செவ்வாய்கிழமை செய்திகள் :P

image

வணக்கம் தமிழாஸ் அண்டு தமிழச்சிஸ் வோர்ல்டு வைட்.
இன்னிக்கு தேதில சில பல ஜாலியான தகவல்கள் வழக்கம்போல ஷேரிங்.
முந்தா நேத்து எங்க ஊர்ல(ஞாயித்து கெழம) எல்லா ஜனங்களும் வெறியா பக்தி வந்து கிரிவலம்(அதாங்க மலை சுத்தறது) போய்கினு இருந்தாங்க.நான் சைக்கிள் எடுத்துகினு அப்டே ரவுண்டு அடிச்சினு இருந்தேன்.
“இன்னாடா இன்னிக்கு இவ்ளோ கூட்டமா இருக்குது? ஞாயித்து கெழமங்கிறதால போர் அடிச்சு மலை சுத்தறாங்களா?இல்லை பக்தி அவ்ளோ முத்தி போயிடுச்சா?”னு யோசிச்சுகினே நானும் அப்டே சைக்கிளயே மலை சுத்தினு வந்துட்டேன்.அப்புறம் தான் கேலண்டர் எடுத்து பாத்தா குரு பெயர்ச்சியாம்.தக்ஷிணாமூர்த்தி கோவிலலாம் கூட்டம் அள்ளுது.

அதானே பாத்தேன்.நம்ம ஜனங்க சும்மா சுத்துவாங்களா? ரைட்டு அடுத்த டாபிக் நம்ம தல அஜித் சுரேஷ் கிருஷ்ணா கூட ஒரு படம் பண்ண புக் ஆகி இருக்காப்ள.அதாங்க பாட்ஷா டைரக்டரு.இந்த படத்துக்கு பட்ஜெட் 50 கோடியாம்.
பாட்ஷா 2 வா இருக்கும்னு கிளப்பி விட்டுனு இருக்காங்க.
எனிவேஸ் அதுக்குள்ள வீரம் சிவா படம், சுசீந்திரன் கூட ஒரு படம் பண்றாப்ள.

அ நெக்ஸ்ட் நியூஸ் இஸ்:நம்ம உலகநாயகனோட பாபநாசம் படம் 3 நாளுல 25 கோடி கலெக்ஷனாம்.யப்பா.
இந்த படத்துல மொதல்ல ரஜினி தான் நடிக்கறதா இருந்ததாவும் அந்த கதை ரஜினி வோணானு சொன்னதால கமல் கைக்கு வந்ததாவும் நிறைய பேரு பீலா உட்டுனு திரியறானுங்க.

சரி அந்த பீலா உண்மையாவே இருக்குதுனு வச்சிப்போம்.இப்ப ரஜினி செஞ்சதுல என்ன தப்பு? கரெக்ட் டிசைஷன் தான் எடுத்துருக்காரு தலைவர்.அவரு ஸ்டைலுக்கு இந்த படம் சத்தியமா செட் ஆகி இருக்காது.அவரு பாதை அவருக்கு தெரியும்.அதனால தான் நல்ல கதையா இருந்தாலும் அதை தன்னோட பாணில பண்ணனும்னு மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித் கூட சேர்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்கார்.

அடுத்த டாபிக் அன்சங் ஹீரோ விஷ்ணு.
இவரு நடிக்ற படம் எல்லாம் அதிரி புதிரி ஹிட்.சத்தமில்லாம ஹேட்ரிக் ஹிட்டே அடிச்சிட்டாப்ள.
குள்ளநரி கூட்டம், வெண்ணிலா கபடி குழு ஜஸ்ட் இப்டி ஒரு ஆள் இருக்கறாம்பா னு நமக்கு காட்டிச்சுங்க.
நடுவுல செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் அப்ப விஷ்ணு எவ்ளோ சூப்பர் கிரிக்கட்டர்னு நாம தெரிஞ்சிகிட்டோம்.அதை வச்சே ஆர்யாவும் விஷாலும் ஜீவாங்கற படத்தை சுசீந்திரன் டைரக்ஷன்ல விஷ்ணுவை தயாரிச்சாங்க.நல்ல ஹிட்.
தொடர்ந்து முண்டாசுப்பட்டி.முநீஸ் காந்த்காகவே ஓடிச்சு.இப்ப நேற்று இன்று நாளை.ரசிகர்கள், விமர்சகர்கள்னு நல்ல ரெஸ்பான்ஸ்.சூப்பர் ஹிட்.
தொடர்ந்து நல்ல படங்கள் கொடுங்க விஷ்ணு.

நானும் எப்பதான் மெட்ராஸ் போவேனு இருக்குது.முளாம்பழம் விக்றவன்கூட மெட்ரோ ரயில்ல போய் செல்ஃபி எடுத்து போட்டு கடுப்பேத்தறான்.40 ரூவா கட்டணம்.இருந்தாலும் பரவாயில்லை.நானும் ரவுடி நானும் ரவுடி.போயே தீருவேன்.

நெக்ஸ்ட் இஸ் எ ரவுண்ட் அப் டிஸ்கஷன் அபவுட் ஆன்லைன் டிக்கட் புக்கிங் for பஸ்கள்.
ஏமாந்துறாதீங்க மக்களே.
காசு வாங்கிகினு ஸீட் அவைலபிள் இல்லங்கறானுங்க.விடாதீங்க.
முட்டி மோதுங்க.அப்பதான் ரெட்பஸ் போன்ற ஏப்ல ஸீட் கிடைக்கும்.
நெக்ஸ்ட் நல்ல போஸ்ட்டோடு வர்றேன்.
நன்றி.வந்தனம்.
சக்தி ப்ளாக்ஸ் ஹேப்பி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s