2.தென்பெண்ணையின் இன்றைய நிலை மற்றும் சாத்தனூர்-ஒரு அலசல்

“வெட்டிவேரு வாசம், விடலைப்புள்ள நேசம்!” என்றொரு இளையராஜா கீதம் தாலாட்டும்.அந்த கீதத்தைப் போல தான் பாய்கின்ற 400 கிலோமீட்டர் தூரத்தில் வெறும் 35 கிலோமீட்டரே திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊடாக பாய்ந்தாலும் கிட்டத்தட்ட 17,980 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை உயிர்ப்பித்து, மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரமாக திகழும் தென்பெண்ணை, குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகின்றது.தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்தை 19 மைல் தொலைவிலுள்ள திருவண்ணாமலையிலிருந்து 25 நிமிட,20 ரூபாய்(போய் வர) பேருந்து பயணத்தின் மூலம் அடைந்தோமேயானால் இந்த நதியைப் பற்றியும் இந்த நீர்த்தேக்கத்தைப் பற்றியும் அறிவதன் அவசியத்தை உணரலாம்.

கர்நாடக மாநிலம் நந்திதுர்காவில் உருக்கொள்ளும் தென்பெண்ணை தெற்காகவும் கிழக்காகவும் கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம் மாவட்டங்களை செழுமையாக்கிவிட்டு, கடலூரில் வங்கக்கடலில் இணைகின்றது.பாய்கின்ற எல்லா மாவட்டங்களை காட்டிலும் distance to irrigability, அதாவது பாய்கின்ற தூரத்திற்கும் நீர்ப்பாசன நில அளவிற்குமான விகிதம்-திருவண்ணாமலை மாவட்டத்திற்கே அதிகம் பயனளிக்கின்றது.ஒரு கி.மீ பாய்ச்சலுக்கு 513.71 ஏக்கர் பயன்பெறுகிறதென்றால் பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இது காவிரி, கங்கை போல வற்றாத ஜீவநதி அல்ல.பருவ மழையின் அளவினைப் பொறுத்தே இதன் நீரின் அளவு அமைகின்றது.

பருவம் மற்றும் மழைநீரின் அளவு:

தென்மேற்கு பருவமழை-465.8
வடகிழக்கு பருவமழை-439.8
குளிர்காலங்களில்-26.5
கோடைக்காலங்களில்-98.9
மொத்தம் மழையளவு-1031.0

இது குடிநீர், மின்சாரத்திற்கு மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தின் சராசரி தட்பவெட்பமான 23° செல்ஷியஸ்,காற்றின் ஈரப்பதமான 66.5 போன்றவற்றை காக்க, பராமரிக்க உதவுகின்றது.இத்தகைய தென்பெண்ணை குறுக்கே கேளவரப்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.இதில் திருவண்ணாமலைக்கு குடிநீர் அளிக்கும் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 4480 ஹெக்டேர்கள், உயரம் 119 அடி.8100 மில்லியன் கியூபிக் அடி தண்ணீர் கொள்ளும் இதன் நீளமானது 35 அடியாகும்.மொத்தம் 9 மதகுகள் மூலம் தண்ணீரின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகின்றது.திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் 1965 குடிநீர் தொட்டிகளுக்கும் 144 கால்வாய்கள் மூலம் இங்கிருந்துதான் குடிநீர், நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகின்றது.

தாக்கம்:

நல்ல சுற்றுலாத் தளமான சாத்தனூரில் அனறைய கால சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் பாடல்கள் முதலியன படம் பிடிக்கப்பட்டன.மைசூர் பிருந்தாவன், சாத்தனூர் அணை இரண்டும் அவுட்டோருக்கான பிடித்தமான இடங்களாகிப் போயின. ரூ.53 லட்சம் மதிப்புள்ள மீன் உற்பத்தியும் இங்குதான் நடக்கின்றது.மொத்த மீன் உற்பத்தி-140.85 டன்கள்(ஆண்டொன்றுக்கு).இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 120 மீனவ குடும்பங்கள் இன்றும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.10.722 எம்.யூ மின்சார யூனிட்டுகள் இங்குள்ள நீர்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

பிரச்சினைகள்:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனுமார்தீர்த்தம் அருகே இந்நதிக்கரையில் மணல் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுட்டிகாட்டி அதை தடுக்க முயன்று வருகின்றன.மேலும் ஓசூர் நகரின் ஆலைக்கழிவுகளின் நீர் இதில் திருப்பிவிடப்பட்டு கலக்கின்றது என்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதனை sustainable life trust என்ற பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு(ngo) எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றது.

Savethenpennai என்ற அதன் வலைப்பூவை கூகுளில் சொடுக்கினால் நீங்களும் இந்த குரலுக்கு வலுசேர்க்கலாம்.மணல் அரிப்பும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நதிகளைப் போலவே இங்கும் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.சுற்றுச்சூழல் மாசு, மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கலப்பு தவிர்க்க வேண்டிய ஒன்று.

2010-11 புள்ளிவிவரங்களின்படி 2.1 லட்சம் ஹெக்டேராக இருந்த வேளாண் நிலங்கள் வேறு 1.97 லட்சம் ஹெக்டேராக 2011-12ன் போதே சுருங்கி விட்டது. ஒரு வருடத்திலேயே இவ்வளவு இழப்பு என்று கணக்கு எடுத்துக்கொண்டால்(13,595 ஹெக்டேர்)நம் விவசாய நிலங்கள் மாவட்டத்திலிருந்து சிறிது சிறிதாக காணாமல் போய்விடும்.

வடக்கில் உள்ள அண்டை மாவட்டமான வேலூரின் பாலாறு அழிந்த கதை உலகம் அறிந்த ஒன்று.தென்பெண்ணை அந்த அழிவின் துவக்கத்தில் இருக்கின்றது.அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அவசியமும் கடமையும் நம் 4 மாவட்ட மக்களின் கைகளிலும் தோள்களிலும்தான் உள்ளது.
ஆக்கிரமிப்புகளை(நீர் உறிஞ்சும் தாவர வகையறாக்கள்)அகற்றி, மணல் திருட்டு குறைத்து(முழுவதும் நிறுத்த முடியாமற் போகும் பட்சத்தில்-அனுமார்தீர்த்தம் போன்ற இடங்களில்),இயற்கை நிகழ்வுகளான மணல் அரிப்பை கட்டுப்படுத்தி, கழிவுநீர் எந்தவகையிலும் ஆற்றுநீரில் சேரவிடாமல் தடுக்கப்பட்டால் தென்பெண்ணை இன்று காண்பது போலவே மக்களின் துயரை என்றும் தீர்க்கும்.இல்லாவிடில் ஒரு கல்பதருவை கண் முன்னே தொலைத்த நம் பாவத்திற்கு என்றும் மன்னிப்பு தேட முடியாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s