த 8 மன்னனின் மனைவிகள் போல எனக்கும் நான் என்ன பேசினால் நீங்கள் என் கருத்தினை தனித்து ஏற்றுக்கொள்வீர்கள்? என்ற ஐயம் இருக்கிறது.

2.காலனி ஆதிக்கத்தால் சீரழிந்த உலக நாடுகளின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பால் 23% உலக பொருளாதாரத்திற்கு காரணமாக இருந்த இந்திய வர்த்தகம்,4% என்ற அளவிற்கு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய 1947ன் போது சுருங்கிற்று.

3.இரண்டு உலக போர்களின் போது அதிக பொருள், உயிர் சேதத்தை இந்தியாத்தான் சந்தித்திருக்கிறது.பிரிட்டனுக்காக போரில் செத்த 6 வீரர்களுள் ஒருவன் இந்தியன்.இந்த இந்தியர்களுக்குத்தான் வங்காள பஞ்சத்தின் போது நிவாரண உதவி கேட்டபொழுது “காந்தி இன்னும் உயிரோடு தானே இருக்கிறார்?” என்று அலட்சியமாக சொல்லி நிதி மறுத்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

4.இந்தியா பிரிட்டனால் சிதைந்ததற்கு முதற் முக்கிய காரணம்-இந்தியாவின் புகழ்பெற்ற நெசவுத்துறையை முடக்கி, அதை தன் வசமாக்கிய பிரட்டனின் குள்ளநரித்தனம்தான்.

5.மற்ற நாடுகளை விட இரு மடங்கு அதிக வரி விதித்து-அதில் இந்தியர்களின் ரத்தத்தையே உறிந்து-சாலை, ரயில்வே, கப்பல் என்று கட்டி தன் நாட்டு வர்த்தகத்தை பெருமளவில் உயர்த்திக்கொண்டு, இந்தியர்களை நாகரீகப்படுத்திவிட்டோம் என்ற ஆட்டுப்போர்வைக்குள் ஒளிந்துகிடக்கும் சுயநலவாதிதான் பிரிட்டன்.

6.எங்கள் சுதந்திரத்தை நீங்கள் எங்களுக்கு வழங்கியதாக வரலாற்றில் பதிந்துவிட்டீர்கள்.மிகத் தவறு! அதை நாங்கள் வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டோம்.அதுதான் எங்களின் பெருவெற்றி.

7.இந்த 2015 வரை தொடரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம், இந்து-முஸ்லிம் மத பிரச்னை, ஆந்திர-தெலுங்கானா முட்டல் மோதல்கள் அனைத்திற்கும் துவக்கப்புள்ளியாக அமைந்தது அன்றைய காலனி ஆங்கிலேயே ஆட்சியின் தவறான நிர்வாக முடிவுகளே காரணம்.

8.இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு, உங்கள் முன்னோர் செய்த தீங்கிற்காக நீங்கள் இந்தியாவிற்கு கடன்பட்டுள்ளீர்கள் என்பதை உணரவேண்டும்.You owe a big sorry to India.

கைதட்டல் அதிர்ந்தது.பிரிட்டிஷ் மக்களே-மெய்மறந்து பாராட்டினார்கள்-தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளும் விதமாக.
ஏற்கனவே மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மோடியின் லைக்ஸையும், சோனியாவின் கடுப்ஸையும் பரிசாக பெற்றுள்ள சசி தரூர்-மோடியின் தற்போதைய பாராட்டு விவகாரத்தினால் பாஜகவில் இணையப்போகிறார் என்ற பேச்சுக்கள் டெல்லி மற்றும் கேரள வட்டாரங்களில் சத்தமாகவே முணுமுணுக்கப்படுகின்றன.

மக்கள் மனதில் உள்ள இதே கேள்வியை பட்டென சசி தரூரின் முன்பு 23.07.2015 இரவு அன்று NDTVயின் பர்கா தத் கேட்டுவிட, சசி தரூர் புன்னகைத்துக்கொண்டே,
“பிஜேபியில் இணையும் எண்ணமும் எனக்கில்லை.என்னை துரத்தும் எண்ணமும் காங்கிரஸ் தலைமைக்கு இல்லை.பிஜேபியின் அடிப்படைகளையே இன்றுவரை விமர்சித்து வரும் ரத்த சுத்தமான காங்கிரஸ்காரன் நான்.மோடி என்னை பாராட்டினார் என்றால் அது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது.அவருக்கும் தெரியும் நான் காங்கிரஸை விட்டு அகல மாட்டேன் என்று” என்று பதிலளிக்க, கருத்தை பர்காவும் ஏற்றுக்கொண்டார்.

