ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையோர சரமாரி-விதிகளை மீறுகிறார்களா?

திருவண்ணாமலை மாவட்டத்தின் போக்குவரத்து ஒரு சவாலாகவே தோன்றவில்லையா?

இந்த புள்ளி விபரங்களை பார்த்தபின் புரிந்து கொள்வீர்கள்.
4388 ஆட்டோக்கள்
1551 மோட்டார் கேப்கள்
918 பள்ளி பேருந்துகள்
98 ஆம்புலன்ஸ்
10 தீயணைப்பு வண்டிகள்
3747 தொழிற் வாகனங்கள்
4113 மாநில பெர்மிட் லாரிகள்
1542 நேஷனல் பெர்மிட் லாரிகள்
1613 டிரய்லர்கள்
88116 பைக்குகள்
88627 டிவிஎஸ் மற்றும் இதர ஸ்கூட்டர்கள்
80495 மொபெட்டுகள்
10915 கார்கள்
601 ஜீப்கள்
10947 டிராக்டர்கள்
11 ரோட் ரோல்லர்கள்.

பதியப்பட்டவை மட்டும் இவை.பதியப்படாமல் இன்னும் எவ்வளவோ வாகனங்கள்.இது மட்டுமல்லாமல் 549 அரசுப் பேருந்துகள் தினசரி 3.26 லட்சம் மக்களின் போக்குவரத்திற்காக இருக்கின்றன.

இவை அனைத்தும் 2596.91 கிலோமீட்டர் அளவிலுள்ள சாலைகளில்.புரிகின்றதா? கண்முன் காட்சிகள் விரிகின்றனவோ? ஆனால் 5344 ப்ரொபெஷனல் ஓட்டுநர் உரிமங்களும்,24329 மற்ற ஓட்டுநர் உரிமங்களும் மட்டுமே பெறப்பட்டுள்ளன.வெளி மாவட்ட, வெளி மாநில வாகனங்களை நான் கணக்கிலேயே சேர்க்கவில்லை.இந்த லைசென்ஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.இப்பொழுதுதான் விடயத்தின் வீரியத்துக்குள்ளேயே காலடி எடுத்து வைக்கிறோம்.ஒரு வருடத்தில்(2012 புள்ளியியல்) 2958 வாகன விபத்துகள் நடந்துள்ளன.இதில் 780 பேர் பலியாகியுள்ளனர்.4038 பேர் தீவிர காயமடைந்துள்ளனர்.இது மாவட்ட போக்குவரத்து துறை புள்ளி விவரங்கள் படி கிடைத்துள்ள தகவல்கள்.

இது போதாதென்று எங்கும், எல்லா சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள்.அவை இரு வகைகளாக இருக்கின்றன-i.அனுமதி பெறப்படாத கடைகள் முளைத்துள்ளன.
ii.நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்.
இதனால் இருக்கின்ற சாலை குறுகலாகி விபத்துகள் ஏற்படுகின்றன.முக்கியமாக கடைவீதிகள், கோவில் மதிற்சுவரை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருக்கள், தேரடி வீதிகள், சன்னதி தெரு, பைபாஸ் ரோடு மற்றும் ரிங் ரோடு போன்ற இடங்களில் இது நடக்கின்றது.கிரிவலப் பாதை சற்று விதிவிலக்காக அமைந்திருக்கின்றது.

வாகன ஓட்டிகளின் அலட்சியப்போக்கும், கிறுக்குத்தனமான டிரைவிங் சென்ஸூம் கண்டு வெறுப்பாவீர்கள்.ஹெல்மட்லான் கணக்கிலேயே கிடையாது.இன்டிகேட்டர், கை எல்லாம் காட்ட முடியாது.ஒரு தடவை இங்கு சாதாரண தெருக்களில் வாகனம் ஓட்டினால் கூட காண்டாகி விடுவோம்.பிரேக் ஒழுங்காக அடித்தல், சாலையின் இடது பக்கம் செல்வது, வளைவுகளில் திடீரென முந்தாமல் இருப்பது, சடாரென்று நிறுத்தாமல் ஒழுங்காக வண்டி ஓட்டுவது–இது எல்லாமே ரோட்டில் போட்டு மிதிக்கப்படும்.ரூல்ஸ் ஆவது எம்பூ* ஆவது இதுதான் இவர்களின் ஆட்டிட்யூட்.நீங்கள் சரியாக சென்றாலும் உங்களை இடிக்காமல் செல்வார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.சைக்கிள் கேப்பில் லாரியை புகுத்துவதுதான் மண்டி தெரு மஸ்தான்களின் ஸ்டைல்.
அதன் பிறகு எந்த வாகனமும் அந்த தெருவில் இம்மியளவும் நுழைய முடியாது, நுழைந்தாலும் நகர முடியாது.

