யான் சமூகத்தின் காதலன்

image

கடந்த ஒரு வருடமாக என் மூச்சு இதுவே

உங்களில் பலருக்கும் பொறியாளனாகிய நான் தமிழகத்தின் தலைசிறந்த ஊடக குழுமங்களில் ஒன்றான புதிய தலைமுறை குழுமத்தில் பத்திரிக்கையாளனாக பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி இருக்கும்.அது ஒரு சுவையான சம்பவங்களின் கோர்வை.

மின் மற்றும் மின்னணுவியல்-பொறியியலில் யான் தேர்வு செய்த பாடம்.அதுவும் தேசத்திலேயே சிறந்த 8வது தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான எஸ்எஸ்என் கல்லூரியில்.இங்கு ஸீட் கிடைக்கும் என்று நானே நினைத்ததில்லை.ஆனால் நிகழ்ந்தது.நான்கு வருட சொர்க்கம்.தொழில்நுட்பத்தின் உச்சம்.ஒரு முழு மனிதனாய் என்னை உணர வைத்தது என் கல்லூரி தான்.
தெற்கு ரயில்வேயிலும் பயிற்சி பெற்றேன்.

ஆனால் நான் போதிய ஜிபிஏ குவிக்கவில்லை.கவிதை, ஆங்கிலம், நாடகம் என்று பல்துறைகளிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்தேன்.அதன் சிந்தனை சீற்றத்தில் மூன்று அரியர்கள்.எலக்டரிக்கல் கோர் கம்பெனிகளான அசோக் லேலந்தும், எல் அண்டு டியும் பெல் நிறுவனமும் என் அரியரை காரணம் காட்டி எலிஜிபிள் இல்லை என்றன.இத்தனைக்கும் அவற்றை இரண்டாம் ஆண்டிலேயே க்ளியர் செய்து விட்டேன்.அதன்பின் ஒரு அரியர் கூட இல்லை.மின் பொறியியல் அவ்வளவு இஷ்டம்.ரசித்து ரசித்து கதை போல படித்தேன்.

நான் அரியர் வைத்த மூன்று பாடங்களும் மின் பொறியியலுக்கு சம்பந்தம் இல்லாதவை.
1.இன்ஜினியரிங் கிராபிக்ஸ்
2.டேட்டா ஸ்ட்ரக்சர் ஆய்வகம்
3.பார்ஷியல் டிபரென்ஷியல் ஈகுவேஷன்(கணக்கு டீச்சர் மேல் இருந்த வெறுப்பு பாடத்தின் மீது படர்ந்தது)

பிராஜக்டெல்லாம் சொர்க்கம்.உணவு பதப்படுத்தும் தொழிலில் நுண்ணியரிகளை கொல்வதற்கு சீப்பான ஒரு மின்கருவி மாடலை வெறும் காக்ராப்ட் கெப்பாசிட்டர்கள் மூலம் வடிவமைத்தோம்.ஆசிரியர்களின் ஊக்கமும் நல் ஆதரவும் இருந்தது.
இறுதி ஆண்டில் பல்டியடித்து எப்படியோ 7.1 அளவிற்கு சிஜிபிஏ கொண்டு வந்தேன்.
இன்போசிஸ் நேர்காணலில் எச்.ஆரை சுலபமாக பேசி இம்ப்ரெஸ் செய்தேன்.என் ரெஸ்யுமே அவருக்கு பிடித்திருந்தது.தேர்வு செய்யப்பட்டேன்.

மூன்று மாதங்கள் இன்போசிஸ் மைசூரில் பயிற்சி.அருமையான நாட்கள்.சங்கீத் என்ற அருமையான கோவை சிஐடி நண்பன் கிடைத்தான்.நல்ல தரமான வாழ்க்கை.ஆனால் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.
மூன்று தேர்வுகளை க்ளியர் செய்ய வேண்டும்.
1.ஜாவா
2.எஸ்க்யூஎல்(sql)
3.எச்டிஎம்எல்(html)

நான் எஸ்க்யூஎல், எச்டிஎம்எல் க்ளியர் செய்தேன்.ஜாவாவில் தோற்றுவிட்டேன்.எச்.ஆரிடம் கேட்க விருப்பமில்லை.
வேலை ராஜினாமா கடிதத்தில் for personal என்று குறிப்பிட்டேன்.
ஒரு விதத்தில் நான் fire ஆனேன்.ஒரு விதத்தில் நான் விரும்பியும் ராஜினாமா தேடியதாக அர்த்தம் ஆயிற்று.

கல்லூரி இறுதி ஆண்டில் சென்னை மேயர் சைதை துரைசாமி அவர்களின் ஐஏஎஸ் அகாடெமியில் லட்சக்கணக்கான மாணவர்களுள் தேர்வு செய்யப்பட்ட சில ஆயிரம் மாணவர்களுள் ஒருவனானேன்.
அந்த தெம்பு வேலையிலிருந்து வெளியே வந்த பின்னும் நம்பிக்கை அளித்தது.

அப்பொழுதுதான் புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர் திட்டம் 2014-2015க்கான அறிவிப்பு வெளியானது.
விண்ணப்பித்த பல ஆயிரம் பேர்களுள் 4 மண்டலமாக பிரித்து ஒரு 30 பேர் தேர்வானோம்.அந்த 30 மாணவர்களுக்கும் நேர்காணல் நடந்தது. சென்னை மண்டலத்தில் கலந்து கொண்ட நான் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் தேர்வானேன்.
இறுதியில் 14 பயிற்சி பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.இறைவனின் அருளாலும் என் ஆசான் ஐயா திரு.மாலன் அவர்களின் கரிசனத்தாலும் நானும் இந்த பாக்கியம் பெற்றேன்.
நேர்காணலின் போது மாலன் ஐயா எனக்கு ஒரு சேலஞ்ச் ஒன்றை அளித்தார்.

அது என் சொந்த மாவட்டத்தின்(திருவண்ணாமலை) தலையாய பிரச்னைகளாக நான் உணர்பவற்றை ஒரு  கோப்பாக தயார் செய்து சமர்ப்பிக்கும்படி பணித்தார்.தீயாக வேலையில் இறங்கி நேரடியாக அலுவலகம் சென்று உதவி ஆசிரியர் திருமதி.கீதா அவர்களிடம் சமர்ப்பித்தேன்.
என் முழு முயற்சியையும் கொட்டியிருந்தேன்.ஆசிரியர் திரு.மாலன் ஐயாவின் கவனம் என் மேல் குவிந்தது.நான் தேர்வானேன்.

அந்த கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக என் வலைப்பூவின் அடுத்தடுத்த பதிவுகள் தொடரும்.
நன்றி.
சக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s