சோனியாவும் அவ்வளவு எளிதில் தரூரை நீக்கிவிட மாட்டார்.ஏனென்றால் தன்மையான மக்கள் எம்.பி என்பதை கடந்த திருவனந்தபுர பாராளுமன்ற தேர்தல்களின் போது தொடர்ந்து பெற்ற வெற்றிகளின் மூலம் நிரூபித்து கட்சி தொண்டர்களின் நன்மதிப்பை பெற்றது மட்டுமல்லாமல், ஜெட்லியின் பட்ஜெட்டில் உள்ள ஓட்டைகளை அதே கூட்டத்தொடரின் போதே அடுத்த நாளே அக்குவேறு ஆணிவேறாக சரமாரியாக விமர்சிக்கும் ஆற்றல் உள்ள மிகச்சில காங்கிரஸ் தலைவர்களில் தரூரும் ஒருவர்.
முடியைக் கோதிக்கொண்டே, அலட்டிக் கொள்ளாமல் யோசிக்கும் அவரது பாணி போலவே அவரது அரசியல் வாழ்வும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
தரூரின் ஆக்ஸ்போர்டு பேச்சை பார்க்க இதோ சுட்டி:

https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://m.ndtv.com/video/player/news/watch-the-tharoor-speech-on-british-rule-that-s-gone-viral/375995&ved=0CB0QyCkwAGoVChMI06ew8Z7zxgIVQ46UCh3hWwAF&usg=AFQjCNHHsFhBWLJpasRwHsPb9tlB1Iz2wA

கலெக்டரும் கன்னி(ண்ணி)யும்

கலெக்டர்,அவன் காரில் சைரன் அலற பறந்துக்கொண்டிருந்தான்.மனதில் அலுவல் ஞாபகங்கள் சைரனையும் தாண்டி ஒலித்துக்கொண்டிருந்தன.டிரைவர் வழக்கம்போல டாப் கியரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் அந்த காரை அவனால் காண முடிந்தது.கறுப்பு நிற ஸ்விப்ட்.அந்த தேசிய நெடுஞ்சாலையின் இரு நிலைகளில் தாறுமாறாகச் சென்று ஒரு மண்ரோட்டில் இறங்கிப் போக ஆரம்பித்தது.வழக்கமான மனநிலையில் கலெக்டர் இதை அலட்சியப் படுத்தியிருப்பான்.ஆனால் அவனின் ‘ஹன்ச்’-இது சரியில்லை என்றது.டிரைவரிடம் அந்த ஸ்விப்டை சற்று இடைவெளி விட்டு ஃபாலோ செய்ய சொன்னான்.
அவருக்கும் ஒரு ஆவல் பிடித்துக்கொண்டது போலும்.ஜேம்ஸ் பாண்டின் ‘ஸ்பை’ கார்கள் போல அந்த ஸ்விப்டை நிழலாடிச் சென்றார்.வண்டி அவர்கள் இருவரும் எதிர்பார்த்த இடங்களைவிட முன்னதாகவே நின்றது.ஆனாலும் ஆள் அரவம் இல்லை.சைரனை NHலேயே அணைத்ததை சொல்ல மறந்துவிட்டேன்.

ஆளுயர புதர்களுக்குப் பின்னால் காரை நிறுத்தினார் டிரைவர்.அந்த ஸ்விப்டிலிருந்து மூவர் இறங்கினர்.டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன், இறங்கி வந்து பேக்டோரை திறந்தான்.உள் இருந்து சேண்டல் நிற சல்வார் அணிந்து, கைகள் கட்டப்பட்ட நிலையில்,வாயில் டேப் போடப்பட்ட ஒரு 22-23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இறக்க, ஸாரி இழுக்கப்பட்டாள்.செய்திகளில் அடிக்கடி படிக்கும் வழக்கமான குற்றப்பின்னணி கொண்ட பாழடைந்த குடோன்தான் அந்த ஸ்பாட்.வந்திருந்த அந்த மூன்று நபர்களும் நோஞ்சான்கள் போலவே தென்பட்டாலும் முரட்டுத்தனமாகவே நடந்துக்கொண்டனர்.