சிக்னல்களுக்கு வருவோம்.இப்பொழுதுதான் சிக்னல் என்ற ஒன்றை பார்த்து பழக தொடங்கியிருக்கிறார்கள்.இவ்வளவு நாளும் அதோ ஏதோ ஜாலி கலர் லைட் தான்.மாட்டு வண்டியும் மதிக்காது.மாருதியும் மதிக்காது.குறிப்பாக சிக்னல்கள் பொறுத்தப்பட்டுள்ள இடங்கள் எவையென்று பார்த்தால் பெரியார் சிலை சந்திப்பு, தாலுக் ஆபீஸ் ரோடு-பைபாஸ்-திண்டிவனம் சென்னை சாலை முச்சந்தி, தியாகிகள் சதுக்கம், ரயில்வே கேட், பேருந்து நிலையம், அண்ணா ஆர்ச், வேலூர் ரோடு, வேங்கிக்கால் போன்றவை மட்டுமே.

இங்கு நாம் பைபாஸ் சாலையைப் பற்றி பேசியாக வேண்டும்.இது நகரத்தின் பிரதான சாலை(arterial road).ரிங் ரோட் தற்பொழுதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பைபாஸ் சாலையில் நகரின் காவலர் குடியிருப்பு,பெரிய கோவிலுக்கு செல்லும் சந்நிதி தெரு பாதை, திருமண மண்டபங்கள்,மெக்கானிக் சர்வீஸிங் ஷெட்கள், தொழிற் பட்டறைகள் போன்ற முக்கியமான பல அம்சங்கள் இருக்கின்றன.
இதன் நீளம் 2.5 கிலோமீட்டர்.சென்னை செல்லும் நெடுஞ்சாலையையும் விழுப்பரம் செல்லும் நெடுஞ்சாலையையும் இணைக்கும் பகுதி.வாகன ஓட்டிகள் நகரின் மையப்பகுதிக்குள் சென்று சிரமப்படாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட சாலையே இப்பொழுது 5-6 வருடங்களாக வாகனக நெரிசலில் சிக்கி தவிக்கின்றது.தாறுமாறாக வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்களும் செல்கின்றனர்.

இங்கு சென்னை செல்லும் சாலையில் மட்டும்தான் சிக்னல் அமைக்கப்பட்டிருக்கின்றது.அதற்கு நிகரான திருச்சி, மதுரை வரை போகும் கனரக வாகனங்கள் பயணித்து செல்லும் விழுப்புரம் சாலையில் சிக்னல் அமைக்கப்படாமல் இருக்கின்றது.இதனால் அவ்வழியே செல்லும் விடிஎஸ், காந்தி நகர், டேனிஷ் மிஷன் பள்ளி குழந்தைகள் நேர விரயத்தாலும் பாதுகாப்பின்மையையும் அச்ச சூழ்நிலையையும் சந்திக்கின்றனர்.
அவர்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டிச் செல்லும் நபர்களை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள், வேகத்தடைகள், போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட வேண்டிய தருணமிது.இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு தரப்பினருமே காக்கப்படுவர்.

இந்த ஒரு சாலையையாவது கண்காணித்து, ஆக்கிரமப்பின்றி பராமரித்தால் அதுவே பல விபத்துகளை தடுக்கவும், பல மனித உயிர்களை காக்கவும், சீரான போக்குவரத்தை ஏற்படுத்தவும் ஏதுவானதாக அமையும்.திருவண்ணாமலையில் போக்குவரத்து செம்மையாக மாறும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s