பாபநாசம்

image

தன் பெண்டு ,தன் பிள்ளை , சோறு வீடு இவையுண்டு தானுண்டென்போன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்.இது பாரதி தாசன் சொன்ன வாக்கு.

ஆனா கலி முத்திடிச்சு இல்லையா? தன் குடும்பத்தையாவது காப்பாத்தலாம்னு நினைக்கிற ஒரு சராசரி அப்பாவி மனுஷனோட அசாத்திய போராட்டம்தான் நம்ம உலகநாயகனோட பாபநாசம்.
நான் மலையாள திரிஷ்யம் பாக்கலை.தெலுங்கு துருஷ்யம் பாக்கலை.கமல் இந்த படத்தை ரீமேக் பண்ண போறார்னு கேள்வி பட்ட உடனேயே அதுகளை பாக்கற எண்ணத்தையே விட்டுட்டேன்.சத்தியமா எங்க உலகநாயகனை விஞ்சி எந்த கொம்பனும் நடிச்சிருக்க முடியாது, நடிச்சிடவும் முடியாது.

image

அந்த நம்பிக்கை வீண் போகலை.பொய்க்கலை.சுளையா மூணு மணி நேரம் படம்.ஒரு செகண்ட் கூட சலிக்கலை.கமலோட குமரி-நெல்லை வட்டார வழக்கு சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிச்ச மாதிரி இருக்கு.ஜெயமோகனோட வசனங்களை உயிரா வாழ்ந்து எல்லாரும் பேசிருக்காங்க.
கவுதமி, பெரிய பொண்ணு நிவேதா தாமஸ், சின்ன பொண்ணு எஸ்தர் (பட்டுக்குட்டி),ஹோட்டல்காரர் பட்டாபி எம்.எஸ் பாஸ்கர், போலீஸ்காரர்கள் அருள்தாஸ், கலாபவன்மணி எல்லாரும் எல்லாரும் அவங்க பாத்திரத்தை கச்சிதமா வாழ்ந்திருக்காங்க.

image

கமல் தன் மனைவியையும் மகள்களையும் கொஞ்சும் இடமெல்லாம் லவ்லி.குட்டிகுரா பவுடர், டிவிஎஸ் எக்ஸெல், கேபிள் ஆபரேட்டர் தொழில், அனாதையாக இருந்து அஞ்சு ஏக்கரா பண்ணை வீடு அதிபரான சாமானிய அசாத்திய வரலாறு, அதற்கு காரணமான சிக்கனம், படிக்காமலேயே சினிமாவை வச்சு சமயோசிதமா வாழ்க்கையை கையாள்கிற மேதைத்தனம், அந்த ஜீப், குடும்பத்துக்காக எதையும் பொறுத்துக்கற அசுர தேவ குணம்னு விளையாண்டுட்டார் மனுஷன்.

image

டிக்கட்டே ரிவ்யூ சொல்லிவிட்டது.படம் first class

டிக்கட் நியூ appல் இரண்டு நாட்களுக்கு முன் புக்கிங் ஓப்பன் ஆனது.அப்போதே புக் செய்தாயிற்று.
இன்று காலை பாலசுப்ரமணியர் பாரடைஸ் திரையரங்கிற்கு நடந்தே போய்ட்டேன்(ஹெல்மட் இன்னும் வாங்கலை)
அருமையான அனுபவம்.பைசா வசூல்.
மஞ்சப்பை பணம், சிவாஜி ஹேர்ஸ்டைல், பாசமலர் பார்த்து அழுவது, பலான படம் பார்த்து மூட் ஏறுவது, சிகரெட் அட்டையில் கணக்கு எழுதுவது, எல்லா தோட்ட வேலைகளையும் தானே இழுத்து போட்டு செய்வது, பாசம்,பதைபதைப்பு, சாமர்த்தியம், எண்ணி பார்க்க முடியாத புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரம் இந்த பாபநாசத்து சுயம்புலிங்கம்.
இதை விக்ரமோ, தனுஷோ தவிர வேறு யாரும் கமல் அளவுக்கு கனகச்சிதமாய் செய்வதில் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.
நெருப்புக்கு எண்ண பரவவா கற்றுக்கொடுக்க வேண்டும்?

image

இன்றே புக் செய்யுங்கள்.இந்த மண்ணாங்கட்டி லேப்டாப் ஒரிஜினல் மலையாள, தெலுங்கு/கன்னட படத்தை பார்த்தாச்சு, கம்பேர் பண்ண போறேன் என்றாலும் தில்லுக்கு துட்டா சொல்றேன்.எங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரை மிஞ்ச முடியாது.
சக்தி.

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s