அந்த பெண்ணுடன் குடோன் உள்ளே சென்றனர்.கலெக்டர் மனம் பதைபதைத்தான்.இளம் வயதில் இந்த போஸ்டிங்கை பெற்றாலும், மனதளவில் இப்பொழுதுதான் அதிர்ச்சிகளுக்கு பழகுகிறான்.டிரைவர் “உள்ளே நானும் வரவா?” என்று வினவ,”நீங்க கார்லயே இருங்க.கொஞ்ச நேரத்துல அந்த பெண்ணோட வர்றேன்” என்று பதிலளித்துவிட்டு காரிலிருந்து இறங்கி நடந்தான்.குடோன் வாசலை அடைந்ததும் ஷூவை கழற்றி எறிந்தான்.உடைந்துவிடும் தருவாயிலிருந்த “அரதப் பழைய” கட்டடம்.இருள், தூசி அதிகம் இருந்தாலும்-ஒரு ஜன்னலின் வழியேச் சற்று கேட்க முடிந்தது.திடீரென அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.வலியில் அவள் முனகினாள்.டேப் இன்னும் வாயிலேயே இருந்திருக்க வேண்டும்.கலெக்டருக்கு வியர்த்துக் கொட்டியது.

சற்று மெலிதான வெளிச்சம் அந்த இருளிலும் இருக்கத்தான் செய்தது.தைரியம் வரவழைத்துக் கொண்டு உள்ளே முன்னேறினான்.இடைவெளி விட்டு விட்டு சிறு முனகல் கேட்டது.அவர்கள் இருந்த இடத்தை அடைந்துவிட்டான் அமைதியாக.அங்கு அவன் கண்ட காட்சி வட இந்திய அதிகாரிகளுக்கு பழகிவிட்ட ஒரு காட்சி ஆகிடினும் இவனுக்கு ஷாக்கிங்காகவே இருந்தது.

அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி அவள் பாதத்தை கத்தியால் காயப்படுத்தியிருந்தார்கள் அந்த மூவர்.அவள் அழுதுகொண்டே தரையில் படுத்திருந்தாள்.குடோனின் தன் ஓரத்தில் வைக்கோல் இருப்பதை உணர்ந்த கலெக்டர், தன் சிகரெட் லைட்டரை எடுத்து பற்றவைத்தான்.அந்த இடம் வெளிச்சமும் வெப்பமும் பெற்றது.அதிர்ச்சியடைந்த அந்த மூவர் இவனைக் கண்டு மூர்க்கமாக ஓடிவந்து சுற்றி நின்றனர்.அந்த பெண் முகத்தில் காணல் நீராய் கரைந்துபோன நம்பிக்கை கரிசல்காட்டு மழையாக பொழியத்தொடங்கியது.தன் ஆபத்பாந்தவனை ஆசையோடு பார்த்தாள்.

அந்த மூவரும் ஹிந்தியில் தேவையில்லாத வசனங்களைப் பேசினர்.அதுவா நமக்கு முக்கியம்?
கலெக்டர் அவர்களைப் பார்த்து “பாஸ்டர்ட்ஸ்!” என்றான்.அதுதானே முக்கியம்!
முரடன்கள் போல இருந்தாலும் முன்பு சொன்னதைப் போலவே கலெக்டரை கம்பேர் செய்யும்போது பொடியன்களாக இருந்தனர்.
கலெக்டர்தான் வொர்க்-அவுட் அவ்வளவாக செய்யாமலேயே தடிமாடு போல இருந்தான்.அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு சில நொடி விடுகின்றேன்.

என்ன? கலெக்டரை அந்த மூணு பேரும் அடிச்சுப் போட்டுட்டு அந்த பொண்ணை ரேப் பண்ற சீன் வரும்னு நினைக்கறீங்களா? இல்லைங்க! என் கதைல அதலான் நடக்காது.நான் ஆந்திரா ஆடியன்ஸ் மாதிரிங்க.எனக்கு சோகமான ‘என்டிங்’ பிடிக்காது.ஹீரோதான் ஜெயிக்கணும்.ஸோ, அந்த லாஜிக் படியே ஹீரோ கலெக்டர் குங்புவோ கராத்தேவோ/இல்ல இரண்டும் கலந்தோ யூஸ் பண்ணி அவங்க எல்லாரையும் நவுத்து நவுத்துனு நவுத்திடறான்.

