மீடியா பிராஜக்ட் 1.கானல் நீரை நம்பும் மீன்கள்

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நடக்கும் பள்ளிக்கல்வி நிலை(குறிப்பாக +1,+2) educational migration பற்றிய பதிவு.

மனதில் எப்பொழுதும் ஒரு கேள்வி.என்ன வளம் இல்லை இந்த திருவண்ணாமலையிலே?
1938 பதிவு செய்யப்பட்ட கல்வி  நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.அவற்றில் 1830 பள்ளிகள்.நம் நோக்கம்-இங்கிருக்கும் 140 மேல்நிலைப் பள்ளிகளும் நம்பத்தகாதவை என்றெண்ணி 15-17 வயது வகுப்பிலுள்ள 2,29,650 பேரில் சராசரியாக 30% பேர் +1 சேரும்பொழுது வேறு மாவட்ட (கிருஷ்ணகிரி, நாமக்கல்) பள்ளிகளை ஏன் நாடுகின்றனர்?  என்பது.
இவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களால் இரத்தினங்களாக தீட்டப்பட்டவர்கள்.
450+ மதிப்பெண்களைப் பெற்று, மாவட்ட-மாநில அளவில் சாதிக்கும் திறன் படைத்தவர்கள்.ஒவ்வொரு மாணவனின் கல்வித்திறனும் அதைபற்றிய ஈடுபாடும் வேறுபடும் என்பதை நாம் இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம்.
தமிழ்நாடு அளவில் இந்த மாவட்டம் எப்பொழுதும் பின்தங்கிய மாவட்டமாக விழுப்பரம் மாவட்டத்துடன் கடைசி இடத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு இடம் பிடிக்கிறது.தலைமை செயலகத்தில் அவ்வப்போது நடக்கும் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர், சிஇஓ போன்றவர்கள் அவமானம் அனுபவித்துத்தான் வருகின்றனர்.

இப்படி பெற்றோர்களின் நியாயமான (!) பேராசையால் நிகழும் பள்ளி மாற்றத்தில் பிள்ளைகளின் கனவுகள் கசக்கப்பட்டு, உண்மை நிலையை அறியாமல் அவர்களுடைய சிந்தனைகளையும், ஆற்றல்களையும், கருத்தோவியங்களையும், ஆசைகளையும், தமிழையும் கொன்று புதைத்துவிட்டு, இருவருடம் உருப்போட்டு வெறும் கட்-ஆஃப் எனப்படும் மருத்துவ, பொறியியல் மதிப்பெண்களை மட்டுமே மையமாக வைத்து நடக்கும் படையெடுப்புகள் தாம் அதிகம்.
இதனால் அனைத்து சிறந்த மாணவர்களும் வெற்றியடைகின்றனர் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டாலும், அங்கு செல்லும் 50% மாணவர்களே நினைத்த மதிப்பெண்களை பெறுகின்றனர்.மிச்சம் பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி, இருக்கின்ற திறமைகளும் மழுங்கடிக்கப்படுகிறார்கள்.அவர்கள் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதித்த மாணவர்கள்.தன் வகுப்பிலுள்ள சராசரி மாணவர்களின் தோழர் தோழியர்கள், அவர்களின் முதன்மை ஆசான்கள்.மாணவர்கள் ஆர்வமின்மை, ஆசிரியர்களின் கவனக்குறைவு போன்ற மேம்போக்கான காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த உள்ளூர் பிரெயின் டிரெயினே இம்மாவட்டத்தின் மோசமான கல்வி நிலைக்கு காரணம்.

மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இங்கு 1 மைய நூலகம்,41 கிளை நூலகங்கள்,70 ஊராட்சி நூலகங்கள்,27 பகுதிநேர நூலகங்கள் உட்பட 139 நூலகங்கள் உள்ளன. (Source: district head library office)இவற்றில் 54 சொந்த அரசாங்க கட்டடங்களிலும்,5 தனியார் வாடகை கட்டடங்களிலும் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.அனக்காவூர், வெம்பாக்கம், பெரணமல்லூர், புதுப்பாளையம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, துரிஞ்சாபுரம் போன்ற சிறுசிறு நகரங்களிலும் கூட அரசு இந்த நூலகங்களை அமைத்துள்ளது.எனவே கட்டமைப்புகள் முற்றிலும் இல்லை என்று கூறிவிட முடியாது.ஆசிரியர்கள் அனைவரும் உயிரியல், கணக்கு, கணினி அறிவியல்,மொழிகள் போன்ற தனித்தனி துறைகளில் விற்பன்னர்கள்.இவர்களை நம்பாது செல்லும் இந்த நிலையால் மாவட்டத்தின் கல்வி தேர்ச்சி விழுக்காட்டில் 15%-20% வருடாவருடம் நிலையற்ற தன்மை(பெரும் மாற்றம்) ஏற்படுவதாக தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் சதீஷ் பாரத் தெரிவித்திருந்தார்.

460 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் +1ல் எங்கள் பள்ளியில் ஸீட் என்று சல்லடை(வலை) போட்டு வடிகட்டப்படும் வேறு மாவட்ட பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களை விட்டுவிட்டு மிச்சமுள்ள மாணவர்களை வைத்து தயார் செய்து,இவர்களை குழுக்களாக பிரித்து தனிகவனம் செலுத்தி one word படிக்கவைத்து தேற்றவே பெரும்பாடு படுகின்றனர் இந்த இரு வருடங்களில்.அரசு மற்றும் ஒரு மாவட்டத்தின் அத்தனை ஆசிரியர்களுமா தகுதியற்றவர்கள்?
இருந்தும் இந்த வடிகட்டலின் முன்பு அவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழக அளவில் தோற்று விடுகின்றது.

தீர்வு:

ஒரு கடும் மீளாச்சுழலில்(vicious cycle) இம்மாவட்டம் சிக்கித்தவிக்கின்றது.இதை தவிர்த்தால் மாத்திரமே ஆசிரிய மாணவ உறவு இலகுவாகும்.மாநில அளவில் சாதனை பிறக்கும்.நம்பிக்கைதான் இதற்கு தீர்வு.
பெற்றோர்கள் பிள்ளைகளின் மீதும், இந்த இரு சாராரும் ஆசிரியர்களின் மீதும், இவர்கள் அனைவருமே தங்கள் தாமே மீதும் வைக்கவேண்டிய நம்பிக்கை.அந்த உந்துதல் மட்டுமே நிறைவேற்ற படாமல் இருக்கின்றது.அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான கல்விச்சூழல் பள்ளிக்கல்வி அளவிலாவது கொண்டு வர இயலும்.சுயநலத்தை நாடிச் செல்வது மனித இயல்புதான்.அதில் பொதுநலத்தை கலந்திட்டால் அது பெரும் வரமாகாதோ? உணர்வோமா?

சக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s