அவர்கள் மூர்ச்சையாகி(அதாங்க unconsciousஆ) கிடக்க, தன் மேல்சட்டையை எடுத்து அந்த பெண்ணிடம் அணிவிக்கின்றான்.அவள் தடைகளை களைகின்றான்(கட்ட அவிழ்த்து, டேப்பை எடுத்துனுலான் சொல்லிட்டு இருந்தா டைம் ஆவும் இல்ல?).அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே நடந்து வந்து காரின் பின் சீட்டில் ஏற்றினான்.அவனும் அமர்ந்துக் கொள்ள, டிரைவர் வண்டியைக் கிளப்புகிறார்.அவளின் மனநிலையை அவனால் யூகிக்க முடிந்தது.அவளின் படபடப்பை போக்க அவள் காதில் இதழ்வைத்து “யு ஆர் இன் safe hands!” என்று முனகினான்.அந்த பெண் அவன் அகன்ற தோள்களில் முகம் புதைத்து அழுதாள்.

“ஐ மஸ்ட் first அட்மிட் யூ டு எ ஹாஸ்பிடல்!” என்றான்.
“டோன்ட் வொர்ரி.உன் வருங்காலத்தைப் பத்திதானே கவலைப்படறே? ஐ வில் டேக் கேர்.ஐ வில் ஈவன் மேர்ரி யூ if யூ வாண்ட்!” என்று கொஞ்சம் ஓவர் இமோஷனலாகத்தான் பேசினான்.
அவள் முதன்முதலாய் பேச ஆரம்பித்தாள்.தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதவளாய் “டோண்ட் பி ஸில்லி, மிஸ்டர்! நீங்க ரேபிஸ்ட் கிட்ட இருந்து காப்பாத்துன பொண்ணுங்களை எல்லாம் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சீங்கனா உங்க வைஃப் லிஸ்ட் பாதி வோட்டர்ஸ் லிஸ்ட் ரேஞ்சுக்கு நீளும்!” என்றாள்.
பரவாயில்லையே இந்த சிச்சுவேஷனிலும் ஹியூமர் இழக்காமல் பேசுகிறாளே! கலெக்டருக்கு அவள் பேசியதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.அதை நினைத்து புன்னகைத்தான்.

அப்புறம் அவளே தொடர்ந்தாள் “வேணும்னா கேன் வீ ஹேவ் ய ஒன் நைட் ஸ்டாண்ட்?”
காரின் சைரன் மறுபடியும் அலறியது.

சுய ஆப்பு அப்பீட்டாகுமா?

உலகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.
16 வயது சிறுவர்களும் சிறுமிகளும் அமெரிக்காவில் பாப் ஆல்பம் போட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து போதை மருந்து அடிக்ட் ஆகி இறந்து போகின்றனர்.சிலர் ரீஹேப் சென்று மீண்டு வாழ்வை தொடர்கின்றனர்.
இன்னொரு கோடி உலகத்தில் ஒரு வேளை உணவு கிடைத்தால் பெருமாள் புண்ணியம் என்று பிச்சையெடுக்காத குறையாய் குழந்தைகளும் ஆதரவற்றவர்களும் வாழ்கின்றனர்.

ஏன் உலகத்துக்கெல்லாம் போகிறேன்.இந்தியாவே ஓர் உலகம்.ஏற்றத்தாழ்வுக்கு அதை விட சிறந்த எடுத்துக்காட்டு ஏது?
ஒரு புறம் கொழுத்த அம்பானியின் பையன் கிரவுண்ட் பவுண்டரியிலேயே சோஃபாவில் அமர்ந்து ஐபிஎல்லை தான் “நினைத்தவாறு” ரசிக்கிறான்.
இங்கே துரைசாமி சப்வே கீழ் தினமும் ஒரு மனிதர் எலிகளோடு தூங்குகிறார்.

இது ஒரு புறம்.இது பணம் சம்பந்தப்பட்டது.இன்னொன்று சமூக அந்தஸ்து மற்றும் கட்டாயம்.அதிர்ஷ்டவசமாகவே இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ நானும் இந்த சுழலில் சிக்கி கொண்டேன்.
நான் பிறந்ததிலிருந்தே கல்வியில் தோற்றதில்லை.முதன்மை மாணவனாகவே எல்லாருக்கும் ருசி கொடுத்து பழகி விட்டேன்.

எங்கு சென்றாலும் ஆயிரத்தில் ஒருவன், பத்தாயிரத்தில் ஒருவன் என்ற விகிதத்தில் தேர்வாகி தேர்வாகி என்னை சுற்றி ருசி கண்ட பூனைகள் இன்று புலிகளாய் மாறி என்னையே சுவைக்க துவங்கியுள்ளன.

மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமி.
எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி.
இன்போசிஸ்.
புதிய தலைமுறை.

பிறருக்கு கனவாகவே இருப்பதை, நான் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஆனால் விரும்புகிற விஷயங்கள் எனக்கு எளிதாக கிட்டி என்னை சுற்றியுள்ள சிலருக்கு வெற்றி களிப்பு போதையையும், சிலருக்கு வன்ம பொறாமையையும், எனக்கு மிகப்பெரிய ஆப்புகளையும் பரிசாக தந்துவிடுகின்றன.

சந்தோஷம் தானே? இதில் என்ன பிரச்னை என்பவர்களுக்கு என் நிலை புரியாது.இது நூலிழைமேல் ஆயிரமடி உயரத்தில் நடப்பதை போன்றது.எனக்கென்று தேவையில்லாத ஒரு கெத்தை பிறந்ததிலிருந்தே நானே உருவாக்கி விட்டேன்.
ஒன்று இப்பொழுது அந்த கெத்தை நிறைவு செய்யும் வகையில் நான் சாதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இல்லாவிடில் காலி.எனக்கு என்னாலேயே தோண்டப்பட்ட குழியில் நான் தவறி விழுந்தவுடன், மண்ணை போட்டு மூடுவதற்கு பலர் ரெடியாக இருக்கிறார்கள்.
ஆண்டவா! ஈஸ்வரா! நீ காட்டும் பாதையென என் வாழ்வை உன்னிடத்தில் முழுவதும் என்னை கொடுத்து, என் பயணத்தை தொடர்கிறேன்.தவறா ஒளியென எனை வழிநடத்துவாயாக.
ஜெய் ஸ்ரீராம்.
ஜெய் ஹிந்த்.
வாழ்க மனிதம்.வளர்க பாரதம்.

சக்தி.

ரயீஸ்-RAEES

image

ஷா நடை..

நான் ஷாருக்கின் பரம ரசிகன்.
தில் ஸேவில் யாருமில்லா ரயில்வே ஸ்டேஷனில் தம் பற்றவைக்க போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு அழகு தேவதையிடம் தீப்பெட்டி கேட்டு பல்பு வாங்கியபின் ,அவள் கேட்ட டீக்காக தூங்கிக்கொண்டிருக்கும் டீக்கடைக்காரரை மழையிடையே ஓடி எழுப்பி டீ கொண்டு வந்து அவள் ரயிலில் ஏறிச்செல்வதை பார்த்துவிட்டு, மழைத்துளி இறங்கும் டீயினை தனியே புன்னகைத்து குடிக்கும் அந்த சார்ம்.சேன்ஸ்லெஸ்.

தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கேவில் கஜோலுடனான குறும்புத்தனமான வேதியியலெல்லாம் இந்தி(ய) சினிமாவில் மீண்டும் அதே ஜோடி கரண் ஜோஹர் இயக்கும் தில்வாலேவில் தான் தொடர முடியும்.
சக் தே இந்தியா.பாகிஸ்தான் ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டு தேசத்துரோகி பழியை சுமக்கும் ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள இந்திய ஹாக்கி வீரர், பின்னர் தேசிய மகளிர் அணியின் கோச்சாக பரிணமித்து அணியை நல்வழிபடுத்தி ஜெயிக்கும் அட்ராஷியஸ் அழகு திரைக்கதை.
மை நேம் இஸ் கான்.அண்டு ஐ எம் நாட் எ டெரரிஸ்ட்.
இந்த வசனம்தான் எவ்வளவு புகழ்பெற்றது.
ஜப் டக் ஹை ஜானில் கத்ரீனா கைப், அனுஷ்கா ஷர்மாவுடன் இவர் தோன்றும் காட்சிகளை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கபி அல்விடா நா கேஹ்னா கள்ளத்தொடர்பு என்று கூற முடியாது.ஆனால் அது அவ்வளவு டீப்பான எக்ஸ்ட்ரா மேரிட்டல் காதல்.தவறான காவியம்.இறுதியில் காதல் மட்டுமே ஜெயிக்கும் என்று குறிக்கும் படம்.கணவன் மனைவி ஜோடிகளின் அந்நியோநியம் எப்படி பேணிக்காக்கப்பட வேண்டும் என்பதை காட்டும்.

ஹேப்பி நியூ யெர், ஸ்வதேஸ் பார்க்க முடியவில்லை.சென்னை எக்ஸ்பிரஸ் மீனம்மாவுடன் குஜால் குஷால் ஜாலி லூட்டி.
பிரியாமணியுடன் சரி குத்து என்று தெக்கத்திய ஆடியன்ஸையும் கையில் போட்டுக்கொண்டார்.ரஜினிக்கும் ட்ரிப்யூட் கொடுத்தார் லுங்கி டான்ஸ் செய்து.
டான்ஸ் பே சான்ஸ் வாலியே என்று அனுஷ்கா ஷர்மாவை ஷேக் செய்துகொண்டே அறிமுகம் செய்துவைத்து ஹோலே ஹோலே என்ற நடுத்தர வயது இந்திக்காரராகவும் ஈர்த்தார்.

ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உரிமையாளராக ஈடன் கார்டன் மற்றும் வாங்கடேவில் இவர் தோன்றி, பெரிய திரையில் கை அசைக்கும்போதுதான் இந்தியா வெறும் அமிதாப்களுக்கும் ரஜினிகளுக்கும் மட்டும் சொந்தம் இல்லை என்று புரிந்தது.
ஆனால் ரஜினியின் எந்திரனை ரா-ஒன்னாக காப்பியடிக்க முயன்று பெரும் பல்பு வாங்கினார்.
ஆனால் இடையில் அப்படத்தின் சம்மக் சல்லோ பாடலுக்காக ஏக்கானுடன் இணைந்து தூள் கிளப்பியதெல்லாம் தனி வரலாறு.

டான் பில்லாவின் மூலக்கதை.டான் 2 வில் பிரியங்காவுடனான செக்ஸி கெமிஸ்ட்ரி, அந்த டான் லாங் லாக் கெட்டப், தி கிங் இஸ் பேக் தீம் மியூசிக்குடன் இவரின் அதிரடி பரிணாமங்களை நம்மை ஒரு மாய உலகிற்கே அழைத்து செல்வார் பாலிவுட்டின் பாட்ஷா.தி கிங் கான்.

ஷாருக்கை பாலிவுட்டில் களமிறக்கியதே பம்பாய் டான் தாவூத் இப்ராகிம்தான் என்பதுபோன்ற பல கர்ண பரம்பரை கதைகள் வழிவழியாக உண்டு.
இத்தகைய பாட்ஷா விடாமல் தம்மடிக்கும் செயின் ஸ்மோக்கர்.
ஆனால் அதே அளவு அடிக்ஷன் ஜிம்மிலும் காட்டுவதில் பாடி செம்ம ஃபிட்.இந்திய பெண்கள் கல்லூரி காலத்தில் இவர் தலைமுடி, பேச்சு மேனரிஸங்களில் மயங்கி விழுந்து சைட்டடிக்க ஆரம்பித்து, கனவில் இவருடனே பேரன் பேத்தி எடுக்கும் வரை வாழ்ந்து, நிஜ வாழ்க்கையில் வேறு யாரையோ கல்யாணம் செய்து, பிள்ளைக்குட்டி பெற்றுப்போட்டு, நரை வந்து, ஆண்டி ஆகி, தன் புருஷனுக்கு சொட்டை விழுந்த பின்பும் இன்றும் ஷாருக்கை மனதார சைட்டடித்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.
அவருக்கும் பெண்களுக்கும் இடையேயான அந்த மேஜிக்கல் ரிலேஷன்ஷிப்பாலோ என்னவோ! அவருக்கு மட்டும் அழகு குறையவோ இல்லை.ஐம்பதை நெருங்கும்போதும்.நம் கமலஹாசன் ஐயா போல.
இன்றும் டீன் ஏஜ் கியூட்டி ஹீரோயினை ஜோடியாக போட்டாலும் செம்ம டஃப் அவளுக்கு கொடுப்பார் நம்ம எஸ்ஆர்கே.

image

டைட்டில் கார்ட்

இப்பொழுது ரம்ஜான் சீஸன்.இத் வாழ்த்து வணக்கங்களுடன் ஒரு இனிய சர்ப்ரைஸும் நம் இந்திய ரசிகர்களுக்கு கிட்டியிருக்கிறது.அதுதான் ஷாருக்கின் அடுத்த படமான ராயீஸின் முதல் லுக் டீஸரின் வெளியீடு.ஷாரூக் வெளுக்கிறார் வழக்கம்போல.

image

இன்றைய ரியாலிட்டி

ரெட் சில்லீஸ் எண்டர்டெயிண்மெண்ட்டின் சுய தயாரிப்பு.பூட் லெக்கர் எனப்படும் சாராய கடத்தல் டானாக காட்சி தருகிறார் ஷாரூக்.அவரே சமூகத்தில் பெரிய அந்தஸ்துள்ள ஆளாகவும் பரிணமிப்பது/இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிஜிஎம் தெறி தெறிக்கிறது.

image

சமூக அந்தஸ்தில் பெரிய ஆளாக பரிணமித்தல்

டீஸரின் கடைசி ஃபிரேமில் ஸ்பெக்ஸ் அணிந்து மைவைத்த கண்ணுடன் “பாய்” பார்க்கும் அந்த பார்வை அதிரடி.
இத் 2016ல் ரிலீஸ் என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
நிச்சயம் இன்றைய அரசியல் ரியாலிட்டிகளோடு படத்தின் களம் பொருந்துவதால் ஷாருக்கின் கரியரில் இது ஒரு மைல்கல் படமாக அமையும் என்று நிச்சயம் நம்பலாம்.

image

பாயின் தெறி லுக்

ஜெய் ஹிந்த்.
சக்தி.

image

ரமலான் 2016 ரிலீஸ்

மாரி ரசிகன் ரிவ்யூ

image

முதல் மூன்று நாளாவே மாரி போகலாமா வேணாமா என்று மிக்ஸிங் எமோஷன்.
நேற்று இரவு வரை புக் செய்யவில்லை.சென்னையில் இருந்தது வசதியாய் போயிற்று.
SPI சினிமாஸை துழாவினேன் ஒரு டிக்கட் கூட மிச்சம் இல்லை.
அதே கதி தான் புக் மை ஷோவிற்கும்.அடுத்து இருக்கவே இருக்கிறது டிக்கட் நியூ. மாஸ் தியேட்டர்களோடு டை அப் வைத்திருக்கும்.மாரி போன்ற மாஸ் படத்தை கிளாஸ் தியேட்டரில் பார்த்தால் கடுப்படித்து விடும்.
இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் மெட்ராஸ் தியேட்டரில் மாரி 11.30 மணி ஷோ எதிர்ப்பார்ப்பது பேராசைத்தான்.
அதே பேராசைத்தான் பட்டேன்.கிடைத்தது.காரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அரவிந்த் தியேட்டரில் ஒரு பால்கனி டிக்கட்.
பஸ் பிடித்து ரீச் ஆகி விட்டேன்.
கூட்டம் அள்ளியது.
தனுஷ் வொண்டர் பார் ஸ்டூடியோஸ் விஐபி தீம் மியூசிக்கோடு களமிறங்கியது.விசில் ரகளை ஸ்டார்ட்.
அடுத்து தனுஷ் பெயர் போடும்போது.பிறகு தனுஷ் இன்ட்ரோ.தொண்டை கிழிந்துவிட்டது.

மாரியின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு சீன் பிஜிஎம்மும் தெறி கிழி.
தனுஷின் ஏரியாவில் சண்முகபாண்டியன் வேலன் என்கிற தாதா.
அவருக்கு தளபதி நம்ம மாரி.மாரியோட அல்லக்கைகள் சனிக்கிழமை என்கிற ரோபோ சங்கரும், அடிதாங்கி என்கிற அப்பாவி ஜீவனும்.ரவுசு பிரிக்கிறார்கள்.

மாரிக்கேற்ற ஜோடியாக ஸ்ரீதேவி கேரக்டரில் காஜல் குல்ஃபிமா.
தனுஷை விட காஜலிடம் அதிகம் ரொமான்ஸ் பண்ணுவது ரோபோ தான்.கிளாப்ஸ் அள்ளுகிறார்.

காஜலை தனுஷிடம் “லட்டு மாதிரி பொண்ணுப்பா.சும்மா சுண்டுனா ரத்தம் வரும்” என்று சொல்லும் இடத்தில் எல்லாருமே விசிலடிக்கிறார்கள்.நிறைய வசனங்களுக்காகவும் பஞ்ச்களுக்காகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்.மாஸ் கமெர்ஷியல் இயக்குநராக வெற்றி பெற்று விட்டீர்கள்.

என்னால் தனுஷை ரஜினியோடு கம்பேர் செய்யாமல் இருக்கவே முடியவில்லை.தியேட்டருக்கு வெளியே ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்று சில ரசிகர்கள் தனுஷூக்கு பட்டம் கொடுத்து பேனர் வைத்திருந்தார்கள்.அப்பொழுது ஓவராக தெரிந்தது.
ஆனால் தியேட்டர் உள்ளே மாரியாக பரிணமிக்கும் தனுஷை பார்க்கும்போது அது அவ்வளவு தப்பாக தெரியவில்லை.
ரஜினி போலவே எவ்வளவு ஸ்டைல் உழைப்பை போட முடியுமோ அவ்வளவு உழைப்பையும் கொட்டியிருக்கிறார்.
பூ போட்ட சட்டை, பிரியவே பிரியாத சிகரட் புகை, கோல்டன் ஃபிரேம் கூலர்ஸ், நகை கடை விளம்பரம் போல செயின், மோதிரங்கள், தன் டிரேட் மார்க் ருத்ராட்சம் என்று ஒரு ஸ்டைல் காம்ரேட்டாக வலம் வருகிறார் தனுஷ்.
ஓவர் மாஸ்.சிங்கிள் மேன் ஆர்மி.ஒவ்வொரு சிச்சுவேஷனிலும் மாரிக்கு ஒவ்வொரு தீம்.அனிருத் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
புல்லரிக்கிறது.பின் அந்த அளவுக்கு மாஸாக எதிரே நிற்க யாரும் இல்லாததால் பேலன்ஸ் தவறி போரடிக்கிறது.என்ன அந்த போரடிப்பதை கிளைமாக்ஸில் தான் லைட்டாக ஒரு பிஞ்ச் உணர்வோம்.அது வரைக்கும் மாரியின் கெத்தே நம்மை கரை சேர்த்துவிடும்.அவ்வாறு திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
வீக்கான கதை.அதை வைத்து தனுஷ் என்ற ஒற்றை துருப்பு சீட்டை விளையாடி இருக்கிறார்கள்.ஜெயித்தும் விட்டார்கள்.ஏனென்றால் தனுஷின் ஆன் ஸ்கிரீன் மெஸ்மரிசம் அவ்வளவு பவர்ஃபுல்.

“என்னைப்பார்த்தா ரேப் பண்றவன் மாதிரி இருக்குதா? பொட்டைங்க தான் ரேப் பண்ணுவானுங்க.நான் ஆம்பளைடி” டயலாக்குக்கு தியேட்டர் அதிரல்.
“செஞ்சிருவேன்” பஞ்ச் மேனரிஸம் ஒவ்வொரு தடவை தனுஷ் பேசும் போதும் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
ஆட்டோக்காரர் எஃபெக்ட் அல்ட்ரா மாஸ்.

என்ன? விஜய் யேசுதாஸ் பத்தி எதுவுமே சொல்லலைனு பாக்கறீங்களா?
நீங்க கேட்கிறதுக்காக சொல்றேன்.தனுஷ் ஓங்கி அடிப்பதற்காகவே ஏற்படுத்த பட்ட அமுல் பேபி வெர்ஷன் 2.
பெர்பெக் பிஸிக், கம்பீரமான தோற்றம்.ஆனால் ரொம்ப மென்மையான குரல்.வில்லனுக்கு பாப்பா வேஷம்.பொருத்தமில்லை பாஸ்.சாக்லேட் ஹீரோவா ட்ரை பண்ணுங்க.தனுஷின் ஓவர் கெத்துக்கு முன்னாடி அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.அதுவே ப்ளஸ்.அதுவே மைனஸ்ஸூம் கூட.

மொத்தத்தில் மாரி.சாமானிய ரசிகனின் நியூ ஏஜ் கமெர்ஷியல் கடவுள்.தனுஷ் என்ற ஒற்றை மூலவர், உற்சவருடன்.